Skip to main content

காலமாற்றம்






1981இல் வெள்ளவத்தை என்று நிறைய நண்பர்கள் பழைய புகைப்படங்கள் சிலவற்றைப் பகிர்ந்திருந்தார்கள். கூர்ந்து பார்க்கும் போது அப்பத்தைய பெண்கள் எல்லாரும் நல்ல வடிவான உடுப்புப் போட்டு, நல்ல ட்றேசிங் சென்ஸ்சோட இருந்திருக்கிறதா தெரியுது. அத நினைச்சாத்தான் கவலையா இருக்கு. வெள்ளவத்தை, அப்போதும் இப்போதும் தமிழர் நகரம் தான்.

இலங்கையின் அறுபதாமாண்டு காலப் படமொன்றை முன்னர் ஒரு தடவை பார்த்து வியந்தேன். சாதாரணமாக சந்தையில் பண்டம் வாங்கும் பெண்களின் படங்கள் அவை. படங்களில் பாடல்க்காட்சியின் பின்னணியில் வரும் 'ரிச் கேர்ள்ஸ்' மாதிரி இருந்தார்கள்.


எனது அம்மா பழையவர். அறுபத்தைந்து பிராயம். சிறிய சட்டைகளையும், காற்சராய்களையும் மட்டுமே இளம்பருவத்தில் யாழ்ப்பாணத்தில் அணிந்ததாகச் சொன்னார். கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரயில் முழங்காலுக்கு கீழே சட்டை போட்டால் தண்டனை என்றும் சொன்னார். கணருபனின் அம்மா அதே காலத்தவர். அறுபது பிராயம். தான் என்னென்ன வகையான கால்ச்சப்பாத்துக்களை அணிந்ததாகவும் இப்போது அப்படி ஒன்றுமேயில்லை என்று கேலியாக, "நான் ஸ்டைல் என்று சொல்லி அணிந்திருந்த" எனது செருப்புக்களை பார்த்துவிட்டுச் சொன்னார். யாழ்ப்பாணம் போகும் போது தலைவிதியே என்று சொல்லிக் கொண்டு முடிந்தளவு என்னைவிடப் பெரிய உடுப்புக்களையே கொண்டு செல்வேன்.


இந்த வியர்வைக்கு கையில்லாத சட்டையும், கால்ச்சராயும் தான் சரி....நீர் அதைக் கொண்டு வந்திருக்கலாம், இதுகளை காவினதுக்கு என்றா, மாமி. லப் டொப்பில், ரண்டமாக படங்களை அவவுக்கு காட்டிக்கொண்டிருக்கும் போது 'சின்ன' சட்டை போட்ட படம் வந்ததும், சமாளித்து 'நெக்ஸ்ட்' குடுப்பதற்காக பம்மினேன். உடனே அவா இந்தச் சட்டை வடிவாயிருக்கு, ரஷ்யாவிலிருந்து வரேக்க இப்பிடித்தான் , இதிலும் வலு கட்டையான சட்டைகள் நான் கொண்டுவந்தது என்று காசுவலாச் சொன்னா. எனக்கு ஒரே அசிங்கமாப் போய்ட்டுது. எங்கள் பிராயத்தவருக்கு எதைச் செய்தாலும் சூதானமா செய் என்று சொல்லும் அலேர்ட் எவ்வளவு அழுத்தமாக மூளைக்குள் பதிந்திருக்கிறது!


ரெண்டு நாள்க்கழிச்சு, கணரூபன்ர அம்மாண்ட நண்பி ஒருத்தர் வந்தா. அவ ஒரு டீச்சர். ஐம்பது பிராயமிருக்கும். அவவுக்கு என்கேஜ்மெண்ட் படங்கள் காட்டிக்கொண்டிருந்தம்.

வேற மாதிரி நீர் பிளவுஸ் போட்டிருக்கலாம். அவர் தாடி வழிச்சிருக்கலாம்....


என்னெண்டு?

கை நீட்டா வெச்சு, கொஞ்சம் பட்டு சாரி மாதிரி....

நாங்கள் மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். ஒன்றும் பேசவில்லை.


