Skip to main content

Posts

சமுதாய வாழ்க்கை

நண்பர் ஒருவர் நான்கு மாதக் குழந்தையை சினமா அரங்கிற்குக் கூட்டி வந்த பெற்றோரை அக்கறையுடன் விசனப்பட்டிருக்கிறார். குழந்தை வீரிட்டு அழுதிருக்கிறது. இப்படி நானும் நினைத்திருக்கிறேன். எதற்காக குழந்தைகளை பெரியவர்கள் புழங்கும் இடத்திற்க்கு அழைத்து வருகிறார்கள் என, ஆனால் இக்கருத்தைச் சொல்லுவதற்கு முன்னர் நாம் சில விடயங்களை யோசிக்க வேண்டியிருக்கிறது.  நான்கு மாதக் குழந்தை வீட்டில் இருக்க வேண்டும் என்றால் தாயும் வீட்டில் இருக்க வேண்டும். ஆகவே பிள்ளை பெற்ற தாய்க்கு வெளியே வந்து தன் விருப்பம் போல ஏதேனும் செய்ய விருப்பம் இருந்தாலும் பிள்ளையின் காரணத்தால் வர முடியாது. பால் குடிக்கும் குழந்தையை வீட்டில் விட்டு விட்டு சினமா பார்க்க தாய் வருவதே இந்தச் சமுகத்தில் அபத்தமாகப் படும். சிறு குழந்தையொன்று இருப்பதற்காக அந்தத் தாய் வீட்டிலேயே கிடக்கத் தேவையில்லை.  அண்மையில் இலங்கை செய்தியொன்றை வாசித்தேன். சிவனொளி பாத மலைக்கு ஒரு தாய் தன் எட்டு மாதக் குழந்தையுடனும் குடும்பத்துடனும் சென்றிருக்கிறார். மலையில் அன்று அதிக புகார் இருந்ததினால் குழந்தையை தன் தாயிடம் கொடுத்து விட்டு அந்த இளம் அம்மா மலை ஏறி இருக்கிறா

நாம் நமது எதிர்காலச் சந்ததியினருக்காக்க எதை விடுத்துச் செல்லப்போகிறோம்?

தமிழ்நாட்டின் ஒரு துணுக்குப் பத்திரிக்கையின் செய்தி ஒன்றை வாசிக்க நேர்ந்தது. சுற்றுலாத்தளமொன்றில் பரிசல் கவிழ்ந்து குடும்பத்தினர் அறுவர் பலியாகியுள்ளனர். அதற்குக் காரணமாக அவர்கள் மகிழ்ந்திருந்த பொழுதொன்றில் கையடக்கத் தொலைபேசிக் கமெராவில் செல்ஃபிக்கள் எடுக்க முனையும் போது பரிசலின் சமநிலை குழம்பி பரிசல் கவிழ்ந்ததாகச் சொல்கிறார்கள்.  அதில் பத்து மாதக் குழந்தையொன்றும் அடக்கம். மேலும் இளந்தம்பதிகளும் குழந்தைகளும் இருந்துள்ளனர். மிகவும் துன்பியல் செறிந்த செய்தி இது. இச்செய்தி பகிரப்பட்ட தொணி, செல்ஃபிக்களால் உயிருக்கு ஆபத்து என்பதே. அச்செய்தியின் கீழ் ஏராளமானோர், செல்ஃபி மோகத்தினால் உயிர் பலி, செல்ஃபி அவசியம் தேவையா என்றெல்லாம் கருத்திட்டிருக்கிறார்கள்.  மனிதர்கள் இரண்டு வகை. ஒருவகை பழைய பாரம்பரியத்தை மட்டுமே கொண்டாடுபவர்கள். பண்பாட்டில் இல்லாதவை அறங்களுக்கு ஒவ்வாதவை என்பவர்கள். இது பெரும்பாலும் பழையவர்களின் குணம். அடுத்த வகை எது தற்போதைய நடைமுறையோ அதை மட்டும் உள்வாங்கிக் கொள்பவர்கள். இது பெரும்பாலும் புதியவர்களின் குணம். இதில் பழையவர்கள் காரண காரியமில்லாமல் புதியன புகுதலை வெறுப்பவர்கள்

