இது ஒரு பதில்க்கவிதை ; அவ்வளவு விளக்கம் இப்போதைக்குக் காணும் என்ன ? ;)
பிரஜாப சங்கல்பத் தீயினின்றும்
எழுந்து வருகிறது-எனக்கான கீதம்.
ஆழமான லோகத்தின்
ஜென்ம அதரங்களிலிருந்து
சாபத்தின் சன்னல் வழியே
எழுகிறது-அது,
மந்தமான சாத்தானின் பிடியிலிருந்து
அதர்மத்தின் இழைகளில் பயணிக்கும் என்னை,
ஆலகால விடத்தினின்றும்
அருட்சிக்கப்பட்டு
நிருதூழியமான-எனது
நனவிலி மனதுடன் உரையாடல்
வைக்கிறது.
தேவதேவனின்
குமிழிகளுக்குள் ஒளிந்திருக்கின்ற
காலச்சக்கரம்
எந்திரம் போல சுழழுகிறது- இது
ஏந்திழை சம்பந்தமானது.
சதசித்து சம்மந்தமாக –ஒரு
சச்சிதானந்த பிம்பம் தொடருகின்றது- நெடுநாளாய்,அது
நித்திய கைங்கூலியத்திலிருந்து
ஈடேற்றமற்ற எனதான்மாவைப்பிளக்கிறது.-
அதற்குள், நியமம் தவறாத அகிற்புகை கிளம்புகிறது-
உன் இசை சம்பந்தமாக.......
சவரிக்கப்படாத என் அந்தங்களில்
மோட்ச நிருவாணம் உணர்த்தப்படுகிறது!
அதீதத்தின் அதீதமே,
தேவ தேவா – உன்
இரட்சிப்பு எத்துனை
ஆகாம்மியமானது?
ரஸமானது?
இன்னல் தரும் உன் இசை,
ஸ்மரணம், மரணம், கடந்து
லஜ்ஜையின்றிய க்ருகபேதங்களையும்;
சன்மானமின்றிய சொருப நிலையையும்
ஆகிருதியையும்; தருகின்றது.
இதனால்
பாந்தமான சுடரிலிருந்து
எனக்கான பூமி பிறக்கிறது.
மலமழிகிறது-
அட்டமா சித்தி பெற்றேன்........
தளிர் இலைக்குள்ளும்,
பிரவாகந்தாங்கிய நீர்ச்சுணைக்குள்ளும்,
விசும்பின் விளிம்பு நிலைக்கும்
பறக்க முடிகிறது.
போசணை நீங்கிய எனதான்மா
ஓப்புயர்வற்ற அருவுருவ நிலையெய்துகிறது.
எனக்கும், இசைக்கும் இடையில்
மலர் இடுக்குகளிளான சன்னத்தைத் தைத்துத்தருகிறது.
ஏகாந்தத்தின் சப்தம் தாங்கிய
அமான்யத்தைப் பரிசளிக்கிறது.
இன்னுமின்னும் உனதினிய ஆபோகிச்சங்கீதம்,
சாலையெங்கும் பனி மரங்களைத்தூவி
இலைகளின் பெருமூச்சில் பயணம் கொள்ள வைக்கிறது.
பூக்களின் துவரக்காம்புகளினின்றும்
தன்னிச்சையாய் அண்ட வெளியில் உயிர்களைப்பிய்த்துப் போடுகிறது,
மீண்டும் பிறவெனச்சொல்லி........
எனதினிய சங்கீதத்தை
நரம்புகளின் அதரங்களில் மீட்டியபடி-
நிருவான பூமியினது சாசுவதத்தில் மூழ்கி-
பிரேதமான நான்,
உன்
பரிசுத்தம் சார்ந்த செய்கையினால் -
காற்று வார்த்தியத்தின் தேசீயத்தைப்போலே,
உள்வாங்குகிறேன் காற்றினது உயிரை.......
ஸ்வாசத்தக்கு லகுவான உன்
சாமவேதத்தின் சாயல்!
தருகிறது –
பொய்கை நிழலுக்குள் குளிர் இதம்!
மேலும்,
இதமேயுருவான மயிற்பீலி உரசல்....
அது,
உத்தமத்தின் உத்தமத்திலும்,
மத்திமத்தின் மத்திமத்திலும்,
அதமத்தின் அதமத்திலும்
காவுகிறது-
இது
எனக்கு
உத்தமமே!.......
ஓசை, ஒலி எல்லாமுமான நீ,
சப்தங்களின் கடவுளாகிறாய். -பின்
சாவுகளின் வெளித்தத்துவ வழியைத்துண்டித்து,
மரணத்தினின்றும் காக்கிறாய்.
ஓம அக்கினியில் இருந்து ஸ்வரங்களை குறி பார்த்தெறிகிறாய்-
அவை வேதத்தின் சாயலாய் எதிரொலிக்கின்றன.
நரபலியைப்போன்ற –ரஸமற்ற காரியம்,
மௌனந்தாங்கிய என் கவிதை!
சந்தங்களாளான உன்னை வாழ்த்த......
நாணற்புல்லினது, போன்ற சாத்விக கீதம்,
எனக்குள் ஒவ்வொரு அதரங்களையும் கிளர்வூட்டுகிறது.
நீ என்ன தேவ பாஷை பரிபாசிக்கிறாயா?
கடவுளான எனக்கு மட்டும் புரிய?.........
புரிந்ததா என் ஆணவம்?............
உன் இசையை விழுங்கிக்கொள்ளும் பேராசையால்
வந்த வினை....
நோவுணர்வு தரும்
மெல்லிய உன் சாமவேதம் -
இனியுந் தரட்டும்
இனிமையான சாபவிமோச்சனங்களை!
ஒரு காலத்தில மணிப்பிரவாள கவிதைகள் வாசிச்ச பாதிப்பில எழுதி இருக்கலாம்.
நா. பிச்சமூர்த்தியை வாசித்திருக்கிறேன், ஆகக் சின்ன வயதில். நிறைய மொழிபெயர்ப்பு மலையாளக் கவிதைகள் வாசிக்கின்ற பழக்கம் அப்போது எனக்கிருந்தது.
நிலா -
2009
மணிப்பிரவாள நடை கலந்து கலந்து எழுதப்பட்ட பல கவிதைகள் படித்திருக்கிறேன் . உங்களின் நடையில் இன்னும் சிறப்பு தெரிகிறது . அருமை . பகிர்வுக்கு நன்றி
ReplyDelete