நிறைய நேரம் கதைத்துவிட்டு டீச்சர் போய்ட்டா. போக முதல் கணரூபன்ர அம்மா, டீச்சரைப் பாத்து சொன்னா, 

"நீர் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் பாக்கிறேல்லையா? இப்பை எல்லாம் ஷோல்டர்லஸ் தான் ஸ்டைல்"

இப்பிடி எத்தினை பேரை சமாளிக்க வேண்டி இருக்கு 😅😅


எனது அப்பா சல்வார் போட்ட பெண்களை சினிமாவில் மட்டும் தான் பார்த்ததாகச் சொன்னார். ஆரும் ஜெயலலிதா போட்டுக்கொண்டு வாறதை சல்வார் என்று சொன்னா, நான் காதை அறுத்து கண்டநல்லூர் ஜமீனுக்கு காணிக்கை குடுப்பேன். அறுபது பிராயத்தில் உள்ளவர்களுக்கு ஆடைக்கலாசாரம் பெரிதாகத் தெரியவில்லை. ஆனால் நாப்பதுகளில், ஐம்பதுகளில் இருப்பவர்கள் உயிர் போவதைப் போல இதைப் பற்றி வெகுண்டெழுகிறார்கள். என்ன காரணம்?


தொண்ணுகளுக்கு பின்னர் யாழ்ப்பாணத்தில் சல்வார் கலாசாரம் வந்தது. அதற்கு முன்பெல்லாம் கட்டைச் சட்டையும், பாவாடை,பிளவுசும் இருந்தது. அதனோடே சைக்கிளும் ஓட்டினார்கள். சல்வார் எப்போது கலாசார உடுப்பாக மாறியது? ஒரு கலந்துரையாடலில் கதைத்துக்கொண்டிருந்த போது, யாழ்ப்பாணத்தில் சில டியூட்டரிகளில் கால் பிரிக்கப்பட்ட அதாவது காலை பிரித்துக் காட்டக் கூடிய உடுப்பு எது போட்டாலும் வீட்டுக்கு அனுப்புவார்களாம். அவ்வாறே சல்வார் போட்ட பிள்ளைகளையும் வீட்டுக்கு அனுப்பினார்களாம். நீண்ட, குதிக்கால் மறைக்கும் பாவாடையே அணிந்திருக்க வேண்டுமாம். அதாவது கால் பிரிந்த உடை அணிந்தால், வீட்டை விட்டு தொலைவு போகும் துணிச்சல் வருமாம்.


இப்போது சிங்களவர்களையும் கெடுக்கப் பாக்கிறார்கள் இந்தப் பொல்லாத் தமிழர்கள். அதுகளும் சல்வார் வாங்குதுகள். 'ரொப்பும்' ஜீன்சும் போடுதுகள். சிங்களப் பிள்ளைகள் தான் காண்பதற்கினியதாக இருந்தீச்சுதுகள். ஹ்ம்ம்...


இந்தமுறை, புது வருசத்துக்கு ஃபூட் சிட்டியிலையும், அதுகளுக்கான கலாசார உடையையே மாத்தீட்டானுகள். வழமையா வயிறு தெரியிற பிளவுசும், 

கம்பாயமும் கட்டுற பிள்ளைகளை, நீட்டு பிளவுஸ் போட வெச்சது எது?


நீங்க எப்பிடியாவது நாசமா போங்க! அதுகள் காலா காலமா போடுற கலாசார உடை அது,அதையுமா மாத்துவிங்க?

Comments

Popular posts from this blog

சாமகானமும் காம்போதியும்

முருகையன் ஒரு மொழிபெயர்ப்புச் செய்தார். மொழிபெயர்ப்பு எண்டும் சொல்ல முடியாது,சாதுவா மொழிபெயர்ப்பும்,திறமையான கற்பனையும் போட்டு செய்யுள் வடிவத்தில, இளநலம்! என்ன இளநலமா?ஹையா கிளுகிளுப்பான கதை வரப்போகுது. குமாரசம்பவம் (ஸாரி வேற கண்டென்ட் எண்டு நினைக்கப்படாது, ஐ ஆம் வெரி டீசன்ட்) காளிதாசன் குமாரசம்பவத்தில எழுதின அதே கதையை தமிழில தந்தவர். அதில தான் இந்தக் கதை வருகுது.  சாமகானம் சாமகானம் எண்டு ஒண்டு சொல்லக் கேட்டிருப்பம். “சாமகானம் பாடினான்” எண்டு நாலாம் வகுப்புச் சமய பாட புத்தகத்தில ஒரு பாடம் இருக்கு. பத்துத் தலையும், கையில ஒரு தலையுமாக் கணக்குப் பிழையா மொறாயஸ் கீறின இராவணனிண்ட மீசை வெச்ச படம் இருக்கும், இப்ப ஞாபகம் வந்துட்டுதா? அந்தக் காலத்திலேயே தலைகளிண்ட கணக்கை எண்ணிப் பாத்தனாங்கள் ஆக்கும். (தலைக்கணக்கு முக்கியம் அமைச்சரே) இப்ப சாமகானத்தைப்பற்றிப் பாப்பம். காளிதாசன் குமாரசம்பவம் எழுதேக்க, சும்மா கற்பனைகுதிரையை காட்டாற்று வெள்ளம் போல பறக்க விடுறேர்.  மிஸ்டர் சிவனும் மிசஸ் உமாவும் கலியாணமான புதிசில, (ஏன் கல்யாணமான பழசில யாரும் வெளிய போறதில்ல எண்டு நெடுங்காலமா டவுட்) சும்மா வெளிய வெளிக்

