Skip to main content

ஆண் பெண் பாலினப் புரிந்துணர்வும், பெண்ணின் தளமும், பண்பாட்டுத் தளத்தின் நிறுவனமயப்படலும்.


                                                            



யிரியல் ரீதியாக இப்பிரபஞ்சத்தில் ஆண் பெண்,  இடை நிலைப்பாலினர் என மூவகைப் பாலினம் மனிதர்கள் எனும் இனப்பிரிவில் காணப்படுகின்றது. [இனம் என்பது, ஒரே குறிப்பிட்ட நிலப்பரப்பில் பொதுவான பண்பாட்டுடன் வாழக்கூடிய பொது இயல்புடையவை ]


இந்த மூவகையில் ஆண் , பெண் எனும் இரண்டு பாலினங்கள்  மனித உலகின் இனவிருத்திக்கும்,அவற்றின் நிலவுகைக்கும் ஆதாரமாயுள்ளதால் அதிக முக்கியத்துவம் பெறுகின்றது. இவை இரண்டும் இயல்பாகவே ஒன்றை ஒன்று ஆக்கிரமிக்கவும், ஒன்றை ஒன்று ஆதரிக்கவும் வார்ப்புப் பெற்றவை. ஆண் மட்டும் உள்ள ஓர் சமூகத்தை கற்பனை பண்ணிப் பார்க்கையில் சமுகத்தில், பெண் அமர்த்தப்பட்டுள்ள இடமும், பெண் மட்டுமே உள்ள சமூகத்தைக் கற்பனை பண்ணிப் பார்க்கையில்  ஆணின் சமூக இடமும் தெளிவாகக் கூடியவாறு இருக்கும். 

இதில் மனிதன் வகுத்த பண்பாடு என்பது ஆண் -பெண் என்கிற இணைகளின் இயற்கைக்கும் , சமூகத்துக்கும் இடைப்பட்ட மாற்றுமையாகும். அல்லது பிறிதொரு கட்டமைப்பு ஆகும். பண்பாடு என்றால் என்ன என்று பார்த்தோமாகில்,  மக்கள் கூட்டம் கணக் குழுவில் இருந்து இனக்குழுவாக மாறுவதற்கு எடுக்கும் இடை நிலையின் அடிப்படையில் அதன் அடையாளமாக இன்னும் உள்ளது. பண்பாட்டை நாங்கள் ஹிப்சினுடைய கொள்கைக்கமைய இரண்டாக வகுக்கலாம். 

ஒன்று,  பண்பாட்டில் உள்ள புழக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. பண்புகளின் மரபு சார்ந்தது. உதாரணமாக வழமைகள், பழக்கங்கள் போன்றவை அடங்கும்.இது ஒவ்வொருஇனக் குழுமத்துக்கு மாறுபடும்.

இரண்டு, பண்பாட்டின் தூய நிலை. பகுத்து ஆராய்ந்து பரீட்சார்த்த ரீதியாகவோ, யதார்த்தமாகவோ சமூகத்துக்குள் உள்வாங்கிக் கொள்வது. இது இயற்கையை பண்பாட்டின் மூலம் வரையறுக்கத் தொடங்கையில் ஏற்படுகின்றது. சாத்தியப்பாடுகளுக்கும், முரண் சாத்தியங்களுக்கும் எதுவாக கொள்கைகளை வகுத்தல் இதில் அடங்கும். பண்பாடு என்பது, இனம் சார்ந்ததொன்றாக எதிரெதிர்க் குழுமங்களால் அர்த்தப்படுத்தப்படுகிறது. 

அதனாலேயே அது குழுமத்துக்கு குழுமம் வேறுபடுகின்றது. பொதுவாகச் சொல்வதானால் ஒரு மனித உயிரியில் கட்டமைக்கப்பட்டிருக்கும் அதன் சமூகப் பிரதிநிதித்துவத்திற்காக , தன்னை முதன்மைப் படுத்துவதற்கான அதனில் திணிக்கப்பட்டிருக்கும் ரகசியமூலங்கள். அல்லது அதில் ஏற்றப்பட்டிருக்கும் தரவுகளின் சூத்திரம் மாதிரி பண்பாடு திகழ்கின்றது. இது சமூகத்தை ஆதிக்கத்தின் வடிவில் காக்கிறது. அதனால் சமூகத்தின் பெரும் குறைபாடான உடலினை ஆதிக்கத்தின் எல்லையாக வைத்து குறியீடுகளை நிபந்தனைக்குல்லாக்கின்றது. இதில் தான் ஆண், பெண் நிலைகள் எங்கெங்கே சமுகத்தில் என்று நிர்ணயிக்கப்படுகிறது. 


