Skip to main content

Posts

Showing posts with the label கதை சொல்லி.

அப்பா சொல்லித்தந்த இசை....

         நீண்ட நாட்களுக்குப் பிறகு வித்தியாசமானதொன்றைப் பற்றிப் பகிர்ந்து கொள்ளவேண்டிய ஆசை எழுந்தது.ஆசைகள் எழுவது பற்றி எனக்குக் கூறுவதற்கு எந்தவிதமான தன்னிலைவாதமும் இல்லாவிட்டாலும், எழுந்தமானமான ஆசைகள் பற்றி நினைக்கையில் ஒரு வகையில் சிறு புன்னகையும் எழும். நேரம், அது விட்டுச்செல்லும் இடைவெளிகள்,காலம், அது பதிந்து போன தடயங்கள் இவை எல்லாம் சார்ந்ததாக மனிதனது தேடல்களும், தேவைகளும் நீண்டு கொண்டும், குறுகிக் கொண்டும் போகும். நான் தற்போது தத்துவார்த்தமான சூழ்நிலை பற்றி கிஞ்சித்தும் கதைக்கக் கூடாதென்ற நிலையில் இருக்கிறேன். ஆனமான நினைவு கூறத்தக்க மனோபாவங்கள் ரம்மியமாக இருந்த பொழுதுகளிலான இசையுடன் என் பயணங்கள் பற்றிக் கதைக்கலாம் என்றிருக்கிறேன்.  இசை, இசை ......இசை பட வாழ்ந்த என் நாட்கள் பற்றிக் கதைக்கப் போனால் நிறைய ...இசை என்பது ஓவ்வோருவருக்கும் ஒரு பிரயத்தனம். ஒரு அழகிய மொழி, பேசப்படுதலுக்கும் ,உணரப்படுதளுக்குமிடையேயான புரிதல், சந்தம், ஓசைகளின் கலவை, இன்னும் பிற பிற... என்னைப் பொறுத்தவரை நிகழ்வுகளி...

நன்நிலை வாதம்.

மறை பொருள். சம்பவங்களைப் படிவகுக்கை செய்வது தொடர்பான ஆய்வு. தரவுகளை உதிரி உதிரியாகப் பிரித்துப் போட்டு ஒரு இலட்சிய வீழ்ச்சியை எதிர் நோக்கச் செய்வது நிகழ்வுகள், என்பவை எதற்கும் பிடிப்புக்கலல்லாத சிருட்டி பேதங்கள். இவை நேரத்தில் தங்கியிருக்கின்றன. ஆனால், சம்பவங்கள், நிகழ்வுகள் இரண்டுமே காலத்தில் தங்கியிருக்கின்றன. பரிணாமக் குன்ரலை ஒரு வகை யதார்த்தப் பின்னிணைப்பான ஒரோழுங்கில் படியச் செய்து, தடயங்கலாக்கலாம். இவை சம்பவங்களாகா; நிகழ்வுகளாகா சற்றே வேறு பட்டவை, வரலாற்றின் பாகங்கள். சம்பவங்களாயும் நிகழ்வுகளாயும் உரு வார்ப்புப் பெற்றவை செயற்கையான நேர்கோட்டுத் தளத்தில் இயங்குகின்றன. வார்த்தைகளைக் குழப்பிப் போடுவது போல, இது, ஒன்றுக்கொன்று முரண் தத்துவத்தை தருகின்றது . இனி, குலசாமி சொன்ன காதை. வீடு திரும்ப எத்தனிக்கின்ற எனக்கு காயங்களை மாற்றிவிடத் தோணுகிறது முதலில் சரிவர. பெருமிதமாக இருக்கின்றது, எனக்கான கேள்வியில் நாளிதழ்கள் விற்பனையாகுவது குறித்து - ஆயினும் சொற்ப உயிருடன் தனும் வீடு நல்கும் எனக்கு, குழந்தையின் கேள்விக்கு பதில் தெரியவில்லை. ...