Skip to main content

Posts

Showing posts with the label இலக்கியம்

குழந்தைகளுக்காக எழுதுதல்.

இலக்கியங்கள்   மர்மங்களாக பெரியவர்களுக்கு இருக்கும் சமயம் , குழந்தைகளுக்கு அவை இனிப்புகளைப் போல அன்றன்றே தீர்ந்து விடுபவையாக இருக்கின்றது. எல்லாக் காலங்களிலும் குழந்தைகள் தாங்கள் வளர்பவர்கள்   என்பதை   அடிப்படையாக   வைத்துச்   செயல்ப்படுவதில்லை என்பதுவே இதற்கான   மேலோட்டமான காரணமாகும். குழந்தைகள்       தமக்கான   சமுகத்தை   தம்மூடாகவோ ,         பெரியவர்கள்   ஊடாகவா   பார்க்கிறார்கள்   என்பதில்   குழந்தைகளுக்கான   இலக்கியத்தின் தேவை   பெரியவர்களிடம்   நிறைந்து   கிடக்கின்றது. குழந்தைகள் எதனைத் தேடுகிறார்கள் என்பதை பெரியவர்களால் ஒரு போதும் தீர்மானிக்க முடிவதில்லை. அவர்கள் குழந்தையாக இருந்த போதும் , அவர்கள் குழந்தைகள் , குழந்தைகளாக இருக்கும் போததுமான இரு பெரும் தேடல்கள் எப்போதும் ஒன்றாக இருக்கிறதில்லை. சமுகத்தின் வளர்ச்சியும் , சமுகத்தில் குழந்தைகளைப் பார்க்கும் கோணமும் , வர்க்கங்களின் வித்தியாசமும் ஒரு குழந்தையின் தேடலை வேறுபடுத்தும். இன்று வரைக்கும்   வன்னியில் குழந்தைகள் ஒன்று   சேர்ந்து   ' அட்டலங்க்காய் புட்டலங்க்காய் ' விளையாடுவதையும் , கொழும்பில் எனது பெ