Skip to main content

Sri Lanka, Beginning of Ethnic Conflict and State Language Implementation. Part-2

  

 BEGINNING OF  ETHNIC CONFLICT IN SRI LANKA  -Part 2

 அரசகரும மொழியாக்கம் மற்றும் இலங்கை இனப்பிரச்சினைக்கான ஆரம்பம்




1948 இல் ஏற்பட்ட அரசியல் மாற்றமானது இலங்கையின் மொழிக் கொள்கையில்  ஏற்படுத்திய மாற்றங்கள் ஒன்றன் பின் ஒன்றாக இனப்பிரச்சினையை உண்டு பண்ணின.

1956இல் திரு. பண்டார நாயகம் அவர்களது  ஐக்கிய மக்கள் முன்னணி ஆட்சி பீடம் ஏறியது. ஆட்சிக்கு வந்து 24மணி நேரத்தில் சிங்களம் அரசகரும ,நிர்வாக மொழியாக மாற்றப்படும் என்ற கோரிக்கையுடனேயே அரசு பதவிக்கு வந்தது. சிங்கள மக்களைப் பொறுத்த வரையில் அது ஒரு சிறப்பான நடவடிக்கையாயும் தேர்தல் வாக்கு மூலம் நிறைவேற்றப்படும் உன்னதமான தருணமாயும் இருந்தது .
    
ஆனால் தமிழ் மொழிக்கு, மக்களுக்கு, அரசினது கடப்பாடு  இல்லாத இச் செயல்  இனவாதத்தை மேலும் அதிகரிக்கும் செயலாக  அமைந்தது. சிங்கள மொழி அரச கரும  மொழியாக்கப் பட்டதன் காரணமாக பல தமிழ் அரச ஊழியர்கள் ஓய்வு பெற நிர்ப்பந்திக்கப் பட்டனர். பலர் வெளி நாடுகளுக்கு வேலை வாய்ப்புக்குச் சென்றனர். நேரடியாக தமிழர் ஒருவர் அரச சேவையில் இருப்பது குதிரைக் கொம்பாக இருந்தது.
        .
சம்பள ஊதிய ஏற்றங்கள் இடை நிறுத்தப்பட்டன. அந்தக் குறித்த காலத்தில் சிங்கள மொழித் தேர்ச்சி பெறாதவர்கள் வலிய வேலைகளில்  இருந்து தூக்கப் பட்டனர் .இந்தச் சந்தர்ப்பத்தில் சட்டம் மூலமும் தமக்கு அநீதி ஏற்பட்டதாக தமிழ் மக்கள் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டம் செய்தனர்.(சிங்களத்தில் பணியாற்ற முடியாதவர்கள் மொழிமாற்றத்திற்கு பழக்கமடைவதட்கு ஒரு கணிசமான கால நீட்சியை வழங்கினர். )

சிங்கள மொழியை தேசிய மொழியாக்கப்படுவதட்கான சட்டத்தினை ஏற்படுத்தவல்ல பாராளுமன்றக் குழுவானது 1960ஜனவரி முதலாம் திகதி வரை ஆங்கிலம், மற்றும் தமிழை சாதாரண நிர்வாகத்தின் பொது பயன்படுத்திக் கொள்ள ஒரு உப சரத்தினை வழங்கியது, )மேலும் இன்னொரு உப சரத்து அமுல்ப்படுத்தப்பட்டது. 1956யூன்5 இல் சிங்கள மொழி அரச கரும மொழியாக்கப்பட்டது. 1956ம் ஆண்டின் 33 ம் இலக்க அரசகரும மொழிகள் சட்ட ஏற்பாட்டின் படி தமிழ், தமிழ் அல்லது ஆங்கில மொழி மூலம் அரச கருமத்தில் இணைந்து கொள்பவர்கள் மூன்றாண்டுகளில் சிங்கள மொழியில் தேர்ச்சி பெற வேண்டும் என்று கட்டாயப் படுத்தப் பட்டது.