பெண்ணை உடல் சார்ந்த பொருளாக நோக்கப் படும் இடத்து பண்பாட்டின் ஆதிக்கத்தில், இரண்டாம் பாலினளாக  , கைக்கொள்ளல் நேர்கிறது. 

ஆண் , பெண் என்கின்ற பாலின வேறுபாடு என்பது செயற்பாட்டு ஆட்சிமிக்க நிகழ்வுகளின் மூலமே குறியீட்டுத் தன்மை வைக்கின்றன. ஆண், பெண் எனும் பால் மட்டுமே அடிப்படை உயிரியலின் அம்சமானது. இதில் பாலினம் என்கின்றது எங்கு வந்தது ?

குழந்தைகள் பிறக்கும் போதே அவர்களுடைய மரபணுக்கள் இனமாதலுக்காகத் தீர்மானிக்கப்பட்டு விடுகின்றன. தவிர பாலினராக வகைப்படுத்தப்பட்ட பண்பாட்டு ரீதியின் ஏற்றத்தழ்வுகளுக்கு தயார்ப்படுத்தப்பட்ட குழந்தைகளைப் பிறப்பதில்லை. பண்பாட்டுத் தாழ்வுச் சிக்கல்கள் , ஒரு குழந்தை பிறக்கும் போதே ஆரம்பமாகின்றது.குழந்தையை ஆண் பெண் என்று குறித்துப் பிரித்துப் பேசுவது.பாலுக்கு ஏற்றாத் போல் பெயர் வைத்தல். உடைத் தெரிவுகள். வளர்ப்பு முரண்கள், விளையாட்டுப் பொருட்களைத் தெரிந்து கொடுத்தல், அவர்களை சமூகத்துக்குக் கட்டமைத்தல் என்பவற்றிலே பாலின முரண்பாடுகள் குடும்பம் என்கிற நிறுவன அலகின் மூலம் திணிக்கப்படுகின்றது.

ஆக பால் என்பது உயிரியல் அடிப்படையிலும், பாலினம் என்பது பண்பாட்டு நிலைமையின் அடிப்படையிலும் கட்டமைக்கப்படுவதாகும். என்பது பிறப்பு அல்ல. அது ஒரு செயலூக்கமுள்ள நிகழ்வு. கோணல்கள் பற்றிய கோட்பாட்டில் இது தெளிவாக்கப்பட்டுள்ளது. 


பால் நிலையின் அடிப்படையில் பண்பாட்டின் பெயரால் இடம்பெறும் அடக்கு முறைகளில் இருந்து விடுபட்டு சமத்துவ நிலைமையை சரியாக விலங்கில் கொள்ளல். 

உயிரியல் ரீதியாக ஒருவருக்கொருவர் அவரவர் தேவைக்கும், நிலவுகைக்கும் ஏற்ப உடட்கட்டமைப்பையும், உயிரலகுகளையும் கொண்டவராயின் ஆண், பெண் இருபாலாருக்குமிடையில் ஏன் பேதம்? 
சமுகம் இறுக்கி வைத்திருக்கும் சில விடைகள்.

1]எல்லா ஆண்களும், எல்லாப் பெண்களும் சுதந்திரமாக தனித்து, எதையும் செய்ய முடியாத மனநிலையில் இருப்பதாக ஒருவருக்கொருவர் கற்பனை பண்ணிக் கொண்டுள்ளமை.

2]குடும்பம் போன்ற ஒழுங்கமைக்கப்பட்ட நிறுவன அமைப்பு முறைமை சிதைந்து போய்விடும் எனும் பய மனப்பான்மை.

3]அதீத பாலியல் நடவடிக்கைகள் / அல்லது கட்டற்ற பாலியல் தேவைகள் மூலம் சமுகம் வன்முறை மிகுந்ததாக உருவாக்கம் பெற்றுவிடும் எனும் நம்பிக்கை.

4]பாலியல் பற்றிய சிந்தனை தவிர ஆண், பெண் பாலினருக்கு வேறு தேவைகள் இல்லை எனும் குருட்டுத் தனமான நம்பிக்கை. 

போன்ற முக்கிய காரணிகளை கோணல்களின் கொள்கை முன்வைக்கிறது.இதுவே அடிப்படை பண்பாட்டுப் பிரிவினை ஏற்றத்தாழ்வுக்கு  காரணமாகிறது.


