Skip to main content

Stand Up For Colombo's Trees;கொழும்பு மாநகர சபையின் மரங்களுக்காக எழுவோம்





Silent protest organized by the concerned citizens against cutting trees in Colombo on 29th of  November 2012 at the Reid Avenue in front of the Arts Faculty, University of Colombo.(aka Philip Gunawardena Mawatha)


சுற்றுப்புறச் சூழல் தொடர்பான எல்லாக் கருத்தரங்கங்களிலும், நிகழ்ச்சிகளிலும் மர நடுகை பற்றியும், பசுமை நகர் பற்றியுமான விவாதம் தொடர்ந்தும் முன் வைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. பௌதீக சூழல் வெப்பமயமாதலுக்கு பச்சை மரங்களது தேவையும் சுவாசத்துக்குத் தேவையான சுகாதாரமான ஒட்சிசனைப் பெறுவதற்கும் மரங்கள் இன்றியமையாதவையாகும்.

சூழல் வெப்பநிலையுடன், வளி பதமாதலுடனும் காற்றின் ஈரலிப்பைத் தக்க வைத்திருப்பதற்கும், கணிசமானளவு தொடர்பு படுத்திக் கூறப்படும் புள்ளி விபரங்களில் காடழிப்பும், மரவரிவுமே அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டிருப்பினும் ;அவற்றின் கால அமைவுகள் வெவ்வேறான பின்னினைப்புக்களைக் கொண்டிருக்கின்ற போதிலும்,


கடந்த வாரங்களில் கொழும்புப் பல்கலைக்கழக வீதியோர மரங்களின் அறுப்பு மிகப் பாரதூரமான மனித வளச்சுரண்டலாகும் . கொழும்பு மாவட்டத்தின் சுமார் நூற்றியைம்பது ஆண்டு கால பழைமை வாய்ந்த இயற்கை வளங்களை அழிப்பதன் நோக்கத்தை ஒரே வார்த்தையில், 'நகர் திட்டமிடல் முகாமைத்துவமும் பொதுச் சொத்துக்களுக்கு ஏற்படும் சிராய்ப்புக்களைத் தவிர்ப்பதுவுமே' என்ற அறிக்கை மரவரிப்புத் தளத்துக்கு அருகிலேயே இருக்கும் கொழும்பு மாநகரசபைக்குட்பட்ட நகர சபை ஆளுனரால் வெளியிடப்பட்டது.


   
Protester against cutting trees at Reid Avenue, Colombo


அண்மைக்காலங்களில் கொழும்பு புறநகரை அண்டிய நடைபாதைகளில் வளைந்த 'சிந்தெடிக்' கற்கள் பொருத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கொழும்பின் ஆள்நடமாட்டமில்லாத சாலைகளில் பரபரப்பில்லாமல் அங்கிருந்த சிறிய வகை மரங்கள் இதன் போது பெரும்பாலும் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது பழமை வாய்ந்த பாரிய மரங்கள் அறுக்கப்படுகின்றன. 


ஆரம்பத்தில் வில்லோ மரங்கள் நகரசபையை அண்மித்த பகுதிகளில் அறுக்கப்பட்டன. தொடர்ந்து பல்கலைக்கழக முனசிங்க வீதியில் நிழத்தருக்கள் கடந்த வாரங்களில் வீழ்த்தப்பட்டிருக்கின்றன.


தூதுவராலங்கள் பள்ளிக்கூடங்கள், பல்கலைக்கழகம் போன்றவற்றைக் கொண்ட நகரின் பெரும்பாகமாகத் திகழும் இவ்விடம் பாழும் இடமாகக் காட்சியளிப்பதில் நாகரசபைக்கிருக்கும் திட்டம் என்ன என்பதனை தெளிவு படுத்த வேண்டும். மரங்களின் வேர்கள் செப்பனிடப்பட்ட பாதைகளில் ஊடுருவும் வண்ணம் தயாரிக்கப்பட்டதில் உள்ள ஊழல் வெளிவரட்டும். சாலையோரத்து நிழல் மரங்கள் ஒருவழிப்பாதையின் வாகன நெருக்கடியை அதிகப்படுத்துவதாகச் சோடிக்கப்படும் கருத்தினை தெளிவு படுத்தட்டும்.