பெரும் பாலும் அந்தக் காலத்தில் ஆங்கில மொழி மூலம் கற்றறிந்தவர்கள் தமிழர்களே எனும் உண்மை நிலையைப் போக்குவதற்காகவே சிங்கள மொழிய அரச கரும மொழியாக்கினர் என்பர் அறிந்தவர்கள்.
      
மக்கள் ஐக்கிய முன்னணி ஆதரவாளரும் இலங்கை பல்கலைக் கழகத்தின் பொருளியல்துறை  விரிவுரையாளருமான சிறந்த கல்விமான், எப்.ஆர். ஜெயசூர்ய , இந்த அரைச் சட்டத்திற்கு எதிராக, பாராளுமன்ற வளாகத்துக்கு முன்பாக சாகும் வரை  உண்ணாவிரதம் இருந்து இந்த உப சரத்தை மறுசீரமைப்பதாக பிரதமர் பண்டாரநாயக்கா தெரிவித்ததும் தான் ஓய்வுக்கு வந்தார்.

இதன் போது, எஸ்.ஜே .வி .செல்வநாயகம் ( தமிழரசுக் கட்சி )தலைமையில் காலி முகத்திடலில் சிங்கள அமுலாக்கத்திட்கு எதிராக சத்யாக்கிரகம் நடை பெற்றது 1956. ஜூன் 5ம திகதி . இதுவே தமிழர் உரிமைக்காக எடுக்கப் பட்ட முதலாவது போராட்டமாகும்.

இந்த நிலையில் எப்.ஆர். ஜெயசூர்ய அவர்களது போராட்டக் கோரிக்கைக்கே பிரதமர் அவர்கள் தலை சாய்த்ததும்,(1947சோல்பரி அரச யாப்பின் 29(௨)உருப்புரைப்படி)  கோட்டீஸ்வரன் என்கிற ஓர் தமிழ் அரச உத்தியோகத்தர், சிங்கள  மொழியில் குறித்த காலத்துக்குள் போதிய தேர்ச்சி பெறவில்லை என்பதற்காக அவருடைய சம்பள உயர்வு இடை நிறுத்தப்பட்டது. எனவே அவர் தனக்கு ஏற்பட்ட நட்டம் தொடர்பாக மாவட்ட நீதி மன்றத்தில் அரசுக்கு அதற்கான அரசுக்கு எதிராக வழக்குத் தொடுத்தார்.

(அப்போது இலங்கையில் உயர் நீதி மன்றம் அடிப்படை உரிமை மீறல்கள் தொடர்பான வழக்குகளை எடுத்துக் கொள்வதில்லை ) அதை மாவட்ட  நீதி மன்றம் ஏற்றுக் கொண்டது. ஆனால்  இதனை மறு பரிசீலனை செய்ய மேன்முறையீட்டு நீதி மன்றத்துக்கு முறையீடு செய்தது.

அதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அரச பதவியில் இருப்பவர் அரசுக்கெதிராக வழக்குத் தொடுக்க முடியாது என்றும் அரசு ஊழியர்களின் சேவையை அரசு மாற்றி அமைக்க முடியும் என்றும் கூறி மாவட்ட நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பைத் நீக்கி, வழக்கை தள்ளுபடி செய்தது.

privy council என்கிற எமது நாட்டில் மறு பரிசீலனை செய்யப்பட்ட வழக்கை மீண்டும் பரிசீலனை செய்யும் அதிகாரம் கொண்ட பிரித்தானிய அரச நீதி மன்றத்தை கோடீஸ்வரன் நாடினார்.

1947 சோல்பரி அரச யாப்பின் படி 29ம் உறுப்புரைக்கு அமைய இலங்கைப் பாராளுமன்றம் அமுல்ப்படுத்தியுள்ள அதிகார  பூர்வ சிங்கள மொழிச் சட்டம், சட்ட  விரோதமானது என privy council  உண்மையாகத் தீர்ப்பளித்தது.

இதனால் இலங்கை அரசு ( பண்டார நாயக்க தலைமையிலான  ) பெரும் சிரமத்தை எதிர் நோக்கியது.

