Skip to main content

Posts

வீட்டில விசேஷங்க :)

I was rushing, really rushing....இப்பிடித்தான் கொஞ்சக் காலம் போய்க்கொண்டே இருந்தது. எவ்வளவு காலம் எண்டு தெரியேல்ல, கண்ணை மூடித் திறக்கிறதுக்குள்ள நிறையக் காலம்;அந்தக் காலம் பூராவும் சிலவற்றை மறந்து விட்டிருந்தேன். எங்கிருந்து அவை மீள வந்தன என்று தெரியவில்லை. ஒரு ஒற்றையடிப்பாதைக்குள், ஆள்த்தடயமில்லாமல் போய்க்கொண்டிருந்த இடத்தில், யாரோ மறித்து, கூடவே வருகிறது போல உணர்வு! இவ்வளவு அழகான உணர்வையா தொலைத ்துவிட்டு இருந்தேன்? இசையைப்பற்றி கதைத்துக்கொண்டிருக்கிறேன். அதை வாசிப்பதும், அதனுடன் கதைப்பதும், அதைக் கட்டிப்பிடித்துத் தூங்குவதும் ஒரு அலாதி சுகம். போனவாரம் தூசு தட்டி கீ போர்ட்டை கையில் எடுத்துக் கொண்டேன், இப்போது வரைக்கும் விலகிப் போக மறுக்கிறது. குழந்தையைக் கொஞ்சுவதற்காகத் தூக்கி வைத்துக் கொண்டால் எப்பிடி, மடியிலிருந்து இறங்கும்? கூடவே விட்டு விலகாமல் பார்த்துக் கொள்ளத் தோணுகிற உணர்வுகளில் இதுவும் ஒன்று, வசந்தகாலத்தின் இன்னுமொரு சிணுங்கல் தொடங்கிவிட்டது மனிதன் எவ்வளவு ரம்மியமான உணர்வுகளோடு கூடிய மிருகம்? சிரிப்பும், கவலையும், கோவமும், குரோதமும் என்ன காரணங்களுக்காய்

முகிலோ மேகமோ ...

ஆமா,ஏ.ஆர் ரஹ்மான், ஏன் தேவா “சொந்தமா” இசையமைச்சதுகள் கூட இதல க்ராஸ் பண்ணுது தான். ஆனா...என்ன மனுஷனையா இந்தாள்?மனுஷனுக்கு மலையைப் போல பிரச்சினை வந்தாக் கூட இந்தாளைக் கேட்டா ரிலாக்ஸ் ஆகீரலாம். இந்தச் செப்படி வித்தையை எப்பிடிக் கையாளுதோ!!! என ்ன மந்திரமோ மாயமோ என்னமோ ஒண்ணு இந்தாள்கிட்ட இருக்கு! பெருசா சொல்லிக் கொள்ளுற அளவுக்கு இல்லாட்டியும், இந்தப்பாட்டைக் கேளுங்க, வருடிக் குடுக்கிற மாதிரி, யுவனைக் கூட தாளத்துக்குப் பாடவைச்சிருக்கிறேர் (அப்பா சொன்னா பிள்ளையள் கேக்கும் எண்டுறது இதைத்தானோ? :P ) பின்னணி இசை தொடங்கிறதே, சாதாரண பீத்தோவன் ஹார்மேனி, இது கீ போர்டில் சாதாரணமாக் கிடைக்கும்.எதை எப்பிடிப் பயன்தகு விதத்தில பயன்படுத்தோணும் எண்டு இந்தாளுக்குத் தான் தெரியும். எந்தக் காற்று வார்த்தியத்தையும் உயிரை வாங்கிற மாதிரி இப்பிடி யாரும் வாசிச்சதில்ல.இந்த நாளுக்கு,எனக்கு இந்தப் பாட்டுக் காணும். இவங்களெல்லாம் இல்லாமப் போற ஒரு காலத்தை நினைச்சும் பாக்க முடியேல்ல. அந்தாளுக்கு வயசு போகுது :( முகிலோ மேகமோ சொல் வேறு வேறு இரண்டும் இருந்தும் பொருள் ஒன்று தானே! உடலால் தேகத்தால் இ