ஒரு அடக்கு முறைக்கு எதிரான செயற்பாடு இன்னொரு அடக்குமுறையாக இருக்குமா? அது தீர்வாக முடியுமா? 

பொதுவாக நாம் வட்டம் போட்டுக் காட்டும் தேவையின் கேள்வி  என்னவென்றால் நாம் எதனை ஆதரித்துப் பெசுகின்றோமோ அந்தக் கணமே அதற்கு எதிரான கோஷத்தை அல்லது எதிரான குழுமத்தை மறைமுகமாக உருபாக்குபவர்களாக ஆகிவிடுகிறோம். ஆதரித்தல் என்பது எதிர்த்தளுக்கான வலுவைக் கூட்டும் செயலை உருவாக்கி விடுகிறது. ஆக இன்னொரு அடக்குமுறை என்பது தீர்வாக இருக்கமுடியாது. 

பண்பாட்டுத் தளத்தில் பெண் ,எந்தவகை ஒடுக்கு முறையும் முன்னதாகவே பண்பாட்டுத் தளத்தில் கட்டமைக்கப்பட்டு விடுகின்றது. இனக்குழும முறை முழுதாகத் தகர்ந்தேரியப்படாத நிலையில், அவற்றை சாதிகளாக ஆக்கிவிட்டதில் பெண்களினுடைய ஒடுக்குமுறை பகிரங்கமாக ஆரம்பிக்கின்றது. எந்தவொரு தேசியமும் தத்தமது பண்பாடுகளை தமக்கேட்ப கட்டமைத்துக் கொள்கிறது.

நிலமானிய சமுகத்தில் இருந்து முதலாளித்துவ சூழலுக்கு மாறும் தேசியக் கட்டமைப்பில் பெண்கள் பண்பாட்டின்மையப்பொருளாகவே பார்க்கப்படுகின்றனர். தாய்வழி உண்மை, தந்தை வழி பொய் என்ற எண்ணக் கருவின் அடிப்படையில் கற்பு என்பது பெண்களுக்கு மட்டுமே என்று தொடர்ந்தும் வலியுருத்தப்படல் மூலம் இது தொடர்ந்தும் நீடிக்கின்றது. பெண் பற்றிய கருத்தியல் நிலமானிய தொடர்ச்சியாக பொருளுற்பத்தி பெருகிவரும் முதலாளித்துவ சனநாயகத்திலும் திணிக்கப்படுகிறது. 

நிலமானிய சமூகத்தளத்தில் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட பெண்ணுக்குரிய உயர் சுதந்திரம், முதலாளித்துவச் சமுகத்தில் குறைந்து போகிறது. இம் முதலாளித்துவம் எனும் கட்டமைப்பே ஆணாதிக்கத்தின் அடிப்படை என்று பெண்ணியலாளர்கள் வகுக்கிறார்கள். ஒன்றின் இருப்பைப் பற்றிய ஆதாரம் மற்றது வழங்க வேண்டிய சந்தர்ப்பம் இருக்கும் போது அதனது இருப்பின் ஆதிக்கம் அதிகமாகிறது. இதுவே இங்கு ஆணாதிக்கம் ஆகிறது. 

அதாவது மற்றையதன் இருப்பை கேள்விக்கு ஆளாக்குதல். இதனை பெண்ணியல்லாளரும் உயிரியல் ஆய்வாளரும் ஆகிய லெபனான் நாட்டின் அலீசா ஹிப்ரி எனும் பேராசிரியர் இவ்வாறு விளக்குகிறார்.


ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான வெளிப்படை வித்தியாசம் உறுப்பியல் அம்சமாகும். இந்த ஆதிக்க நிலையானது, பெண்ணிடம் தன்னிடம் இல்லாத ஒரு மந்திர சக்தி அல்லது, இனம் புரியாத ஒன்றை பெண்ணிடம் ஆண் காண்பவனாகின்றான். இந்த அச்சம் பெண்ணில் இருந்து தன்னை தாழ்த்தலில் இருந்து தொடங்குகின்றது. 

ஒன்று, அதிக அளவு இரத்தப்போக்கு கொண்ட ஒரு பெண் இறக்காமல் இருப்பது. சாதாரணமாக உடற் குருதியின் 40 ௦ -80  மில்லிலீட்ட்ரர் அளவில் வெளியேறுகின்றது. இது ஆணைத் திகைப்புக்குள்ளாகும் செயலாக அமைகின்றது. சாதாரணமாக இன் நிலையில் ஆண்கள் இறந்து விடுகின்றார்கள். இது பேரச்சத்தை கொடுக்கின்றது.

