முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பெண் வளர்க்கும் ஆண்பெண் வளர்க்கும் ஆண் குழந்தைகள் பற்றிய ஒரு கருத்தை இவ்வாறு ஒருவர் பகிர்ந்திருந்தார்.
"உளவியல் சொல்கிறது பெண் வளர்க்கும் ஆண் குழந்தைகள் சமுக விரோதியாகிறார்கள்" என்று.
உண்மை, இதன் அடிப்படை என்ன என்று பார்ப்போம்.
அப்பா மட்டும் வளர்க்கிற குழந்தைகளையும் உளவியல் எதோ கூறுதே. இரு பெற்றோரும் இருக்கிற குழந்தைகள் திசை மாறிப் போகிறதில்லையா?அப்படியும் இருக்கிறது. ஆனால்,

உண்மையில் அறிவியல் என்ன கூறுகிறதென்றால் குழந்தையை வளர்ப்பதற்கு பெண் மட்டுமே போதும். ஏனைய விலங்குகளைப் போல பெண் விலங்கு தான் குழந்தையை பேணிக் குறித்த நிலைக்கு கொண்டுவரும். பெண் பிறவி வேட்டுவச்சி. தன்னுடைய எல்லா நிலையையும் போராடி வெற்றிபெறக் கூடியவள்.

ஆண் அடிமைத்தனம், குடும்ப அமைப்பு, சொத்து வந்ததன் பின்னர் தான் தகப்பன் குழந்தையொன்றுக்கு முக்கியமாகிறான். இன்று உளவியலில் ஆணினுடைய மரபணு கடத்தப்பட வேண்டுமாகில், தொடர்ந்தும் அந்த ஆணுடன் தொடர்பிலிருந்து, அவனுடனான ஒத்த இயல்பை இருவரும் பரிமாறிக்கொள்ள வேண்டும் என்கிறது.

ஆனால் பெண் தன்னுடைய மகனை தனக்குச் சாதகமானவனாகவே வளர்க்கிறாள். இந்த உலகம் ஆண்கள் பெண்களை அடிமைப்படுத்துகிறார்கள் என்று எவ்வளவு குதித்தாலும், பெண்களின் தயவில்லாமல் ஆண்களால் எதையும் செய்ய முடியவில்லை. அப்படிப்பார்க்கையில் எல்லா ஆணும் ஒரு பெண்ணிடம் வசப்பட்டுப் போய்க்கிடக்கிறான். (மகன்,சகோதரன்,கணவன்,நண்பன்) எப்படி ஒரு பெண் இவ்வளவிருந்தும், ஆணை தனக்கான அடிமையாக்குகிறாள்?

பெண்களுக்கு எவ்வளவுகெவ்வளவு இன்செக்கியூரிட்டியை ஆண்கள் கொடுக்கிறார்களோ, அந்தளவு தனக்காதரவான ஒரு ஆணை தனது வீட்டிலேயே உருவாக்கும் தகுதியுள்ளவள் தான் பெண். அதனாலேயே தன்னுடைய புருஷன் அடிமைப்படுத்துபவனாக இருந்தால், தன்னுடைய மகனை தன்னுடைய எல்லா ஏவல்ச் சொல்லையும் ஆமோதித்து வளர்பவன் ஆக்கி விடுகிறாள். 70%பரம்பரையலகுகளை தீர்மானிக்கும் பெண் இதனை ஒரு மில்லியன் வருடங்களாக செய்து வருகிறாள். இந்தச் செயலே அவளின் ஒரு வகிபாகமானது பின்னாளில்.


இதனாலேயே பெண்கள் வளர்க்கும் ஆண்கள் genetic losers ஆகிறார்கள். தனக்குரிய இயல்புகளை அவர்கள் கடத்துவதில்லை. அதனால்த்தான் அம்மா பிள்ளைகளை, பெண்களும் விரும்புவதில்லை. பெண்களின் புறக்கணிப்பு, தன்னுடைய மரபணுவை இந்த உலகில் விட்டுச் செல்ல முடியாது என்கிற உண்மையை ஆணுக்கு சொல்லும். தன்னுடைய மரபணுவை எந்த வகையிலாவது விட்டுச் செல்ல வேண்டும் என்று அவன் நினைப்பான். தன்னுடைய மரபணுவை எந்தவகையிலாவது விட்டுச் செல்ல நினைப்பான் . ஆக பெண்கள் விரும்பாத ஆண்கள் சமுகவிரோதியாகிறார்கள். இது ஒரு வட்ட ஒழுக்கு. தன்னால் இனப்பெருக்கம் செய்ய இயலாது என்கிறது தான் ஒரு ஆணின்/ பெண்ணின் மிகப்பெரிய கூர்ப்பழிவு.

