Skip to main content

குறி சொல்லி

     
நான் படிப்பது தொடர்பான ஆராய்ச்சிகளை செய்து வந்தேன் . மேசைக்கு சமீபமாக தலையைக் கவிழ்த்துக் கொண்டே புத்தகத்துக்குள் அமிழ்ந்திருப்பது, புத்தகத்தின் முதற் பாகங்களை மடித்து ஒற்றைக் கையால் லகுவாக தூக்கிப் பிடித்துப் படிப்பது , ஒரேயடியாக , கட்டிலிலே அகல விரித்துப் போட்டு புத்தகங்களை மேய்ந்து பார்ப்பது ,ஒரு நிழல்த் தருவின் கீழே சாய்வு நாற்காலியைத் தேடிப போட்டுக்கொண்டே சலனமின்றிப் படிப்பது....

ஒ.... புத்தகங்களைப படிப்பதென்பது பெரியதொரு காரியம். அதற்கு முதலிலே புத்தகங்களைப் பற்றிய எண்ணக்கரு பரவ விரிந்திருக்க வேண்டும். சல்ஜாப்பமின்றிய தெளிந்த நனவோடை போல புத்தகளின் அறை எண்கள் கிடாசப் பட வேண்டும். புத்தகத்துக்குள்ளே கிடக்கின்ற கூறுகள் நிகண்டுகள் போல நெருங்கி லயிக்க வேண்டும் .பதியையும் பசுவையும் போலத்தான், ஜீவாத்மா பரமாத்மாவோடே உளறிக்கொண்டு கிடக்க வேண்டும். இது சோதினைப் புத்தகமாக இருந்தாலும் சரி........... புத்தகங்களைப் படிக்கிற தருவாயில் நான் சமனிலியாகவும் , மாறிலியாகவும், சமதானியாகவும் நாளுக்கு நாள் மாறிக் கொண்டு வருமுண்மை பலத்தது. 

இது வெறும் பலித்த சமண்பாடேயண்றி முழுவதும் அல்லவெண்றெண்ணினேன். நாளாக ஆக எனக்குள்ளே இருந்த நிழல் எண்ணம் என்னை விட்டு மெதுமெதுவாக கழன்று வான வீதியெங்கும் உலாவருவது புரிய ஆரம்பித்தது .




                       

நான் ஆகாயத்திலும், பூமியிலும், தீக்குள்ளும் , சந்திர ஒடைக்குள்ளும் ,ஞாயிற்று ஒழுக்குகளிலும் , தீயினது சுழல் நாக்கைப் போல வலம் வரத் தொடங்கினேன் என்னாலேயே என்னைக் கட்டுப் படுத்த முடியவில்லை . நான் பிரும்மமாகிக் கொண்டு வரத்தொடங்கினேன் . எனக்குள் மாறுதல்கள் நீண்டு வளர்ந்து கரும் பெருஞ்ச்செடியாகிக் கொண்டது. 

இந்த மாற்றத்தைத் தடுத்து நிறுத்த இயலுமானவரை முயன்றேன் . நான் பூமியின் அந்தத்திலிருந்து விடுபடத் தொடங்கியதையே என்னால் உணர முடிந்தது. ஈற்றில் இன்பமுடையவனாகினேன் . இனி என்னால் மனிதர்களைப் போல உணர்வுடனும் , உணர்ச்சிச் சொற்களாலும் , ஒலிக்குறிப்புக் களினாலும் வாழ முடியாதது தெரிய வந்தது. தலைக்கு மேலே பறக்கின்ற குருவிகளின் வான வேடிக்கையைப் போலே எனக்குள் இருந்த உணர்ச்சி மயமான யாதவங்கள் முற்றுப் பெறத் தொடங்கிற்று . எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.


இனி நான் மனிதனில்லை; பட்சியில்லை ; மிருகமுமில்லை ; ஊர்வனவோ ,நடப்பனவோ ,தாவுபவனவோ , நீந்துபவனவோ இல்லை. அந்தரத்தில் அலைகின்ற யட்சி !

நான் நினைத்த நேரத்தில் தொடுவான் தொட்டு வர முடிந்தது. மலர்ந்து புதுசான புற்றரையில், பனித்துளிகளுடன் சல்லாபிக்க முடிந்தது. பூக்களைத் திறந்து கொண்டோடி, இலையின் காழ் , தண்டின் காழ், வேரின் காழ் வழியாக பிரயாணிக்க முடிந்தது. ஆக நான் நீராய் உருகினேனா ?

