Skip to main content

Posts

Showing posts from 2019

கோட்பாடுகள்

எந்தவொரு கோட்பாடும்/ தத்துவமும் ஆண்டாண்டு காலமாக ஒன்று போலவே மாறாமல் இருப்பது ஆபத்தானது. விஞ்ஞான முறைக் கோட்பாடுகள் ஒருபோதும் காலங்கடந்து ஒன்று போலவே இருப்பதில்லை. அவை தம்மைப் புதுப்பிக்கின்றன. புதுப்பிக்கும் வழியை அதன் வழியில் உருவாக்கித் தருகின்றன. ஆகவே முதலாமாண்டு படித்த அ’னா, ஆ’வன்னா தான் இன்றளவும் கைக்கொடுக்கும் அறிவு என்று சிந்திப்பதும் அதற்கு நன்றியுடையவராக இருப்பதும் தேவையற்றது.  அதே வேளை கோட்பாடுகள்/ தத்துவங்கள் மனித சமுகத்தின் அடிப்படையான வாழ்க்கையில் செய்திருக்கும் மிகப்பெரும் மாற்றங்களை நாம் புறக்கணித்துவிட முடியாது. புறக்கணிப்பது வரலாற்றை பிழையான முறையில் போதித்து விடும். வரலாற்றைக் கூர்ந்து அவதானிப்பதன் மூலமே நாம் மனித குலத்தின் மிக முக்கியமான அடைவுகளின் தன்மையை, நோக்கத்தையெல்லாம் விளங்கிக் கொள்ள முடிகிறது. அந்த நோக்கு இல்லாவிட்டால் வரலாறு/சமுக விஞ்ஞானப்பரம்பல் புரிந்து கொள்ளப்படும் விதம் மந்தமானதாகவே இருக்கும்.  ஆனால்ப்பாருங்கள், கணித விஞ்ஞானத்தில் மிகச்சிக்கலான ஒன்றை எளிய சூத்திரங்களால் விளக்குவோம். அந்தச்சூத்திரத்தின் தார்ப்பரியம் மட்டுமே விளங்கினால்க் கூட மிகத்துல்

எப்படிச் சிந்திப்பது?

தோழரொருவர் கீழ்வரும் மீமைப் பகிர்ந்திருந்தார். அதற்குப் பதிலாக நான் பின்வரும் ஒரு பதிலை எழுதியிருந்தேன். பெண்கள் புரட்சிகரமாக, முற்போக்காக சமுகச் சிந்தனையோடு செயற்படுவதற்கு எப்போதுமே மார்க்சும் லெனினும் பெரியாரும் மட்டுந்தான் காரணமில்லை. ஒடுக்கப்படும் எவருக்கும் அடக்குமுறைக்கு எதிராகச் சிந்திக்கும் திறன் வரும். அது பகுத்து அறியும் திறன். இவர்கள் எல்லோரும் சமுக மேம்பாட்டிற்காக கோட்பாடுகளையும் அனுபவங்களையும் தந்திருந்தாலும், இவர்களின் சமுகத்திற்கான உழைப்பு எக்காலத்திலும் புறக்கணிக்க முடியாததுமாக இருப்பினும், ஒவ்வொரு தடவை பெண் தடைகளை உடைத்து வரும் போது பெரியாரின் பேத்தி, மார்க்ஸின் இளவல் எனச் சொல்லுவது அவர்களின் சுயசிந்தனையை அடிப்பதைப் போன்றது.  எதோவொரு மூலையில் எதோவொரு கிராமத்தில் பிறந்து வளர்ந்த கல்வி வாய்ப்புக்கள் மறுக்கப்பட்ட ஒரு பெண் தன் பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும் எனத் தனித்துப் போராடுவாள். எதோவொரு மூலையில் எதோவொரு கிராமத்தில் பிறந்து வளர்ந்த கல்வி வாய்ப்புக்கள் மறுக்கப்பட்ட ஒரு பெண் தனக்கும் தன் சமுகத்திற்கும் நேர்ந்திருக்கும் ஒடுக்குமுறைய தனக்குத் தெரிந்த முறையில் எதிர்ப்பா

இலங்கையில் மதத்தலங்களில் குண்டுவெடிப்பு

முன்பை விட மக்கள் பக்குவப்பட்டிருப்பதாக உணருகிறேன். உணர்ச்சி அரசியலைக் கட்டவிழ்க்காமல் மனிதரோடு சக மனிதர்களாக கை கொடுக்கும் தேவையை உணர்ந்திருக்கிறோம். இதுவே நாகரீகத்தின், பகுத்தறிவின் வளர்சியாகும். மனித குலத்தின் வளர்ச்சியாகவும் இதைப் பார்க்கிறேன்.  அதே வேளை குறித்த ஒரு இனத்தின் மீதான, குறித்த ஒரு மதத்தின் மீதான காழ்ப்புகள் சிறுகச் சிறுக, பாதுகாப்புணர்வாயும், அச்சவுணர்வாகவும், வரலாற்றுப் பாடங்களின் படிப்பினை என்று கூறிக் கொண்டும் வெறுப்பும் துவேசமுமாயும் வெவ்வேறு பெயர் கொண்டு அலைகின்றன. அந்த இனத்தின், அந்த மதத்தின் மக்களையும் அதைக் குற்றவுணர்வோடு ஏற்றுக் கொள்ளவும் செய்து விட்டோம்.  சிந்தியுங்கள் மனிதர்களே! பாசிச அரசாட்சி நடக்கும் இந்த நாட்டில் இதுவரை காலமும் ஒரு சிறு துரும்பு அசைவதும் அரசாங்கத்திற்குத் தெரியாமல் இருந்திருக்கிறதா? இது மதங்களுக்கிடையிலான கலவரம் இல்லை. மதத் தீவிரவாதம் இல்லை. என்னுடைய இயலாமையைக் கைப்பற்றி, என் இயலாமையைக் கொண்டு என் பெயரைப் பாவித்து எங்கள் எல்லோரையும் அடக்கும் வழிமுறை இது! என்னுடைய பழமையான வழிமுறையில் இருக்கும் ஓட்டையைக் கண்டுபிடித்து என்னையும் என்