மரணதண்டனை

உலகிலே எத்தனையோ மனிதர்கள் இயற்கையாலும், ஒருவருக்கு ஒருவர் மோதியும், போராலும்,நோயாலும் இறக்கிறார்கள். அதில் ஆபத்தில்லாதவர்கள், அப்பாவிகள், குழந்தைகள்,வயோதிபர்கள், குற்றமுள்ளவர்கள்,குற்றமற்றவர்கள்,இளைஞர்கள் என்று எல்லா வகையினரும் அடக்கம். சில குற்றங்கள் தனி நபரை மட்டும் பாதிக்கும். சில குற்றங்கள் ஒரு சமுதாயத்தையே அழிக்க வல்லது. போதைப்பொருள் கடத்தல், மருத்துவ ஊழல், விவசாய ஊழல், அரசியல் குற்றங்கள், போர்க்குற்றங்கள் அத்தகையன. இவ்வாறான குற்ங்களுக்கு தனி நபரோ ஒரு சிறு குழுமமோ எப்போதும் பொறுப்பாக முடியாது. குறிப்பாக போதைபொருள் உபயோகம், கடத்தல் இரண்டுமே இரு தரப்பாலும் தெரிந்தே செய்யப்படுகிறது. கடத்துபவருக்கு பிரக்ஞை இருப்பின் அவருக்கு அது பற்றிய விளைவுகள் தெரியும், உபயோகிப்பவருக்கு கட்டாயம் தெரியும். சிறு குழந்தையாயினும் போதைபொருட்கள் தவறானவை என்கிற பதாகை எல்லோராலும் அறியப்பட்ட ஒன்று. அவர்கள் தருவதால்த்தான் நாங்கள் பயன்படுத்துகிறோம் என்று சொல்லவே முடியாது. சட்ட விரோதமான எல்லாச் செயல்களுக்கும் பின்னால் மிகப்பெரிய வணிகப்புலங்கள் இருக்கும். இங்கும் அவ்வாறே. இருப்பினும் தண்டனைக

காலமாற்றம்

1981இல் வெள்ளவத்தை என்று நிறைய நண்பர்கள் பழைய புகைப்படங்கள் சிலவற்றைப் பகிர்ந்திருந்தார்கள். கூர்ந்து பார்க்கும் போது அப்பத்தைய பெண்கள் எல்லாரும் நல்ல வடிவான உடுப்புப் போட்டு, நல்ல ட்றேசிங் சென்ஸ்சோட இருந்திருக்கிறதா தெரியுது. அத நினைச்சாத்தான் கவலையா இருக்கு. வெள்ளவத்தை, அப்போதும் இப்போதும் தமிழர் நகரம் தான். இலங்கையின் அறுபதாமாண்டு காலப் படமொன்றை முன்னர் ஒரு தடவை பார்த்து வியந்தேன். சாதாரணமாக சந்தையில் பண்டம் வாங்கும் பெண்களின் படங்கள் அவை. படங்களில் பாடல்க்காட்சியின் பின்னணியில் வரும் 'ரிச் கேர்ள்ஸ்' மாதிரி இருந்தார்கள். எனது அம்மா பழையவர். அறுபத்தைந்து பிராயம். சிறிய சட்டைகளையும், காற்சராய்களையும் மட்டுமே இளம்பருவத்தில் யாழ்ப்பாணத்தில் அணிந்ததாகச் சொன்னார். கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரயில் முழங்காலுக்கு கீழே சட்டை போட்டால் தண்டனை என்றும் சொன்னார். கணருபனின் அம்மா அதே காலத்தவர். அறுபது பிராயம். தான் என்னென்ன வகையான கால்ச்சப்பாத்துக்களை அணிந்ததாகவும் இப்போது அப்படி ஒன்றுமேயில்லை என்று கேலியாக, "நான் ஸ்டைல் என்று சொல்லி அணிந்திருந்த" எனது செருப்புக்களை பார்த்துவிட்டுச

ஓ...அந்த இனிமையான நாட்கள் என்று சொல்லும் காலம்...

