Skip to main content

Posts

ஆளச் சொல்லுகிற ஆட்சிப் பாட்டு

                              அரவச் சடை கழழில் பூட்டி அருவத் துயில் விழியில் கொண்டு அருக்கக் கதிர் அகலம் பரப்பி ஐம்பொன் உன்னை ஆழேன் அருகில்?  இரக்கக் குணம் சிறிதும் இல்லா இன்பப் பொருள் எதிலும் அல்லா மெய்யன் உன்னை மெச்சேன் பொழுதில்? பொய்யன் உன்னை புகழேன் வாதில்? [எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்] வானமே இரு சோலை வான்முகிலும் நாடும் கானமே  ஒரு பாட்டில் கவியரசு செய்யும் ஏனம் ஒரு கிண்ணம் பாலமுது  கொய்து பானமெனப் பருக்கும் சேய் எனது கன்றே ! கண்ட திருக்கோலம் காட்சிப் பிழையின்றி கைகளை தலை மீது தானுயர்த்தி தவிசு பாடி பொய்களை பூசுற போதுமென  அகஞ்சொல்லி அல்லிக் குவளையிவள் ஆதாரமின்றிப் படர்ந்து !  [ஆசிரியத்துறை] வேள்வித் தீயில் வெட்கிக் குனிகையில் ஆவி பெருகி  அங்குமிங்கும் ஒழுகி -ஐயம் இல்லாமல் ஐம்புலனும் கருகி அட்டமா சித்திக்கு அப்பாலும் தாவித் தாவி, தன் நிலைபரம் தவித்து- கடினமடா காத்திருத்தல் காம்போடு வேர் பிடுங்கல்! [ஆசிரியத்துறை]  மெய் நிகர்த்தப் பாடுபட்டு மெய்யாலே விதிர் விதித்து கை நிறையப் பாடும் பட்டு பாழுமோர் பழியைச் சுமந்து "

போன வழிப் பயணம்...

பாகம் - 02. பயணப்படுகிற உடலைத்தூக்கிச் சொருகிக் கொண்டே அந்தராத்மா பூமிக்கும் வானத்துக்குமேலேயும் கூத்தாடுகின்றது. பேரூந்து ஒவ்வொரு முட் பதிவாளர்களையும் நின்று நின்று ஏற்றிக்கொண்டு செல்கிறது, அது தன் பாடு ; நான் என் பாடு ; ஊர்ந்துக்குள்ளே பலர் கூப்பாடு ! என் மௌன தவத்தைக் கலைக்கிறதுக்கேண்டே கண்டெக்டர் ஒரு பலத்த சப்தத்தில் இப்ப வந்திருக்குற பன்னாடைப் பாடல்களையெல்லாம் போடத்தொடன்கீட்டான். முதல் புலி உறுமுது, பிறகு, பொம்மாயி..., ச்சே..என் தவத்தைக் கலைத்ததோடு மட்டுமல்லாமல், அம்மாவின் அருமந்த வழிஞ்சு விழுகிற நித்திரையும் போச்சு..! சொப்பனம் கலைஞ்சு எழும்புற சின்னக் குழந்தையைப் போல அம்மா சுழன்று வருகிற கொட்டாவியை கையால் பொத்திக் கொண்டே எழும்பி திரும்பவும் நித்திரையாப் போட்டா... ! இடையில வீட்டையிருந்து ஒரு குசல விசாரிப்பு SMS, நான் குறுஞ்செய்தியைப் படிச்சிட்டு ஒரு மார்க்கமாச் சிரிக்கேக்க எனக்கு முன்னால இருந்த ஒரு "அரைவேக்காடு" என்னைப் பார்த்துச் சிரித்தது, அது சிரிக்குதா பழிச்சுக் காட்டுதா என்று தெரியாததால எனக்கு பலமாச் சிரிப்பு வந்துட்டுது, அது தன்னைப் பாத்துத்தான் நான்

போன வழிப் பயணம்...

