Skip to main content

Posts

நிலையாமை என்றும் !

ஒரு கோடி இயலாமை நிலையாமை ஆகும் அது கூடி தணியாமை தவிக்காமல்ப் போகும் சில கேள்வி சிதையாமல் நெடு நாளை வாழும் சிதைவோடு செல்வார்க்கு செல்வாக்கும் கூடும் சில நாளில் இவையாவும் சிதையாமல் வாழும் சிதையாமல் வாழ்வாகில் சிந்தாமல் ஓயும் ஓயாத ஓசைக்கு ஒலியென்று ஓசை பேசாத சொல்லுக்கு வெறும் என்று பாசை வெறுமென்று ஆனாலே வெளி வேடத் தொல்லை  தொலையாது ஒழிந்தோடி என்னென்ன லாபம் என்னான காலத்தில் ஒழிந்தென்ன பாவம் பருவோடு பயிலாமை மனதார வாழ்த்தும் பயமோடு பல தாரம் பருகாமை கூடும் கொடியோடு மலர் கொண்டு கொடும்பாவி ஆடும் அடியோடு மலராகி அரும்பாகி வாழும் அரும்பாகி அவையாவும் அல்லாது போகும் கரும்பாகும் எண்ணங்கள் கல்லாகிப் போகும் ஒரு வேளை உயிர் வந்து ஓயாமல் உருகும் அது காலை அலை வந்து கடலோடும் போகும் கலையாமை கனவென்று கடிதாரம் பேசும் கடிகாரம் பேசாத கனவென்ன ஆகும் கனவென்று ஆகாமல் கலையாதும் போகும் கலையாத கனவுக்குள் கலை ஒன்று ஆடும் கலையொன்று ஆடாமல் கலைந்தெங்கு போகும் கலைந்தங்கு போனாலும் கனவோடு வாழும் பொய்யாகிப் போகாத பொருள் ஒன்றும் இல்லை பொய்யாகிப் போனாலே பொருள் அங்

கண்ணன் பாடல்

சொன்ன பொருளிலெலாம் கண்ணா சேதி சொல்ல மறந்தாயோ ! - சேதி-சொன்ன பொருளிலெல்லாம் கண்ணா மீதி சொல்ல மறந்தாயோ- மீதி- சொல்லியிருந்தும் கண்ணா பாதி சொல்லினை மறந்தாயோ- பாதி-சொல்லிலும் ஒரு சொல் சொல்லாமல் நின்றாயோ- சொல்லாமல் நின்றதினால் சோதி என்று ஆனாயோ- சோதி என்று ஆனவனே சேதி ஒன்று தாராயோ ? கேள்வி உன்னைக் கேட்பதற்கே வேள்வி பலம் தாராயோ - வேள்வி நிதம் செய்வதற்கே தோளில் பலம் தாராயோ- தோளில் பலம் சேர்த்து விட்டு தோல்வியினைச் சேர்ப்பாயோ- தோல்வியினைத் தோள் கொடுக்க துன்பமினைத் தருவாயோ- துன்பமிதைச் சேர்த்துவைக்க தொல்லையினைத் தாராயோ- தொல்லைகளின் தொன் முடிவில் உன் புன் முகத்தைத் காட்டாயோ- தோல்வி ஒன்று கண்ணா நீ என் தோளில் வந்து ஏற்றாதே- ஆழி பயில் மன்னா நீ என் காலில் பழி சேர்க்காதே - வாலிபத்தை ஒரு வழியாய் வலி நிறைத்து விற்காதே- உன் விற்பனையை விஞ்சுமொரு விலை மதிப்பைச் செய்யாதே- விலை போவார்க் குலமொழுக கொஞ்சும் படி நிற்காதே- தானாய்க் -கொஞ்சுமொரு அஞ்சுகத்தைக் கச்சவிழத் தள்ளாதே ! தேளை விட்டுத் தேன் பருக, சாலை விட்டுத் தேர் விலக காளை விட்டுப்போன பின்னே புதுப

இஞ்சித் தேத்தண்ணியும் குருட்டுப் பட்சியும்...

