Skip to main content

ஓ...அந்த இனிமையான நாட்கள் என்று சொல்லும் காலம்...


முதலில் இருந்து தொடங்க விருப்பமா?
தொடங்குதலில் இருக்கும் இன்பம் முடிதலில் இருப்பதில்லையல்லவா?
அதனால்க்கேட்டேன்.
முதலில் இருந்து தொடங்குதல் விருப்பமா?
முதலிலிருந்து தொடங்கிய
யாரையும் யாரும் கவரவேண்டுமென்றில்லாத,
நாமாக நாமிருந்த அந்த நாட்களை மீட்டு மீட்டு மீட்டு....
அதனுடன் கரைவது பற்றி என்ன நினைக்கிறாய்?

காதலிலும், கருத்துமோதலிலும்
யாரும் யாருடனும் தோற்றுப் போவதில்லை என்று,
சின்ன மீன் போட்டு பெரிய மீன் பிடிக்கத் தொடங்கிய
'அந்த முதலில்' இருந்து தொடங்குதல் பிடித்தமா?
முற்றுப்புள்ளிக் குற்றுத் தேயாத தட்டச்சுப் பலகையை
வெறித்துப் பார்த்துக் கொண்டே
சிரிப்பின் முகங்கள் போட்டு நம்மை நாம் ஆதிக்கப்படுத்திய
அந்த முதலில் இருந்து தொடங்க விருப்பமா?
எங்கள் கதைகளின் கதைசொல்லல் அழகிற்கும்,
நம்மைப் பற்றிக் கதைத்தல் தவிர்க்கவும்
மென்று துப்பிய
அரசியல், பெண்ணிய ,சமுக விழுமிய...
அந்த மேவும் வாசனையை மீண்டும் பெற
முதலில் இருந்து தொடங்குதல் விருப்பமா?
காதலைத் தவிர வேறு பேசுவதற்காய் விஞ்ஞானிகளாய் மாறிப்போய்
கணிதமும் கணினியுமாய் ஆன ஒரு காலம்.
வெறுமனே முகத்தை முகத்தை பார்த்துகொண்டு பருக்கள் பிய்த்து
காலத்தை ஓட்டுவதைப் போல அது அழகில்லையாயினும்
அந்தக் காலத்துக்கேயுரிய நம்மை நாம் சுற்றிகொண்ட
குற்றமற்ற பாதுகாப்பை நினைத்துச் சிரிப்போம் வா.
மீண்டும் அதையே தான் திருப்பச் செய்யப்போகிறேன்.
அந்த நாட்களின் ஒருவருகொருவர் விட்டுவைத்திருந்த மோசமான நாகரீக இடைவெளிகளை
இந்த நாட்களின் இடைவெளி தெரியாத நம் கைகளின் இறுக்கத்தில் வாய் பொத்தி சிரிப்போம் வா.
முதலிலிருந்து தொடங்குவதின் லாவகம்,
திருப்பிப் பார்ப்பதில் இருப்பதில்லை.
திருப்பிப் பார்க்கும் போது, நமக்கு எப்போதுமே தேவைப்படாத
திருத்தங்களும், அச்சுப்பிழைகளும், சிரிப்பு முகங்கள் நிரப்பிய மௌன வெளிகளையும்
களைத்துக் களைத்து ஒருவர் மீது ஒருவர் விழுந்து சிரித்து,
ஆடம்பரமேயில்லாத, குழந்தைகளின் பரிசத்தின் வாசனையை ஒத்த
அந்த நாட்களை பரிகசிப்போம்.
ஓ...அந்த இனிமையான நாட்கள் என்று சொல்லும் காலம் வந்ததே!
பழைய நாட்கள் என்று சொல்லிக் கன கதைகள் பேசி -
உனதும் எனதும் குப்பைகளை தோண்டி அள்ளிச் சிரித்து-
நம்மை நாமென்று உணராத ஒவ்வொரு பழைய தருணத்திற்குமாய்
எமக்குள் ஒளித்திருக்கும் அந்த பொக்கிசத்தை அவிழ்ப்போம்.
அதுவொன்றும் அவ்வளவு புதினமில்லை-
யாருக்கும் வாய்க்க மாட்டாத கொம்புமில்லை -
என்பதை இவ்வுலகிற்குக் காட்டும் வேளையில்
இந்த உலகம் அளவற்ற காதலையும் புரிதலையும் கொண்ட உவப்பானதொன்றாகிறது.
ஓ...அந்த பழைய இன்மையான நாட்களென்று சொல்லப் போகும் நாட்களில்
நான் என்னவாகவும், நீ என்னவாகவும், நாம் என்னவாகவும் இருப்போமென்று சிரித்தோமில்லையா?
இதோ பார்
காலத்தைப் பற்றி நீ என்னிடம் சொன்னதெல்லாம் சரியாகிப் போயிருக்கிறது.
நாங்கள் நாங்களாகவே இருக்கிறோம்.
அந்தப் பழைய நாட்களைப் போல,
இன்னும் பல கோடிப் பழைய நாட்களை எண்ணிப் பார்க்கும் போது,
நமது உடலில் பலம் குன்றி, சிரிப்பதற்கு இருவர் வாய்களிலும் பற்கள் இல்லாத போதும்
ஓ....அந்த இனிமையான பழைய நாட்கள் என்று சொல்லிச் சொல்லி
வாழ்க்கையைப் புதுப்பிக்கத் தேவையான எல்லாமுமே நம்மிடமிருக்கிறது.
எல்லார் பழைய நாட்களைப் போலவும்,
எல்லாக் கிழவிகளது காதல் கதைகளையும் போலவும்,
இந்தப் பழைய கதையும் -
நம் குழந்தைகளின் குழந்தைகளின் குழந்தைகளைக் கூட
காதல் வயப்படுத்த உதவும்.
அது தானே பழைய கதைகளின் உன்னதம்?