பாகம்- 01 பயணக் கட்டுரை.     மழை சொட்டுச் சொட்டாகப் பெய்து கொண்டிருந்தது, காதுக்குள்ள அடர்த்தியான காத்து வீசிக் கொண்டே இருந்தது, நல்ல கறுப்புக் கலர் இரவு, நானும் அம்மாவும் மட்டுந்தான், அம்மா கேட்டா இப்ப வந்திருமா..? வந்திரும் வந்திரும்...- நான், இன்னுங் காணேல்ல...?.... வரும் வரும்...வராமப் போகாது.... ஒரு வேளை விட்டிட்டுப் போயிட்டால்...? ..............நான் ஒருக்கா அம்மாவை நிமிர்ந்து பார்த்து விட்டு, விட்டுட்டுப் போனாப் பரவாயில்ல, கருத்து உருண்டு திரண்டிருந்த மேகங்களின் பஞ்சுப் பொதியில உங்களை இருக்க வெச்சு ..ஆகாய மார்க்கமாக் கூட்டீட்டுப் போறன் ம்மா...எண்டன்,,,       நல்ல காலம் அம்மாக்கு எதுவுமே கேக்கேல்ல, இரவு முழுக்க பனிக்க நிக்க வேண்டாமேண்டால் கேக்க்கிரதில்லை...., வாய்க்குள்ள அம்மா முணுமுணுத்துக் கொண்டு கைக்கெடியாரத்தில நேரம் பார்த்தா... ஒன்பதே முக்கால்..., எண்ட கடியாரத்தில பத்து....! ரெண்டு பேருக்கும் எவ்வளவு ஜெனரேஷன் கப்? ............................................................................................................... ஒரு சொறி நாய் வந்து அறு

மரபழிந்த ஓவியங்களும் , முரணான என் கவிதைகளும்...

                       வெளிச்சம் குறைவாய்......              காலை நேர  கைசிகப் பண்ணினது நாதத்தில், மல்லிகை இதழ்கள் விரிகின்றது தேனின் திரவியத்தை சுமந்து கொண்டு, யாகாவாரினும் நாகாக்க- நான் தவறியதால் சயங்கொள்ள முடியவில்லை. சாய்மனையில் இருக்கின்றேன் எதுவும் இயலாதபடிக்கு..., விமோச்சனப் பலன் காண கௌளீயைத் தேடினேன் - இல்லையது என் முகட்டிலே . விட்டத்திற்கு வேறுபட்டதாய் நிற்கிறது - கூரையின் தாவாரம். தாவர சங்கமங்களை எல்லாம் தாரை வார்த்ததட்குப் பின்னும் மண்ணும் ,மழையும் ,மடுவும் கூடிய சங்கமமொன்று தேவையாய் இருக்கிறது. முதுமையின் பலம் , சாவுக்கு அந்தம் பிடிக்கிறதா ? தெரு முனையிலிருக்கின்ற நாய்க்குத் தெரிகிறது - என் சாவின் ஜனனம் -அது ஊளை செய்து நமனை எதிர் கொள்கிறது , சில காலமாய்..... பழுத்த இலையின் இருப்பு எத்தனை காலம் ? சவங்காவிகளுக்கா பஞ்சம் இங்கு......? காலை நேரம் - நியமம் தவறாமல் கைசிகப் பண் கேட்கிறது எனக்கு - நேரிசலடைந்த வாகன இரைச்சல் மத்தியிலும் . என்னைத்தவிர நிழல் மட்டும் தெ

"செக்கு" நாடகம்;Parakrama Niriyella's 'Sekku'

    இடம்- கொழும்பு தேசிய கலை இலக்கியப் பேரவை. நெறியாள்கை- திரு பராக்கிரம நிரிஎல்ல காலம்-31.01.2010- ஞாயிறு மாலை.   பொதுவாக நாடகங்களின் தன்மைக்கேட்பவே ரசனையாளர்கள் ஏற்படுகின்றார்கள், காலாகாலமாக நாடகங்கள் வீதிகளிலும்,அரங்குகளிலும் ஏற்றப்படுகிரபோது அவற்றினது கவர்ச்சித்தன்மையுடன் ஏதாவது ஒன்று மக்களுக்குச் சொல்ல வேண்டும் என்கிற நிர்பந்தம் ஏற்படுகிறது, இதன் அடிப்படியில் நாடகத்துக்கான தனிப்பட்ட ரசிகர்கள் குறைவடைகிரார்கள், பெரும்பாலும் இடதுசாரி சிந்தனை கொண்டவர்கள், முற்போக்குக் கருத்துக் கொண்டவர்கள், மக்கள் ஸ்தாபனத்தைத் தாங்குபவர்கள், சமுதாயத்தினதும் அரசியலினதும் பார்வைக்குளிருப்போர் போன்றோரால் தான் முற்போக்கு நாடகங்கள் காலப்போக்கில் வரவேற்கப் படுகின்றன, இதன் காரணமோ என்னமோ நாடகத்தின் உட்பொருளும் இது சார்பாயே இருந்தது. கிட்டத்தட்ட முறையான தமிழ் நாடகங்களையே காணக்கிடைக்காத இந்தக் காலகட்டத்திலே 'ஜனகரளிய' குழுவினரது 'செக்கு' நாடகம் அண்மையில் கொழும்பு தேசிய கலை இலக்கியப் பேரவையின் சிற்றரங்கிலே கடந்த ஞாயிறன்று காணக் கிடைத்தது. வெறுமனே நாடகம் என்று சொல்லிவிட்டா