Skip to main content

பிச்சிப் பெரும்பாடல் !



ஒய்ய நினவாத ஒன்கடலும் வீழாத,
பைய நடவாத பாலுருகிப் பாடாத,
ஐய, உன்னை அன்றி ஆயகலை அறியாத,
செய்ய அறியாத சேதி அறியாத,
கொய்ய மலர்ப்பங்கு கோதிக் குலையாத,
பொய்ய உரைத்தாலும் போதும் மறையோயே ! 

வெங்கு புலையோயே வேறு விளையோயே !
அங்கு அலையாயே ஆழி மழையோயே !
பங்கு சிறுத்தாலும் பாதி கறுத்தாலும்-
எங்கும் உனைத் தேடி ஏங்க வைத்தாயே !

வெம்புனல் தீ பெய்து,சங்கர,கனல் செய்து,
கொங்கு நின் கோ கழல் பூட்டி,
அம்புவி ஆர்த்தெழ வேண்டி,
என்புரு ஏய்த்து மாய்த்து,
அம்பு நின் அன்பு பாய்ச்சி,
ஆணவம் அடியோடழித்து,
கொன்றையில் கிலுகிலுப்பை செய்து,
கிண்டியில் வேதம் பாய்ச்சி,
ஒன்று நான் செய்யப் போக,
ஒன் நிழல் ஓய்ந்து போச்சு !

உருவுடையார் எலாம் காண நிற்கிலர்-
பெருவுடையார் தோற்றமேலாம் போல நிற்கிறர்-
கருவுடைக் கொற்றமெலாம் தீது தைக்கிறர்-
தெருவிடையோர் போதல் இன்னும் தேக்க மறுக்கிறர்-
தேர்ந்து சொல்லும் வாய் முதலே தெரிதல் பிழையோ- 
கூர்ந்து கொல்லும் ஆயுதமே குணத்தில் வெல்லோ? 
தேர்ந்து சொல்லச் சேதியில்லை - இங்கோ ,
நானோர்ஆவுடையாக் கோலமென இப்போ வாய் பிளக்கக் கண்டாய்...!  

மன்ன, உன் புகழ் பண்ணி ஆதரித்து,
சொர்ண, தன் தலை தாவி பாதிரித்து,
விண்ணும் முகிலும் முட்டப் பெய்யப் பண்ணி ,
அள்ளி அலை வீசி அமுதம் பாலித்து,
எள்ளி நகையாடி எத்தித் துளி தெளித்து,
ஏற்றிக் கருங்குழல் பூப் பூத்து,
வெள்ளி வீசட்டும் விடி காலை தொலையட்டும்,
பள்ளி ! பரந்தாமா பாயுனக்கு நான் தானே ! 

எத்திசை காண்பினும் திகம்பர நீ அன்னோய் !
அத்திசைக் கடியவள் அம்பலம் காண் என்னோய் !
ஒத்திசைக்காய் உனக்கு 'என் நோய்' ?
பித்திசைப் -பாவைக்கு இதுவோ பல நாள் நோய் ! 

குயிலு கூவுக, மயிலம் ஆடுக !
பயில,  பாவிகாள் பாதம் பாடுக !
நெகிழ -நீ கிழம் திகழ -சாடுக !
உகழ, உழல, உதித்து நீ ஓங்குக ! 

தகழ தருவெலாம் மருள விழிக்குக !
பகலா, மதி கொண்டு பாதி மறைக்குக!
இகழு  போழுதிலோர் இன்பம் தூய்க்குக ! 
நிகழ நிகழ இதுவோர் நியமம் ஆகுக ! 

அதல பதல பாதாளம் காட்டுக !
அகிலம் உலகம் போதாது போற்றுக !
திகழ திகழ நின் திண் புயம் தெறிக்க !
முதல்வ, முன்  போல் முக்கண்ணைத் திறக்க !