Comments

Popular posts from this blog

சாமகானமும் காம்போதியும்

முருகையன் ஒரு மொழிபெயர்ப்புச் செய்தார். மொழிபெயர்ப்பு எண்டும் சொல்ல முடியாது,சாதுவா மொழிபெயர்ப்பும்,திறமையான கற்பனையும் போட்டு செய்யுள் வடிவத்தில, இளநலம்! என்ன இளநலமா?ஹையா கிளுகிளுப்பான கதை வரப்போகுது. குமாரசம்பவம் (ஸாரி வேற கண்டென்ட் எண்டு நினைக்கப்படாது, ஐ ஆம் வெரி டீசன்ட்) காளிதாசன் குமாரசம்பவத்தில எழுதின அதே கதையை தமிழில தந்தவர். அதில தான் இந்தக் கதை வருகுது.  சாமகானம் சாமகானம் எண்டு ஒண்டு சொல்லக் கேட்டிருப்பம். “சாமகானம் பாடினான்” எண்டு நாலாம் வகுப்புச் சமய பாட புத்தகத்தில ஒரு பாடம் இருக்கு. பத்துத் தலையும், கையில ஒரு தலையுமாக் கணக்குப் பிழையா மொறாயஸ் கீறின இராவணனிண்ட மீசை வெச்ச படம் இருக்கும், இப்ப ஞாபகம் வந்துட்டுதா? அந்தக் காலத்திலேயே தலைகளிண்ட கணக்கை எண்ணிப் பாத்தனாங்கள் ஆக்கும். (தலைக்கணக்கு முக்கியம் அமைச்சரே) இப்ப சாமகானத்தைப்பற்றிப் பாப்பம். காளிதாசன் குமாரசம்பவம் எழுதேக்க, சும்மா கற்பனைகுதிரையை காட்டாற்று வெள்ளம் போல பறக்க விடுறேர்.  மிஸ்டர் சிவனும் மிசஸ் உமாவும் கலியாணமான புதிசில, (ஏன் கல்யாணமான பழசில யாரும் வெளிய போறதில்ல எண்டு நெடுங்காலமா டவுட்) சும்மா வெளிய வெளிக்