ஒ ,,, ...........என்னை இனி யாரென்ற பிரதிநிதித்துவத்தில் சேர்ப்பது? இல்லையென்றால், என் போன்றவர்கள் இனி உதிக்க , நான் தான் இந்த நுந்த குலத்தின் மூத்த குடி மகளோ ? அப்படியானால், நான் என்னைப் போன்ற அந்தரந்துபிகளுக்கு அமையம், சொத்து , நிருவாகம் , தலமெல்லாம் அமைத்துக்கொடுக்க வேண்டி வருமோ....! ராசாங்கப் பொறுப்பு ......, ச்சீய்...ப்ப்பூ எனக்காவது ராசாங்கப் பொறுப்பாவது....! ஒரு வேளை ............. .....நான் .....நான்.... கடவுளாக்கிக் கொண்டு வருகிறேனோ ? (!)...............
இல்லை நான் தினமும் நைதரசன் கழிவை வெளியேற்றி , ஏக கலோரிப் பெறுமானத்தில் உணவுண்டு... ..... ......, கடவுள் அமிழ்த்தமேல்லோ சாப்பிடுவார்?....... நான் கடவுளுமில்லை. !
எனக்கான தேடல் பலத்தது. எனது வீடு ,எனது புத்தகங்கள் எதுவுமே என்னைச் சூழ இல்லை .நிர்மூலமான ஒரு பெரிய அகழிக்குள் தத்தளிப்பது போன்ற பிரம்மை. !

சன்னல்கள் , கதவுகளெல்லாம் சாத்தப்பட்டு விட்டன. சூரியனிலிருந்து வருகின்ற ஒளியையும் என்னால்ப பெற முடியவில்லை.இரவான போது சந்திரனின் தாவள்யத்தையும் என்னலே சூறையாட முடியவில்லை. நான் பெரியதொரு கிரகத்திலிருந்து பூமிக்கும் , அதுக்குமாக அலைவது தெரிகிறது. 

நான் அலைவதற்கு எடுக்கும் அலைவு காலம் , நேரத்தில் தங்கி இருப்பதில்லை. இன்னொன்றில்................., அது எதுவாக இருக்கும்...?
எனது அறையினது கடிகாரம் பல யுகங்களாக ஓடவேயில்லை . நாட்காட்டியில் தாள்களே இல்லை.....நான் உயிர் அலைவிலிருந்து அமைப்பழியத் தொடக்கி விட்டேன். நான் பிரேதமாகிக் கொண்டிருக்கிறேன். 

நான் தினப்படி வருகின்ற பள்ளிக்கூடம் , சகதிச் சாலை, வேப்பமர நிழல் , மயான விடுதி இவை எதுவுமே என்னைக் கண்டு கொள்ளவதில்லை . நான் என் உடம்பை நீத்துக் கொண்டு கோடுகளாலும், வட்டங்கலாளுமான கணித உருவங்களால் நெய்யப் பட்டுக் கொண்டிருக்கிறேன். எனது உடலின் பாகங்கள் வளிஇல் எளிதிலே கலக்கின்றது. சேதனங்களோடு சேர்ந்து இயற்க்கை வட்டங்களைப் பூர்த்தியாக உதவுகின்றது. பனியாக , மழையாக என்னால் உரு மாறிக் கொள்ள முடிகின்றது.....

'" ஒ...........சர்வ வல்லமை படைத்த நிருதூழியமான பரம் பொருளே , எனக்கு சமீப காலமாக என்ன நடந்து கொண்டிருக்கிறது.......?
'' என்னருமைக் குழந்தாய்........உன் ஜீவ அதரங்கள் , ஊழி முடிவில் இருக்கின்றன. அதிலிருந்து விடுப்புப் பெற , உன் மூக்குக் கண்ணாடியைக் கழற்றித் துடைத்து விட்டு, உனது இனிய கண் கொண்டு , சற்று உற்று பச்சைகளின் இருப்பைப் பார். இயற்கையின் சாகுபடியை ஞாமணஞ் செய்து கொள் ! இயற்கையின் இருப்பை உணர்ந்து கொள் அப்போது.....தெளிவாய்.... கடவுள் சொல்லீச்சு! .......... 

