Skip to main content

Posts

Showing posts with the label மரணதண்டனை

மரணதண்டனை

உலகிலே எத்தனையோ மனிதர்கள் இயற்கையாலும், ஒருவருக்கு ஒருவர் மோதியும், போராலும்,நோயாலும் இறக்கிறார்கள். அதில் ஆபத்தில்லாதவர்கள், அப்பாவிகள், குழந்தைகள்,வயோதிபர்கள், குற்றமுள்ளவர்கள்,குற்றமற்றவர்கள்,இளைஞர்கள் என்று எல்லா வகையினரும் அடக்கம். சில குற்றங்கள் தனி நபரை மட்டும் பாதிக்கும். சில குற்றங்கள் ஒரு சமுதாயத்தையே அழிக்க வல்லது. போதைப்பொருள் கடத்தல், மருத்துவ ஊழல், விவசாய ஊழல், அரசியல் குற்றங்கள், போர்க்குற்றங்கள் அத்தகையன. இவ்வாறான குற்ங்களுக்கு தனி நபரோ ஒரு சிறு குழுமமோ எப்போதும் பொறுப்பாக முடியாது. குறிப்பாக போதைபொருள் உபயோகம், கடத்தல் இரண்டுமே இரு தரப்பாலும் தெரிந்தே செய்யப்படுகிறது. கடத்துபவருக்கு பிரக்ஞை இருப்பின் அவருக்கு அது பற்றிய விளைவுகள் தெரியும், உபயோகிப்பவருக்கு கட்டாயம் தெரியும். சிறு குழந்தையாயினும் போதைபொருட்கள் தவறானவை என்கிற பதாகை எல்லோராலும் அறியப்பட்ட ஒன்று. அவர்கள் தருவதால்த்தான் நாங்கள் பயன்படுத்துகிறோம் என்று சொல்லவே முடியாது. சட்ட விரோதமான எல்லாச் செயல்களுக்கும் பின்னால் மிகப்பெரிய வணிகப்புலங்கள் இருக்கும். இங்கும் அவ்வாறே. இருப்பினும் தண்டனைக...