                                                            படபடவென்று, இறக்கையை அடித்துக் கொண்டு அந்தரத்தில் துடிக்கின்ற அந்த இரவுப் பட்சி, இரவின் கவிந்து போன நரையை ரசிகத் தன்மைக்கு அப்பாலே எட்ட நின்று பார்க்கிறது- இருந்தும் கூடக்குறைய அதன் மையப்புள்ளிக்குள் அதனால் இறங்கமுடியவில்லை. நான் சாய்வு நாற்காலியைத்  தேர்ந்தெடுத்து, ஆயாசமாக உட்கார்ந்து கொண்டு இஞ்சித் தேத்தண்ணியை ருசிக்கிறேன். எனக்கு எல்லாவற்றிலும் ரசனையுண்டு. அந்த மாமரத்தில், தளிர் வரத்தொடங்கி நாளாகீற்று- மாம்பூ பூத்துக் குலுங்கும் குடலையின் உன்னத வாசம்...! அன்றைய மாலை, இருண்டு போன சூரியனின் அழைப்பை மீறி வௌவால்களை மரத்துக்கு அழைக்கிறது. எங்கிருந்தோ நெடிய வீச்சத்துடன் வரும் பீத்தோவனின் மேற்கத்தைய இசையொன்றோடு என் இஞ்சித் தேத்தண்ணியும் தீர்ந்து போகிறது. தீர்ந்து போன படியினால், இன்னொரு நாள் இஞ்சித் தேத்தண்ணியைக் குடிக்கமாட்டேன் என்றதிலை. என் சுரனையில்லாத் தனம் என் போலவே என்னையும் ஏமாற்றிக் கொண்டிருந்தது.  அந்த இராப் பட்சி, இன்னமும் இறக்கையை அடித்து ஓயவ

அப்பா சொல்லித்தந்த இசை....

         நீண்ட நாட்களுக்குப் பிறகு வித்தியாசமானதொன்றைப் பற்றிப் பகிர்ந்து கொள்ளவேண்டிய ஆசை எழுந்தது.ஆசைகள் எழுவது பற்றி எனக்குக் கூறுவதற்கு எந்தவிதமான தன்னிலைவாதமும் இல்லாவிட்டாலும், எழுந்தமானமான ஆசைகள் பற்றி நினைக்கையில் ஒரு வகையில் சிறு புன்னகையும் எழும். நேரம், அது விட்டுச்செல்லும் இடைவெளிகள்,காலம், அது பதிந்து போன தடயங்கள் இவை எல்லாம் சார்ந்ததாக மனிதனது தேடல்களும், தேவைகளும் நீண்டு கொண்டும், குறுகிக் கொண்டும் போகும். நான் தற்போது தத்துவார்த்தமான சூழ்நிலை பற்றி கிஞ்சித்தும் கதைக்கக் கூடாதென்ற நிலையில் இருக்கிறேன். ஆனமான நினைவு கூறத்தக்க மனோபாவங்கள் ரம்மியமாக இருந்த பொழுதுகளிலான இசையுடன் என் பயணங்கள் பற்றிக் கதைக்கலாம் என்றிருக்கிறேன்.  இசை, இசை ......இசை பட வாழ்ந்த என் நாட்கள் பற்றிக் கதைக்கப் போனால் நிறைய ...இசை என்பது ஓவ்வோருவருக்கும் ஒரு பிரயத்தனம். ஒரு அழகிய மொழி, பேசப்படுதலுக்கும் ,உணரப்படுதளுக்குமிடையேயான புரிதல், சந்தம், ஓசைகளின் கலவை, இன்னும் பிற பிற... என்னைப் பொறுத்தவரை நிகழ்வுகளின் பிரதிபலிப்பு ! என் இசையின் தெரிவு குறித்தே என் நிகழ்வுகளும்,