# இலங்கையின் இறைமை பற்றியும்,
# ஏனைய இனங்களின் உரிமைகளைப் பாது காப்பது பற்றியும் மக்கள் சிந்திக்கத்தொடங்கினர்.

ஆனால் இவை எதையுமே அரசு செயற்படுத்த வில்லை. மேலதிக சிறு பான்மையினர் அடக்கும் கொள்கைகளைப் பிரயோகித்து அடக்கு முறையையே கையாண்டது.இருப்பினும் அரசிடம் இருந்த அடிப்படைப் பயம் காரணமாக, இது தொடர்ந்து பிட் போடப்பட்டு இலங்கை குடியரசு யாப்பு அமுலுக்கு (1972)வந்தவுடன் முதல் காரியமாக சட்ட ரீதியாகவே மேற்படி தீர்ப்பை செல்லுபடியற்ற தாக்கினர்.

 # இது தமிழ்க் கட்சிகளின் சமஷ்டிப் போக்கிற்கு வழி வகுத்தது.

தமிழ்ப்பிரதேசங்களில் இரு மொழி மூலமும் நிருவாகம் மேற்கொள்ளப் பட வேண்டும் என்பதை அடிப்படையாக்கக் கொண்டே சமஷ்டி எண்ணக் கரு ஆரம்பத்தில் வைக்கப் பட்டது. மேலும் இவ் இரு பிற தேசங்களையும் ஒருங்கிணைக்க மத்திய அரசு அமைய வேண்டும் என்றும் கருதப் பட்டது.

இனக்குழுக்களுக்கிடையிலான தவறான அபிப்பிராயத்தை முதலிலேயே நீக்கி விடத் துணிந்த பண்டரநாயக்க,தான்  சேர்ந்து போதலைக் காட்டுவதற்காக,  சமஸ்டிக் கட்சியுடன் ஒப்பந்தத்திற்குத் தயாரானார்.
  
வடக்குக் கிழக்கு மாகாணங்களில் அதிகாரப் பரவலாக்கத்தின் பேரில் சிங்களக் குடியேற்றங்களை நிறுவுவதில்லை என்றும், வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் மொழியில் நிருவாகம் நிகழும் என்பதைச் சட்ட ரீதியாகக் கொண்டு செல்லலே அவ் ஒப்பந்தத்ததின் பிரதான நோக்கம்.

பண்டா- செல்வா ஒப்பந்தம் 1957.6.26 இல் நடை பெற்றது. இந்த உடன்படிக்கை முன்னில் சிவில்ப் போராட்டங்கள் தற்காலிகமாக கைவிடப் பட்டன.

ஆனால், இது நாட்டைக் காட்டிக் கொடுப்பதற்கு ஒப்பானதென்று அன்றைய எதிர்க்கட்சி, ஜே. ஆர் ஜெயவர்த்தனவின் தலைமையில்-  கண்டி, தலதா மாளிகையை நோக்கி பாத யாத்திரையை மேற்கொண்டு , கண்டனங்களையும் தாக்குதல்களையும் மேற்கொண்டது, 1958ஆம் ஆண்டு 9 ம திகதி ரோசமீட் வாசச்தலத்திலுள்ள (பிரதமர் ) அவரது வீட்டின் முன் சுமார் ௨௦௦ பௌத்த துறவிகளும் 300 பேர் கொண்ட  சிங்கள மக்கள்க்கூட்டமும்,  பௌத்த துறவி விமலவன்ச தேரரின் தலைமையில் ஒப்பந்தத்தை நீக்கும் படி சாகும் வரை உண்ணா விரதம் இருந்தனர்.

இதனால் ஒப்பந்தம் ரத்தாக்கப் பட்டது. திருப்திப் படாத பிக்குகள் ஒப்பந்தத்தைக் கிழித்துப் போடுவதாக எழுதி வாங்கிக் கொண்டனர் . இதனால் சிங்கள ஸ்ரீ எழுத்துக்கு எதிராக தமிழ் மக்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். இது தொடர்ந்து பெரும் கலவர நிகழ்வுக்குள்ளாகியது. பண்டாரநாயக்க போராட்டக் குழுக்களுடன் முழுமையாக இணைந்தார். தேசிய மொழிச் சட்டத்துக்கான, தமிழ் மொழிக்கு எதிரான, பிரேரணையை முன் வைத்தார்.

