Skip to main content

Posts

காதல்

காதலைப்பற்றி கட்டாயம் இண்டைக்கு எழுதிப் போடனுமாம்ல. அதுவும் நிறையப் பேர் மெசேஜ் அனுப்பி வேற கேட்டிருக்கிதுகள். grrr அவன் மேட்ச் பாத்துக்கொண்டிருக்கிறான். நானும் அவனோட மேட்ச் பாத்துக்கொண்டிருக்கிறன். நான் மேட்ச் பாக்கிறத விட்டு கிட்டத்தட்ட பத்து வருஷங்களாச்சி. ஓ.எல் சோதினை மூட்டம் பள்ளிக்கூடம் மாறினது, கிரிக்கெட் நாட்டம் குறையக் காரணம். அப்பிடியே படிக்கிறதுக்காக விளையாட்டு மேட்ச் எல்லாத்தையும் நிப்பாட்டியாச்சு. ஆனா ரெண்டு நாளுக்கு முன்னமே இந்த முறை மேட்ச் பாக்கிற இண்டரெஸ்ட் வந்து தொத்தியிருக்கு. அது ஒரேவேளை காதலா இருக்கலாம். பின்னேரம் எனக்காக எங்கையாவது காலாற நடந்துவிட்டு, வெட்டிக்கதை கதைச்சிட்டு வருவோம்னு நினைக்கிறேன். காதலெண்டா என்ன எண்டு டெபினிஷன் எங்களுக்குள்ள இல்ல. அதுபாட்டுக்கு என்னவோ ஒரு வஸ்து. காதலிக்கிறம் காதலிக்கப்படுகிறம் எண்டு உணரத்தொடங்கிறது ஒரு அற்புதமான தருணம். எம்மை யாருக்காவது பிடித்துக்கொண்டால் இவ்வளவு இதமாக இருக்குமா என்றால் அது காதலாக இருந்தால் மட்டுமே சாத்தியம். யாரோ ஒருவரோ, சிலருடனோ மட்டும் எது செய்தாலும் அதை உற்றுப் பார்க்கும் படியாக இருக்கும்

கண்ணுக்கு லென்ஸ்

கண்ணுக்கு லென்ஸ் வைத்துக்கொள்வது எந்தளவு சுகாதாரமான, ஆரோக்கியமான விடயம் என்பதைப் பற்றி பார்க்க முன்னர், பன்னிரண்டு வயது முதல் கண்ணாடி போட்டு, இற்றைக்கு பன்ரெண்டு வருசமா முக்குக் கண்ணாடியுடன் அல்லல்ப்பட்டு, லோல்ப்பட்டு, குப்பைகொட்டிய எனக்கு லென்ஸ் முதலில் பயங்கர ஆறுதலாகவும் பரம சவுகரியமாகவும் இருந்தது. கண்ணுக்கு லென்ஸ் போட்டுக் கொள்ள முதல், கிட்டத்தட்ட எட்டு வகையான கண்ணாடி மோஸ்தர்களை, பன்னிரண்டு வருடங்களுக்குள் மாற்றி விட்டேன். மோஸ்தர்களுக்காக மட்டுமல்ல,கண்ணின் பார்வைத்திறன் கண்ணாடி போட்டுக் கொண்டு வர வரக் குறைந்து கொண்டே போனது. ஒரு கட்டத்தில் பத்தடி தூரத்தில் நடந்து வருபவர் யார் என்று தெரியும், அவருக்கு மூக்கு புடைப்பாக இருக்கிறதா,சப்பையாக இருக்கிறதா என்கிற அனுமானம் கண்ணினால் எடுக்க முடியவில்லை. மிகக் கஷ்டமாகவிருக்கும் அந்த மாதிரியான சந்தர்ப்பங்களில். இப்பவே இப்படி எண்டா நாப்பது வயசாகிற போது கண்ணு மொத்தமாக நொள்ளையாக போய்விடும் என்கிறதாய்ப்படும். முந்தி ஒரு காலத்தில் நாப்பது வயது வரும் போது செத்துவிட வேண்டும் என்று நினைத்திருந்தேன், அதைத்தான், கண்பார்வையில் கோளாறு வரும் போது செய்ய