நான் ஒரு பேசப்படும் பொருள்

மரங்கள் அடர்ந்த காட்டுச் செடிகள் உதிர்ந்து உலருவதைப் போல ஒவ்வொரு இதழாக, உதிரி உதிரியாக நினைவுகளின் அடிக்குறிப்புகள் முகிழ்ந்து எழுந்துகொண்டிருந்தது. எனக்கு நினைவுகளில் இருந்து மீண்டு கொள்கிற தோரணை அல்லது அந்த வித்தை அடிப்படையிலேயே தெரியவில்லை. எனக்கு முன்னால் போகிற நிழல் என்னை விட ஒரு படி முன்னால் போகிறது என்பதை மட்டும் என்னால் உட்கார்ந்து யோசிக்கக் கூடிய தெளிவு இருக்கிறது. மற்றும் படி நான் மிகுந்த குழப்பமான மன நிலையில் இருந்தேன் போலும்.  நான் பழகி வாழ்ந்த தெருக்களில் என்னைக் கவனிப்பவர்கள் குறைந்து போனதையிட்டு ஒருவித மகிழ்ச்சி. இதைத்தான் காலம் பதில் சொல்லும் என்று பலர்  சொல்லுவார்களா என்று எனக்குத் தெரியவில்லை. நான் பேசப்பட்ட காலம் முடிந்து என்னைப் பற்றிப் பேசப்படுகிற காலம் எழுந்த இந்த கூர்ப்பு மாற்றத்தை நான் கொண்டாடுவதா இல்லையா என்றும் தெரியவில்லை. நான் பரபரப்பாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறேன், ஒரு வணிகப் பத்திரிக்கையின் கிசுகிசுக்களுக்கு ஒப்ப நான் ஒவ்வொருவர் காதுகளிலும் கோலாகலமாய் ஒலித்துக் கொண்டிருக்கிறேன்.எனக்கு ஆதரவுகளும் அதிகம், என் பக்கம் நியாயமும் இருக்கிறதாம். 

பிச்சிப் பெரும்பாடல் !

ஒய்ய நினவாத ஒன்கடலும் வீழாத, பைய நடவாத பாலுருகிப் பாடாத, ஐய, உன்னை அன்றி ஆயகலை அறியாத, செய்ய அறியாத சேதி அறியாத, கொய்ய மலர்ப்பங்கு கோதிக் குலையாத, பொய்ய உரைத்தாலும் போதும் மறையோயே !  வெங்கு புலையோயே வேறு விளையோயே ! அங்கு அலையாயே ஆழி மழையோயே ! பங்கு சிறுத்தாலும் பாதி கறுத்தாலும்- எங்கும் உனைத் தேடி ஏங்க வைத்தாயே ! வெம்புனல் தீ பெய்து,சங்கர,கனல் செய்து, கொங்கு நின் கோ கழல் பூட்டி, அம்புவி ஆர்த்தெழ வேண்டி, என்புரு ஏய்த்து மாய்த்து, அம்பு நின் அன்பு பாய்ச்சி, ஆணவம் அடியோடழித்து, கொன்றையில் கிலுகிலுப்பை செய்து, கிண்டியில் வேதம் பாய்ச்சி, ஒன்று நான் செய்யப் போக, ஒன் நிழல் ஓய்ந்து போச்சு ! உருவுடையார் எலாம் காண நிற்கிலர்- பெருவுடையார் தோற்றமேலாம் போல நிற்கிறர்- கருவுடைக் கொற்றமெலாம் தீது தைக்கிறர்- தெருவிடையோர் போதல் இன்னும் தேக்க மறுக்கிறர்- தேர்ந்து சொல்லும் வாய் முதலே தெரிதல் பிழையோ-  கூர்ந்து கொல்லும் ஆயுதமே குணத்தில் வெல்லோ?  தேர்ந்து சொல்லச் சேதியில்லை - இங்கோ , நானோர்ஆவுடையாக் கோலமென இப்போ வாய் பிளக்கக் கண்டாய்...!  

இயல் ஒன்று தருவே !

                              விழ ஒணாத நீ - வீழ ஒணாத நீ -அழ ஒணாத நீ- ஆள ஒணாத நீ- பகல் ஒணாத நீ- அகல் ஒண்ணாத நீ-  கங்குல் புகழ் ஒணாதபெரும் பயிற்ருப் புலவ நீ - என்றும் தகல் விளங்கா பெரும்  தருக்கமும் நீ ! கன வளவாத கழ வளவாத வின வளவாத விளை நீ பயில் வளவாத பரு வளவாத அரு மருந்தாகும் அயிர் நீ துணை வளவா இணை வளவா பிணை வளவா பெரும் அத்தன் என்னை ஆள்பவன் நீ ! பொன்னுற்றே பொருளுற்றே துகிலும் அகிலுற்றே  கலையுற்று களியுற்ற என் காலக் கிளை பற்றி நின் தன்னும் வேண்டா தனையும் வேண்டா  தானொடு அடங்கலுற்றேனே ! இரு பகல்வா ஒரு பகல்வா முழுதகலா முதல்வா தரு கருக்கும் விழி பருக்கும் சிறை உதிர்க்கும் தணலா விலை மதிக்கும் மதி பதிக்கும் உலை கொதிக்கும் இனி தகிக்கும் இயல் ஒன்று தருவே ! நிலா - 17 .09 .2010