Skip to main content

தேடு பொறி

கடந்த மூன்று நாட்களாக இணையத்தில் குறித்த ஒரு விடயத்தைப் பற்றியே அதிகளவில் தேடிக்கொண்டிருந்தேன். விடயம் தொடர்பான தரவுகள், அமைப்புகள், புள்ளிவிபரங்கள் ....இதர இதர...


இணையத்தில் தேடுபொறி இயங்கும் போதெல்லாம் பேஸ்புக்கிலும் இருந்தேன். (எப்பையுமே இருக்கிற விசயம் தானே) பேஸ்புக், எனக்கு நன்மை செய்வதாக நினைத்துக்கொண்டு, நான் தேடும் விடயங்கள் தொடர்பான விளம்பரங்களை முதல் நாள் எனது டைம்லைனில் ஓடவிட்டது. அடுத்த நாள் லைக் பேஜ்களை சிபாரிசு செய்யத் தொடங்கியது. நேற்றிரவிலிருந்து டைம்லைன் முழுவதுமாக எனது விடயப்பரப்பை பதிந்து வத்திருக்கிறது. எரிச்சலைத் தரகூடிய செயலாக இது எனக்கிருந்தது.


இத்தரைக்கும் பேஸ்புக்கிற்கும், நான் தேடும் விடயப்பரப்பிற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை. நான் பேஸ்புக் வழியாக தேடுபொறி எதையும் அணுகவும் இல்லை. தேடு தளங்கள் தரவுகளை விற்பனை செய்வது பற்றியும்,சில social media plugging, sign in ஆக இருக்கும் போது கணக்காளரின் விபரங்கள்,தரவுகளை வகைக்குறிப்பதும் ஏற்கனவே தெரிந்தது தான். இருப்பினும் Gmail,yahoo,hotmail தளங்கள் ஆரம்பத்தில் அதிகளவு விளம்பரங்களை மின்னஞ்சல் தரவுகளிலிருந்து தந்துகொண்டிருந்தன. 2011 காலகட்டத்தில் தனிமனித தரவுப் பேணுகைச் சட்டம் உலகலாவிய ரீதியில், WikiLeaks இன் news leaks உடன் துரிதமாக கவனத்தில் கொள்ளப்பட்டு இவை குறைக்கப்பட்டன.

விளம்பரங்களை, நீங்கள் நிற்கும் இடம் ஈறாகக் கொண்டு,யாருடன் இருக்கிறீர்கள் என்பதை வைத்து உங்கள் தேவைகளை தீர்மானிக்கிற எரிச்சலடைய வைக்கும் வேலையை Facebook அண்மைக்காலமாக அதிகளவில் செய்து வருகிறது. விளம்பரங்களில், மீள ஒளிக்கும்/ஒலிக்கும்/isolated flashஆக வரும் இயல்புகள், மனித மூளையின் பல ஆண்டுகள் பேணிப்பாதுகாக்கப்பட்டு, தேவைகள், சேவைகள் தொடர்பான அழுத்தம் வரும் போது நினைவில் வரும் வண்ணம் தயார்ப்படுத்தப்பட்ட அமைப்பாகும். தற்சமயம் தேவையில்லை எண்று தவிர்க்கும் விளம்பரத்தை தேவை வரும் போது, துரித மீட்டல் செய்யக் கூடிய தன்மை மனித மூளைக்கும், விளம்பரத்தின் அமைப்பிற்கும் உண்டு. இதுவே நுகர்வுக்கலாசாரத்தின் இராட்சத வளர்ச்சின் ஆதாரம். அவ்வாறே விளம்பரங்கள்/நுகர்வுப்பொருட்கள் நமது தேவையை தீர்மானிக்க்கத்தொடங்குகின்றன.

கடந்த மூன்று நாட்களாக டைம்லைனில் எனக்குத் தேவையாக இருக்கும் பதிவுகள் அல்லாது, Facebook, எனக்குத்தேவைப்படும் என நிச்சயத்திருக்கும் பதிவுகளையும், தொடுப்புக்களையும்,விளம்பரங்களையும் பார்த்து சலிப்புற்ற நான், பேஸ்புக்கின் நடவடிக்கையை மாற்றத் தீர்மானித்தேன்.


இரவிலிருந்து இப்போது வரை செய்துகொண்டிருக்கும் வேலைகளுக்கு நடுவில் பேஸ்புக் தளத்தை தகர்ப்பது சம்பந்தமான சிலவற்றை வேண்டுமென்றே பார்த்துக்கொண்டிருந்தேன். பகல் ஒரு மணிக்கு, பேஸ்புக் அதுவாக லொக் அவுட் ஆகி, நீங்கள் உத்தியோகபூர்வ பயனாளர் என்பதை கடவுச்சொல்லை சரிபார்த்து உறுதிப்படுத்தவும் என்டு பம்முது.... :P 