இயற்கையினது நெடி குறைந்து போன கொழும்புச் சூழலில் மரங்களின் இருப்பை ஞாபகப்படுத்துகிற இரண்டே வளாகங்கள் கொழும்பு மாநகர சாலைக்குட்பட்ட வளவுகளும் சற்றே தள்ளி அமைந்திருக்கும் பார்க் வீதியும் மட்டுமே. இவ்வாறான இடங்களில் இருந்து மரங்கள் அகற்றப்பட முன்பு, மீள் நடுகைக்கான ஆயத்தங்கள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். முன் அறிவித்தல் பொது மக்களுக்கும் அவ்வண்டையை ஒட்டிய வளாக மாணவர்களுக்கும் கொடுத்திருக்க வேண்டும். மேலும் நூற்றாண்டு கால இலச்சினைகளை , மனிதர்களோடு மிக நெருக்கமான மரங்களை அழிப்பது, பழைமை வாய்ந்த விகாரங்கள் ,பள்ளிவாயில்கள், சிலுவைச்சாலைகள்,கோவில்கள் - இவற்றை அழிப்பதை விடவும் மனிதர்களோடு மிக நெருக்கமான நெருக்கடியைத் தரக்கூடியன;மனித விழுமியங்களைச் சிதைக்க வல்லன.



மனித விழுமியம் பேண வல்ல அரசும், மாநகரசபையும் இதற்கான ஆயத்தங்களை தவிர்ப்பது மிக நல்லது.சுகாதாரமான காற்றையும் பசிய சூழலையும் தவிரவும், மனிதர்களுக்கு வளமான வாழ்க்கையை, அவர்களுடைய சவுகரியத்துக்கு ஏற்பதாகவும் தங்களுடைய விழுமியங்களோடும், தமக்குப் பிடித்தவைகளோடும் வாழும் உரிமை இருக்கிறது. 




கொழும்புப் பல்கலைக்கழகத்தை அண்டிய மரங்கள், அவ்வாறான மனத் தோற்றத்துடனேயே எம்முள் இருந்தன. நெடிந்து வானளாவ உயர்ந்து , முன்றலில் உயர்ந்தவையாக நின்றவை அவை மட்டுமே! அவற்றின் வாழிடங்கள் பாதுகாப்புக்குரியன என்பதை உறுதிப்படுத்த வேண்டும். அவ்வாறானவொரு பாதுகாப்புக்குரிய, அவற்றின் நிலைப்பாட்டினை உறுதி செய்யக் கூடிய , எமது எண்ணத்தைத் திடப்படுத்தக் கூடிய ஆர்ப்பாட்டமில்லாத போராட்டங்களில் ஈடுபடுவோம்.

வளங்களைப் பேணுவதற்குரிய எல்லா உரிமையும் அதற்கெதிரானவற்றுக்காகப் போராடக் கூடிய எல்லா உரிமையும் அந்நாட்டின் இறையாண்மை பொருந்திய சகல மக்களுக்கும் இருக்கின்றது.அநாகரீகமற்ற போராட்டங்கள் அனைத்துப்பாரளுமன்றச் சட்டங்களுக்கு உட்பட்டவை.


நிலா-
29/11/2012

Comments

Popular posts from this blog

சாமகானமும் காம்போதியும்

முருகையன் ஒரு மொழிபெயர்ப்புச் செய்தார். மொழிபெயர்ப்பு எண்டும் சொல்ல முடியாது,சாதுவா மொழிபெயர்ப்பும்,திறமையான கற்பனையும் போட்டு செய்யுள் வடிவத்தில, இளநலம்! என்ன இளநலமா?ஹையா கிளுகிளுப்பான கதை வரப்போகுது. குமாரசம்பவம் (ஸாரி வேற கண்டென்ட் எண்டு நினைக்கப்படாது, ஐ ஆம் வெரி டீசன்ட்) காளிதாசன் குமாரசம்பவத்தில எழுதின அதே கதையை தமிழில தந்தவர். அதில தான் இந்தக் கதை வருகுது.  சாமகானம் சாமகானம் எண்டு ஒண்டு சொல்லக் கேட்டிருப்பம். “சாமகானம் பாடினான்” எண்டு நாலாம் வகுப்புச் சமய பாட புத்தகத்தில ஒரு பாடம் இருக்கு. பத்துத் தலையும், கையில ஒரு தலையுமாக் கணக்குப் பிழையா மொறாயஸ் கீறின இராவணனிண்ட மீசை வெச்ச படம் இருக்கும், இப்ப ஞாபகம் வந்துட்டுதா? அந்தக் காலத்திலேயே தலைகளிண்ட கணக்கை எண்ணிப் பாத்தனாங்கள் ஆக்கும். (தலைக்கணக்கு முக்கியம் அமைச்சரே) இப்ப சாமகானத்தைப்பற்றிப் பாப்பம். காளிதாசன் குமாரசம்பவம் எழுதேக்க, சும்மா கற்பனைகுதிரையை காட்டாற்று வெள்ளம் போல பறக்க விடுறேர்.  மிஸ்டர் சிவனும் மிசஸ் உமாவும் கலியாணமான புதிசில, (ஏன் கல்யாணமான பழசில யாரும் வெளிய போறதில்ல எண்டு நெடுங்காலமா டவுட்) சும்மா வெள...