இரண்டு, அந்த இரத்தப் போக்கானது தோன்றியது போலவே நிறுத்தப்பட்டு விடுகின்றது. இது இரண்டாவது அச்சம். 

மூன்று,பெண் கருவுறுதல் எனும் செயல், ஒரு உயிரைச் உற்பத்தியாக்குவதற்
கான உடலமைப்பு, உயிரியற் கட்டுப்பாடு, அடுத்த வித்தியாசம்.

நான்கு,பெற்ற உயிரை ஊட்டி வளர்க்கக் கூடிய உடலியற்
திறன். அப்பெண்ணின் உடலிலேயே விருத்தியாக இருப்பது.அச்செயலில் ஆணின் பங்கு ஏற்கக் கூடியதல்லாததாக புறக்கணிக்கப்படுவதும். 

இவ்வாறான  நான்கு நிலைமைகளின் பின்னரும் ஒரு பெண் சாதாரண நிலையிலேயே இருப்பது என்பதும் பெண் மீதான அச்சத்தை ஆணுக்கு கொடுப்பதாக அமைகிற நான்கு பிரதான காரணிகளாகும். பெண்ணுடல் மாறுகின்ற விதமும், ஆணுடல் மாற்றத்துக்குல்லாகாத நிலையம் இதை அதிகளவில் தூண்டுகின்றது. மிகைப்படுத்தப்பட்ட சிறப்புத்தன்மை வாய்ந்த இன்னொன்றை ஆதிக்கத்துக்கு உள்ளாக்குதல் பற்றி ஆண் சிந்திக்கிறான். 

அடிப்படையில் பெண் இயற்கையுடன் ஒன்றியவளாகவும், அவளது உடலும் அதன் பரிமாணங்களும் இயற்கையுடனும் பிரபஞ்சத்துடனும்,  ஒன்றித்தும் இருப்பதை அவதானிக்கிறான். இயற்கையின் மறு உற்பத்தியைப் போலவே பெண் செயற்படுவதால், இயற்கையையும் ஒரு சிறப்பு மிக்க எதிராளியாகக் கருதுகிறான். இதன் நீட்சியே இயற்கையை அடக்கியாளும் தொடராகவும், பெண்ணை காட்டுக்குள் வைத்திருக்கும் நிகழ்வாகவும் தொடருகின்றது என்று பெண்ணியம் முன் வைக்கிறது.

அதன் தொடர்ச்சியாக வந்த மதம் எனும் நிறுவனமயம், குடும்பம் எனும் நிறுவன அமைப்பு போன்றவை தொடர்ந்தும் இதனையே அவற்றின் ஒழுக்கவியலின் முதற் பங்க்காக வைத்தன. ஆக நிலப்பிரபுத்துவம், காலனியாக்கம், முதலாளியம் அனைத்தும் ஆணாதிக்க மேலாட்சியின் விரிவுக் கருத்து என்றே பெண்ணியம் சொல்கின்றது. இவ்வாறே பெண்ணின் தளம் சமூகத்தில் நிர்ணயிக்கப்படுகிறது.  

இயற்கை மீதான பெரும் அச்சம் பெண்ணின் மீது திரும்புகிறது. இதில் இருந்து விடுபட, ஆண் சமுக பொருளாதார மறு உற்பத்தியை தனாதாக்க முனைகிறான். 

கி.மு ஆறாம் நூற்றாண்டில் உருவான குர்ரானைப் பொறுத்தவரையில் தெறித்து ஓடும் நீர்த்துளியில் இருந்து உயிர் தோன்றுகின்றது என்றே இருக்கின்றது. உயிர் எங்கிருந்து தோன்றுகின்றது என்பது பற்றிய தோற்றத்தில் ஆணின் பங்கு என்ன என்று தெரியாமல் இருந்த காலங்கள் கரு உயிர்ப்பதை ஒரு தெய்வாதீனம் என்றே நம்மப்பட்டது. 

உயிர்த்தல் எங்கிருந்து என்று அறியாத போது, இறப்பின் அச்சமும் பற்றிக் கொள்கின்றது. பெண்ணில் இருந்து உயிர் தோன்றுவதும், இறப்பின் போது இல்லாமல்ப் போவது ஆணின் அச்சத்தை தனது உடல் முழுமையற்றது என்பதையும், நிலையற்றது என்பதையும், தனக்கான உரிமைப் பொருள் இங்கு இல்லை என்பதையும் ஆணுக்குள் கொடுக்கின்றது.