முதலில் இருந்து தொடங்க விருப்பமா? தொடங்குதலில் இருக்கும் இன்பம் முடிதலில் இருப்பதில்லையல்லவா? அதனால்க்கேட்டேன். முதலில் இருந்து தொடங்குதல் விருப்பமா? முதலிலிருந்து தொடங்கிய யாரையும் யாரும் கவரவேண்டுமென்றில்லாத, நாமாக நாமிருந்த அந்த நாட்களை மீட்டு மீட்டு மீட்டு.... அதனுடன் கரைவது பற்றி என்ன நினைக்கிறாய்? காதலிலும், கருத்துமோதலிலும் யாரும் யாருடனும் தோற்றுப் போவதில்லை என்று, சின்ன மீன் போட்டு பெரிய மீன் பிடிக்கத் தொடங்கிய 'அந்த முதலில்' இருந்து தொடங்குதல் பிடித்தமா? முற்றுப்புள்ளிக் குற்றுத் தேயாத தட்டச்சுப் பலகையை வெறித்துப் பார்த்துக் கொண்டே சிரிப்பின் முகங்கள் போட்டு நம்மை நாம் ஆதிக்கப்படுத்திய அந்த முதலில் இருந்து தொடங்க விருப்பமா? எங்கள் கதைகளின் கதைசொல்லல் அழகிற்கும், நம்மைப் பற்றிக் கதைத்தல் தவிர்க்கவும் மென்று துப்பிய அரசியல், பெண்ணிய ,சமுக விழுமிய... அந்த மேவும் வாசனையை மீண்டும் பெற முதலில் இருந்து தொடங்குதல் விருப்பமா? காதலைத் தவிர வேறு பேசுவதற்காய் விஞ்ஞானிகளாய் மாறிப்போய் கணிதமும் கணினியுமாய் ஆன ஒரு காலம். வெறுமனே முகத்தை முகத்தை பார்த்துகொண்டு பருக்கள்

தீபிகாவின் ஆவணப்படம்

https://www.youtube.com/watch?v=KtPv7IEhWRA இன்றைக்கு அதிகளவில் பேசப்பட்டுக்கொண்டிருப்பது,  தீபிகா படுகோனே  பங்குபற்றியிருக்கும் ஒரு ஆவணப்படம் பற்றியது. ஒரு பெண் தனது தேவைகளை தானே முடிவு செய்கிறாள், தன்னைப் பற்றி தானே சிந்திக்கிறாள், தனக்குத் தேவையானவை எவை, தேவையற்றவை எவையென விளக்கமுள்ளவள். தன் அறிவையும், உடலையும் கொண்டாடக் கூடிய தன்மை தனக்கு மட்டுமே உண்டு. தன்னுடைய விடுதலையுணர்வை நிர்ணயிப்பதும், குலைப்பதும் தானே- என்று எல்லாவற்றுக்கும் பொறுப்பேற்கும் ஆவணப்படம் ஒன்றினை ஹோமி அடஜானியா செய்திருக்கிறார். மக்களுடைய பிரச்சினை, பெண்ணியம் பேசுபவர்கள் மட்டும், எது எண்டுமானாலும் செய்யலாம், ஆயின் ஆண்கள் எது வேண்டுமானாலும் செய்வதும் சரிதானே? பெண்ணியம் என்பது ஒரு முரட்டுப் பிடிவாதமுடைய சமுக சீர்குலைப்பானா? இது ஒரு நல்ல கேள்வி. யார் வேண்டுமானாலும் எதுவும் செய்வது என்பது எழுந்தமானமான ஒரு சமுக அமைப்பு. இந்த உலகத்தில் யாரும் யாரையம் கொலை செய்துவிட முயாது. யாரும் யாருடைய தயவின்றி ஒரு உயிரை உருவாக்கி விடவும் முடியாது. பகைவர்களை எல்லாம் அழிக்கவும், நண்பர்களை எல்லாம் தழைக்கவும் வைக்க மு

