ஒரு நிமிஷம் ............
"உறுபசி"
இயல்புக்கும், வெளித்தத்துவத்திற்கும் இடைப்பட்ட ஓர் வெளி நிலையில்
பயணத்தை ஆரம்பித்திருக்கிறது. ''உறுபசி'' எண்டால், அதீத பசி எண்டு அர்த்தம்.
Deep Hunger | Irremovable difference between presence and absence!
இப்பிடித் தான் ஏதாவது எழுதப்போறன்.இதை விசும்பின் எல்லைக்குள்ளும் அப்பாலும்
வைத்திருக்கும் பொறுப்பை உங்களிடம் கையளிக்கின்றேன். கோட்பாடுகளும், சுதாகரிப்புக்களும் நிறைந்த இந்த நிலை வாதத்தில், நானும் தேடலுடன் புறப்பட்டிருக்கிறேன்(உளட்டித் தள்ள :P)
பள்ளிக்கூடம் முடிச்ச கையோட வேலைவெட்டி இல்லாமல எதையாவது ஆவணப் படுத்த விரும்புகிறேன்.இனி,பொருத்தலும் இலமே ,
அன்புடன், நிலா
27 /09 /2009
கட்டமைக்கப்பட்ட கோட்பாடுகளும் தேடலை தீண்டாத் தோற்றப்புலமும் கொண்ட பழமைக்கும் வழமைக்குமிடையே தத்தளக்கும் இந்த பதிவுலகில் புதுமை படைக்க என் வரவேற்பு.
ReplyDeleteஇடுகையின் படமும் வசனங்களும் நீங்கள் புதுமை படைக்கப்போவதை கட்டியம் கூறி நிற்கின்றன்...
ReplyDeleteவாழ்த்துக்கள் தர்ஷாயணீ..
இந்த Word Verification இனை எடுத்துவிடுங்கள்.
பிரியமுடன்,
கௌபாய்மது
வணக்கம். வாழ்த்துக்கள். தங்கள் profile தகவல்கள் உண்மையானால், இளம் வயதில் தேர்ந்த அதிபனுவலோடு ;) வந்திருக்கிறீர்கள். (HTML இனை Hyper Text Markup Language என்பார்கள் :P )
ReplyDeleteதொடர்ந்து எழுதுங்கள்.
மயூரன்,
ReplyDeleteநானும் profile தகவல்களைப் பார்த்து ஒரு கணம் மௌனித்துவிட்டேன்.
முதன் முதல் உருவாக்கிய வலைப்பதிவென்பதால் வேறுயாராவது Profile இனைப் பார்த்து நகல் செய்யதிருக்கக் கூடும் என நினைத்திருந்தேன்.
பதிவுகளின் வீச்சம் எனது நினைப்பை தகர்த்துவிட்டிருக்கிறது.
புதியதொரு பதிவர்... நிறையச் சிந்தனைகளுடன்..