ஐந்தாம் படைக் காதல்
எனக்குத் தெரிந்த வரைக்கும்
கடல் ஆர்ப்பரிக்கத் தொடங்கியது-
என்
அகாலத்தின் போதே
மெல்லிய சாம்பலில்-
சுடுகின்ற தணல் தாங்கும்
குளிரைப் போல- இருக்கிறது-
எனக்குள்ளான காதல்.
இது,
வகையறா வகைக்குரியது.
இசையினது சாரலில்
தூணோரமாக தழுவியபடி நிற்கின்ற
நாணலைப் பிடித்தபடி,
செத்துப் போன மஞ்சளிளைகளைப் பார்க்கையில்-
என்,
காதலின் ஆண்டு வளையம் தெரிகின்றது.
புலப்பட்டுப் போக,
இறுதியில்
மேகங்களைப் பிழிந்து,
சாறு கொண்டுவந்து, காயங்கண்ட இடங்களில்
தெளிக்க,
சில்லிடுகிறது தேகம்-
அக்கினிக் குமிழியின் ஆரை தீண்டியது போல,
மௌனக்குடிலிலிருந்து வரும்
ஆபோகிச் சங்கீதத்தில்-
அவர்களிருக்கிரார்கள்,
வேட்டி நிறைந்த பூக்களுடன்
அவளிருக்கிறாள்.
தீவிரமான
விரகத்தின் முடிபில்-
போய்க் கேட்கிறேன்,
ஐந்தாம் படைக் காதலை-
ஆயுதந்தந்துதவும் படிக்கு...
அவர்களின் ,
பிரிக்க முடியாத பல்லிடுக்கிலிருந்து
சிரிப்பு வர-
இறுதியில் எனக்குமிருக்கின்றது-
நேயத்தின் தடயம் !
அலம்பல்க் கதை.......
ஏதாவது எழுத வேண்டும்,
அதுவும் தெளிவாய் எழுத வேண்டும்
அம்மா, ஆடு, இலை , ஈசன்...
எழுதலாம்.
முறையே அவை,
பந்தம், மிருகத்தன்மை, தாவரவியல், ஆன்மிகம் பற்றி குறிப்பதால்
அவையும் கடினமானவையே..
பிறகு என்ன எழுதுவது...
வெயில்க்காலத்தின்
சூரியத் தகிப்பினால் மண்ணிறத் தரையில்
செத்துக் கிடக்கின்றன, மண் புழுக்கள்.
சிவந்த புழுக்களின் உடல்கள்
கறுத்து அல்லது சிவத்து இம்மியளவான
ஏறும்புகளினால் காவப் படுகின்றன -
இறுதி ஊர்வலத்தில்.
மழைக் காலத்தின் சொதசொதத்த
ஈரத்தில் நெளிந்து நெளிந்து பல புழுக்கள்
சேர்ந்து கட்டிக் கொள்கின்றன.
கறுப்பில் மஞ்சள புள்ளி போட்ட பேனா அட்டையும்,
சிவப்பு வரி வேய்ந்த
ஆயிரங்கால் பூச்சியும்,
கழிவறைத் துவாரத்திலிருந்து மெல்ல மெல்ல
வெளிவரத் தொடங்குகின்றன.
கரப்பான் பூச்சியின் சாகசம்,
மண்ணிறம், நரை நிறம்,
இன்னுஙக் கொஞ்சம் வெழுத்த நிறங்களில் இவை கிடைக்கும்,
இன்னுஙக் கொஞ்சம் வெழுத்த நிறங்களில் இவை கிடைக்கும்,
ஜெட் விமானம் பறப்பது போல குறுக்காலே....
பறக்கும்.
ஈசல்,
மழைக்கு முந்தின ராத்திரியே
பாத்திரங்கழுவும் சட்டிக்குள் மிதக்கும்...
தவளைப் பொக்கானின் நாட்டியம்...
அதன் இனிமையான சன்னத ஆட்டம்...!
இரவில் மின்சாரம் போனதன் பிறகு,
அம்மா கதை சொல்லுவா ....
பெரும்பாலும்,
'அக்காக் காரி, தங்கச்சிக்காரி' கதை...
'சாம்பலாண்டிக்' கதை,
'சாம்பலாண்டிக்' கதை,
'பனியார மழை' பெஞ்ச கதை...
இப்பிடி நீளும் .....
மெல்லிய சாமியறை
விளக்கு வெளிச்சத்தில்,
விரல்களால்,
மான், குதிரை, நாய், யானை....ஆமை
மிருகங்களின் உருவங்களை நிழல் செய்து,
எல்லோரையும் வட்டமாய் இருத்தி ,
குழைச்ச சோற்றை ஓரொரு பிடி கயிலை வைப்பா -
கடைசிச் சோற்றுருண்டை எனக்கு....!
மழை நாள்,
வெயில் நாள்
எல்லா நாட்களும்
முன் போல இல்லை....
இயல்பிலிருந்து விலகிக் கொண்டுவரும் நான்,
கடவுளாவதில் முனைகிறது,
இருப்பினும் என்னைச் சுற்றிக் கூட்டம் கூடுவதை
வெறுக்கிறது.
நிலா -
nice...
ReplyDeleteஅருமைப்பா..
ReplyDeleteவார்த்தைகளில் எளிய நடையுடன் வேகமும்..
கருத்துச் சுதந்திரம், மாற்றுக்கருத்துக்களுக்கு மதிப்பு இருக்கிறது என்ற நம்பிக்கையில் சொல்கின்றேன். ஏன் தங்கள் கவிதைகளில் ”சேடிஸ்டிக்” வாசம் அதிகமாக வீசுகிறது - ”பொஸிடிவ்” ஆக விஷயங்களை அணுகலாமே!
ReplyDelete//
ReplyDeleteஏதாவது எழுத வேண்டும்,
அதுவும் தெளிவாய் எழுத வேண்டும்
அம்மா, ஆடு, இலை , ஈசன்...
எழுதலாம்.
முறையே அவை,
பந்தம், மிருகத்தன்மை, தாவரவியல், ஆன்மிகம் பற்றி குறிப்பதால்
அவையும் கடினமானவையே..
பிறகு என்ன எழுதுவது...
.............
//
எனக்கு பிடித்த கவிதை!
கவிதை நடைக்கு வாழ்த்துக்கள்!
ரியல்லி சூபர்ப்... தொடர்ந்து எழுதுங்க..
ReplyDeleteஅனைத்து நண்பர்களுக்கும் இனிய ஆங்கில புதுவருட வாழ்த்துக்கள்...
ReplyDelete