தொடர்ந்து பிரதமரால்  பண்டா - செல்வா ஒப்பந்தம் கிழிக்கப்பட்டது .

முழுமையான சிறுபான்மை ஒடுக்கம் இதன் போது  தலை நீட்டியது .பின் தமிழரசுக் கட்சியின் ஐந்தாவது மாநாட்டிற்குச் சென்று திரும்பியவர்கள் மீது , புகையிரதத்தில் தாக்குதல் நடை பெற்றது  1958 .இல். இதுவே இனப்பிரச்சினைக்கான அடித்தூண்டு கோலாக இருந்தது . இவ்வாறான பல சம்பவங்கள் இலங்கையில் இரு மொழி ஆதிக்கத்திற்கு எதிராகவே காணப் படுகின்றன.

இவ்வாறான இலங்கையின்  பெரும்  கலவரங்கள் அனைத்துமே இரு மொழிக் கொள்கையின் அடிப்படையிலேயே எழுந்தவை. மொழிப் பயன்பாட்டுத் திட்டமானது மக்களது அடிப்படை அறிவை மழுங்கச் செய்வதாயே இங்கு   காலங்காலமாக இருந்து வருகின்றது. இந்த நிலை மாற வேண்டும்.

இறையாட்சியின் அட்சிமையின் பெயரில் ஒரு சனநாயக நாட்டின் முழு நிகழ்வும் மக்கள் மொழியினால் நடை பெற வேண்டும் என்பதே இயல்பியல்ச் சட்டம். இலங்கையில் மட்டும் இக்கொள்கை மாறியது ஏன்?...
       
அவரவரது மொழிப் பயன்பாடு என்பது ஒரு சிறு பிள்ளையை  தானாக இயங்க வைப்பது போன்ற நிகழ்வு. இங்கு வன் புகுத்துதல் என்பது கட்டாயமாக தவிர்க்கப்படல் வேண்டும்.
   
இந்த விழிப்புணர்ச்சியானது பெரும்பான்மை மக்களை விட சிறு பான்மையினருக்கே அதிகளவில் தேவை. வன்முறை கலாசாரத்தை அரசியலில் கொள்வதாதது நிரந்தர சுமூகமற்ற தீர்வையை நீடிக்கச் செய்யும் ஒரு செயல்.

மக்களுடைய செயல் நிலையை மாற்றுவது சனநாயகத்தின் தலையாக கடமை.புதியவொரு அரசியலைமைப்பு உருவாகப் போகிற இந்தக் கால கட்டத்தில் இந்தச் செயலைச் சுட்டிக் காட்டிக் கொண்டே இருப்போம்...

தீர்வுகளுக்காகத் தான் கேள்விகள்.

நிலா -

Comments

  1. இலங்கையின் சாபக்கேடுகளில் முறையற்ற அரசியல்வாதிகளை விட முக்கியம் பெறுபவர்கள் பிக்குகள். இலங்கை வரலாற்றில் கறைபடிந்த வரலாற்றை எழுதியவர்கள் இவர்கள். இலங்கையை சிங்கள “பௌத்த” தேசமாகப் பிரகடனப் படுத்தும் வகையில் இனவாதத் திணிப்பைக் காலங்காலமாகச் செய்து வந்திருப்பது அப்பட்டமான உண்மை. என்னைப் பொருத்த வரை ஒரே ஒன்று தான் சொல்லவிருக்கிறது - “புத்தன் ஏமாந்தான்... - ஏமாற்றப்பட்டான்!” (ஆனால் இந்த உண்மையைச் சொன்னால் என்னை இனவாதி - இனவெறியன் என்பார்கள் - பரவாயில்லை சொல்லிவிட்டுப்போகட்டும்.)