உழுவான் வண்டு

ஜெ ர்மன் நாட்டுக் கவிஞர் ஒருத்தர் ஒரு நாவல் எழுதினார். அந்த நாவல் பூராவும் உழுவான் வண்டு (Colfax plowing bee) வளர்த்தல் தொடர்பான கதை. உழுவான் வண்டு செர்மனியில் இருக்கிறதா எண்டு நம்பிறதுக்கு எனக்கு சுமார் இரண்டு ஆண்டுகள் பிடித்தன. உழுவான் வண்டே நாலு குல பேதங்களில் ஆறு வர்ணங்களில் கிடைக்கிறது. கரச்சான் உழுவான்,நண்டு உழுவான்,பேய் உழுவான்,குதிரைப்பாச்சான் எண்டு நாலு குலங்கள் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது. சாணிப்பச்சை,அரியதரக் கலர், தவிட்டுக்கலர்,அழுகின விளாம்பழ நிறம், மேலும் சொல்ல முடியாத சில வஸ்துக்களின் நிறம் எண்டு சுமார் எட்டு வகையான நிறங்களில் உழுவான் வண்டு பறந்தும், நடந்தும், ஊர்ந்தும், உழுதுகொண்டும் திரிகிறது.  உழுவான் வண்டைப்பற்றி இந்த சேர்மன் நாட்டுக் கவிஞர் எழுதியதெல்லாம் உழுவான் வண்டை வீட்டில் செல்லப்பிராணியாக வளர்ப்பது எப்படி என்றே.சேர்மன் மொழி எனக்குத் தெரியாததால், ஆங்கிலத்தின் அதன் ஆறாம் பதிப்பொன்றை கொஞ்சக் காலத்துக்கு முன்பு ஒரு ரயில்ப்பயணத்தில், தண்ணீர்க் கடை ஒன்றில் வாங்கின புத்தகமொன்றில் படித்தேன். இதில என்ன விசேடமென்றால் உழுவான் வண்டு ஒன்றைப்

Overcoming a Rut: A Personal Journey

Falling into a rut is something that happens to all of us, but how do we get out? It can be hard to recognize when we're in a rut and to motivate ourselves to move on. I've been feeling less than my best lately; like my life is stuck in a rut. I've even found myself watching TV series to pass the time. Recently, I became obsessed with a Tamil show called "OFFICE" and watched all of it in a week. Now, I'm bored and feeling empty. TV shows aren't usually my thing, as I don't have the patience to wait until the end of an episode, and I don't have time to watch them all. Additionally, some people become so busy that they don't have time for leisure activities, and I'm in that category right now. I'm just going through the motions of my mundane tasks. I'm also really over summer. Sometimes I feel like I can't take another day in this hot weather. I've had some new experiences this summer because of my internship, one of which w

அப்பா சொல்லித் தந்த பாட்டுக்கள்.

