நீ என்ன தேவைக்காக
என்னை நோக்கிப் படையெடுத்து வருகிறாய் என்றோ,
என்ன தேவைக்காக
உன் முரட்டுப் படைகளை என்னிடம் அனுப்புகிறாய் என்றோ
நான் இதுவரைக்கும் தெளிந்ததில்லை.
இருந்தும்
என் தேவை குறித்து
உன்னிடம் நான் தெளிவாகச் சொல்லியிருக்கிறேன்.
சொல்லப் பட்ட தேவைகளுக்குள் இருந்து
தெளிவாக, சொல்லப் படல் எனும் வார்த்தையில்
மழுப்பிய வார்த்தைகளை நீ கண்டு பிடித்துத் தருகிறாய்.
நான் சொல்லாத ஒவ்வொரு வார்த்தையையும்
எனக்குள்ளே நீவி விட்டு,
அடிக்கோடிட்டுக் காட்டுகிறாய்.
எனக்கு எல்லாக் கோட்டுக்குப் பக்கத்திலும்
இன்னொரு கோட்டைப் போட்டு பெரிதாக்கும்
பணி தெரியவில்லை.
உனக்குத் தெரிந்திருக்கிறது.
கோடுகள் பற்றி சமாமாயோ,
சமாந்தரமாயோ
நாங்கள் வாழ்வது பற்றி
நான் உனக்கு உணர்த்திக் கொண்டே இருக்கிறேன்.
நான் கேட்டுக் கொண்டே இருக்கிறேன்,
என் கேள்விகள் பதில்கள் அற்றுப் போனவையாக
உன்னிடம் மட்டும் சோர்ந்து விடுகின்றன.
மறுபடியும் ஒரு நாளும்
நான் உன் கனவுக்குள் வலுக்கட்டாயமாக புகவில்லையா?
நான் உன் கனவுக்குள் வலுக்கட்டாயமாக புகவில்லையா?
உன் ஒருநாளின் நினைப்புக்குள் என்
எதிர்த் தோற்றம் தனும் வரவில்லையா?
எதிர்த் தோற்றம் தனும் வரவில்லையா?
நான் செத்துப் போனதாய் எண்ணும் ஒரு கணம்
நீ துடிப்பதை நிறுத்துவாயா?
நீ துடிப்பதை நிறுத்துவாயா?
நாங்கள் - இல்லை , நீ சொல்ல்வது போல்,
நான் எனும் தனி மனுஷியும்,
நீ எனும் தனி மனிதனும் போட்ட கணக்குகளில்
நீ எனும் தனி மனிதனும் போட்ட கணக்குகளில்
நாம் என்று எப்போதும் இருக்கவில்லையா?
நாங்கள் தொடராமல்
இருந்த வழித்தடங்களை எனக்கும்
உனக்குமாய் தொட்டுக் காட்டியது
நானும் நீயும் இல்லையா?
உனக்குமாய் தொட்டுக் காட்டியது
நானும் நீயும் இல்லையா?
உன்னை மிக வேதனைப் படுத்தும் தருணமும்,
என்னை மிக வேதனைப் படுத்தும்
தருணமும் ஒன்றாக அல்லாவா இருந்திருக்கிறது?
தருணமும் ஒன்றாக அல்லாவா இருந்திருக்கிறது?
சரி, இவைகளை விட்டுத் தள்ளு,
வலி என்கிறது விரவுகின்ற போது,
முதுகுத் தண்டில் பிளந்து ,
அக்கினிக் குழம்பில் நாக்கைத் தோய்த்து,
அக்கினிக் குழம்பில் நாக்கைத் தோய்த்து,
குரலும் , துத்தமும் வெளிவர முடியாமல்
பிணைந்து கொண்டே அழக் காட்டித் தரும்
பிணி எனக்கும் உனக்கும்
ஒரே செயலுக்காய் வந்திருக்கிறதல்லவா?
ஒரே செயலுக்காய் வந்திருக்கிறதல்லவா?
ஒரே தெருவில், ஒரே இடத்தில் ,ஒரே செயலுக்காய்
நாங்கள் மாறி மாறித் தண்டிக்கப் படுகிறோம் இல்லையா?
தறிகெட்டு அலையும் -என்
மூளையின் நரம்புகளை வேரோடு பிடுங்கி
உன் வீட்டு புழக்கடையில் நட்டு வைத்திருக்கும்
இந்த லாவகமான பணியை,
நான் செய்யக் கூடாதா?