இதுவே இறவா  வாழ்க்கை படிய தேடல், மறு பிறப்பு, மீழ் சுழற்சி என்ற தீவிரத்துக்கு ஆளாக்கியது. மரணத்தை வெல்லும், இயற்கையை தனது ஆதிக்கத்துக்குள் கொண்டுவரும் செயலின் தொடர்ச்சியாகவே ஆணின் வாரிசை பெண் சுமந்து, தனது உற்பத்தியின் தன்மையை உறுதிப்படுத்துவது என்ற நிலைமையினை ஆக்கியது.

இங்கு பெண் ஆணின் வாரிசை உட்பத்தியாக்கித் தரும் உபரிக் கருவியாக ஆட்கொள்ளப்படுகிறாள். பெண்ணின் தைமையாதலின் விளைவான உயிரியை தனது வாரிசாக்கிக் கொள்ளும் தன்மையை கையாள்கிறான். பெண்களால் கண்டடையப்பட்ட விவசாயம் என்கிற பொருள் உற்பத்தியை  தன்னுடைய  உடமையமாக்கின்றான். பெண்ணினுடைய காவல்க் காரனாக உருப்பெருகின்றான். இத்தகைய அதிகாரத்தின் நிறுவனமே குடும்பம் என்கிற அழகு. இதுவே பெண்ணின் தளத்தை, அவள் செய்யவேண்டியவற்றை, நிகழ்த்த வேண்டியவற்றை உறுதிப்படுத்தும் அமைப்பிலாக உருப்பெற்றது. இங்கிருந்தே பெண்ணுக்கான விளிம்பில் தள்ளல் உருவாக்கப்பட்டது. 


இன்று உலகமயமாதல் என்பதன் ஊடாக எதிபத்தியம் மூன்றாமுலக நாடுகளை சுரண்டிக் கொண்டே இருக்கின்றது. இதில் பெண்களின் தளம் பன்முகப்பட்ட வழிகளில் ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டுக் கொண்டே வருகின்றது. பொருளாதார, சமுக, அரசியல் எல்லாத் தளத்திலும் பெண் ஒடுக்குமுறை அல்லது அடக்கு முறைக்கு ஆளாக்கப்பாடல் அடையாளமாக்கப்படுகின்றது. அவற்றுக்கு எதிராக பெண்களை அணிதிரட்டுவது கடினமான பணியாகவே இன்னும் இருக்கின்றது. 


பெண்கள் விடுதலை பற்றிய கோரிக்கைகள் வெவ்வேறு நிலைகளிலும் தளங்களிலும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது. சர்வதேச ரீதியாகவும், தேசிய ரீதியாகவும் இதன் தேவை சோசலிசத்தின் தற்காலிக பின்னடைவின் பின் மாக்ச்சம் தோல்வி கண்டதான நினைப்புடன் ஆரம்பமாகிறது. அரச சார்பற்ற, தொண்டு நிறுவனங்களின் கோல்களை பரப்பும் செயலாகவே மூன்றாம் உலக நாடுகளில் இத் தேவையின் தீர்வு இன்னும் இருந்து வருகின்றது. 

தொள்ளாயிரத்து அறுபதுகள் -எழுபதுகளில் பெண்களின் தீவிர நிலவுகைக்குச் சார்பான இயக்கங்கள் தோன்றியிருந்தன. அவை அரசியல், சமுக வலிமை உடையவையாகவும் விளங்கின. இன் நாளின் முக்கியமான, மகப்பேற்று உரிமை, சம உரிமைச் சட்டம், சீர்திருத்தங்கள் போன்றவற்றை முன்வைத்து வெகுசன மட்டத்தில் அவை இயங்கின. பெண்களின் வேலை நேரம், அவர்களின் சம்பளம், அதிகாரச் சமநிலை போன்றவற்றை போன்ற அமைப்புக்கள் நிகழ்த்தின. 