ஆண்கள் எந்தளவுக்கு பெண்ணை அடிமைப் படுத்துகிறார்களோ அதன் மடங்க்குத்தன்மையில் அதே நேரம் ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் அடிமையாகிறான். கூடுதலாக தந்தை மகன் என்ற ரீதியிலேயே இது நடைபெறும். இது ஆண்களுக்குச் சவாலான ஒரு விடயம். இந்த அடிமை ஒழுங்கு இறுதியில் பெண்கள் மட்டுமே ஆட்சியிலிருக்கும் ஒரு உலகை கொண்டு வரும். ஏனென்றால் ஆண்கள் தமது மரபணுவைக் கடத்த இயலாத ஒரு நிலை, (ஆண் பெண்ணை அடிமைப்படுத்த, அந்தப் பெண் ஒரு ஆணை அடிமைப்படுத்த, அடிமைப்படுத்தப்பட்ட ஆண், முன்னைய ஆணின் வாரிசாக இருக்கும் பட்சத்தில், இந்த முறை அவனால்  தன்னுடைய மரபணுவைக் கடத்தக் கூடிய பெண்ணை தெரிவு செய்ய முடியாது.

பெண்கள் தமது வாணாளில் நீண்ட பகுதியை கருச்சுமத்தலுக்கும், கருக்கட்டலுக்கும் செலவிடுகிறார்கள். தன்னுடைய நீண்டகால இனவிருத்தியை சாதாரணமாக பெண் செய்ய மாட்டாள். எல்லாவிதத்திலும் தனக்கு ஒரு ஆல்பா ஆண் கிடைத்த பின்பே அதற்குத் தயாராவாள்.

ஆகவே ஒரு பெண்ணின் பார்வையில் இந்த genetic losers ஒருபோதும் அல்பா ஆண்களாக இருக்கப் போவதில்லை. இப்போது ஒரு கணக்கெடுப்பு நடார்த்தினால்க் கூட, அம்மா பிள்ளையை திருமணம் செய்ய எந்தப் பெண்ணுமே நெருக்கடிக்குட்படாத விரும்பமாட்டாள். the female of the species is deadlier than the male. இதுதான் உண்மை. இயல்பாகவே தக்கனப்பிழைக்கும், கூறுணர்வு- intuitive linear view , அதிகமிருக்கும் ஜீவராசி பெண். அதனால்த்தான் காய்ச்சல் தலையிடியை, ஆண்கள் போல இவர்கள் கொண்டாடுவதில்லை. 

இதனால்த்தான் இயற்கையையும், விஞ்ஞானத்தையும் பெண்கள் விளங்கக் கூடியவர்கள். ஆண்கள் எண்களை விளங்கக் கூடியவர்கள். genomic scanning- மரபணு அளத்தல் தொழிநுட்பம், இப்படித்தான் சொல்லுகிறது. தன்னுடைய துணையைக் கவர்வதற்காகவும், தன்னை ஆல்பா ஆணாக நிரூபிப்பதற்குமாகவே, குறிபார்த்தல், வேட்டையாடுதல் என்று கணக்குப் போட்டுப் போட்டே ஆண்கள் mathematical models கலை மட்டும் வி எளிதில் விளங்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள். ஒரு மில்லியன் வருடமாக இதையே செய்ததினால் ஏற்பட்ட பரிணாம் இது.

பெண்கள் தம்முடைய மரபணுவை வாயினாலும், பேச்சினாலும், கதை சொல்லலிலும் பகிரக் கூடியவர்கள். இன்றும் கூடிக் கதைக்கப் பிரியப்படுகிறார்கள். ஆனால் இந்த கணித உருமாதிரி, தொடர்ந்தும் ஆணுக்கு தன் பரம்பரை அலகுகளை கடத்துவதற்குத் தோதாக இல்லை. ஏனென்றால் பெண்கள், ஆண்களுக்கு முன்னதாக உணர்ச்சி நிறைந்த ஒரு உலகத்தை உருவாக்கி விட்டார்கள். அந்த உலகத்தில் கதைகளாலும் பேச்சுக்களாலும் பண்பாட்டை உள்வாங்கிக் கொள்ள பழகிவிட்டார்கள். ஆகவே பரம்பரை அலகுகளை கடத்துவதில் எப்போதுமே பெண் வெற்றிபெற்றுக்கொண்டே வருகிறாள்.

