தோழரொருவர் கீழ்வரும் மீமைப் பகிர்ந்திருந்தார். அதற்குப் பதிலாக நான் பின்வரும் ஒரு பதிலை எழுதியிருந்தேன்.
பெண்கள் புரட்சிகரமாக, முற்போக்காக சமுகச் சிந்தனையோடு செயற்படுவதற்கு எப்போதுமே மார்க்சும் லெனினும் பெரியாரும் மட்டுந்தான் காரணமில்லை.
ஒடுக்கப்படும் எவருக்கும் அடக்குமுறைக்கு எதிராகச் சிந்திக்கும் திறன் வரும். அது பகுத்து அறியும் திறன்.
இவர்கள் எல்லோரும் சமுக மேம்பாட்டிற்காக கோட்பாடுகளையும் அனுபவங்களையும் தந்திருந்தாலும், இவர்களின் சமுகத்திற்கான உழைப்பு எக்காலத்திலும் புறக்கணிக்க முடியாததுமாக இருப்பினும்,
ஒவ்வொரு தடவை பெண் தடைகளை உடைத்து வரும் போது பெரியாரின் பேத்தி, மார்க்ஸின் இளவல் எனச் சொல்லுவது அவர்களின் சுயசிந்தனையை அடிப்பதைப் போன்றது.
எதோவொரு மூலையில் எதோவொரு கிராமத்தில் பிறந்து வளர்ந்த கல்வி வாய்ப்புக்கள் மறுக்கப்பட்ட ஒரு பெண் தன் பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும் எனத் தனித்துப் போராடுவாள்.
எதோவொரு மூலையில் எதோவொரு கிராமத்தில் பிறந்து வளர்ந்த கல்வி வாய்ப்புக்கள் மறுக்கப்பட்ட ஒரு பெண் தனக்கும் தன் சமுகத்திற்கும் நேர்ந்திருக்கும் ஒடுக்குமுறைய தனக்குத் தெரிந்த முறையில் எதிர்ப்பாள்.
எதோவொரு மூலையில் எதோவொரு கிராமத்தில் பிறந்து வளர்ந்த கல்வி வாய்ப்புக்கள் மறுக்கப்பட்ட ஒரு பெண் தன் மூன்றாவது சந்ததிக்குச் சொல்லவென படிப்பினைக் கதைகளை விட்டுச் சென்றிருப்பாள்.
ரோசா லக்சம்பேர்கோ, கிளாரா ஜெட்கினோ, அலெக்சாண்ரா கொலெண்டியோ, எல்லெனாரோ என்றால்க் கூட இந்த மீமை முழுமையாக ஏற்றுக் கொள்ளலாம்.
அதே வேளை அவர்களின் சமுகத்திற்கான அளப்பரிய உழைப்பை மறுக்க முடியாது.
ஒவ்வொரு தடவையும் சாதாரண மக்களின் முற்போக்கு முயற்சிகள் முன்னயவர்களைக் கொண்டு சமப்படுத்தப்படும் போது, இனிவரும் காலத்திற்கான புதிய சிந்தனையாளர்களை இழக்கிறோம்.
ஆனால்ப்பாருங்கல் நான் இப்படி எழுதியது பெரியாரை எதிர்ப்பதாக ஒருவருக்கும், மார்க்சை எதிர்ப்பதாக இன்னொருவருக்கும் பட்டிருக்கிறது.
மார்க்சையும் லெனினையும் சொன்னால் எரிச்சல் வருவதாக வலதுசாரிகளுக்கு அடிப்படைவாதிகளுக்கு எழுதும் அதே டெம்ளேட்டை என்னிடமும் கொண்டு வருகிறார்கள்.
யார் இவர்களை மறுத்தது? இவர்களுக்கு என்ன பிரச்சினை?
நான் எழுதியிருக்கும் கருத்து உங்களில் பலருக்கு பொருள் மயக்கத்தை தருமாயின் உங்கள் கண்ணோட்டம் மீது பிழை இருக்கிறது.
ஆனால் முன்னோடிகளைப் பற்றியும், அவர்களின் சமுக அரசியலைப் பற்றியும் கோட்பாடுகளைப் பற்றியும் நான் எதுவும் கதைக்காமலே இவர்களின் பெயரைச் சொன்னாலேயே மறுத்து அடிக்க ஓடி வரும் இத்தகையவர்களின் அரசியல்க் கோட்பாட்டின் மீதும் புரிதலின் மீதும் எனக்குச் சந்தேகம் எழுகிறது. வெறும் பிம்ப வழிபாட்டு அரசியலைச் செய்கிறார்களா?