நிலா -
20 /09 /2010

Comments

Popular posts from this blog

சாமகானமும் காம்போதியும்

முருகையன் ஒரு மொழிபெயர்ப்புச் செய்தார். மொழிபெயர்ப்பு எண்டும் சொல்ல முடியாது,சாதுவா மொழிபெயர்ப்பும்,திறமையான கற்பனையும் போட்டு செய்யுள் வடிவத்தில, இளநலம்! என்ன இளநலமா?ஹையா கிளுகிளுப்பான கதை வரப்போகுது. குமாரசம்பவம் (ஸாரி வேற கண்டென்ட் எண்டு நினைக்கப்படாது, ஐ ஆம் வெரி டீசன்ட்) காளிதாசன் குமாரசம்பவத்தில எழுதின அதே கதையை தமிழில தந்தவர். அதில தான் இந்தக் கதை வருகுது.  சாமகானம் சாமகானம் எண்டு ஒண்டு சொல்லக் கேட்டிருப்பம். “சாமகானம் பாடினான்” எண்டு நாலாம் வகுப்புச் சமய பாட புத்தகத்தில ஒரு பாடம் இருக்கு. பத்துத் தலையும், கையில ஒரு தலையுமாக் கணக்குப் பிழையா மொறாயஸ் கீறின இராவணனிண்ட மீசை வெச்ச படம் இருக்கும், இப்ப ஞாபகம் வந்துட்டுதா? அந்தக் காலத்திலேயே தலைகளிண்ட கணக்கை எண்ணிப் பாத்தனாங்கள் ஆக்கும். (தலைக்கணக்கு முக்கியம் அமைச்சரே) இப்ப சாமகானத்தைப்பற்றிப் பாப்பம். காளிதாசன் குமாரசம்பவம் எழுதேக்க, சும்மா கற்பனைகுதிரையை காட்டாற்று வெள்ளம் போல பறக்க விடுறேர்.  மிஸ்டர் சிவனும் மிசஸ் உமாவும் கலியாணமான புதிசில, (ஏன் கல்யாணமான பழசில யாரும் வெளிய போறதில்ல எண்டு நெடுங்காலமா டவுட்) சும்மா வெள...

இராவணேசன் ; Maunaguru's 'Ravanesan'

நெறியாள்கை - பேராசிரியர் மௌனகுரு. இடம் -கொழும்பு கலை இலக்கியப் பேரவை. காலம்- சனி(13.02.2010)  மாலை 6.30மணி. சனி மாலை(13.02.2010) பேராசிரியர் மௌனகுரு அவர்களின் 'இராவணேசன்' நாடகம் நடைபெறவிருக்கிறதென்று நண்பரொருவர் தகவல் சொன்னார். இருந்த எல்லா வேலைகளையும் புறந்தள்ளி விட்டேன். நாடகங்கள் என்றவுடன்  வரும் இந்த தொலைகாட்சி சீரியல்களையே கண் ஞாபகத்தில் கொண்டுவந்து முகத்தை அஷ்ட கோணலாக்குகிறது. மேடையமைப்பும், அரங்கமும்,அரிதாரம் பூசிக்கொண்ட பாத்திரங்களும், நேரடியான காட்சிகளூட்டும் கிளர்வும், எங்களுக்கு முன்னாள் ஒரு தலைமுறை இதனூடே வாழ்ந்து காட்டியிருக்கிற விடயமும் தெரிவதில்லை. மாற்றங்கள் மட்டுமே மாறிக் கொண்டிருந்தாலும்,எங்களின் முன்னோடிகள் வழி வந்த கலைப் பாதையை எடுத்தியம்புதலுக்கும்,அதற்கான வரவேற்புக்கும் இங்கு இடமில்லை எனும் போது அவற்றையெல்லாம் தாண்டி மனதில் எங்கேயோ வலிக்கிறது. எங்களுடைய காலத்தில், முழுமையான கூத்துக்கலையோ, அரங்காடல்ககளையோ  காண்பதற்கு காலமோ மாற்றமோ ஏதோவொன்று இடந்தரவில்லை .இருப்பினும் யாராவது எங்கள்  நலிந்து போன கலைகளை மறுபடியும்...

குழந்தைகளுக்கான நவீன தமிழ்ப் பெயர்கள்

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தல் எனும்போது, இவ்வளவு காலமும் வைத்த பெயர்கள் தமிழ்ப்பெயர்கள் இல்லையா எனும் கேள்வி எம்மில் பலருக்கு எழும். உங்கள் பெரும்பாலானோர் தமிழ்ப்பெயர் என்று எண்ணிக்கொண்டிருக்கும் உங்கள் பெயரை வட இந்தியக் கலப்பு,சமக்கிருத கலப்பு,ஐரோப்பிய,அரேபியக் கலப்புடனான பெயராக இனங்காணுவீர்கள்.  தமிழில் பெயர் சூட்டுவது இனத்துவேசம் உள்ள செயலா? :P இனத்தைக் கொண்டாடக் கூடிய செயல். மறத்தமிழன் என்று அடைமொழி இட்டுக்கொண்டு உலாவுவதை விட அழகான செயல் என்று எண்ணுகிறேன். இந்த அடையாளம் மிக அழகானது.  அண்மையில் நிறையப் பேர் தமிழில் குழந்தைகளூக்கான நவீனமான பெயர்கள் வேண்டும் என்று கேட்டிருந்தார்கள். தமிழில் பெயர்கள் பழமையானவையாக இருப்பது கூட இக்காலத்தோரின் தெரிவுக்குட்படாமைக்கு ஒரு காரணமாகும். பெண் குழந்தைகளுக்கான பெயர்கள் சிலவற்றை தொகுத்திருக்கிறேன்.சிலவற்றை கண்டும் பிடித்திருக்கிறேன். ( பிற்காலத்தேவைகளுக்கு ;)  ) வினைச்சொல் பெயர்கள் அஞ்சா ஆராதி ஆனந்தி  சலனி கோளறா இசி இனி தேயா மேதா வேயா வேகா மின்னு ...