'ஒ..... பரம்பொருளே....., நான் நீங்களாக மாற ஏதும் வாய்ப்பேதும் உண்டா......?
சமீப காலமாக நான் உங்கள் எண்குணங்களைப் பெறத் துணிந்தவனாகினேன்...,வரப்பில் இன்பமுடைமை ......, முற்றிலும் உணர்தல்,இயல்பாகவே பாசங்களினின்றும் நீங்கல ....., பேரருள் உடைமை ....இன்னும் மறந்து விட்டது இறைவா....?

..........................என் தொழிலுக்கே ஆப்படிப்பனோ என்று தான் அது (கடவுள்) நினைத்திருக்க வேண்டும் , பிறகு சுதாகரித்துக் கொண்டு........,
' உன்னால் படைத்தல் , காத்தல், அழித்தல் எனும் முத்தொழில எதிலும் ஈடுபட முடிகிறதா .....எண்டிச்சு.... ...............

'' படைத்தலுக்கு எங்கடவூரில வயதுக் கட்டுப்பாடு இருக்கிறதால .....நான் காத்தல், அழித்தலில் ஈடுபடுகிறேன்.....எப்படிஎண்டால்........ கழிப்றையில் தண்ணீ வெள்ளத்துக்குள் மிதக்குற எறும்புகளை 'டி -ஷர்ட்'  இல இருந்து நூல் பிச்சுப் போட்டு காப்பாத்தியும், சில
நேரத்தில் எறும்புக்கு தண்ணிய ஊத்திக் 'கொண்டும்'  இருக்கிறன் !

................................. '' கடவுள் சொன்னது........நல்லது...., நீ இம்மையை , மறுமையாககிக் கொண்டிருக்கிறாய் .உனது வாட்டம் இதுவல்ல. ...............,,
நீ மலபரிகாரம் செய்துகொள்ள வேண்டும் , இருவினை ஒப்பும் நிகழ வேண்டும்.....! புரிகிறதா...?

பரம்பொருளே தெளிவாக குழப்புகிறீர்கள். நான் சகலனாகவும், பிரயகலனாகவும், விஞ்ஞான கலனாகவும் உள்ளேனே. ஈற்றிலுள்ள இந்த ஆணவந்தானோ என்னை ஆட்டிப் படைக்கின்றது.....? புரிவில்லை எம்பெருமான்...? ..............................

..........மூச்......குறுக்கே பேசப்படாது....! பூச்சி புழுவை நசிப்பது போல .....மகாபலியை நசுக்கிக் கொண்டது போல.....சொல்லிவிட்டு திருக்கடவூரில நமனை எட்டயுதைச்சிட்டு குடுத்த போஸில் நின்றார்.

''.......சரி சுவாமி............. ம்ம்ம் ம்ம்ம்ம் ............
பிறகு ௯ லாகி............, குழந்தாய்...., என்னினிய குழந்தாய் , சத்குருவான எனக்கே சில சந்தர்ப்பங்களில் ஆணவ மலம் கூடிவிடுவது இயல்பே தான். பாவம் அற்ப ஜந்துவான உன்னால் கட்டுப் படுத்த முடியுமோ.....! நீ கண்ட புத்தகங்களை வாசித்துக் கெட்டுப் போய் விட்டாய்........கடவுள் கூறுகிறேன் நீ உன் நாளாந்தத்தை மாற்றிக் கொள் அப்பனே......!
-சொல்லிவிட்டு "ப்புஷ்க் ...."' என மறைந்து விட்டது.



எனக்கு அவ்வப்போது கடவுளிடம் பேசிக் கொள்ளும் வியாதியும் தொற்றிக் கொண்டது. என்னால் இனி மீளப் புத்துயிர்ப்படையவே முடியாதா? அண்டத்தின் ஒவ்வொரு அணுவில் இருந்தும் நான் பகரப்ப்படடேன். என்னுடல் ஒப்பியல்பற்ற தேக்கங்களைக் கடந்து தொலை தூரத்து நீர்க் குமிழியைப் போல விசும்பிலிருந்து யாதவமாய் அறுந்தொழிந்தபடியிருந்தது .
கடவுள் சொன்னதைப் போல இயற்கையின் சாகுபடியை என்னாலான மட்டும் கண்முன் கொண்டுவர யனித்தேன் . சன்னலின் ஊடு பார்த்தேன் .