மாலை நேரப்  பொழுதினிலே மாமரத்தைப் பாருங்கள் மஞ்சள் நிற இலையெல்லாம் மாறி மாறி விழுகுது சின்னஞ்சிறு  பூவுண்டு சிலதில் நல்ல பிஞ்ச்சுண்டு வண்டு வந்து மொய்க்கவே வாசம்  எங்கும் வீசுது - மாலை நேரப் பொழுதிலே மாமரத்திப் பாருங்கள்! கிழக்குப் புறத்து பெரிய மாமரத்தின் கிளைகளிலே, வைகாசி மாத மாவடு தோன்றும் வாசத்தோடு, முற்றத்தில் விழுந்து கிடந்த மாம்பிஞ்சுகளை, கூட்டிக் கொண்டே அப்பா எனக்காகச் செய்த பாட்டு இது.   அது ஒரு செங்கல் மங்கலான பொழுது இன்னமும் ஞாபகமிருக்கிறது.  (4/5 வயதுக் குழந்தைக்கு)  *** வெகுமதியாய் புகழ்ந்திடவே வெகுளி எங்கள் குழந்தைகளே.... வெள்ளை நிறக் குழந்தைகளை வேடிக்கைகள் பார்த்துடுவர்- விஞ்ஞானத்தின் விந்தைகளை அள்ளி அள்ளி வீசிடுவார்- அமெரிக்காவில், ஐரோப்பாவில் அழகழகாய் குழந்தைகள்- கைகள் தட்டி சிரிக்கிறார் கண்ணைக் கண்ணைச்  சிமிட்டுறார்- பறக்கும் தட்டு, பலூன்எல்லாம் விண்வெளியில் பறக்குதங்கு பேசும் பொம்மை, பேசும் நாயும் திருகிடவே  நடந்து போகும் பாழும் எங்கள் நாட்டிலே - பறந்து வரும் விமானமோ குண்டு வந்து போடுமோ? கொலைகள்  செய்து போகுமோ? என

வெலிவேரியா- குடி தண்ணீர் யுத்தம்.

இருபத்தியோராம் நூற்றாண்டின் உலகப்போர் நீருக்காக நிகழும் சாத்தியங்கள் உள்ளதாக ஆய்வாளர்கள் எதிர்வு கூறியுள்ளார்கள். ஏற்கனவே சிரியாவில் கடந்த ஆறேழு வருடங்களாக தண்ணீருக்கான யுத்தம் நிகழ்ந்து இலச்சக்கணக்கான மனித உயிர்கள் மரணங்களில் முடிந்தது. இப்போது இலங்கையில்.  பெருமாட்டி பஞ்சாயத்து வட்டப் பிளாச்சிமோடாவில் கோக்காகோலா, நிலத்தடித் தண்ணீரை அண்மையில் உறிஞ்சி, அம்மாவட்ட மக்களால் போராட்டத்தை எதிர்கொண்டது. வாரணாசிக்கு அருகே உள்ள மேஹ்டிகஞ்சில் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக கோலா நிறுவனத்தை மூட வேண்டி ஏற்பட்டது.  தற்போது, தரமான குடிநீர் கேட்டுக் கிளர்ந்து திரண்ட மக்களை அரசாங்கம் ராணுவம் மூலம் அத்துமீறச்செய்து மக்களை முடக்கிப் போட்டது. பொது மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டது. இருவர் கொல்லப்பட்டனர். தமான குடிநீர் கேட்டுத் திரண்டு நின்ற கம்பஹா மாவட்ட வெலிவேரிய ரதுபஸ் ஹெலவில் சிங்கள  மக்களுக்கே அரசாங்கம் தனது ஏகாதிபத்திய ஆதிக்கத்தைக் காட்டியுள்ளது. கம்பஹாவில் உள்ள தொழிற்சாலையிலிருந்து வெளியேறிய கழிவு நீரானது,அம்மாவட்ட நீர் நிலைகளில் நேரடியாகக் கலந்துள்ளதால், அப்பகுதி மக்கள

Raising Awareness About Blood Donation Among Young Volunteers: Our Journey of Creating an Awareness Song

As young individuals with a passion for community service, we decided to undertake a project to raise awareness about the importance of blood donation among our peers. Our goal was to utilize our talents and resources to create something impactful and meaningful, rather than simply being idle. With the support of our university friends, we decided to create an awareness song about blood donation. However, during the audition process, we encountered a challenge in composing the song in Tamil. It became evident that an English version of the song would not only improve the concept, but also make it more widely accessible. Consequently, we shifted our focus to creating an English version of the song. This marked the first time that Sharmilan had composed a song, and we are proud to say that he did an excellent job. Praneev contributed the theme from one of his albums (Close Your Eyes) and I wrote the lyrics. The entire process, from start to finish, took approximately 12 hours and the s