Skip to main content

Posts

மரபழிந்த ஓவியங்களும் , முரணான என் கவிதைகளும்...

                       வெளிச்சம் குறைவாய்......              காலை நேர  கைசிகப் பண்ணினது நாதத்தில், மல்லிகை இதழ்கள் விரிகின்றது தேனின் திரவியத்தை சுமந்து கொண்டு, யாகாவாரினும் நாகாக்க- நான் தவறியதால் சயங்கொள்ள முடியவில்லை. சாய்மனையில் இருக்கின்றேன் எதுவும் இயலாதபடிக்கு..., விமோச்சனப் பலன் காண கௌளீயைத் தேடினேன் - இல்லையது என் முகட்டிலே . விட்டத்திற்கு வேறுபட்டதாய் நிற்கிறது - கூரையின் தாவாரம். தாவர சங்கமங்களை எல்லாம் தாரை வார்த்ததட்குப் பின்னும் மண்ணும் ,மழையும் ,மடுவும் கூடிய சங்கமமொன்று தேவையாய் இருக்கிறது. முதுமையின் பலம் , சாவுக்கு அந்தம் பிடிக்கிறதா ? தெரு முனையிலிருக்கின்ற நாய்க்குத் தெரிகிறது - என் சாவின் ஜனனம் -அது ஊளை செய்து நமனை எதிர் கொள்கிறது , சில காலமாய்..... பழுத்த இலையின் இருப்பு எத்தனை காலம் ? சவங்காவிகளுக்கா பஞ்சம் இங்கு......? காலை நேரம் - நியமம் தவறாமல் கைசிகப் பண் கேட்கிறது எனக்கு - நேரிசலடைந்த வாகன இரைச்சல் மத்தியிலும் . என்னைத்தவிர நிழல் மட்டும் தெ

"செக்கு" நாடகம்;Parakrama Niriyella's 'Sekku'

    இடம்- கொழும்பு தேசிய கலை இலக்கியப் பேரவை. நெறியாள்கை- திரு பராக்கிரம நிரிஎல்ல காலம்-31.01.2010- ஞாயிறு மாலை.   பொதுவாக நாடகங்களின் தன்மைக்கேட்பவே ரசனையாளர்கள் ஏற்படுகின்றார்கள், காலாகாலமாக நாடகங்கள் வீதிகளிலும்,அரங்குகளிலும் ஏற்றப்படுகிரபோது அவற்றினது கவர்ச்சித்தன்மையுடன் ஏதாவது ஒன்று மக்களுக்குச் சொல்ல வேண்டும் என்கிற நிர்பந்தம் ஏற்படுகிறது, இதன் அடிப்படியில் நாடகத்துக்கான தனிப்பட்ட ரசிகர்கள் குறைவடைகிரார்கள், பெரும்பாலும் இடதுசாரி சிந்தனை கொண்டவர்கள், முற்போக்குக் கருத்துக் கொண்டவர்கள், மக்கள் ஸ்தாபனத்தைத் தாங்குபவர்கள், சமுதாயத்தினதும் அரசியலினதும் பார்வைக்குளிருப்போர் போன்றோரால் தான் முற்போக்கு நாடகங்கள் காலப்போக்கில் வரவேற்கப் படுகின்றன, இதன் காரணமோ என்னமோ நாடகத்தின் உட்பொருளும் இது சார்பாயே இருந்தது. கிட்டத்தட்ட முறையான தமிழ் நாடகங்களையே காணக்கிடைக்காத இந்தக் காலகட்டத்திலே 'ஜனகரளிய' குழுவினரது 'செக்கு' நாடகம் அண்மையில் கொழும்பு தேசிய கலை இலக்கியப் பேரவையின் சிற்றரங்கிலே கடந்த ஞாயிறன்று காணக் கிடைத்தது. வெறுமனே நாடகம் என்று சொல்லிவிட்டா

இராவணேசன் ; Maunaguru's 'Ravanesan'

நெறியாள்கை - பேராசிரியர் மௌனகுரு. இடம் -கொழும்பு கலை இலக்கியப் பேரவை. காலம்- சனி(13.02.2010)  மாலை 6.30மணி. சனி மாலை(13.02.2010) பேராசிரியர் மௌனகுரு அவர்களின் 'இராவணேசன்' நாடகம் நடைபெறவிருக்கிறதென்று நண்பரொருவர் தகவல் சொன்னார். இருந்த எல்லா வேலைகளையும் புறந்தள்ளி விட்டேன். நாடகங்கள் என்றவுடன்  வரும் இந்த தொலைகாட்சி சீரியல்களையே கண் ஞாபகத்தில் கொண்டுவந்து முகத்தை அஷ்ட கோணலாக்குகிறது. மேடையமைப்பும், அரங்கமும்,அரிதாரம் பூசிக்கொண்ட பாத்திரங்களும், நேரடியான காட்சிகளூட்டும் கிளர்வும், எங்களுக்கு முன்னாள் ஒரு தலைமுறை இதனூடே வாழ்ந்து காட்டியிருக்கிற விடயமும் தெரிவதில்லை. மாற்றங்கள் மட்டுமே மாறிக் கொண்டிருந்தாலும்,எங்களின் முன்னோடிகள் வழி வந்த கலைப் பாதையை எடுத்தியம்புதலுக்கும்,அதற்கான வரவேற்புக்கும் இங்கு இடமில்லை எனும் போது அவற்றையெல்லாம் தாண்டி மனதில் எங்கேயோ வலிக்கிறது. எங்களுடைய காலத்தில், முழுமையான கூத்துக்கலையோ, அரங்காடல்ககளையோ  காண்பதற்கு காலமோ மாற்றமோ ஏதோவொன்று இடந்தரவில்லை .இருப்பினும் யாராவது எங்கள்  நலிந்து போன கலைகளை மறுபடியும் இளஞ்சமுதாயத்திட்கு க

