விரிவாக நான் ஒன்றுமே இன்னமும் எழுதவில்லை. என் எழுத்தில் இருந்து விரவி ஓடும் எச்சில் ஈயைப் போல காலத்தின் முன் சிறு முட்களைப் போல இப்படிப் பல 'போல' வாக நீ தள்ளி ஓடுகிறாய். காப்பிய மானத்தைப் பற்றி அக்கறை கொண்டவனாக நீ இருக்கையில், அதில் பாதி காப்பாற்றிய மானமாவது எனக்கிருக்கக் கூடாதா? இல்லை, இருக்கக் கூடாது. அகம்பாவத்தின் அடிச் செருக்கு நீ, உனக்கேற்றாட் போல உன் மான விபரத்தைக் கூட்டிக் குறைக்கிற பொறுப்பு உன்னிடமில்லை. எந்தவொரு உயிரின் மீது நீ அளவு கடந்த பாசத்தை வைக்கிறாயோ, அந்த நொடி முதல் நீ மனதாலும் உடலாலும், சமூகத்தாலும் பலவீனனாகிறாய். ஆக நீ கோழையாகி விட்டாய். 'குரு தேவா, நான் மலபரிபாகம் பால் ஆட்கொள்ளப் பட்டவள் என்பதை நீங்கள் தானே சொல்லியிருந்தீர்கள்?' .....ஹஹ் பூ.....மலபரிபாகமா, நேற்று முதல் நீ அப்படியிருந...