மண்ணில் வாழ்மின்னு அலகில்சீர்
வன்னிலங்கை பொன்போல் மன்னும்
மனு நீதி கண்ணும் திரை சேரும்
கலையது திருந்தோதி முறையது வாழ்ந்த பலர்.
முன்னுமில்லையது கேளா
செங்கதிரோன் வெடித்தான் பகட் போது
வடவைதான் முகம் புலர்ந்து குவலயம்
பண்ணி-சோலையிட் சிறப்புற.
கண்ணும் கட் பட்டு,பாதகம் பழந்தமிழ்
மறைமொழியும் சிதறி-கனியற்றரறு போல
மலர்மகள் பொங்கு கங்கு ஊடு போகி
தொலைந்தனள் உயிர் பதைக்க.
வெங்குமில்லையது போல் பழி பாவம்
பொருளில்லார் போருள்கொண்டார்
பொருளற்று போதுமின் முன்
பொருளோ பொருளாகி உயிர் போதும் நிலையறவாய்.
அவைகுலைந்து சபை சரிந்து
மறுமை நீதியோழிந்து கடைவாசல்
மாய்தலெனும் பேருண்மை கொண்டு
நட்கனவு கண்டாரை நமன் கொண்டனனே.
துயர் மிகு மாந்தர் துடிப்பதுவுமிறை
பொறுக்க செவியற்றோ கிடந்தவன்
கோபுரஞ்சரிய கல்லெனக்கிடந்தவன்
மணிமுடிதரித்தவன் மண்ணேயானான்.
பின் முன் வந்தவன் கேடு புரிந்தான்
ஈகாடு ஆகாடு சாகாடு பூகாடு
ஒன்றே போகாது போகாது பாவாது
வந்த கொலைன்ஞனின் அறம்பாடி.
பக்கமும் துக்கமும் நீருரூக்கொண்டதெந்தாகாரமும்
இவ்வளவில் நீளும் நெடு கிடை தீவிடை
அல்லனவும் அல்லவாம் அறம் பெருகும்
அன்னவள் அள்ளித்தர ஆகாரம்.
கொலை பாதகந் தெரியா புளுவிடை
கடியது காவிடை அழிந்து புலன்திட
புல்லதுவும் பூண்டிடையும் சொட்பமும்
இல்லையது அருமருந்தொரு துளி நீரும்.
கோகாத்த கோபுரம் நாகாத்த நம்பவம்
சீ காத்த மூலவம் சாகாக்கும் குலமெலாம்
கா காக்க மூதிரைந்து பேருதவிகேட்டு
ஏந்துகரம் ஏந்தாப்போயி ஆகுமே பணிசெய் எனவெஞ்சி.
அஞ்சாதிசைமுகர் அன்னனார் பேதைமதி
கொன்னனார் குழந்தை செய் குளவியோடு போர்புரிந்து
முன்னா முன்னம் சட்குணத்தை முறைதவறி
கெட்டழிந்தார் வருங்குவளை கண் மாந்தரை -கெட்டழித்தார்.
கூந்தல் கங்கை புல்லி வல்லிய
காமர் கோன் அவைநெறி தறிகெட்டு
பசு பனிப்பில் பழிப்பாரை கேளார்-
போரது வீண் சம்பமோ சம்பம்!
அவ்வண்ணம் கலி காலம் தொலி கேழா
ஆர்கலி அபாயத்தில் தானை சேனை
உலாவுந்தெரு தருஇல்லா நெருப்பழழாய்-ஒழித்தார்
உயிரொழிக்கவொரு உபாயங்காணாமல்!
ஊரோடு ஓங்கி நீங்கி தஞ்சமாகி
தலைகுனிந்து பஞ்சம்பாடி பாணிடை வீழ்ந்து
உய்யவே திக்கிலா ஊழி யாக்கையை
பெருமூச்சிட்டு எண்ணிஎண்ணி நீக்கினர் நாள்.
காலம் பழிநீங்கி- பலமில் பசை பூசி
இற்றவர் நெஞ்சம் மருந்கியுவந்திட
வேசமே விடுத்த வடிவில் ஓலைகொண்டவர்
தீர்வையோன்றைஎழுதினார் போர்வைபோர்த்திய அரி மார்.
அறமில்லா மேதினியில் மறங்கொண்டவர்
விடுவித்தார்தீயாரை தீட்சையோடு விட்டு
மீ யாரை மீட்டல்லாது பூட்டி
சாவியோடுகொண்டு மதுவில் மூழ்கியே போனார்-
செவ்வாரம் பூண்டார்!
பாண்டவர் பட்டாரோடு கூட, இவ்வாண்டவர்
பட்டர் துயர் மட்டுமா பட்டர் இகழ்
மாய்தலெனும் பேருண்மை மாய்த்ததடி
மற்றவர் தம்மை -சொல்லவொரு வகையறியாவண்ணம்
பின்தவநெறி கண்டவர் அழைத்து காவிபூசசூட்டி
கொண்டாடி விதி விதிக்க வெடி வெடித்து
சாலைமறித்து பாயாசம் பண்ணியூத்தி
குதித்தார் நெடுநாள் குப்பையுள் வீழ்ந்தே!
நீரிலேழுதிய காவாக்கியம் கனவு தானோ
கண்டனர் எம் மக்கள் எம் மாக்கள்
அங்கில்லை இங்கில்லை இனியவர்க்கு
விடிவில்லை கொண்டார் கம்பிக்குள் சிறை.
திரைக்குப்பின் நீதி வேண்டி தூரதேசம் போயேகேட்டு
மறைக்குறிப்பு எதுமேயின்றி மவுனமாய் மக்கம்பிரட்டி
வாழைத்தோல் வழுக்கி சீலை மீன் கிழித்து
வாயில்லாப்பிராணி யானார் அண்டை வீட்டு மாமன்.
இனி நாயினுக்கடியவன் நக்கியெடு நல்லதை
பேயினுக்குரியவன் புறங்காட்டிஒடிவிடு
காவினுக்குஇனையவன் கரையாதே கண்டதை
சாவினுக்கும் இனியானே போடா போ மா ராஜா .
-நிலா
2007
பள்ளிக்கூடத்தில் ஒரு பகலில் எழுதியது :)
2007
பள்ளிக்கூடத்தில் ஒரு பகலில் எழுதியது :)
ஊரோடு ஓங்கி நீங்கி தஞ்சமாகி
ReplyDeleteதலைகுனிந்து பஞ்சம்பாடி பாணிடை வீழ்ந்து
உய்யவே திக்கிலா ஊழி யாக்கையை
பெருமூச்சிட்டு எண்ணிஎண்ணி நீக்கினர் நாள்
ஆழமும் அழகும் அறிவும் வார்த்தையாய்
வாழவும் மாழவும் வழியிலாத் தமிழரின்
ஓலமும் காலமும் ஒரு வழிப்பாதையும்
மீளவும் முடியா விதியையும் விளக்கின..
திரு.