உணவு புசித்தல்

சாப்பாடு என்பது ஒரு வகை நிறைவு. அதன் ஒவ்வொரு கோணமும் திருப்தியின் பால் நிறைந்தது. உணவின் மீதானதும், உடலின் மீதானதும் கொண்டாட்டமென்பது ஒவ்வொரு மனிதனிற்கும் தேவையானது. அது சுகதேகியான வாழ்க்கையின் ஆரம்பத்திற்கும், வாழ்க்கை மீதான பிடிப்பிற்கும் வழிகோலும். உணவு தொடர்பாக நிறைய சேகரிக்கத் தொடங்கி இருக்கிறேன். நல்ல உணவுகளை தேடிப்புசிக்க வேண்டும் என்கிற ஆவல் ஏற்பட்டிருக்கிறது. ஒவ்வொரு முறையும் ஒவ்வொன்றை ரசிக்க வேண்டும். வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் சுகிக்க உணவென்பது ஒரு திறவுகோல். உணவு மீதான தடைகளையும், வர்க்க உணவு நிலையையும், பணத்தின் பண்பு நிறைந்த உணவையும், பணத்தின் பணபல்லாத உணவையும், பணவழி உணவையும், உணவல்லாத நிலையையும் கூடக்கதைக்கலாம். உணவு புசித்தல் ஒரு ஆடம்பரம் அல்ல. தேவைக்கு மேலதிகமில்லாத, உணவு விரயமல்லாத, விருப்ப உணவை உண்ணல் ஒரு ஆரோக்கியமான செயற்பாடு.   உடை அணிதல் பற்றிப்பேசும் போது உடை தேவையாக இருப்பவரைப்பற்றிப் பேசுதல் இன்றியமையாதது; அவ்வாறே உணவின் தேவையும், அனைவருக்குமான உணவு பற்றிய கருத்தும். இருப்பினும் விருப்ப உணவும் அதன் குணகமும் தனிமனித விழுமியம் சார்ந்த ஒன்று.

The Book Bucket Challenge

Book Bucket Challenge க்கு அழைத்த  Thava Sajitharan   அண்ணாக்கு நன்றி.   (இந்த அண்ணாக்கு நன்றி, அந்த அண்ணாக்கு நன்றி எண்டு எழுதத் தொடங்கின 2009 வலைப்பதிவர் காலகட்டத்தை நினைச்சுச் சிரிக்கிறன்.  நான் ஒரு புத்தப்புழுவாய், புத்தகத்தின் குற்றுப்புள்ளிகளாய் இருந்த காலம் ஒன்றுள்ளது. அது இற்றைக்கு சுமார் பத்து வருடங்களுக்கும் முந்தியது. புத்தகம் வாசிக்காட்டி, ஒருவேளை சாப்பாடு இறங்காத, ஜோல்னாப்பை( அதென்னமோ பை, இந்திய எழுத்தாளர்கள் புகுத்திவிட்ட சில பாசைகள், அது என்னெண்டு தெரியாட்டிக்கும், வாய்க்குள்ளாற இருந்து போகாது) ஜோல்னாப்பையை கொழுவிக்கொண்டு,வாரி இழுக்காத தலையுடன் புரட்சி வெடிக்கக் காத்திருக்கிற ஒரு "மனுசனாய்" பாவனை செய்து கொண்டு, (எவ்வளவு கேவலமான ஸ்ட்ரக்ரரைசேஷன்) குழந்தைமைக்கும், சமுகவியலுக்குமிடையில் அக்கபோரடைந்திருக்கிறேன்/ பல பேரை அக்கபோரடைய விட்டிருக்கிறேன். ஏனென்றால் அந்தக்கால கட்டத்தின் வயது 11,12,13,14.வயதுக்கும்,அனுபவத்திற்கும் நிறையத் தொடர்பிருக்கிறதுறு நம்புகிறேன். 2004 ஆம் ஆண்டுடன் என்னுடைய தீவிர புத்தகத்தேடல் வாசிப்புக் குறைகிறது. நாளொன்றுக்கு ஒரு புத்தக