பெண் வளர்க்கும் ஆண்

பெண் வளர்க்கும் ஆண் குழந்தைகள் பற்றிய ஒரு கருத்தை இவ்வாறு ஒருவர் பகிர்ந்திருந்தார். "உளவியல் சொல்கிறது பெண் வளர்க்கும் ஆண் குழந்தைகள் சமுக விரோதியாகிறார்கள்" என்று. உண்மை, இதன் அடிப்படை என்ன என்று பார்ப்போம். அப்பா மட்டும் வளர்க்கிற குழந்தைகளையும் உளவியல் எதோ கூறுதே. இரு பெற்றோரும் இருக்கிற குழந்தைகள் திசை மாறிப் போகிறதில்லையா?அப்படியும் இருக்கிறது. ஆனால், உண்மையில் அறிவியல் என்ன கூறுகிறதென்றால் குழந்தையை வளர்ப்பதற்கு பெண் மட்டுமே போதும். ஏனைய விலங்குகளைப் போல பெண் விலங்கு தான் குழந்தையை பேணிக் குறித்த நிலைக்கு கொண்டுவரும். பெண் பிறவி வேட்டுவச்சி. தன்னுடைய எல்லா நிலையையும் போராடி வெற்றிபெறக் கூடியவள். ஆண் அடிமைத்தனம், குடும்ப அமைப்பு, சொத்து வந்ததன் பின்னர் தான் தகப்பன் குழந்தையொன்றுக்கு முக்கியமாகிறான். இன்று உளவியலில் ஆணினுடைய மரபணு கடத்தப்பட வேண்டுமாகில், தொடர்ந்தும் அந்த ஆணுடன் தொடர்பிலிருந்து, அவனுடனான ஒத்த இயல்பை இருவரும் பரிமாறிக்கொள்ள வேண்டும் என்கிறது. ஆனால் பெண் தன்னுடைய மகனை தனக்குச் சாதகமானவனாகவே வளர்க்கிறாள். இந்த உலகம் ஆண்கள் பெண்க

இயல்பாய் இருத்தல்

இரவு ஒன்பது மணிக்குமேல் கொழும்பின் தெருக்களில் சோடி போட்டுகொண்டு நடந்துவிட்டு வருவது ஒரு தவிர்க்கப்படவேண்டிய செயல் மாதிரித்தான் பார்க்கப்படும்; நள்ளிரவு வரை நகரம் இயங்கினாலும்.  வேலைகளிலிருந்து வீடு திரும்புகிறவர்களுக்கு, எட்டு மணிக்கு மேல்த்தான் காலாற நடந்துவிட்டு வர முடிகிறது.   புது வீடு மாறிய நாட்களிலிருந்து அவதானிக்கிறேன், வீட்டுக்கு அருகில் ஒரு வடிவான குளமும் செப்பனிட்ட கால்நடை வீதியும்,பூங்காவும் அதில் சிமெந்து பெஞ்சுகளும் போடப்பட்டிருக்கின்றது. ஒரு அழகான மாலையில் உலாத்துவதுக்குத் தேவையான எல்லாமும் இருக்கிறது. எனக்குத் தெரிந்து கொழும்பில், ஆணும்,பெண்ணும் நண்பர்களோ, மனைவி,கணவன் இருவருமோ, இரண்டு பெண்களோ உட்கார்ந்து கதை பேச ஒரு இடம் தனும் இல்லை, கோப்பி ஷொப்களோ, வினோத இரவுணவுக் கடைகளோ, பல்பொருள் வணிகவளாகமோ இதற்குள் வராது. சில நேரம் கதைப்பதற்காகவே இரவுணவை கடையில் உண்பதுண்டு. பணப்பை மெலிந்து உடல் எடை கூடும் அவ்வளவு தான். அதுவும் சில சந்தர்ப்பங்களில் டீசன்ட்டான இடங்களில் மட்டும் தான் ஆணும் பெண்ணும் இருந்து கதைக்க வேண்டி இருக்கும். அந்த மாதிரியான சந்தர்ப்பங்க