மரபணுக்களை வைத்து வாழ்க்கையில் எப்படி வெற்றிபெற வேண்டும் என்பதை ஆண்கள் இதுவரைக்கும் விளங்கிக் கொள்ளவே இல்லை. பெண் அதில் கைதேர்ந்தவள்.
உங்களுடைய மரபணுக்களை கடத்த வேண்டுமென்றால் பெண்களை அடிமைபடுத்தாமலிருங்கள்.
அடிமைப்படுத்தாத ஆணைவிட்டு பெண், பிரிவதுமில்லை, அவனை ஒதுக்குவதுமில்லை.
இந்த பெண் ஆட்சி ஒரு கட்டத்தில் முத்தும் போது, ஆண்களின் இயல்பு முற்றாகவே அழியும். இந்த பூமி கூர்ப்பும், இனப்பெருக்கமுமின்றி, ஈவிரக்கமின்றி அழிவும். ஆகையினால் பூமியின் சமநிலை இப்போது யாரின் கையில் இருக்கிறது?

கருத்துகள்

  1. கண்டிப்பாக பெண்கள் மட்டுமே ஆட்சி செய்யும் சூழல் உருவாகிக் கொண்டு வருகிறது. அப்போது ஆண்களின் இயல்பான குணம் என்பது பெண்ணைச் சார்ந்து இருப்பதாக மட்டுமே இருக்கும். தனக்கென தனி சிந்தனை இருக்காது. ஒரு பெண் ஆணை எப்படி நடத்த வேண்டும் என நினைக்கிறாளோ அப்படியே நடத்துவார்கள். அது பெரும்பாலும் அந்த ஆணை அடிமையாக நடத்தும் ஓர் நிலையாகவே இருக்கும். ஏனென்றால் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் அடிமையாக இருந்த பெண் இனம் ஆண்கள் தனது ஆட்சியின் கீழ் வரும் போது அவனை அடிமையாக மட்டுமே நடத்துவார்கள். மீண்டும் ஆண் தன்னை அடிமைப்படுத்த அனுமதிக்க மாட்டார்கள். அறிவியல் மிகுந்த இக்காலத்தில் ஆண்களின் சுய சிந்தனைகளை அழித்து விடுவார்கள். தான் ஒரு அடிமை என்னும் எண்ணத்தை மட்டுமே அவன் மனதில் விதைப்பார்கள்.
    போர்களும் வியாதிகளும் ஒழிக்கப்பட்டு உலகில் அமைதி நிலவும். விஞ்ஞானிகள் ஆக பெண்கள் மட்டுமே இருப்பார்கள். உலகிற்கு நன்மை செய்யும் கண்டுபிடிப்புகள் மட்டுமே இருக்கும். ஆண்கள் வெட்கம் உள்ளவர்கள் ஆகவும், பெண்களிடம் இருந்து அவ்வப்போது கிடைக்கும் பாலுறவு சந்தோஷத்துக்காக பெண்களுக்கு நன்றியுடன் வாழ்பவர்கள் ஆக இருப்பார்கள். பெண்களின் சந்தோஷத்திற்காக மட்டுமே நாம் படைக்கப்ப்ட்டுள்ளோம் என்ற உண்மை ஆண்களின் மனதில் ஆழமாக விதைக்கப்படும்.

    பதிலளிநீக்கு
  2. Men rule the world sweety...it's just the hard truth...i know its hard for you to understand ..you will grow up soon.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Abandoned - Dead Leaves

  கொழும்பு தேசிய கலை இலக்கியப் பேரவையின் கடந்த மார்ச் மாதப் (2012) பாடிப்பறை நிகழ்வில் செய்யப்பட்ட இரண்டு கவிதைகளைப்பற்றிய நயப்பு  இது. தோராயமாக நினைவில்லைஎன்றாலும், ஒரு குத்துமதிப்பாகப் பதிந்திருக்கிறேன். பலர் இது Remarkable என்றார்கள். அப்பிடியென்ன இருக்கெண்டு ஆவணப்படுத்திப் பாப்பமே எண்டு தான், வேற ஒண்டுமும் இல்லை :) இரண்டு கவிதைகளைப் பற்றி நயக்கச்  சொன்னார்கள். என்னுடைய முதலாவது தேர்வு சில்வியா பிளாத்தினுடைய  Resolve என்கிற அமெரிக்கக் கவிதை. அதை நான் தமிழ்ப் படுத்தியிருக்கிறேன், ஒருஉத்தேசத்துக்காக இரு மொழியிலயும் தரலாம் எண்டு இருக்கிறன். முதல்ல கவிஞரைப் பற்றிச் சொல்ல வேணும், சில்வியா பிளாத் (Sylvia Plath, 1932 -1963 ) ஒரு அமெரிக்கப் பெண் கவிஞர், புதின மற்றும் சிறுகதை எழுத்தாளர். எழுத்தாளராக புகழ் பெற்ற பின்னால் தனது சக கவிஞரான  டேட் ஹியூக்சை மணந்தார்.  உளச் சோர்வினால்  நெடுநாட்கள் பாதிக்கப்பட்டிருந்த பிளாத் தன் கணவரை பிரிந்து சில ஆண்டுகள் வாழ்ந்தார். 1963ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது வாழ்வு மற்றும் தற்கொலை குறித்து பல சர்ச்சைகள்