இராவணேசன் ; Maunaguru's 'Ravanesan'

நெறியாள்கை - பேராசிரியர் மௌனகுரு. இடம் -கொழும்பு கலை இலக்கியப் பேரவை. காலம்- சனி(13.02.2010)  மாலை 6.30மணி. சனி மாலை(13.02.2010) பேராசிரியர் மௌனகுரு அவர்களின் 'இராவணேசன்' நாடகம் நடைபெறவிருக்கிறதென்று நண்பரொருவர் தகவல் சொன்னார். இருந்த எல்லா வேலைகளையும் புறந்தள்ளி விட்டேன். நாடகங்கள் என்றவுடன்  வரும் இந்த தொலைகாட்சி சீரியல்களையே கண் ஞாபகத்தில் கொண்டுவந்து முகத்தை அஷ்ட கோணலாக்குகிறது. மேடையமைப்பும், அரங்கமும்,அரிதாரம் பூசிக்கொண்ட பாத்திரங்களும், நேரடியான காட்சிகளூட்டும் கிளர்வும், எங்களுக்கு முன்னாள் ஒரு தலைமுறை இதனூடே வாழ்ந்து காட்டியிருக்கிற விடயமும் தெரிவதில்லை. மாற்றங்கள் மட்டுமே மாறிக் கொண்டிருந்தாலும்,எங்களின் முன்னோடிகள் வழி வந்த கலைப் பாதையை எடுத்தியம்புதலுக்கும்,அதற்கான வரவேற்புக்கும் இங்கு இடமில்லை எனும் போது அவற்றையெல்லாம் தாண்டி மனதில் எங்கேயோ வலிக்கிறது. எங்களுடைய காலத்தில், முழுமையான கூத்துக்கலையோ, அரங்காடல்ககளையோ  காண்பதற்கு காலமோ மாற்றமோ ஏதோவொன்று இடந்தரவில்லை .இருப்பினும் யாராவது எங்கள்  நலிந்து போன கலைகளை மறுபடியும் இளஞ்சமுதாயத்திட்கு க

குழந்தைகளுக்கான நவீன தமிழ்ப் பெயர்கள்

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தல் எனும்போது, இவ்வளவு காலமும் வைத்த பெயர்கள் தமிழ்ப்பெயர்கள் இல்லையா எனும் கேள்வி எம்மில் பலருக்கு எழும். உங்கள் பெரும்பாலானோர் தமிழ்ப்பெயர் என்று எண்ணிக்கொண்டிருக்கும் உங்கள் பெயரை வட இந்தியக் கலப்பு,சமக்கிருத கலப்பு,ஐரோப்பிய,அரேபியக் கலப்புடனான பெயராக இனங்காணுவீர்கள்.  தமிழில் பெயர் சூட்டுவது இனத்துவேசம் உள்ள செயலா? :P இனத்தைக் கொண்டாடக் கூடிய செயல். மறத்தமிழன் என்று அடைமொழி இட்டுக்கொண்டு உலாவுவதை விட அழகான செயல் என்று எண்ணுகிறேன். இந்த அடையாளம் மிக அழகானது.  அண்மையில் நிறையப் பேர் தமிழில் குழந்தைகளூக்கான நவீனமான பெயர்கள் வேண்டும் என்று கேட்டிருந்தார்கள். தமிழில் பெயர்கள் பழமையானவையாக இருப்பது கூட இக்காலத்தோரின் தெரிவுக்குட்படாமைக்கு ஒரு காரணமாகும். பெண் குழந்தைகளுக்கான பெயர்கள் சிலவற்றை தொகுத்திருக்கிறேன்.சிலவற்றை கண்டும் பிடித்திருக்கிறேன். ( பிற்காலத்தேவைகளுக்கு ;)  ) வினைச்சொல் பெயர்கள் அஞ்சா ஆராதி ஆனந்தி  சலனி கோளறா இசி இனி தேயா மேதா வேயா வேகா மின்னு மிதவா தெகிழா நெகி