Skip to main content

The Book Bucket Challenge

Book Bucket Challenge க்கு அழைத்த Thava Sajitharan அண்ணாக்கு நன்றி. (இந்த அண்ணாக்கு நன்றி, அந்த அண்ணாக்கு நன்றி எண்டு எழுதத் தொடங்கின 2009 வலைப்பதிவர் காலகட்டத்தை நினைச்சுச் சிரிக்கிறன். 

நான் ஒரு புத்தப்புழுவாய், புத்தகத்தின் குற்றுப்புள்ளிகளாய் இருந்த காலம் ஒன்றுள்ளது. அது இற்றைக்கு சுமார் பத்து வருடங்களுக்கும் முந்தியது. புத்தகம் வாசிக்காட்டி, ஒருவேளை சாப்பாடு இறங்காத, ஜோல்னாப்பை( அதென்னமோ பை, இந்திய எழுத்தாளர்கள் புகுத்திவிட்ட சில பாசைகள், அது என்னெண்டு தெரியாட்டிக்கும், வாய்க்குள்ளாற இருந்து போகாது) ஜோல்னாப்பையை கொழுவிக்கொண்டு,வாரி இழுக்காத தலையுடன் புரட்சி வெடிக்கக் காத்திருக்கிற ஒரு "மனுசனாய்" பாவனை செய்து கொண்டு, (எவ்வளவு கேவலமான ஸ்ட்ரக்ரரைசேஷன்) குழந்தைமைக்கும், சமுகவியலுக்குமிடையில் அக்கபோரடைந்திருக்கிறேன்/ பல பேரை அக்கபோரடைய விட்டிருக்கிறேன். ஏனென்றால் அந்தக்கால கட்டத்தின் வயது 11,12,13,14.வயதுக்கும்,அனுபவத்திற்கும் நிறையத் தொடர்பிருக்கிறதுறு நம்புகிறேன்.

2004 ஆம் ஆண்டுடன் என்னுடைய தீவிர புத்தகத்தேடல் வாசிப்புக் குறைகிறது. நாளொன்றுக்கு ஒரு புத்தகம் இல்லாவிட்டால், சுவாசிக்கத் தடுமாறுவது குறைந்தது. கண்டி-கொழும்பு மாற்றம், பாடசாலைக்கல்வி, ஹோம்வேர்க் சுமையாக இருக்கலாம் ( எந்தக்காலத்தில ஹோம்வேர்க் செய்திருக்கிறம்) 2004 ற்குப் பிறகு எழுத்தை வாசிக்கிறதை விட, செயலில் ஒரு நம்பிக்கை இருந்தது. அசைவியக்கங்கள் மீது நம்பிக்கை வந்த கால கட்டம்.


இது முத்திப்போய் 2009,2010 காலத்தில , நான் ரொம்ப அசைஞ்சிட்டேன் அதுக்குப் பிறகு அசையாமக் கொஞ்சக்காலம், பிறகு பல்கலைக்கழகம். கம்பஸ் தந்த நல்ல பழக்க வழக்கங்களால இப்ப புத்தகத்தைத் திறந்தா நித்தா வாற நல்ல பழக்கம் எனக்கேற்பட்டிருக்கு. அது புத்தக வாசிப்பை விட சுகானுபவம். புத்தகத்தின் நடுப்பக்கத்தை மணந்து, ஆச்சும்ம்ம் தும்மிக்கொண்டே, மூக்கை உறிஞ்சி, வீஸிங் வரப்பண்னி, ஐஞ்சு நாள் எக்ஸ்றாவாய் மட்டமடிப்பது.

இன்ன புத்தகங்கள் தான் என்னை மாற்றிப்போடவை என்று சொல்ல மாட்டேன்.இவற்றை வாசிச்சதால தான் இப்பிடியானேன்(எப்பிடி??? ) என்றும் சொல்ல மாட்டேன். ஆனா இந்தப் புத்தகங்களை வாசிக்க முன்னமே, இவற்றின் பால் ஈடுபாடு இருந்ததென்பதையும், அதனால்த்தான் அந்த வயதில் இவற்றை தேடியிருக்கிறேன் என்றும் என்னால் அடித்துக் கூற முடியும். இவற்றை வாசிச்சதால, கோகுலம்,மாயாவிக்கதைகள், கார்டூன் சீரிஸ் போன்றவற்றை நிறைய மிஸ் பண்ணினதாக உணர்கிறேன். நான் முதன் முதலில் சினிமாப்படம் பாத்தது என்னுடைய 14வது வயதில். காணாததற்கு நான் மூண்டாம் ஆண்டு வரைக்கும் பள்ளிக் கூடத்தில படிச்சது வேற இல்லையா( ufff போர்ச்சூழல்)


ஆகவே, இப்ப என்ன செய்கிறேன் எண்டு நீங்க கேப்பிங்களா இருந்தா,  ஆங்க்க்க்...அதே தான். நிறையக் கார்ட்டூன், வேதாளக் கதைகள், பேராசிரியர். ஏ.சோதி, நண்டுவும்சிண்டுவும், குட்டி இளவரசன், கம்பியூட்டர் கேம்ஸ்,நேசரி ரைம்ஸ்,அனிமேசன் மூவீஸ்,தலைவர் படம் என்று வாழ்க்கையை என்ஜாய் பண்ணுறேன்.