Comments

Popular posts from this blog

சாமகானமும் காம்போதியும்

முருகையன் ஒரு மொழிபெயர்ப்புச் செய்தார். மொழிபெயர்ப்பு எண்டும் சொல்ல முடியாது,சாதுவா மொழிபெயர்ப்பும்,திறமையான கற்பனையும் போட்டு செய்யுள் வடிவத்தில, இளநலம்! என்ன இளநலமா?ஹையா கிளுகிளுப்பான கதை வரப்போகுது. குமாரசம்பவம் (ஸாரி வேற கண்டென்ட் எண்டு நினைக்கப்படாது, ஐ ஆம் வெரி டீசன்ட்) காளிதாசன் குமாரசம்பவத்தில எழுதின அதே கதையை தமிழில தந்தவர். அதில தான் இந்தக் கதை வருகுது.  சாமகானம் சாமகானம் எண்டு ஒண்டு சொல்லக் கேட்டிருப்பம். “சாமகானம் பாடினான்” எண்டு நாலாம் வகுப்புச் சமய பாட புத்தகத்தில ஒரு பாடம் இருக்கு. பத்துத் தலையும், கையில ஒரு தலையுமாக் கணக்குப் பிழையா மொறாயஸ் கீறின இராவணனிண்ட மீசை வெச்ச படம் இருக்கும், இப்ப ஞாபகம் வந்துட்டுதா? அந்தக் காலத்திலேயே தலைகளிண்ட கணக்கை எண்ணிப் பாத்தனாங்கள் ஆக்கும். (தலைக்கணக்கு முக்கியம் அமைச்சரே) இப்ப சாமகானத்தைப்பற்றிப் பாப்பம். காளிதாசன் குமாரசம்பவம் எழுதேக்க, சும்மா கற்பனைகுதிரையை காட்டாற்று வெள்ளம் போல பறக்க விடுறேர்.  மிஸ்டர் சிவனும் மிசஸ் உமாவும் கலியாணமான புதிசில, (ஏன் கல்யாணமான பழசில யாரும் வெளிய போறதில்ல எண்டு நெடுங்காலமா டவுட்) சும்மா வெளிய வெளிக்

இராவணேசன் ; Maunaguru's 'Ravanesan'

நெறியாள்கை - பேராசிரியர் மௌனகுரு. இடம் -கொழும்பு கலை இலக்கியப் பேரவை. காலம்- சனி(13.02.2010)  மாலை 6.30மணி. சனி மாலை(13.02.2010) பேராசிரியர் மௌனகுரு அவர்களின் 'இராவணேசன்' நாடகம் நடைபெறவிருக்கிறதென்று நண்பரொருவர் தகவல் சொன்னார். இருந்த எல்லா வேலைகளையும் புறந்தள்ளி விட்டேன். நாடகங்கள் என்றவுடன்  வரும் இந்த தொலைகாட்சி சீரியல்களையே கண் ஞாபகத்தில் கொண்டுவந்து முகத்தை அஷ்ட கோணலாக்குகிறது. மேடையமைப்பும், அரங்கமும்,அரிதாரம் பூசிக்கொண்ட பாத்திரங்களும், நேரடியான காட்சிகளூட்டும் கிளர்வும், எங்களுக்கு முன்னாள் ஒரு தலைமுறை இதனூடே வாழ்ந்து காட்டியிருக்கிற விடயமும் தெரிவதில்லை. மாற்றங்கள் மட்டுமே மாறிக் கொண்டிருந்தாலும்,எங்களின் முன்னோடிகள் வழி வந்த கலைப் பாதையை எடுத்தியம்புதலுக்கும்,அதற்கான வரவேற்புக்கும் இங்கு இடமில்லை எனும் போது அவற்றையெல்லாம் தாண்டி மனதில் எங்கேயோ வலிக்கிறது. எங்களுடைய காலத்தில், முழுமையான கூத்துக்கலையோ, அரங்காடல்ககளையோ  காண்பதற்கு காலமோ மாற்றமோ ஏதோவொன்று இடந்தரவில்லை .இருப்பினும் யாராவது எங்கள்  நலிந்து போன கலைகளை மறுபடியும் இளஞ்சமுதாயத்திட்கு க

குழந்தைகளுக்கான நவீன தமிழ்ப் பெயர்கள்

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தல் எனும்போது, இவ்வளவு காலமும் வைத்த பெயர்கள் தமிழ்ப்பெயர்கள் இல்லையா எனும் கேள்வி எம்மில் பலருக்கு எழும். உங்கள் பெரும்பாலானோர் தமிழ்ப்பெயர் என்று எண்ணிக்கொண்டிருக்கும் உங்கள் பெயரை வட இந்தியக் கலப்பு,சமக்கிருத கலப்பு,ஐரோப்பிய,அரேபியக் கலப்புடனான பெயராக இனங்காணுவீர்கள்.  தமிழில் பெயர் சூட்டுவது இனத்துவேசம் உள்ள செயலா? :P இனத்தைக் கொண்டாடக் கூடிய செயல். மறத்தமிழன் என்று அடைமொழி இட்டுக்கொண்டு உலாவுவதை விட அழகான செயல் என்று எண்ணுகிறேன். இந்த அடையாளம் மிக அழகானது.  அண்மையில் நிறையப் பேர் தமிழில் குழந்தைகளூக்கான நவீனமான பெயர்கள் வேண்டும் என்று கேட்டிருந்தார்கள். தமிழில் பெயர்கள் பழமையானவையாக இருப்பது கூட இக்காலத்தோரின் தெரிவுக்குட்படாமைக்கு ஒரு காரணமாகும். பெண் குழந்தைகளுக்கான பெயர்கள் சிலவற்றை தொகுத்திருக்கிறேன்.சிலவற்றை கண்டும் பிடித்திருக்கிறேன். ( பிற்காலத்தேவைகளுக்கு ;)  ) வினைச்சொல் பெயர்கள் அஞ்சா ஆராதி ஆனந்தி  சலனி கோளறா இசி இனி தேயா மேதா வேயா வேகா மின்னு மிதவா தெகிழா நெகி