-நிலா-
29-7-2010
29-7-2010
ஒரு நாள் ,
வானம் விடை பெற்றுக் கொண்டிருந்தது-
அந்த நாள் புத்தனும் சில சந்நியாசிகளும்
வானத்துக்குக் கீழே நடப்பவை பற்றி
பிரஸ்தாபித்துக் கொண்டிருந்தார்கள்.
மரங்கள் நேர் கோட்டில் அசைகின்றன
வானம் விடை பெற்றுக் கொண்டிருந்தது-
அந்த நாள் புத்தனும் சில சந்நியாசிகளும்
வானத்துக்குக் கீழே நடப்பவை பற்றி
பிரஸ்தாபித்துக் கொண்டிருந்தார்கள்.
மரங்கள் நேர் கோட்டில் அசைகின்றன
என்றான் ஒரு- புனிதன்.
இலைகள் வளைவை நோக்கிப் பயணிக்கின்றன
இலைகள் வளைவை நோக்கிப் பயணிக்கின்றன
என்றான் இன்னொரு- புனிதன்
எனினும் எல்லாமுமே மண்ணை நோக்கித்தான் விழுகின்றன
எனினும் எல்லாமுமே மண்ணை நோக்கித்தான் விழுகின்றன
என்றான்
இன்னொரு- மனிதன்.
புத்தனுக்கு கதைப்பதற்கு ஏதுமில்லை-
கதைகளைத் தவிர்க்கிறான்.
அல்லது கேள்விகளைத் துரத்துகிறான்.
கேள்விகளில் இருந்து பதில்களுக்கான நியாயங்களை அவன்
நிராகரிக்கிறான்
அல்லது
நிராகரிப்புக்களை கேள்விகளாக்குகின்றான்.
ஏனென்றால் அவன் எப்போதும்
இன்னொரு- மனிதன்.
புத்தனுக்கு கதைப்பதற்கு ஏதுமில்லை-
கதைகளைத் தவிர்க்கிறான்.
அல்லது கேள்விகளைத் துரத்துகிறான்.
கேள்விகளில் இருந்து பதில்களுக்கான நியாயங்களை அவன்
நிராகரிக்கிறான்
அல்லது
நிராகரிப்புக்களை கேள்விகளாக்குகின்றான்.
ஏனென்றால் அவன் எப்போதும்
புத்தனாயிருக்க விரும்புகிறான்.
புத்தன் ஒரு தர்மத்தை ஸ்தாபித்தவன்,
அவனுக்கு
வழக்கொழிந்து போன காருண்யம் பற்றித் தெரியவே தெரியாது.
இருந்தாலும் அவன்
மரங்கள் நேர் கோட்டிலா, இலைகள் வளைவிலா,
கனிகள் சுவையிலா பயணிக்கின்றன என்பது பற்றி
கனவுகளில் தனும் சிந்திப்பான்.
புத்தன் ஒரு தர்மத்தை ஸ்தாபித்தவன்,
அவனுக்கு
வழக்கொழிந்து போன காருண்யம் பற்றித் தெரியவே தெரியாது.
இருந்தாலும் அவன்
மரங்கள் நேர் கோட்டிலா, இலைகள் வளைவிலா,
கனிகள் சுவையிலா பயணிக்கின்றன என்பது பற்றி
கனவுகளில் தனும் சிந்திப்பான்.
புத்தன் ஒவ்வொரு தடவையும்
கனவில் விழும் போது சாமான்னியனாகிறான்.
சாமானியனாகும் போது
சாமானியனாகும் போது
அவன் உடல் அசாத்தியத் தேஜசுடன் மிளிர்கின்றது .
கருணையின் வசந்தமோ ,
கருணையின் வசந்தமோ ,
வாசனையோ சுடர் விடுகிறது.
பின் அவன் மீண்டும்
புத்தனாக எண்ணுகையில்.
அதே சவத்தின் நிணம் வந்து
பின் அவன் மீண்டும்
புத்தனாக எண்ணுகையில்.
அதே சவத்தின் நிணம் வந்து
மூக்கை அடிக்கின்றது.
புத்தன் ஒரு போதும் இயேசுவை சந்தித்ததே இல்லை-
ஏசுவுக்கும் அவனுக்கும் காலத்தின் இடைவெளி அல்லது
கடல் கடந்து போன உறவு.
ஒரு முறை புற்றரை ஒன்றின் மீதாக
ஏசுவுக்கும் அவனுக்கும் காலத்தின் இடைவெளி அல்லது
கடல் கடந்து போன உறவு.
ஒரு முறை புற்றரை ஒன்றின் மீதாக
புத்தன் நடந்து கொண்டிருக்கையில்,
பஞ்சுப் பாதுகையில் கல் ஒன்று குத்தியது.
பின்னொரு நாள் அந்த வெள்ளரசு மரம் கொஞ்சம் சரிந்து
வேரோடு விழப்பார்த்தது .
புத்தன் சுமை தாங்கிப் பழகாதவன்.
ஏங்கிப் போனான்,
பஞ்சுப் பாதுகையில் கல் ஒன்று குத்தியது.
பின்னொரு நாள் அந்த வெள்ளரசு மரம் கொஞ்சம் சரிந்து
வேரோடு விழப்பார்த்தது .
புத்தன் சுமை தாங்கிப் பழகாதவன்.
ஏங்கிப் போனான்,
உள்ளொன்றும் புறமொன்ருமாய் தன் அத்துவிதத்தை
கல்லோன்ரும் மரமொன்ருமாய்க் கூறு போட்டதை எண்ணி-
சற்றைக்கெல்லாம் சிலுவை சுமந்த இயேசுவாய் ஆகிப் போனான்.
கல்லோன்ரும் மரமொன்ருமாய்க் கூறு போட்டதை எண்ணி-
சற்றைக்கெல்லாம் சிலுவை சுமந்த இயேசுவாய் ஆகிப் போனான்.
Comments
Post a Comment