தேடு பொறி

கடந்த மூன்று நாட்களாக இணையத்தில் குறித்த ஒரு விடயத்தைப் பற்றியே அதிகளவில் தேடிக்கொண்டிருந்தேன். விடயம் தொடர்பான தரவுகள், அமைப்புகள்,  புள்ளிவிபரங்கள் ....இதர இதர... இணையத்தில் தேடுபொறி இயங்கும் போதெல்லாம் பேஸ்புக்கிலும் இருந்தேன்.  (எப்பையுமே இருக்கிற விசயம் தானே) பேஸ்புக், எனக்கு நன்மை செய்வதாக நினைத்துக்கொண்டு, நான் தேடும் விடயங்கள் தொடர்பான விளம்பரங்களை முதல் நாள் எனது டைம்லைனில் ஓடவிட்டது. அடுத்த நாள் லைக் பேஜ்களை சிபாரிசு செய்யத் தொடங்கியது. நேற்றிரவிலிருந்து டைம்லைன் மு ழுவதுமாக எனது விடயப்பரப்பை பதிந்து வத்திருக்கிறது. எரிச்சலைத் தரகூடிய செயலாக இது எனக்கிருந்தது. இத்தரைக்கும் பேஸ்புக்கிற்கும், நான் தேடும் விடயப்பரப்பிற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை. நான் பேஸ்புக் வழியாக தேடுபொறி எதையும் அணுகவும் இல்லை.  தேடு தளங்கள் தரவுகளை விற்பனை செய்வது பற்றியும்,சில social media plugging, sign in ஆக இருக்கும் போது கணக்காளரின் விபரங்கள்,தரவுகளை வகைக்குறிப்பதும் ஏற்கனவே தெரிந்தது தான். இருப்பினும் Gmail,yahoo,hotmail தளங்கள் ஆரம்பத்தில் அதிகளவு விளம்பரங்களை மின்னஞ்சல் தரவுகளிலிருந

பெண் வெறுப்பு நோய்

அண்மையில் பரவி வரும் பெண் வெறுப்பு நோய் சம்பந்தமானது,  பெண்கள் மீதான இயலாமையை நினைத்துக் குமுறிக் குமுறி எல்லா இடங்களிலும் தமது தலையை பிய்த்துக்கொள்வதும், தாங்கொணா வயிற்றுளைவில் குடலேறிக் கிடப்பவர்களையும் பார்க்க முடிகிறது. மிக நல்லது.மீண்டும் மீண்டும் உங்களது நிலைப்பாட்டினை அருவருப்பு சார்ந்ததாகவே நிரூபித்து வருகிறீர்கள். நீங்கள் நிரூபிக்கவும் தேவையில்லை, உங்களது இயல்பான குணாதிசயங்கள் அதுவாகவே வெளிவருகின்றது. எங்களுக்கு இது வேடிக்கையின்றி ஒரு பொருட் டும் இல்லை.  பெண்ணுடலை மோப்பம்பிடித்துப் பார்க்கிற பாலியல் வறுமையும், வசை வறுமையும் கொண்ட கூட்டங்களே, எழுத்தையும், திறன்பாட்டினையும் கூட உங்களால் அதைத்தாண்டிப் பார்க்க முடியவில்லை. உங்கள் மன நோய்களுக்கு தக்க மருந்தினை உங்கள் வயதான காலங்களில் உங்களிடம் தர வேண்டாமே என்று பார்க்கிறேன்.  எனக்குத்தெரிந்து எந்தப் பெண்ணும் பிச்சை வாங்கிப் புத்தகம் வெளியிடுவதில்லை. எந்த ஆணினுடைய கையாலாகாததனத்தையும் பார்த்துப் பயந்ததும் இல்லை ;இந்தளவு நோய்க்கூறும் இனங்காணப்படவில்லை.  பெண்ணியலாளர்கள் , பெண் எழுத்தாளர்கள், பெண் களப்பணியா

Painting caption: சிவப்புப் பெண்கள் | Women in Red

நீண்ட பயணம் போக வேண்டும். கால்கள் எங்கேனும் ஓய்வைப்பற்றி நினையா வண்ணம், நீண்ட பயணம் போக வேண்டும். இருளை மீறி இரண்டோ மூன்றோ அடி எடுக்க வேண்டும். பிரிந்த சாலையில் இதுவோ அதுவோ எனத் தெரிய வேண்டும். நாம் நடப்பதைப் பற்றி யாரேனும் வேறொரு கோணமாய் சொல்ல முன் நீண்ட பயணம் போக வேண்டும்! பழங்கதை ஒன்றின் விளிம்பில் அவை அடிபடு முன்னும் இனிமேல் இல்லாத என்றொன்று வருவதன் முன்னும் நீண்ட பயணம் போக வேண்டும்! விழிகள் மெல்ல சொருகும் முன்னும், விடியும் என்பது சலனம் எனுமுன், மறுப்போம் என்று மறுதலை வரு முன் நீண்ட பயணம் போக வேண்டும்! வலிய காற்றின் சுழலில் சுற்றும், இறந்த இலைகள் விழுபடு முன்னும், மறுப்பது என்பது சமரசமாயினும், எப்புண்ணும் பழுதுபட முன்னும் நீண்ட பயணம் போக வேண்டும். நீண்ட தூரம் போக வேண்டும், விலகியோ,சேர்ந்தோ நாம் நீண்ட தூரம் போக வேண்டும். நிலா-