குடிநீருக்கான அறப்போராட்டம்

நேற்றைய குடிநீருக்கான அறப்போராட்டம் பற்றி நேற்றே எழுதியிருக்க வேண்டும். கால தாமதத்திற்கு மன்னிக்க வேண்டும். இந்த இளைஞர்கள் படை என்ன செய்யும் என்ற கேள்வி நம்மில் பலருக்கு எப்போதும் இருந்தது. சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட அதிக வேலைப்பழுக்களோடு இருக்கும் எங்களில் பலரை நேற்று அங்கே கண்டேன். மிகவும் நெகிழ்வான தருணம் அது. மக்கள் பண்பாடு, மக்கள் இறைமையை நேற்று நாங்கள் நிருபித்தோம்.ஏற்பாட்டுக் குழுவுக்கு குறிப்பாக , சிவமைந்தன்,புருஜோத்தமன் இருவருக்கும் நன்றி. இந்த ஒன்றுகூடல் நிகழ்வு, மக்கள் பலத்தை நிரூபித்தது. மக்கள் பலத்தை மட்டும் தான் எங்களால் காட்டவும் முடிந்தது. குறிப்பாக வடக்குக் கிழக்கு வாழ் முஸ்லீம்கள் அல்லாத தமிழ் பேசும் மக்களை மட்டுமே அங்கே என்னால்க் காண முடிந்தது. ஏன் எங்களால் பாதிக்குப் பாதி முஸ்லீம் மக்களை / குறைந்தது கால்வாசி இஸ்லாம் மதத்தைச் சார்ந்த தமிழ் மக்களை இந்த அலையில் திரட்ட முடியவில்லை? அவர்களாக இதைத்தவிர்த்தார்களா? அண்மையில் இசுலாமிய மக்களுக்கு வலுக்காட்டாயமாக வன்முறை நிகழ்ந்த போது இசுலாமியர்கள் தவிர்ந்த ஏனைய தமிழ் மக்கள் உதவுவதற்கு முன்வரவில்லையா? இதன் பின்

காதல்

காதலைப்பற்றி கட்டாயம் இண்டைக்கு எழுதிப் போடனுமாம்ல. அதுவும் நிறையப் பேர் மெசேஜ் அனுப்பி வேற கேட்டிருக்கிதுகள். grrr அவன் மேட்ச் பாத்துக்கொண்டிருக்கிறான். நானும் அவனோட மேட்ச் பாத்துக்கொண்டிருக்கிறன். நான் மேட்ச் பாக்கிறத விட்டு கிட்டத்தட்ட பத்து வருஷங்களாச்சி. ஓ.எல் சோதினை மூட்டம் பள்ளிக்கூடம் மாறினது, கிரிக்கெட் நாட்டம் குறையக் காரணம். அப்பிடியே படிக்கிறதுக்காக விளையாட்டு மேட்ச் எல்லாத்தையும் நிப்பாட்டியாச்சு. ஆனா ரெண்டு நாளுக்கு முன்னமே இந்த முறை மேட்ச் பாக்கிற இண்டரெஸ்ட் வந்து தொத்தியிருக்கு. அது ஒரேவேளை காதலா இருக்கலாம். பின்னேரம் எனக்காக எங்கையாவது காலாற நடந்துவிட்டு, வெட்டிக்கதை கதைச்சிட்டு வருவோம்னு நினைக்கிறேன். காதலெண்டா என்ன எண்டு டெபினிஷன் எங்களுக்குள்ள இல்ல. அதுபாட்டுக்கு என்னவோ ஒரு வஸ்து. காதலிக்கிறம் காதலிக்கப்படுகிறம் எண்டு உணரத்தொடங்கிறது ஒரு அற்புதமான தருணம். எம்மை யாருக்காவது பிடித்துக்கொண்டால் இவ்வளவு இதமாக இருக்குமா என்றால் அது காதலாக இருந்தால் மட்டுமே சாத்தியம். யாரோ ஒருவரோ, சிலருடனோ மட்டும் எது செய்தாலும் அதை உற்றுப் பார்க்கும் படியாக இருக்கும்