வலது சாரித் தாக்குதல்களின் பேரில் இவை எல்லா உலக நாடுகளில் இருந்தும் ஒரே காலத்தில் தொய்வுக்குள்ளாக்கப்பட்டன. போது சன அரங்கில் இருந்து கேள்வி இல்லாமல் தூக்கப்பட்டன. இதன் பின்னர பெண்ணிய இயக்கங்களின் செயலூக்கம் குறைந்தது. அமெரிக்காவில் தோன்றிய இதன் உலகளாவிய செயற்பாடு அடிமை ஒழிப்புடனே ஆரம்பமாகியது. [1920 ]

மீண்டும் இவை தோன்றாமல் செயல் இழந்ததற்கு, சமகாலப் பெண்கள் இயக்கத்தின் பலவீங்களின் தன்மையைக் கண்டறிதலில் உள்ள தயக்கம், சமகாலப் பெண்ணியம், முதலாவது பெண்ணிய இயக்கத்தின் தோல்வியைத் தழுவலாம் என்ற பயம் போன்றன காரணமாய் இருக்கின்றது. [1930 ,1940 ,1950 ]

முதலாவது பெண்ணிய அலை, அடிமை ஒழிப்பு, பெண்களுக்கான வாக்குரிமை, பெண்களின் தொழிற்சங்க அமைப்பு என்பவற்றை நிகழ்த்திக் காட்டியதுடன் அதன் தேர்வு எல்லை ஒழிந்ததும், இரண்டாவது பெண்ணிய அலை, பெருவாரியான பெண்ணியக் கோள்களை முதலாவதிலும் தீவிரமானதாக வைத்தது. நடுத்தர வர்க்கத்தினரின் ஆதிக்கத்தை நிலை நாட்ட பாடுபட்டது.மாணவர்களுக்கிடையில் புரட்சியை உருவாக்கக் காரணமாய் இருந்தது. சமபால்ப் பெண்ணியம் முன்வைக்கப்பட்டது. பாலுணர்வு, பாலியத் தேவை குறித்து இங்கு தெளிவாகப் பேசினார்கள். [1930 -1940 ]

இப் பெண்ணிய அலைகள் சமுதாயம், சமுக நீதி, முற்போக்கான செயலூக்கம், தனிமனித உரிமை என்பவற்றில் ஒரு கருத்தாக இரண்டு காலத்திலும் ஒடுங்கின.

பெண்ணியம் என்பது ,ஆண் மறுப்புச் சிந்தனை அல்ல. ஆண் பெண் என்ற இருமைகளின் எதிர்த்தன்மைகளை ஒன்றை ஒன்று எதிர்கொண்டு கிடைக்கப் பெரும் இருவருக்குமான பாதுகாப்புப் பற்றியது. ஆணை அதன் அதிகாரத்தில் இருந்தும், பெண்கள் சார்ந்த வெறுமையில் இருந்தும் ,இயற்கையில் இருந்தும் பெறப்படும் பெரும் அச்சத்துக்கும், பதற்றத்துக்கும் எதிராக, ஆணின் கலாசார, பண்பாட்டு கருத்துத் தளங்களில் இருந்து பாதுகாப்பாக விடுவிக்கும் ஒரு செயற்பாடாகும். ஆணையும், பெண்ணையும் முரண் நிலையில் நிறுத்தாமல் புரிந்துணர்வைத் தூண்டுதலே பெண்ணியத்தின் அடிப்படையாகும். இதன் நோக்கு இப்போது சரிவரப் புரிந்துனராத நிலையே பெண்ணிய எதிர்ப்புக்கும், ஆண் பெண் பாலினச் சமத்துவத்துக்கும் கிடைத்த பாரிய சவாலாக அமைகிறது. 

பெண்கள் இயக்கத்தின் உலகளாவிய சரிவின் காரணம். 

1960  களில் பெண்ணிய இயக்கத்தில் ஆதிக்கம் செலுத்தியது தீவிரப் பெண்ணியமாகும். அப்போது பெண்கள் இயக்கம் இரண்டு வெவ்வேறு போக்குகளைக் கொண்டிருந்தது.


ஒன்று] சோஷலிஸ பெண்ணியம் [ சிலவேளைகள் மார்க்சிய பெண்ணியம்] 
மற்றையது, தீவிரப் பெண்ணியம் .அதி தீவிரமான ஆண் எதிர்ப்புடன் அவர்கள் செயற்பட்டார்கள். பால் ஒடுக்குமுறையின் அடிப்படையில் சமமின்மையே உருவாகிறது என்று வாதிட்டார்கள்.