எதுவுமே தெரியவில்லை , மங்கலான பூமிப் படலத்தைத் தவிர............
மெல்ல மெல்ல யோகத்தைப போல ஒருவகை நிட்டையில் ஆழ்ந்தேன் .சாய்வு நாற்காலி மீது கால்நீட்டியபடி என்னினிய புத்தகங்களைப் படிக்கத்தொடங்கினேன் . 

உலகம் இருளிலிருந்து விடுபட எடுத்த அலைவு காலம் நேரத்தில் தங்கி இருந்தது. எனது சேதனவுடல் சுருங்கி லௌகீகத்துக்குள் குதிக்க முயன்றது .சன்னல் ஒளிபெற்றது.இலைகளின் கதவுகள் திறந்தன .நெடு வழிச் சாலையினது அந்தங்களை என்னால் பார்க்க முடிந்தது. இது நினைக்கவே பிரயாசையாகவிருந்தது .

 என்னையொத்த பட்சிகள் பட்சிகள் ,ஊர்வன, மிருகங்கள் தாவள்யமான நிலவொளியில் நிழல் பெற்று உருக கொண்டு மீண்டு எழுந்தன . ஒப்பற்ற எனதுடல் வளைந்தும் ,நெளிந்தும் ,சுருண்டும் , நடந்தும் ,கிடந்தும் ,சம்மனமிட்டும் தனது இருக்கையை உணர்த்திக் கொண்டது.


நான் பார்த்த போது அந்த சன்னல் மலர் பூர்த்தது .மெல்லிய தென்றலின் மனத்தை என்னால் நுகர முடிந்தது . காற்றின் சிறகுகள் என்னுள் மூழ்கடிக்கப் பட்டு இருந்தது. மெல்ல அத்வைதம் புரிந்தது.

புத்தகங்களை உள் வாங்கிக் கொண்டேன் . வெறுமை படர்ந்த ஓசைக் குறிப்புகளிலிருந்து எனக்குள் சுமையிறக்கம் நிகழ்ந்து முடிந்தது .

எனது அந்தராத்மா புத்தகத்தின் அந்தங்கள்க்குள்ளே ஊசலாடுகிறது . புத்தகத்தை மீண்டும் மூடும் போது மரணத்தின் வாடை வருகிறது....!


-நிலா
2005-06 - 18 

ஓ/எல் காலத்துக்கும் முன்பாகக் கிறுக்கியது.

Comments

  1. இவ்வளவு செறிவான எழுத்துவளம் கொண்ட ஒரு பதிவர் அறிமுகமாகி இருப்பது மகிழ்ச்சி. பதிவுலகை ஒரு புதிய கட்டத்துள் இட்டுச்செல்லும் இந்த பதிவுவரிசை மிகவும் வரவேற்கத்தக்கது.

    வலைப்பதிலர்களின் பின்னூட்டங்களுக்காகவே எழுதப்படும் பதிவுகளுக்கு மத்தியில் உங்கள் பதிவு சிறந்த வாசிப்பனுபவத்தை பெற்றுத்தருகிறது.

    ReplyDelete
  2. எனக்கு இன்னும் நிறைய வாசிப்பனுபவங்கள் தேவைப்படும் போல் தெரிகிறது. தொடர்ந்து முயல்கிறேன் தர்ஷாயணீ..

    ReplyDelete
  3. கடவுளே..
    எப்பிடி உப்பிடி எழுதுறது? உண்மையச்சொல்லப்போனா.. எனக்கு ஒண்டும் விளங்கயில்ல.. ஏதோ கனவில காட்சிகள் சம்பந்த சம்பந்தமில்லாமல் அடுத்தடுத்து வருவது பொல ஒரு அமைப்பு தான் எனக்கு தெரிகிறது..
    பயங்கரமா ஆனால் நல்லா இருக்கு..
    வாசிப்பால் ஏற்பட்ட அனுபவங்களை உதில மிகைப்டுத்தி கவிநயப்படுத்தி எழுதியிருக்கிறாரோ எழுத்தாளர்?
    தமிழ் வொக்காபுலரி வெறிகொண்டு ஓடியிரக்கிறது..
    நண்பர்களே தயவுசெய்து , எனக்கு உதன் பொிழிப்புரை வேண்டும்..