    ReplyDelete
  2. பெரும் பாலும் அந்தக் காலத்தில் ஆங்கில மொழி மூலம் கற்றறிந்தவர்கள் தமிழர்களே எனும் உண்மை நிலையைப் போக்குவதற்காகவே சிங்கள மொழிய அரச கரும மொழியாக்கினர் என்பர் அறிந்தவர்கள். //
    உண்மை உண்மை.. இதனால தமிழர்கள் இழந்தது ஏராளம்.. தற்பொது ஆங்கிலத்துக்கு தடவும் நிலையில் உள்ளது தமிழ் சமூகம்.. :-(

    அவரவரது மொழிப் பயன்பாடு என்பது ஒரு சிறு பிள்ளையை தானாக இயங்க வைப்பது போன்ற நிகழ்வு. இங்கு வன் புகுத்துதல் என்பது கட்டாயமாக தவிர்க்கப்படல் வேண்டும். //
    அருமையான கருத்து .. ஏதாவது அரசியலில் இறங்கும் எண்ணம் வந்து விட்டதா பிள்ளைக்கு? பின்னவீனத்தவமாக ஒரு கட்சிக்கூட்டத்தில் பேசினால் ஓட் முழுவதும் சொந்தமாகிவிடும் ( எதிர்க்கட்சிக்குதான் :P )

    அருமையான பதிவு நிலா.. நிறைய விடயங்கள் தெரிந்து கொண்டேன் .. தொடருங்கள்..

    ReplyDelete
  3. இலங்கையில் தடைசெய்யப்பட் ஒரு புத்தகம் Prof.Stanely J. Tambiah's 'Buddhism Betrayed'. Prof.Tambiah is a Professor at Harvard University. இலங்கையிலிருந்து வெளிநாடு செல்ல வாய்ப்புக் கிடைத்தால் கட்டாயம் இந்தப் புத்தகத்தை படிக்க விரும்புகிறேன்!

    நீங்களும் இந்நூல் பற்றி இணையத்தில் தேடிப்பாருங்கள். உங்கள் ஆய்வுக்குப் பயனுள்ளதாக அமையும்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சாமகானமும் காம்போதியும்

முருகையன் ஒரு மொழிபெயர்ப்புச் செய்தார். மொழிபெயர்ப்பு எண்டும் சொல்ல முடியாது,சாதுவா மொழிபெயர்ப்பும்,திறமையான கற்பனையும் போட்டு செய்யுள் வடிவத்தில, இளநலம்! என்ன இளநலமா?ஹையா கிளுகிளுப்பான கதை வரப்போகுது. குமாரசம்பவம் (ஸாரி வேற கண்டென்ட் எண்டு நினைக்கப்படாது, ஐ ஆம் வெரி டீசன்ட்) காளிதாசன் குமாரசம்பவத்தில எழுதின அதே கதையை தமிழில தந்தவர். அதில தான் இந்தக் கதை வருகுது.  சாமகானம் சாமகானம் எண்டு ஒண்டு சொல்லக் கேட்டிருப்பம். “சாமகானம் பாடினான்” எண்டு நாலாம் வகுப்புச் சமய பாட புத்தகத்தில ஒரு பாடம் இருக்கு. பத்துத் தலையும், கையில ஒரு தலையுமாக் கணக்குப் பிழையா மொறாயஸ் கீறின இராவணனிண்ட மீசை வெச்ச படம் இருக்கும், இப்ப ஞாபகம் வந்துட்டுதா? அந்தக் காலத்திலேயே தலைகளிண்ட கணக்கை எண்ணிப் பாத்தனாங்கள் ஆக்கும். (தலைக்கணக்கு முக்கியம் அமைச்சரே) இப்ப சாமகானத்தைப்பற்றிப் பாப்பம். காளிதாசன் குமாரசம்பவம் எழுதேக்க, சும்மா கற்பனைகுதிரையை காட்டாற்று வெள்ளம் போல பறக்க விடுறேர்.  மிஸ்டர் சிவனும் மிசஸ் உமாவும் கலியாணமான புதிசில, (ஏன் கல்யாணமான பழசில யாரும் வெளிய போறதில்ல எண்டு நெடுங்காலமா டவுட்) சும்மா வெள...