நான் உன்னை கொலைக்குத் தயாராகும் படி
எப்போவாவது சொல்லியிருக்கிறேனா கண்ணே ?
கொலைகளில் இருந்தும்,
கொடும் விதிகளில் இருந்தும்
காப்பாற்றப் படுவாய் என்றல்லவா
காப்பாற்றப் படுவாய் என்றல்லவா
புலம்பிக் கொண்டிருக்கிறேன் ?
என் புலம்பல்களை அடித்து நிறுத்தாமல்க் கேள்.
வார்த்தை சுமந்து வருகிற ஓசைப் பெட்டியை
அடித்துச் சாத்தாமல் ஒரு கணம் நின்று கேள்.
வானத்துக்கும் பூமிக்கும் நான் கதறுவதை,
சாப்பிட்டு விட்டு நித்திரை கொண்டுவிட்டு,
ஓய்வான ஒரு பொழுதில் கொஞ்சமாய்க் கேள்.
நிதானம் தப்பும் வரைக்கும் நான் சொல்வதை நிறுத்தாமல்க் கேள்.
தயவு செய்து வாய்ப்புக் கொடுத்துப் பார்.
யாரும் தோற்றுப் போவதை உன்னால் தாங்க முடியாதல்லவா?
பொய்மை சூழ்ந்த அந்தகாரத்தில்
நீ சுற்றிக் கொண்டிருக்கும்
கணங்களில் ஏதாவது ஒன்று ஆலாபிக்க வேண்டும்.
வார்த்தையின் வறுமையும், உண்மையின் ரோஷமும்
மிகுந்து போன ஒரு நாளை நீ எதிர் பார்க்காதே.
பொய்யும்,
மிதவாதமும் மட்டும் சூழ்ந்து கொண்டு
உன்னை அச்சம் காட்டுகின்றன.
மிதவாதமும் மட்டும் சூழ்ந்து கொண்டு
உன்னை அச்சம் காட்டுகின்றன.
உன்னைச் சூழ பொய் என்றோ,
மிதவாதமென்றோ நான் உறுதிப் படுத்தவில்லை.
மிதவாதமென்றோ நான் உறுதிப் படுத்தவில்லை.
எனக்கு மங்கலான வெளிச்சத்தில் கண்
பழுதாயும் இருக்கலாம்.
பழுதாயும் இருக்கலாம்.
இருப்பினும்,
நீண்ட நெடிய வெளிச்சத்தை,
உன்னிடமிருந்து எதிர் பார்க்கிறேன்.
ஆசையாய் இருந்த ஒன்று
தேவையாய் உருப்பெற்று விட்டது.
தேவையாய் உருப்பெற்று விட்டது.
எப்போதும் நீ தேவையாகவே இருக்கிறாய்.
விரக்தியும், சோகமும் கொண்ட
நிலைமைகளை ஒருவாறு விரட்டலாம் என்று யோசிக்கிறேன்.
நிலைமைகளை ஒருவாறு விரட்டலாம் என்று யோசிக்கிறேன்.
நான் சிரிப்பதற்கு எங்காவது காரணம் நோண்டுகிறேன்.
பெரும்பாலும் உன்னை மகிழ்விப்பதாகவே
அதன் எல்லாக் காரணங்களும் இருக்கக் கூடும்.
அதன் எல்லாக் காரணங்களும் இருக்கக் கூடும்.
சிந்தனைகளின் அழுத்தம், கேள்விகளின் துரத்தல்,
அனுதாபங்களின் உச்சுக் கொட்டல் எல்லாவற்றையும்
தூர நின்றே வேடிக்கை பார்க்க விரும்புகிறேன்.
உன் உதவி தேவை.
எப்போதும் போல,
நான் எனும் கவுரவம், உனக்குள் தான் பொதிந்து கிடக்கிறது.
எனக்குத் தெரிந்தும், உனக்கே தெரியாமலும் மாட்டிக் கொண்ட
அந்த வஸ்திரத்தை நீ தான் பங்கு போட்டுத் தர வேண்டும்.
பாதி காணும் !
ஏற்பின் கதவடைப்புக்கள் இல்லாத காலத்தில்,
உன் பற்றி நான் பேசத் தந்த வாய்ப்புகளுக்கு நன்றி,
ஆயின்
எதிர்க்காமல் இருத்தல் என்றால் என்ன கண்ணே ?
நிலா-
2011
Comments
Post a Comment