Skip to main content

Posts

Showing posts with the label கிறுக்கு

ஒன்றுமே நடக்காதது போல -கவிதை-

-நிலா-  4-4-2009                                          புற்களில் உட்கார்ந்து எழும்   பூச்சிகள் பறக்க,   மாட்டுச்  சாணமோ என்னமோ ஒன்று ,   காலில் மிதி படாமல் ,   லாவகமாகத் தப்பி- தெருக் கரையில் புரண்டோடும் - சிறு வாய்க்காலுக்குள் விழுந்து விடாமல் - சீமெந்துத் தரை பிடித்து ஒண்டிக்கொண்டே - ஆர் மேலும் உரசிக் கொள்ளாமல் நடந்து, எல்லாத்துக்கும் ஒரே புன்னகை தான்-   நிரம்பக் கதைக்க வேண்டும் போல் இருந்தாலும், ஒற்றை வார்த்தை தான். பெரும்பாலும் இருட்டுத் தான் - ஏதாவது   பொதுக் கூட்டத்தின் முடிவிலாய் இருக்கும் - எங்கள் புறப்படும் பயணம்.   நாலடி தள்ளி அல்லது விலகி   சேர்ந்தாட் போல அல்லது முன்னுக்கும் பின்னுக்குமாய் - சீ சீ ...., பொதுவாய்ச் செர்ந்தால்ப் போலத் தான்.. நடக்க நடக்க இன்னும் வீடு, தூரம் போய்ச் சேர வேண்டும் போல் - ஒன்றுமே இல்லை -எல்லாத்துக்கும்   ஒரு லேசான தலையாட்டல் - பிறகு   ஒரு சிரிப்பு- பல்லுக்கும் வாய்க்கும் இடைவெளியே தெரியாமல்- உள்ளுக்குள் இறுகிச் சிரிக்கின்ற சிரிப்பு - கள்ளத்தின் குறும்புச் சிரிப்பு !   அத

பெரும் பரனோடு பாவி -கவிதை

      மூழ்கிச் சா என் கடவுளே உன் உத்தமத்தின் அறுதியில் அறுதி காண் அம்பலனே ஐம்பெரும் அவத்தையிலே   அறு படுந் தீயில் அயில் பெரும் பரனே பரமொடு பாங்கர் படுத்துறங்கு முன் பாவைப் பழி ஏகில் ஆண்டும் நீ தீ தீண்டாமல் திகம்பரனாய் என்னை திசையணி   பற்றுக்கு மேலாய்ப் பரமன் ஒழிந்திடும்    அற்ற குடிலுக்கு ஊற்றாய் வழிந்திடும் என்னன்னை நீ எற்ற உன்திருக்கால் ஒற்றி    அற்றுப்போகவென இற்றுப் போய் எனதுள்ளம் ! எற்றைக்கும் ஏற்கும் எனப் பணியேனே இச்சை ஆல். ஆல் இச்சை ஆவதுமிச்சை கொச்சை மொழியிலுன் கொற்றம் பிடுங்கி ஓர் பிச்சைப் பாத்திரமேந்தியதன் அட்சய விளிம்பிடுக்கில் அடுத்தடுத்து ஊற்று உன்ரவை ஊற்றிய உறவுதனை ஒருக்களித்துன்ப துன்ப மில்லாப் பொருதி நீ அளி ! அளித்தோய்க்கும் அளி அமுதம் அள்ளி அளி தோய்த்து ஆற அள்ளி கிளி தூக்கும் கிளர்ந்தோங்கும் கிளி முனிவ கிழவா விழவா உன் விழி போலுந் தெளி அசையும் நதிச் சரிவில்-   இலை போல் இல்லா பூப் போல் இல்லா இயல்பிலும் இல்லா கலை போல் இல்லா கருத்திலும் இல்லா கருணையும் இல்லா வசை போல் இல்லா வாசியும் இல்லா முது கொன்றளுமி

பௌர்ணமிக் கிறுக்கு -01

இதோ இந்த புத்தன்   போன மாதம் தான் வைகாசியில் வர்ணம் பூசி வெளிச்சக் கூடுகள் மின்னி   ஏந்து கரத்தில் தீபம் ஏந்தி தாமரைக் கடவுளனுக்கு நீலோத்பலம் பிடுங்கி, சம்பங்கியும், பவள மல்லிகையும் சூட்டி, கண்களை மூடி மோனத்தின் உச்சியிலிருக்கும் புத்தன்- அதோ அன்று தான் பிறந்தான். ராஜ கம்பீரத்தில் மிடுக்கில் திரிந்து, காலத்தின் கோலத்தில் காவி சூடிக் கொண்டவன். அதோ அன்று தான் பிறந்தான்..! அவனது ,கேசங்களும் தந்தங்களும், அகவன்கூடும் தங்கப் பேழையுள் தாங்கப்படும் என்றறியாமலேயே- முக்தியாகிப் போனான். புத்தா, சந்திக்குச் சந்தி, அரசமரத்துக்கு மரம் கல்லாகி, மரமாகி ,கருஞ்சிலையாகி பெருத்த வண்டிப் பெருச்சாளிப் பிள்ளையார் போல வீற்றிருப்பது- கடினமடா பார்க்க எனக்கு- அவருக்குத் தான் தூக்க முடியாத தொந்தி   நடுத்தெருவிலே குந்தி விட்டார். நீ கட்டழகனல்லவா ? கூடாது கடவுளே - நீ முக்தியடைந்திருக்கக் கூடாது கடவுளே ! காசினியிலோ   கங்கையிலோ   குளித்து விட்டு "கப் " என்று இருந்திருக்கலாம். பாவி ... கடவுளாகிப் போனாயே ..!