இராவணேசன் ; Maunaguru's 'Ravanesan'

நெறியாள்கை - பேராசிரியர் மௌனகுரு. இடம் -கொழும்பு கலை இலக்கியப் பேரவை. காலம்- சனி(13.02.2010)  மாலை 6.30மணி. சனி மாலை(13.02.2010) பேராசிரியர் மௌனகுரு அவர்களின் 'இராவணேசன்' நாடகம் நடைபெறவிருக்கிறதென்று நண்பரொருவர் தகவல் சொன்னார். இருந்த எல்லா வேலைகளையும் புறந்தள்ளி விட்டேன். நாடகங்கள் என்றவுடன்  வரும் இந்த தொலைகாட்சி சீரியல்களையே கண் ஞாபகத்தில் கொண்டுவந்து முகத்தை அஷ்ட கோணலாக்குகிறது. மேடையமைப்பும், அரங்கமும்,அரிதாரம் பூசிக்கொண்ட பாத்திரங்களும், நேரடியான காட்சிகளூட்டும் கிளர்வும், எங்களுக்கு முன்னாள் ஒரு தலைமுறை இதனூடே வாழ்ந்து காட்டியிருக்கிற விடயமும் தெரிவதில்லை. மாற்றங்கள் மட்டுமே மாறிக் கொண்டிருந்தாலும்,எங்களின் முன்னோடிகள் வழி வந்த கலைப் பாதையை எடுத்தியம்புதலுக்கும்,அதற்கான வரவேற்புக்கும் இங்கு இடமில்லை எனும் போது அவற்றையெல்லாம் தாண்டி மனதில் எங்கேயோ வலிக்கிறது. எங்களுடைய காலத்தில், முழுமையான கூத்துக்கலையோ, அரங்காடல்ககளையோ  காண்பதற்கு காலமோ மாற்றமோ ஏதோவொன்று இடந்தரவில்லை .இருப்பினும் யாராவது எங்கள்  நலிந்து போன கலைகளை மறுபடியும் இளஞ்சமுதாயத்திட்கு க

குழந்தைகளுக்கான நவீன தமிழ்ப் பெயர்கள்

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தல் எனும்போது, இவ்வளவு காலமும் வைத்த பெயர்கள் தமிழ்ப்பெயர்கள் இல்லையா எனும் கேள்வி எம்மில் பலருக்கு எழும். உங்கள் பெரும்பாலானோர் தமிழ்ப்பெயர் என்று எண்ணிக்கொண்டிருக்கும் உங்கள் பெயரை வட இந்தியக் கலப்பு,சமக்கிருத கலப்பு,ஐரோப்பிய,அரேபியக் கலப்புடனான பெயராக இனங்காணுவீர்கள்.  தமிழில் பெயர் சூட்டுவது இனத்துவேசம் உள்ள செயலா? :P இனத்தைக் கொண்டாடக் கூடிய செயல். மறத்தமிழன் என்று அடைமொழி இட்டுக்கொண்டு உலாவுவதை விட அழகான செயல் என்று எண்ணுகிறேன். இந்த அடையாளம் மிக அழகானது.  அண்மையில் நிறையப் பேர் தமிழில் குழந்தைகளூக்கான நவீனமான பெயர்கள் வேண்டும் என்று கேட்டிருந்தார்கள். தமிழில் பெயர்கள் பழமையானவையாக இருப்பது கூட இக்காலத்தோரின் தெரிவுக்குட்படாமைக்கு ஒரு காரணமாகும். பெண் குழந்தைகளுக்கான பெயர்கள் சிலவற்றை தொகுத்திருக்கிறேன்.சிலவற்றை கண்டும் பிடித்திருக்கிறேன். ( பிற்காலத்தேவைகளுக்கு ;)  ) வினைச்சொல் பெயர்கள் அஞ்சா ஆராதி ஆனந்தி  சலனி கோளறா இசி இனி தேயா மேதா வேயா வேகா மின்னு மிதவா தெகிழா நெகி