இராவணேசன் ; Maunaguru's 'Ravanesan'

நெறியாள்கை - பேராசிரியர் மௌனகுரு. இடம் -கொழும்பு கலை இலக்கியப் பேரவை. காலம்- சனி(13.02.2010)  மாலை 6.30மணி. சனி மாலை(13.02.2010) பேராசிரியர் மௌனகுரு அவர்களின் 'இராவணேசன்' நாடகம் நடைபெறவிருக்கிறதென்று நண்பரொருவர் தகவல் சொன்னார். இருந்த எல்லா வேலைகளையும் புறந்தள்ளி விட்டேன். நாடகங்கள் என்றவுடன்  வரும் இந்த தொலைகாட்சி சீரியல்களையே கண் ஞாபகத்தில் கொண்டுவந்து முகத்தை அஷ்ட கோணலாக்குகிறது. மேடையமைப்பும், அரங்கமும்,அரிதாரம் பூசிக்கொண்ட பாத்திரங்களும், நேரடியான காட்சிகளூட்டும் கிளர்வும், எங்களுக்கு முன்னாள் ஒரு தலைமுறை இதனூடே வாழ்ந்து காட்டியிருக்கிற விடயமும் தெரிவதில்லை. மாற்றங்கள் மட்டுமே மாறிக் கொண்டிருந்தாலும்,எங்களின் முன்னோடிகள் வழி வந்த கலைப் பாதையை எடுத்தியம்புதலுக்கும்,அதற்கான வரவேற்புக்கும் இங்கு இடமில்லை எனும் போது அவற்றையெல்லாம் தாண்டி மனதில் எங்கேயோ வலிக்கிறது. எங்களுடைய காலத்தில், முழுமையான கூத்துக்கலையோ, அரங்காடல்ககளையோ  காண்பதற்கு காலமோ மாற்றமோ ஏதோவொன்று இடந்தரவில்லை .இருப்பினும் யாராவது எங்கள்  நலிந்து போன கலைகளை மறுபடியும்...

குழந்தைகளுக்கான நவீன தமிழ்ப் பெயர்கள்

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தல் எனும்போது, இவ்வளவு காலமும் வைத்த பெயர்கள் தமிழ்ப்பெயர்கள் இல்லையா எனும் கேள்வி எம்மில் பலருக்கு எழும். உங்கள் பெரும்பாலானோர் தமிழ்ப்பெயர் என்று எண்ணிக்கொண்டிருக்கும் உங்கள் பெயரை வட இந்தியக் கலப்பு,சமக்கிருத கலப்பு,ஐரோப்பிய,அரேபியக் கலப்புடனான பெயராக இனங்காணுவீர்கள்.  தமிழில் பெயர் சூட்டுவது இனத்துவேசம் உள்ள செயலா? :P இனத்தைக் கொண்டாடக் கூடிய செயல். மறத்தமிழன் என்று அடைமொழி இட்டுக்கொண்டு உலாவுவதை விட அழகான செயல் என்று எண்ணுகிறேன். இந்த அடையாளம் மிக அழகானது.  அண்மையில் நிறையப் பேர் தமிழில் குழந்தைகளூக்கான நவீனமான பெயர்கள் வேண்டும் என்று கேட்டிருந்தார்கள். தமிழில் பெயர்கள் பழமையானவையாக இருப்பது கூட இக்காலத்தோரின் தெரிவுக்குட்படாமைக்கு ஒரு காரணமாகும். பெண் குழந்தைகளுக்கான பெயர்கள் சிலவற்றை தொகுத்திருக்கிறேன்.சிலவற்றை கண்டும் பிடித்திருக்கிறேன். ( பிற்காலத்தேவைகளுக்கு ;)  ) வினைச்சொல் பெயர்கள் அஞ்சா ஆராதி ஆனந்தி  சலனி கோளறா இசி இனி தேயா மேதா வேயா வேகா மின்னு ...