ஒரு கோடி இயலாமை நிலையாமை ஆகும்
அது கூடி தணியாமை தவிக்காமல்ப் போகும்
சில கேள்வி சிதையாமல் நெடு நாளை வாழும்
சிதைவோடு செல்வார்க்கு செல்வாக்கும் கூடும்
சில நாளில் இவையாவும் சிதையாமல் வாழும்
சிதையாமல் வாழ்வாகில் சிந்தாமல் ஓயும்
ஓயாத ஓசைக்கு ஒலியென்று ஓசை
பேசாத சொல்லுக்கு வெறும் என்று பாசை
வெறுமென்று ஆனாலே வெளி வேடத் தொல்லை
தொலையாது ஒழிந்தோடி என்னென்ன லாபம்
என்னான காலத்தில் ஒழிந்தென்ன பாவம்
பருவோடு பயிலாமை மனதார வாழ்த்தும்
பயமோடு பல தாரம் பருகாமை கூடும்
கொடியோடு மலர் கொண்டு கொடும்பாவி ஆடும்
அடியோடு மலராகி அரும்பாகி வாழும்
அரும்பாகி அவையாவும் அல்லாது போகும்
கரும்பாகும் எண்ணங்கள் கல்லாகிப் போகும்
ஒரு வேளை உயிர் வந்து ஓயாமல் உருகும்
அது காலை அலை வந்து கடலோடும் போகும்
கலையாமை கனவென்று கடிதாரம் பேசும்
கடிகாரம் பேசாத கனவென்ன ஆகும்
கனவென்று ஆகாமல் கலையாதும் போகும்
கலையாத கனவுக்குள் கலை ஒன்று ஆடும்
கலையொன்று ஆடாமல் கலைந்தெங்கு போகும்
கலைந்தங்கு போனாலும் கனவோடு வாழும்
பொய்யாகிப் போகாத பொருள் ஒன்றும் இல்லை
பொய்யாகிப் போனாலே பொருள் அங்கு இல்லை
இல்லாமல்ப் போனாலே இல்லாமை இல்லை
இயலாத பொருளுக்கும் இயல்பொன்று இல்லை
இயல் ஒன்று இல்லாமல் இல்லாமல் இல்லை
இல்லாமல் இல்லாமல், இல்லாமல் இல்லை
இனிதான இயல்புக்கு சொல்லாமல் இல்லை
சொல்லாத பொருளுக்கும் புனைவொன்று இல்லை
இல்லாத புனைவுக்கும் புகலொன்று இல்லை
புகலொன்று இல்லாமல் அகல் அங்கு இல்லை
அகல் ஒன்று இல்லாமல் அகலாது இல்லை
இல்லாத அகலுக்குள் இருளென்னும் தொல்லை !
விசையில்லாப் படகுக்கு திசையொன்றும் இல்லை
திசையொன்றும் இல்லாமல்ப் படகொன்றுக்கெல்லை?
நதியோடு படகொன்று நடவாமல்ப் போகும்
நடவாத படகுக்குள் நழுவாமல்த் தளைக்கும்
நழுவாத களையெங்கும் கழுவாமல்க் கலையும்
கலையாத களையெங்கும் கடலொன்றில் சேரும்
கடலொன்றில் கவிழாமழ்ப் படகொன்று ஓடும்
ஓடாத படகுக்குள் ஒரு மீனும் துடிக்கும்
துடிக்கின்ற மீனுக்கு துணையொன்று தேடி
துணையாகிப் போம் மீனைப் உமலோடு அள்ளி
உனதோடும் எனதோடும் உணவாக்கி உண்ணல்
உனதான என்னை உயிரோடு தின்னல் !
தின்னாத தினவுக்கு தினமொன்ரும் இல்லை
தின்னாத தினமொன்ரும் திகழாமல் இல்லை
திகழாமல்ப் போனாலே தினமொன்ரும் இல்லை
தினமொன்று தினமொன்று- தினமொன்றைக், கொன்று
திகழாமல்ப் போவாரே நிலையாமல் இன்று !
-நிலா-
17/11/2010
Comments
Post a Comment