இந்த இரண்டு வெவ்வேறான கருத்துக்களின் மோதலே பெண்ணியப் போக்கு தளர்ச்சியடைந்ததற்கும், அதன் சரிவுக்கும் காரணமாகியது. குழுவாதத்தாலும், மும்முரமான சித்தாந்த மோதல்களாலும் இதன் நிலைப்பு கேள்விக்குள்ளானது. அதனைத் தொடர்ந்து இரண்டும் பிரிந்து, வெவ்வேறு தளத்தில் குறைந்தளவில் இயங்கிக் கொண்டு வருகின்றது. இதனால் இரண்டிலும் நடுத்தர வர்க்கப் பெண்களின் தேவை புறக்கணிக்கப்பட்டது.

மூன்றாம் உலக பெண்களின் கவனிப்பு குறைக்கப்பட்டது. ஆக இதன் நிலை இன்று தொடருமாப் போல் இல்லை. பெண்கள் இயக்கம் வேலைத்தளத்தில் பால்நிலைச் சமத்துவம், பெண்களுக்கான சிறப்புச் சலுகைகள் , உத்தியோக வாய்ப்புக்களை விரிவு படுத்தல் என்பவற்றில் கவனம் செலுத்தியது. பெண்ணிலை இயக்கங்கள் பொதுவாக இல வயதினரைக் கொண்டிருந்ததனாலும், தீவிரவாதச் சிந்தனை பெருவாரியாக இருந்தமையினாலும், அவர்கள் எந்த வர்க்கத்தில் இருந்து வந்தார்களோ அந்த வர்க்கத்தினருக்கு அப்பாற்பட்டவை  சுயாதீனமாக எதிர்க்கப் படுகின்ற பார்வை அவர்களுக்குக் கிடைத்தது. விமர்சனப் பார்வை கொண்டதாக இருந்தது. 


தொழிலுக்குப் புறம்பான நிறுவனங்களும், சமூக உறவுகளும் பலவீனமடைந்த நிலையில், தீவிரத் தன்மைவாதிகளுக்குக் கூட வேறு வகை விழுமியங்களின் பாலே நாட்டம் இருக்கும். எதிர்வினைகள் மீதே கவனம் செல்லும். இவாறான அடிப்படைக் காரணிகள் மூலம் பெண்ணிய அலை சரிவடைய ஆரம்பித்தது. இன்றைக்கு இதன் தேவை மூன்றாம் உலக நாடுகளில் அதிகளவில் காணப்படுகின்றது.

எந்த ஒரு சமுக ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டமும் தனித்து மேட்கொள்ளப்படும் பொது அது போராட்ட சக்திகளையும் போராட்டத்தையும் பலவீனப்படுத்தும். அதுவே பெண்ணியம் பற்றிய நிலையில் அடிப்படையாகிவிட்டிருக்கிறது. பெண்கள் விடுதலை பெற வேண்டும் எனும் நிலையை விட அதற்கு எதிராகக் கிளம்பும் கிளர்ச்சிகளின் தலையீடே செழுமை மிக்கதாக இருந்தும் விடுகிறது.


நிலா-
-2011 

Comments

  1. அருமையானதொரு பதிவு. எனக்கு நிறையக் கோணங்கள் புதியவை. நன்றிகள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சாமகானமும் காம்போதியும்

முருகையன் ஒரு மொழிபெயர்ப்புச் செய்தார். மொழிபெயர்ப்பு எண்டும் சொல்ல முடியாது,சாதுவா மொழிபெயர்ப்பும்,திறமையான கற்பனையும் போட்டு செய்யுள் வடிவத்தில, இளநலம்! என்ன இளநலமா?ஹையா கிளுகிளுப்பான கதை வரப்போகுது. குமாரசம்பவம் (ஸாரி வேற கண்டென்ட் எண்டு நினைக்கப்படாது, ஐ ஆம் வெரி டீசன்ட்) காளிதாசன் குமாரசம்பவத்தில எழுதின அதே கதையை தமிழில தந்தவர். அதில தான் இந்தக் கதை வருகுது.  சாமகானம் சாமகானம் எண்டு ஒண்டு சொல்லக் கேட்டிருப்பம். “சாமகானம் பாடினான்” எண்டு நாலாம் வகுப்புச் சமய பாட புத்தகத்தில ஒரு பாடம் இருக்கு. பத்துத் தலையும், கையில ஒரு தலையுமாக் கணக்குப் பிழையா மொறாயஸ் கீறின இராவணனிண்ட மீசை வெச்ச படம் இருக்கும், இப்ப ஞாபகம் வந்துட்டுதா? அந்தக் காலத்திலேயே தலைகளிண்ட கணக்கை எண்ணிப் பாத்தனாங்கள் ஆக்கும். (தலைக்கணக்கு முக்கியம் அமைச்சரே) இப்ப சாமகானத்தைப்பற்றிப் பாப்பம். காளிதாசன் குமாரசம்பவம் எழுதேக்க, சும்மா கற்பனைகுதிரையை காட்டாற்று வெள்ளம் போல பறக்க விடுறேர்.  மிஸ்டர் சிவனும் மிசஸ் உமாவும் கலியாணமான புதிசில, (ஏன் கல்யாணமான பழசில யாரும் வெளிய போறதில்ல எண்டு நெடுங்காலமா டவுட்) சும்மா வெள...

