விழ ஒணாத நீ - வீழ ஒணாத நீ -அழ ஒணாத நீ- ஆள ஒணாத நீ-
பகல் ஒணாத நீ- அகல் ஒண்ணாத நீ-
கங்குல் புகழ் ஒணாதபெரும் பயிற்ருப் புலவ நீ -
பகல் ஒணாத நீ- அகல் ஒண்ணாத நீ-
கங்குல் புகழ் ஒணாதபெரும் பயிற்ருப் புலவ நீ -
என்றும் தகல் விளங்கா பெரும் தருக்கமும் நீ !
கன வளவாத கழ வளவாத வின வளவாத விளை நீ
பயில் வளவாத பரு வளவாத அரு மருந்தாகும் அயிர் நீ
துணை வளவா இணை வளவா பிணை வளவா
பெரும் அத்தன் என்னை ஆள்பவன் நீ !
பொன்னுற்றே பொருளுற்றே துகிலும் அகிலுற்றே
கலையுற்று களியுற்ற என் காலக் கிளை பற்றி நின்
தன்னும் வேண்டா தனையும் வேண்டா
தானொடு அடங்கலுற்றேனே !
இரு பகல்வா ஒரு பகல்வா முழுதகலா முதல்வா
தரு கருக்கும் விழி பருக்கும் சிறை உதிர்க்கும் தணலா
விலை மதிக்கும் மதி பதிக்கும் உலை கொதிக்கும்
இனி தகிக்கும் இயல் ஒன்று தருவே !
நிலா -
17 .09 .2010
Comments
Post a Comment