இராவணேசன் ; Maunaguru's 'Ravanesan'

நெறியாள்கை - பேராசிரியர் மௌனகுரு. இடம் -கொழும்பு கலை இலக்கியப் பேரவை. காலம்- சனி(13.02.2010)  மாலை 6.30மணி. சனி மாலை(13.02.2010) பேராசிரியர் மௌனகுரு அவர்களின் 'இராவணேசன்' நாடகம் நடைபெறவிருக்கிறதென்று நண்பரொருவர் தகவல் சொன்னார். இருந்த எல்லா வேலைகளையும் புறந்தள்ளி விட்டேன். நாடகங்கள் என்றவுடன்  வரும் இந்த தொலைகாட்சி சீரியல்களையே கண் ஞாபகத்தில் கொண்டுவந்து முகத்தை அஷ்ட கோணலாக்குகிறது. மேடையமைப்பும், அரங்கமும்,அரிதாரம் பூசிக்கொண்ட பாத்திரங்களும், நேரடியான காட்சிகளூட்டும் கிளர்வும், எங்களுக்கு முன்னாள் ஒரு தலைமுறை இதனூடே வாழ்ந்து காட்டியிருக்கிற விடயமும் தெரிவதில்லை. மாற்றங்கள் மட்டுமே மாறிக் கொண்டிருந்தாலும்,எங்களின் முன்னோடிகள் வழி வந்த கலைப் பாதையை எடுத்தியம்புதலுக்கும்,அதற்கான வரவேற்புக்கும் இங்கு இடமில்லை எனும் போது அவற்றையெல்லாம் தாண்டி மனதில் எங்கேயோ வலிக்கிறது. எங்களுடைய காலத்தில், முழுமையான கூத்துக்கலையோ, அரங்காடல்ககளையோ  காண்பதற்கு காலமோ மாற்றமோ ஏதோவொன்று இடந்தரவில்லை .இருப்பினும் யாராவது எங்கள்  நலிந்து போன கலைகளை மறுபடியும்...

குழந்தைகளுக்கான நவீன தமிழ்ப் பெயர்கள்

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தல் எனும்போது, இவ்வளவு காலமும் வைத்த பெயர்கள் தமிழ்ப்பெயர்கள் இல்லையா எனும் கேள்வி எம்மில் பலருக்கு எழும். உங்கள் பெரும்பாலானோர் தமிழ்ப்பெயர் என்று எண்ணிக்கொண்டிருக்கும் உங்கள் பெயரை வட இந்தியக் கலப்பு,சமக்கிருத கலப்பு,ஐரோப்பிய,அரேபியக் கலப்புடனான பெயராக இனங்காணுவீர்கள்.  தமிழில் பெயர் சூட்டுவது இனத்துவேசம் உள்ள செயலா? :P இனத்தைக் கொண்டாடக் கூடிய செயல். மறத்தமிழன் என்று அடைமொழி இட்டுக்கொண்டு உலாவுவதை விட அழகான செயல் என்று எண்ணுகிறேன். இந்த அடையாளம் மிக அழகானது.  அண்மையில் நிறையப் பேர் தமிழில் குழந்தைகளூக்கான நவீனமான பெயர்கள் வேண்டும் என்று கேட்டிருந்தார்கள். தமிழில் பெயர்கள் பழமையானவையாக இருப்பது கூட இக்காலத்தோரின் தெரிவுக்குட்படாமைக்கு ஒரு காரணமாகும். பெண் குழந்தைகளுக்கான பெயர்கள் சிலவற்றை தொகுத்திருக்கிறேன்.சிலவற்றை கண்டும் பிடித்திருக்கிறேன். ( பிற்காலத்தேவைகளுக்கு ;)  ) வினைச்சொல் பெயர்கள் அஞ்சா ஆராதி ஆனந்தி  சலனி கோளறா இசி இனி தேயா மேதா வேயா வேகா மின்னு ...