இவர்களுக்குச் சொல்லப்படும் பெயர் தான் முக்கியம். எதற்காக சொல்லப்படுகிறதென்பது முக்கியமில்லை.
மேலும் நான் பல முன்னோடிப் பெண்களின் பெயர்களைக் குறிப்பிட்டிருந்தேன், அதைப்பற்றி ஒரு பேச்சையும் காணோம்.
புதிய சிந்தனையாளர்களை இழக்கிறோம் என்று நான் ஆதங்கப்படுவது மார்க்சையும் லெனினையும் பெரியாரையும் எதிர்ப்பதாக பட்டால், மார்க்சும் லெனினும் பெரியாரும் புதிய சிந்தனைகளை மறுப்பவர்கள் எனும் தொணியில் உங்கள் மனதில் எதுவோ பதிந்திருக்கிறது. அதை முதலில் களையுங்கள். எது கோட்பாடோ அதைக் கற்க முனையுங்கள் பிம்ப வழிபாட்டில் எதுவுமில்லை.
இன்னுமின்னும் புதிய சிந்தனைகளையும், புதிய சிந்தனையாளர்களையும் ஒவ்வொரு தனி மனிதரினதும் தெளிவும், பங்களிப்பையும்
இந்தச சமுகம் உருவாக்கிப் போடாமல் எந்தவித விடுதலையும் உருவாகிவிடாது.
நாம் எல்லோருமே இந்தச் சமுகத்தின் காவிகள்.
சிறிதாகவோ பெரிதாகவோ, பெரிதினும் பெரிதாகவோ இந்தச் சமுக அசைவியக்கத்தைத் தூண்டுபவர்கள்.
இங்கு இன்னொரு மிகப்பெரிய சமுகப் பாய்ச்சலை உங்களில் யாராவதும் செய்யலாம்.
அதற்காக உங்களை மட்டும் கொண்டாடிக் கொண்டிருக்கத் தேவையில்லை.
அதே வேளை அந்தப் பாய்ச்சலை நிகழ்த்திய நீங்கள் மிக மிக முக்கியமானவருந்தான்.
கொழும்பு தேசிய கலை இலக்கியப் பேரவையின் கடந்த மார்ச் மாதப் (2012) பாடிப்பறை நிகழ்வில் செய்யப்பட்ட இரண்டு கவிதைகளைப்பற்றிய நயப்பு இது. தோராயமாக நினைவில்லைஎன்றாலும், ஒரு குத்துமதிப்பாகப் பதிந்திருக்கிறேன். பலர் இது Remarkable என்றார்கள். அப்பிடியென்ன இருக்கெண்டு ஆவணப்படுத்திப் பாப்பமே எண்டு தான், வேற ஒண்டுமும் இல்லை :) இரண்டு கவிதைகளைப் பற்றி நயக்கச் சொன்னார்கள். என்னுடைய முதலாவது தேர்வு சில்வியா பிளாத்தினுடைய Resolve என்கிற அமெரிக்கக் கவிதை. அதை நான் தமிழ்ப் படுத்தியிருக்கிறேன், ஒருஉத்தேசத்துக்காக இரு மொழியிலயும் தரலாம் எண்டு இருக்கிறன். முதல்ல கவிஞரைப் பற்றிச் சொல்ல வேணும், சில்வியா பிளாத் (Sylvia Plath, 1932 -1963 ) ஒரு அமெரிக்கப் பெண் கவிஞர், புதின மற்றும் சிறுகதை எழுத்தாளர். எழுத்தாளராக புகழ் பெற்ற பின்னால் தனது சக கவிஞரான டேட் ஹியூக்சை மணந்தார். உளச் சோர்வினால் நெடுநாட்கள் பாதிக்கப்பட்டிருந்த பிளாத் தன் கணவரை பிரிந்து சில ஆண்டுகள் வாழ்ந்தார். 1963ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது வாழ்வு மற்றும் தற்கொலை குறித்து பல சர்ச்சைகள்
கருத்துகள்
கருத்துரையிடுக