இப்பிடித் தலைகீழான வாழ்க்கை வாழ்ந்த நான் பல இடங்களில தலை கீழா நடந்துகொள்ள வேண்டி இருக்கு

லெம்மீ கம் டூ த போயின்ற்...
நான் ஆசையாசையா, உச்சுக்கொட்டிப் படித்தவை,படித்த ஆண்டு வாரியா...
1.யாழ் நூல்- விபுலானந்தர் -2003
2.கம்பெரலிய(கிராமப் பிறழ்வு) -மார்டின் விக்கமசிங்க (Tamil)-2001
3.மாகாவம்சம் -William Heinger (English) -2002
4.History of mathematics-அதொரு பண்டைய கணிதவியல்த் தொகுப்பு (English)- 2003
5.தொல்காப்பியம்-2002-2003
6.முத்தொள்ளாயிரம்-2003
7.The Communist Manifesto- கார்ல் மாக்ஸ் (Tamil)-2002
8.மூலதனம்-கார்ல் மார்க்ஸ்+ ஏங்கெல்ஸ் (Tamil- By Thiyagu)-2002
9.The Poverty of Philosophy- கார்ல் மார்க்ஸ் (English)-2004
10.The Code Book (The Science of Secrecy from Ancient Egypt to Quantum Cryptography) -Simmon singh- 2003
11.வேதங்களும் உபநிடதங்களும். (சமக்கிருதம்,ஆங்கிலம் சக சிலன தமிழ் மொழிபெயற்பு)-2002-2003
12.பைபிள் புதிய ஏற்பாடு+பழைய ஏற்பாடு+ மனு சாத்திரம்+குர் ஆன் (மொழி பெயர்ப்பு+ The Dhamsakbad) 2002-2003
13.சே.கணேசலிங்கன் புத்தகங்கள் (பேர் இல்ல) - சே.கணேசலிங்கன்-2000-2001
14.The Black Magic - Aldon Seldon ( ஆமா,அதே பிளாக் மேஜிக் தானுங்....)- 2003
15.Origin of Species- Charles Darwin-2002
16.மழை(பசி, நாடகத்தொகுப்பு)- இந்திரா பார்த்தசாரதி-2002
17.சிவரமணி-(நாலைஞ்சு கவிதைகள்)
18.Two Cities -Charles Dickens
19. History of Feminism- அது ஒரு தொகுப்பு, மொழிபெயற்பு ஆங்கிலம் -2003,2004 (ஆமா ரெண்டு வருசமா வெச்சு வெச்சு வாசிச்சேன் )
20. Alice In Wonderland's Secret Ingredient- Lewis Carroll Known as Caroll Dogson- 2004

சரி,யாரையாவது கோர்த்து விடோணூமெண்டா, 

இவர்களை அழைக்கிறேன்.

Comments

Popular posts from this blog

சாமகானமும் காம்போதியும்

முருகையன் ஒரு மொழிபெயர்ப்புச் செய்தார். மொழிபெயர்ப்பு எண்டும் சொல்ல முடியாது,சாதுவா மொழிபெயர்ப்பும்,திறமையான கற்பனையும் போட்டு செய்யுள் வடிவத்தில, இளநலம்! என்ன இளநலமா?ஹையா கிளுகிளுப்பான கதை வரப்போகுது. குமாரசம்பவம் (ஸாரி வேற கண்டென்ட் எண்டு நினைக்கப்படாது, ஐ ஆம் வெரி டீசன்ட்) காளிதாசன் குமாரசம்பவத்தில எழுதின அதே கதையை தமிழில தந்தவர். அதில தான் இந்தக் கதை வருகுது.  சாமகானம் சாமகானம் எண்டு ஒண்டு சொல்லக் கேட்டிருப்பம். “சாமகானம் பாடினான்” எண்டு நாலாம் வகுப்புச் சமய பாட புத்தகத்தில ஒரு பாடம் இருக்கு. பத்துத் தலையும், கையில ஒரு தலையுமாக் கணக்குப் பிழையா மொறாயஸ் கீறின இராவணனிண்ட மீசை வெச்ச படம் இருக்கும், இப்ப ஞாபகம் வந்துட்டுதா? அந்தக் காலத்திலேயே தலைகளிண்ட கணக்கை எண்ணிப் பாத்தனாங்கள் ஆக்கும். (தலைக்கணக்கு முக்கியம் அமைச்சரே) இப்ப சாமகானத்தைப்பற்றிப் பாப்பம். காளிதாசன் குமாரசம்பவம் எழுதேக்க, சும்மா கற்பனைகுதிரையை காட்டாற்று வெள்ளம் போல பறக்க விடுறேர்.  மிஸ்டர் சிவனும் மிசஸ் உமாவும் கலியாணமான புதிசில, (ஏன் கல்யாணமான பழசில யாரும் வெளிய போறதில்ல எண்டு நெடுங்காலமா டவுட்) சும்மா வெளிய வெளிக்