    ReplyDelete
  4. பின்நவீனத்துவ சிறுகதை கடைசி வரி வரை கவிதைபோல் வந்திருக்கிறது.
    கொஞ்சம் பந்தி பிரித்திருந்தால் வாசிக்க இலகுவாக இருந்திருக்கும்.

    ReplyDelete
  5. ஓ இதைத்தான் பின் நவீனத்துவம் என்பார்களா? நானும் ஒரு பின்னவீனத்துவ ( பினாத்துவ இல்லை ) கதை எழுதப்போகிுறேன்.. வந்திண்ணா மது நிமல் மூவரும் அதை வாசித்து இப்படி புகழ்ந்து பின்னூட்ங்களை இடவேண்டும்.. இல்லாவிட்டால் உங்களுக்கும் பின்னவீனத்துவ முறையில் பின்னூட்ங்கள் இடப்படும்..

    தற்போது கதைக்கு தலைப்பை கொஞ்சம் பின்னவீனத்துவமாக சிந்தித்துக்கொண்டுள்ளேன்.. :)

    ReplyDelete
  6. மிகவும் சிறப்பான மொழிவளம் படைத்த நீங்கள் வலைப்பதிவிற்க்கு புதுசு என்று சொல்லும்போது ஆச்சரியமளிக்கிறது.
    ””" ஒ...........சர்வ வல்லமை படைத்த நிருதூழியமான பரம் பொருளே , எனக்கு சமீப காலமாக என்ன நடந்து கொண்டிருக்கிறது.......?
    '' என்னருமைக் குழந்தாய்........உன் ஜீவா அதரங்கள் , ஊழி முடிவில் இருக்கின்றன. அதிலிருந்து விடுப்புப் பெற , உன் மூக்குக் கண்ணாடியைக் கழற்றித் துடைத்து விட்டு, உனது இனிய கண் கொண்டு , சற்று உற்று பச்சைகளின் இருப்பைப் பார். இயற்கையின் சாகுபடியை ஞாமணஞ் செய்து கொள் !””

    வார்த்தைக்கு வார்த்தை அழகு தமிழ்

    தொடர்ந்து எழுதவேண்டும்
    வாழ்த்துக்கள் இந்த சிறியவனிடமிருந்து

    ReplyDelete
  7. //எனது அந்தராத்மா புத்தகத்தின் அந்தங்கள்க்குள்ளே
    ஊசலாடுகிறது . புத்தகத்தை மீண்டும் மூடும் போது மரணத்தின் வாடை வருகிறது....!//

    நிலா...மிக மிக அருமையான பகிர்வு.,முதல் அடிக்கடி வந்து பார்ப்பேன்..இப்ப கொஞ்ச நாளா வரவில்லை..அருமை...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சாமகானமும் காம்போதியும்

முருகையன் ஒரு மொழிபெயர்ப்புச் செய்தார். மொழிபெயர்ப்பு எண்டும் சொல்ல முடியாது,சாதுவா மொழிபெயர்ப்பும்,திறமையான கற்பனையும் போட்டு செய்யுள் வடிவத்தில, இளநலம்! என்ன இளநலமா?ஹையா கிளுகிளுப்பான கதை வரப்போகுது. குமாரசம்பவம் (ஸாரி வேற கண்டென்ட் எண்டு நினைக்கப்படாது, ஐ ஆம் வெரி டீசன்ட்) காளிதாசன் குமாரசம்பவத்தில எழுதின அதே கதையை தமிழில தந்தவர். அதில தான் இந்தக் கதை வருகுது.  சாமகானம் சாமகானம் எண்டு ஒண்டு சொல்லக் கேட்டிருப்பம். “சாமகானம் பாடினான்” எண்டு நாலாம் வகுப்புச் சமய பாட புத்தகத்தில ஒரு பாடம் இருக்கு. பத்துத் தலையும், கையில ஒரு தலையுமாக் கணக்குப் பிழையா மொறாயஸ் கீறின இராவணனிண்ட மீசை வெச்ச படம் இருக்கும், இப்ப ஞாபகம் வந்துட்டுதா? அந்தக் காலத்திலேயே தலைகளிண்ட கணக்கை எண்ணிப் பாத்தனாங்கள் ஆக்கும். (தலைக்கணக்கு முக்கியம் அமைச்சரே) இப்ப சாமகானத்தைப்பற்றிப் பாப்பம். காளிதாசன் குமாரசம்பவம் எழுதேக்க, சும்மா கற்பனைகுதிரையை காட்டாற்று வெள்ளம் போல பறக்க விடுறேர்.  மிஸ்டர் சிவனும் மிசஸ் உமாவும் கலியாணமான புதிசில, (ஏன் கல்யாணமான பழசில யாரும் வெளிய போறதில்ல எண்டு நெடுங்காலமா டவுட்) சும்மா வெள...