இராவணேசன் ; Maunaguru's 'Ravanesan'

நெறியாள்கை - பேராசிரியர் மௌனகுரு. இடம் -கொழும்பு கலை இலக்கியப் பேரவை. காலம்- சனி(13.02.2010)  மாலை 6.30மணி. சனி மாலை(13.02.2010) பேராசிரியர் மௌனகுரு அவர்களின் 'இராவணேசன்' நாடகம் நடைபெறவிருக்கிறதென்று நண்பரொருவர் தகவல் சொன்னார். இருந்த எல்லா வேலைகளையும் புறந்தள்ளி விட்டேன். நாடகங்கள் என்றவுடன்  வரும் இந்த தொலைகாட்சி சீரியல்களையே கண் ஞாபகத்தில் கொண்டுவந்து முகத்தை அஷ்ட கோணலாக்குகிறது. மேடையமைப்பும், அரங்கமும்,அரிதாரம் பூசிக்கொண்ட பாத்திரங்களும், நேரடியான காட்சிகளூட்டும் கிளர்வும், எங்களுக்கு முன்னாள் ஒரு தலைமுறை இதனூடே வாழ்ந்து காட்டியிருக்கிற விடயமும் தெரிவதில்லை. மாற்றங்கள் மட்டுமே மாறிக் கொண்டிருந்தாலும்,எங்களின் முன்னோடிகள் வழி வந்த கலைப் பாதையை எடுத்தியம்புதலுக்கும்,அதற்கான வரவேற்புக்கும் இங்கு இடமில்லை எனும் போது அவற்றையெல்லாம் தாண்டி மனதில் எங்கேயோ வலிக்கிறது. எங்களுடைய காலத்தில், முழுமையான கூத்துக்கலையோ, அரங்காடல்ககளையோ  காண்பதற்கு காலமோ மாற்றமோ ஏதோவொன்று இடந்தரவில்லை .இருப்பினும் யாராவது எங்கள்  நலிந்து போன கலைகளை மறுபடியும்...

குழந்தைகளுக்கான நவீன தமிழ்ப் பெயர்கள்

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தல் எனும்போது, இவ்வளவு காலமும் வைத்த பெயர்கள் தமிழ்ப்பெயர்கள் இல்லையா எனும் கேள்வி எம்மில் பலருக்கு எழும். உங்கள் பெரும்பாலானோர் தமிழ்ப்பெயர் என்று எண்ணிக்கொண்டிருக்கும் உங்கள் பெயரை வட இந்தியக் கலப்பு,சமக்கிருத கலப்பு,ஐரோப்பிய,அரேபியக் கலப்புடனான பெயராக இனங்காணுவீர்கள்.  தமிழில் பெயர் சூட்டுவது இனத்துவேசம் உள்ள செயலா? :P இனத்தைக் கொண்டாடக் கூடிய செயல். மறத்தமிழன் என்று அடைமொழி இட்டுக்கொண்டு உலாவுவதை விட அழகான செயல் என்று எண்ணுகிறேன். இந்த அடையாளம் மிக அழகானது.  அண்மையில் நிறையப் பேர் தமிழில் குழந்தைகளூக்கான நவீனமான பெயர்கள் வேண்டும் என்று கேட்டிருந்தார்கள். தமிழில் பெயர்கள் பழமையானவையாக இருப்பது கூட இக்காலத்தோரின் தெரிவுக்குட்படாமைக்கு ஒரு காரணமாகும். பெண் குழந்தைகளுக்கான பெயர்கள் சிலவற்றை தொகுத்திருக்கிறேன்.சிலவற்றை கண்டும் பிடித்திருக்கிறேன். ( பிற்காலத்தேவைகளுக்கு ;)  ) வினைச்சொல் பெயர்கள் அஞ்சா ஆராதி ஆனந்தி  சலனி கோளறா இசி இனி தேயா மேதா வேயா வேகா மின்னு ...