இராவணேசன் ; Maunaguru's 'Ravanesan'

நெறியாள்கை - பேராசிரியர் மௌனகுரு. இடம் -கொழும்பு கலை இலக்கியப் பேரவை. காலம்- சனி(13.02.2010)  மாலை 6.30மணி. சனி மாலை(13.02.2010) பேராசிரியர் மௌனகுரு அவர்களின் 'இராவணேசன்' நாடகம் நடைபெறவிருக்கிறதென்று நண்பரொருவர் தகவல் சொன்னார். இருந்த எல்லா வேலைகளையும் புறந்தள்ளி விட்டேன். நாடகங்கள் என்றவுடன்  வரும் இந்த தொலைகாட்சி சீரியல்களையே கண் ஞாபகத்தில் கொண்டுவந்து முகத்தை அஷ்ட கோணலாக்குகிறது. மேடையமைப்பும், அரங்கமும்,அரிதாரம் பூசிக்கொண்ட பாத்திரங்களும், நேரடியான காட்சிகளூட்டும் கிளர்வும், எங்களுக்கு முன்னாள் ஒரு தலைமுறை இதனூடே வாழ்ந்து காட்டியிருக்கிற விடயமும் தெரிவதில்லை. மாற்றங்கள் மட்டுமே மாறிக் கொண்டிருந்தாலும்,எங்களின் முன்னோடிகள் வழி வந்த கலைப் பாதையை எடுத்தியம்புதலுக்கும்,அதற்கான வரவேற்புக்கும் இங்கு இடமில்லை எனும் போது அவற்றையெல்லாம் தாண்டி மனதில் எங்கேயோ வலிக்கிறது. எங்களுடைய காலத்தில், முழுமையான கூத்துக்கலையோ, அரங்காடல்ககளையோ  காண்பதற்கு காலமோ மாற்றமோ ஏதோவொன்று இடந்தரவில்லை .இருப்பினும் யாராவது எங்கள்  நலிந்து போன கலைகளை மறுபடியும் இளஞ்சமுதாயத்திட்கு க

குழந்தைகளுக்கான நவீன தமிழ்ப் பெயர்கள்

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தல் எனும்போது, இவ்வளவு காலமும் வைத்த பெயர்கள் தமிழ்ப்பெயர்கள் இல்லையா எனும் கேள்வி எம்மில் பலருக்கு எழும். உங்கள் பெரும்பாலானோர் தமிழ்ப்பெயர் என்று எண்ணிக்கொண்டிருக்கும் உங்கள் பெயரை வட இந்தியக் கலப்பு,சமக்கிருத கலப்பு,ஐரோப்பிய,அரேபியக் கலப்புடனான பெயராக இனங்காணுவீர்கள்.  தமிழில் பெயர் சூட்டுவது இனத்துவேசம் உள்ள செயலா? :P இனத்தைக் கொண்டாடக் கூடிய செயல். மறத்தமிழன் என்று அடைமொழி இட்டுக்கொண்டு உலாவுவதை விட அழகான செயல் என்று எண்ணுகிறேன். இந்த அடையாளம் மிக அழகானது.  அண்மையில் நிறையப் பேர் தமிழில் குழந்தைகளூக்கான நவீனமான பெயர்கள் வேண்டும் என்று கேட்டிருந்தார்கள். தமிழில் பெயர்கள் பழமையானவையாக இருப்பது கூட இக்காலத்தோரின் தெரிவுக்குட்படாமைக்கு ஒரு காரணமாகும். பெண் குழந்தைகளுக்கான பெயர்கள் சிலவற்றை தொகுத்திருக்கிறேன்.சிலவற்றை கண்டும் பிடித்திருக்கிறேன். ( பிற்காலத்தேவைகளுக்கு ;)  ) வினைச்சொல் பெயர்கள் அஞ்சா ஆராதி ஆனந்தி  சலனி கோளறா இசி இனி தேயா மேதா வேயா வேகா மின்னு மிதவா தெகிழா நெகி