இராவணேசன் ; Maunaguru's 'Ravanesan'

நெறியாள்கை - பேராசிரியர் மௌனகுரு. இடம் -கொழும்பு கலை இலக்கியப் பேரவை. காலம்- சனி(13.02.2010)  மாலை 6.30மணி. சனி மாலை(13.02.2010) பேராசிரியர் மௌனகுரு அவர்களின் 'இராவணேசன்' நாடகம் நடைபெறவிருக்கிறதென்று நண்பரொருவர் தகவல் சொன்னார். இருந்த எல்லா வேலைகளையும் புறந்தள்ளி விட்டேன். நாடகங்கள் என்றவுடன்  வரும் இந்த தொலைகாட்சி சீரியல்களையே கண் ஞாபகத்தில் கொண்டுவந்து முகத்தை அஷ்ட கோணலாக்குகிறது. மேடையமைப்பும், அரங்கமும்,அரிதாரம் பூசிக்கொண்ட பாத்திரங்களும், நேரடியான காட்சிகளூட்டும் கிளர்வும், எங்களுக்கு முன்னாள் ஒரு தலைமுறை இதனூடே வாழ்ந்து காட்டியிருக்கிற விடயமும் தெரிவதில்லை. மாற்றங்கள் மட்டுமே மாறிக் கொண்டிருந்தாலும்,எங்களின் முன்னோடிகள் வழி வந்த கலைப் பாதையை எடுத்தியம்புதலுக்கும்,அதற்கான வரவேற்புக்கும் இங்கு இடமில்லை எனும் போது அவற்றையெல்லாம் தாண்டி மனதில் எங்கேயோ வலிக்கிறது. எங்களுடைய காலத்தில், முழுமையான கூத்துக்கலையோ, அரங்காடல்ககளையோ  காண்பதற்கு காலமோ மாற்றமோ ஏதோவொன்று இடந்தரவில்லை .இருப்பினும் யாராவது எங்கள்  நலிந்து போன கலைகளை மறுபடியும் இளஞ்சமுதாயத்திட்கு க

குழந்தைகளுக்கான நவீன தமிழ்ப் பெயர்கள்

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தல் எனும்போது, இவ்வளவு காலமும் வைத்த பெயர்கள் தமிழ்ப்பெயர்கள் இல்லையா எனும் கேள்வி எம்மில் பலருக்கு எழும். உங்கள் பெரும்பாலானோர் தமிழ்ப்பெயர் என்று எண்ணிக்கொண்டிருக்கும் உங்கள் பெயரை வட இந்தியக் கலப்பு,சமக்கிருத கலப்பு,ஐரோப்பிய,அரேபியக் கலப்புடனான பெயராக இனங்காணுவீர்கள்.  தமிழில் பெயர் சூட்டுவது இனத்துவேசம் உள்ள செயலா? :P இனத்தைக் கொண்டாடக் கூடிய செயல். மறத்தமிழன் என்று அடைமொழி இட்டுக்கொண்டு உலாவுவதை விட அழகான செயல் என்று எண்ணுகிறேன். இந்த அடையாளம் மிக அழகானது.  அண்மையில் நிறையப் பேர் தமிழில் குழந்தைகளூக்கான நவீனமான பெயர்கள் வேண்டும் என்று கேட்டிருந்தார்கள். தமிழில் பெயர்கள் பழமையானவையாக இருப்பது கூட இக்காலத்தோரின் தெரிவுக்குட்படாமைக்கு ஒரு காரணமாகும். பெண் குழந்தைகளுக்கான பெயர்கள் சிலவற்றை தொகுத்திருக்கிறேன்.சிலவற்றை கண்டும் பிடித்திருக்கிறேன். ( பிற்காலத்தேவைகளுக்கு ;)  ) வினைச்சொல் பெயர்கள் அஞ்சா ஆராதி ஆனந்தி  சலனி கோளறா இசி இனி தேயா மேதா வேயா வேகா மின்னு மிதவா தெகிழா நெகி