Skip to main content

Posts

Showing posts with the label மண்

போன வழிப் பயணம்...

பாகம் - 02. பயணப்படுகிற உடலைத்தூக்கிச் சொருகிக் கொண்டே அந்தராத்மா பூமிக்கும் வானத்துக்குமேலேயும் கூத்தாடுகின்றது. பேரூந்து ஒவ்வொரு முட் பதிவாளர்களையும் நின்று நின்று ஏற்றிக்கொண்டு செல்கிறது, அது தன் பாடு ; நான் என் பாடு ; ஊர்ந்துக்குள்ளே பலர் கூப்பாடு ! என் மௌன தவத்தைக் கலைக்கிறதுக்கேண்டே கண்டெக்டர் ஒரு பலத்த சப்தத்தில் இப்ப வந்திருக்குற பன்னாடைப் பாடல்களையெல்லாம் போடத்தொடன்கீட்டான். முதல் புலி உறுமுது, பிறகு, பொம்மாயி..., ச்சே..என் தவத்தைக் கலைத்ததோடு மட்டுமல்லாமல், அம்மாவின் அருமந்த வழிஞ்சு விழுகிற நித்திரையும் போச்சு..! சொப்பனம் கலைஞ்சு எழும்புற சின்னக் குழந்தையைப் போல அம்மா சுழன்று வருகிற கொட்டாவியை கையால் பொத்திக் கொண்டே எழும்பி திரும்பவும் நித்திரையாப் போட்டா... ! இடையில வீட்டையிருந்து ஒரு குசல விசாரிப்பு SMS, நான் குறுஞ்செய்தியைப் படிச்சிட்டு ஒரு மார்க்கமாச் சிரிக்கேக்க எனக்கு முன்னால இருந்த ஒரு "அரைவேக்காடு" என்னைப் பார்த்துச் சிரித்தது, அது சிரிக்குதா பழிச்சுக் காட்டுதா என்று தெரியாததால எனக்கு பலமாச் சிரிப்பு வந்துட்டுது, அது தன்னைப் பாத்துத்தான் நான்...

போன வழிப் பயணம்...

பாகம்- 01 பயணக் கட்டுரை.     மழை சொட்டுச் சொட்டாகப் பெய்து கொண்டிருந்தது, காதுக்குள்ள அடர்த்தியான காத்து வீசிக் கொண்டே இருந்தது, நல்ல கறுப்புக் கலர் இரவு, நானும் அம்மாவும் மட்டுந்தான், அம்மா கேட்டா இப்ப வந்திருமா..? வந்திரும் வந்திரும்...- நான், இன்னுங் காணேல்ல...?.... வரும் வரும்...வராமப் போகாது.... ஒரு வேளை விட்டிட்டுப் போயிட்டால்...? ..............நான் ஒருக்கா அம்மாவை நிமிர்ந்து பார்த்து விட்டு, விட்டுட்டுப் போனாப் பரவாயில்ல, கருத்து உருண்டு திரண்டிருந்த மேகங்களின் பஞ்சுப் பொதியில உங்களை இருக்க வெச்சு ..ஆகாய மார்க்கமாக் கூட்டீட்டுப் போறன் ம்மா...எண்டன்,,,       நல்ல காலம் அம்மாக்கு எதுவுமே கேக்கேல்ல, இரவு முழுக்க பனிக்க நிக்க வேண்டாமேண்டால் கேக்க்கிரதில்லை...., வாய்க்குள்ள அம்மா முணுமுணுத்துக் கொண்டு கைக்கெடியாரத்தில நேரம் பார்த்தா... ஒன்பதே முக்கால்..., எண்ட கடியாரத்தில பத்து....! ரெண்டு பேருக்கும் எவ்வளவு ஜெனரேஷன் கப்? .....................................................................................................