இராவணேசன் ; Maunaguru's 'Ravanesan'

நெறியாள்கை - பேராசிரியர் மௌனகுரு. இடம் -கொழும்பு கலை இலக்கியப் பேரவை. காலம்- சனி(13.02.2010)  மாலை 6.30மணி. சனி மாலை(13.02.2010) பேராசிரியர் மௌனகுரு அவர்களின் 'இராவணேசன்' நாடகம் நடைபெறவிருக்கிறதென்று நண்பரொருவர் தகவல் சொன்னார். இருந்த எல்லா வேலைகளையும் புறந்தள்ளி விட்டேன். நாடகங்கள் என்றவுடன்  வரும் இந்த தொலைகாட்சி சீரியல்களையே கண் ஞாபகத்தில் கொண்டுவந்து முகத்தை அஷ்ட கோணலாக்குகிறது. மேடையமைப்பும், அரங்கமும்,அரிதாரம் பூசிக்கொண்ட பாத்திரங்களும், நேரடியான காட்சிகளூட்டும் கிளர்வும், எங்களுக்கு முன்னாள் ஒரு தலைமுறை இதனூடே வாழ்ந்து காட்டியிருக்கிற விடயமும் தெரிவதில்லை. மாற்றங்கள் மட்டுமே மாறிக் கொண்டிருந்தாலும்,எங்களின் முன்னோடிகள் வழி வந்த கலைப் பாதையை எடுத்தியம்புதலுக்கும்,அதற்கான வரவேற்புக்கும் இங்கு இடமில்லை எனும் போது அவற்றையெல்லாம் தாண்டி மனதில் எங்கேயோ வலிக்கிறது. எங்களுடைய காலத்தில், முழுமையான கூத்துக்கலையோ, அரங்காடல்ககளையோ  காண்பதற்கு காலமோ மாற்றமோ ஏதோவொன்று இடந்தரவில்லை .இருப்பினும் யாராவது எங்கள்  நலிந்து போன கலைகளை மறுபடியும்...

குழந்தைகளுக்கான நவீன தமிழ்ப் பெயர்கள்

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தல் எனும்போது, இவ்வளவு காலமும் வைத்த பெயர்கள் தமிழ்ப்பெயர்கள் இல்லையா எனும் கேள்வி எம்மில் பலருக்கு எழும். உங்கள் பெரும்பாலானோர் தமிழ்ப்பெயர் என்று எண்ணிக்கொண்டிருக்கும் உங்கள் பெயரை வட இந்தியக் கலப்பு,சமக்கிருத கலப்பு,ஐரோப்பிய,அரேபியக் கலப்புடனான பெயராக இனங்காணுவீர்கள்.  தமிழில் பெயர் சூட்டுவது இனத்துவேசம் உள்ள செயலா? :P இனத்தைக் கொண்டாடக் கூடிய செயல். மறத்தமிழன் என்று அடைமொழி இட்டுக்கொண்டு உலாவுவதை விட அழகான செயல் என்று எண்ணுகிறேன். இந்த அடையாளம் மிக அழகானது.  அண்மையில் நிறையப் பேர் தமிழில் குழந்தைகளூக்கான நவீனமான பெயர்கள் வேண்டும் என்று கேட்டிருந்தார்கள். தமிழில் பெயர்கள் பழமையானவையாக இருப்பது கூட இக்காலத்தோரின் தெரிவுக்குட்படாமைக்கு ஒரு காரணமாகும். பெண் குழந்தைகளுக்கான பெயர்கள் சிலவற்றை தொகுத்திருக்கிறேன்.சிலவற்றை கண்டும் பிடித்திருக்கிறேன். ( பிற்காலத்தேவைகளுக்கு ;)  ) வினைச்சொல் பெயர்கள் அஞ்சா ஆராதி ஆனந்தி  சலனி கோளறா இசி இனி தேயா மேதா வேயா வேகா மின்னு ...