புத்தனை,
போதையில் சந்தித்தேன்.
இன்று அவனிடம் எதுவுமில்லை
ஒரு ,காவியையும் ,
சதக் காகாசுகளையும் தவிர.....
காலத்தின்
அழுகிய நாற்றத்தால்
போதியில் சந்திக்க
வேண்டிய அவனை ..............................
..........................................................
பொம்மைகளின் யாசகர்கள் பற்றியும்
வானம் வழுக்கி விழுந்த தடம் பற்றியுமாய்
அவன் பதில்கள்
இருக்கவில்லை.
'வாசவதத்தை' பற்றியும்,
தீண்டப்ப டாத, வீணை பற்றியுமாய் இருந்தது....
அவன் பதில் .....
புனையப்படாத ஓவியத்திலிருந்து வரும்
அவனின் பௌர்ணமி ,....
பெருத்துப் போன பெருச்சாளி போன்றிருந்தது....!
அவனுக்கும் தெளிவில்லை ,
எனக்கும், தெளிவில்லை.....
காவிக்கும் , கர்த்தாவுக்குமான உட்கிடக்கையில்...........
அரச மரத்து
அணில் சொன்னது........
இவன் நெடுகாலமாய் இங்குதான் கிடக்கிறான்.....
வேலையத்த பயல்.....
மௌனத்தின் காற்று வெளி -
படபடத்தது....
அவனுக்கு மூல வியாதி வரக்கூடாமைக்கு வேண்டி -
மீண்டு வந்தேன்.
அவன் சீடன் சொன்னான்,
நானும் புத்தனாகி விட்ட கதை.....
திரும்பிப் பார்த்தேன்
அவன் அமர்ந்திருந்த இடம் -
அவன் அமர்ந்திருந்த இடம் -
சவக் கிடந்க்காய் கிடந்தது...
புத்தத்துக்கு பின்னாலும் ,
சரணத்துக்கு பின்னாலும் 'ஆமி'
தான் நின்றார்கள்.
-நிலா
2007
2007
ஒ! கவிதை கவிதை...
ReplyDeleteநல்லா இருக்கு...
ஆனா கவிதைகளை புரிந்து கொள்ற அளவுக்கு எனக்கு மண்டயில மசாலா இல்லயே...
சிறப்பாக உள்ளது...
ReplyDeleteமொழியை சிறப்பாக கையாளும் திறன் உங்களுக்கு கைவரப்பெற்றிருக்கிருக்கிறது.
//புத்தத்துக்கு பின்னாலும் ,
சரணத்துக்கு பின்னாலும் 'ஆமி'
தான் நின்றார்கள். //
அருமையான வரிகள்.... யதார்த்தமும் கூட...!
//புத்தத்துக்கு பின்னாலும் ,
ReplyDeleteசரணத்துக்கு பின்னாலும் 'ஆமி'
தான் நின்றார்கள். //
ஆஹா கலக்கல் வரிகள், எதற்க்கும் கவனமாக இருங்கள் நீதிதேவதை செத்து நீதிமன்றம் இடியும் நாடு இது.
அழகாகக் கவிதை எழுதுகிறீர்கள், கவிதை எழுதுபவர்களைப் பார்த்தால் எனக்குப் பொறாமையாக இருக்கும் ஏனென்றால் எனக்கு கவிதை படிக்க மட்டும் தான் தெரியும்.