வாசவதத்தை

வாசவதத்தை, பகவானே உங்கள் கோமள ஹிருதயத்தை  திறந்து காட்டியமைக்காக நன்றிகள்.... வாசவதத்தை, என் ஹிருதயத்தில் கோமளத்தின் பரிசுத்தம் இருப்பதைப் போல் அதி உன்னதமான அபிமானமும் உன்மேல் இருக்கின்றது...... சுவாமி, அபிமானம் அசூசைப்படக்கூடியதல்லவே .... வாசவதத்தை உனக்குத் தெளிவில்லை...! பகவான், நான் இப்போது தான் தெளிந்த நதிப்பிரவகம் போலே இருக்கிறேன். எனக்கு எல்லாமுமே ஸ்பஷ்டமாகத் தோதாகத் தெரிகின்றது...., நான் என்ன சொல்லவருகிறேன் என்றால்...., போதும் சுவாமி, எனக்குப் புரிகின்றது.தம்சக்பதுவத்தையும், தர்மொபதேசத்தையும் விரைவாகக் கூற ஆரம்பியுங்கள். எனக்கு ஞானம் வேண்டும்! வாசவதத்தை, இப்போதும் காருண்யம் பற்றித்தான் சொல்லப் போகிறேன். என்னை வதைக்காதே ...! -நிலா   

உங்களுக்குப் பிடித்த ஊர் என்ன?

முன்பொரு நாள் அம்மா சொன்னார் இலங்கையில் தனக்குப் பிடித்தமான பெயருடைய ஊர் மருதமுனை என்று. அது அழகான பெயர் என்று வேறு சொன்னார். ஓ பிடித்தமான பெயருடைய ஊர்களும் இருக்கலாம் என்பதை அப்போது தான் யோசித்தேன். இலங்கையில் உள்ள நீங்கள் இரசிக்கும் ஊர்ப் பெயர்கள் என்னென்ன? எனக்குக் கீழ்க்காணும் ஊர்களின் பெயர்கள் பிடித்திருக்கின்றன. தமிழ்ப்பெயர்கள் மட்டுமென்றில்லை. வேற்று மொழிப் பெயர்களும் சொல்லலாம். பனிப்புலம் புகலிடவனம் பூநகரி ஆலங்கேணி பாலாவி அன்புவழிபுரம் மலைமுந்தல் உப்பூறல் ஈரமடு நிலாவெளி கல்லாறு எழுவான்கரை தாழங்குடா மரப்பாலம் வாழைச்சேனை அமிர்தகழி பூமுனை குருமண்காடு தீர்த்தக்கரை கல்வயல் மணல்காடு பச்சிலைப்பள்ளி மணல்க்குடியிருப்பு தண்ணிமுறிப்பு பொன்னகர் ஆலையடிவேம்பு வீரமுனை

எனக்கும், பூமிக்குமான நெருக்கம்.

எனக்கும் நிலவறைக்குமான நெருக்கம்- பூமிக்கும் அதன் பிளவணுக்களுக்குமான தூரத்திலும் குறுகி விட்டது- பல காலம் மலர்ந்த நீலோட்பலத்தின், நெடுஞ்சாண் கிடை நிலை -இன்றைக்கு ஆகாமியமாயச் சரிந்தொழிகின்றது- எனக்குமிருக்கின்றது- வேதனையின் பிரதி பிம்பம். நெடுகாலத் தபோவனச் சாயலின் நிழல்- தபஸ்வியாக என்னை சயனிக்கக் கூறியது. ஹம்..... பெரு நாட்களின் கணக்குப் படி, தூக்கிலிடப்பட்டிருக்க வேண்டும் நானாகிய ஆணவம். இருந்தும், மெல்லச் சாவென விடப் படுகிறது- சஞ்சலமான இமை முகத்தால். பெருஞ்சல்லாபத்தின் பேரில் நிருவாணந்தாங்கிய கோளச்சிலைகளை- கட்டியணைக்கிறேன்,- சிலை விலகி ஓடுகிறது. சாலை வண்டிகளுக்கு எனது பெருந்துன்பம் தெரியா... புகை கக்குகிறது எனது மரணந்தாங்கிய நடையில். உருவகங்களில், பேதைமை நிறைந்து, திவலைகளாக உருண்டு நிழல்த்தருக்களுள் ஒழிந்து கொண்டு- அப்பப்பா....ஏகப்பட்ட சேட்டைகள்....! கனவு, மிச்சமிருக்கிறது, அவள் வந்து தண்ணீர்க்குவளை நிறைய, பழச் சோடா ரெப்பிக் கொண்டு குடித்து, ஏப்பம் விடுகிறாள்.- சாம்பசிவக் குருக்கள், அதை தட்டி வி