Skip to main content

Posts

Showing posts from 2009

காகம்

                                                                                அண்டைக்கு எதோ விரத நாள் .சனி விரதம். அவள்பாடிக் கொண்டிருக்கிறாள் . அவள் பாடிக் கன காலம் .                ஒரு சுமூக கானம்.இதுவரைக்கும் எச்சந்தர்ப்பத்திலும் இது போல உணர்ந்ததே கிடையாது. இயற்கையின் கல்பிதம்!              காற்று, மழை, இடி, புயல் எல்லாமுமாய்க் கலந்தது. ஒரு மெல்லிய பூவினது மணம் நுகரக் கற்றுக் கொடுப்பது போல அந்த நரம்புக் கருவி நீண்ட நேரம் ஓசையாகிக் கொண்டேயிருந்தது .                  சாமியறையின் விளக்கு நூர்ந்தது கூடத் தெரியாமல் ....வானம் பூமியிலிருந்து விண்டு வெடித்து தனியே பிளவு படுவது தெரியாமல், பாடிக்கொண்டே இருந்தாள்.               இயற்கை அவளை முற்றிலுமாக வசீகரித்திருந்தது. அவளும் இயற்கையும் ஒன்றே தான்.   பாடுகின்ற பொழுதில் அவள் தான் கடவுள்! அவள் பாட , கண்களில் கண்ணீர் தளும்புகிறது.           'இப்படியே பாடீட்டிருந்தா செத்திருவாவா மாமா இவ...?   .................இல்லடா, அவ பாடாட்டாத் தான் இந்த வையமே செத்துடும். புல், பூண்டு, பூச்சி, மனுசர், விலங்கு ஒண்ணுமே இந்த வை

இரண்டு கவிதைகள் ; Two Poems

                                                                                                       ஐந்தாம் படைக் காதல் எனக்குத் தெரிந்த வரைக்கும் கடல் ஆர்ப்பரிக்கத் தொடங்கியது- என் அகாலத்தின் போதே மெல்லிய சாம்பலில்- சுடுகின்ற தணல் தாங்கும் குளிரைப் போல- இருக்கிறது- எனக்குள்ளான காதல். இது, வகையறா வகைக்குரியது. இசையினது சாரலில் தூணோரமாக தழுவியபடி நிற்கின்ற நாணலைப் பிடித்தபடி, செத்துப் போன மஞ்சளிளைகளைப் பார்க்கையில்- என், காதலின் ஆண்டு வளையம் தெரிகின்றது. புலப்பட்டுப் போக, இறுதியில் மேகங்களைப் பிழிந்து, சாறு கொண்டுவந்து, காயங்கண்ட இடங்களில் தெளிக்க, சில்லிடுகிறது தேகம்- அக்கினிக் குமிழியின் ஆரை தீண்டியது போல, மௌனக்குடிலிலிருந்து வரும் ஆபோகிச் சங்கீதத்தில்- அவர்களிருக்கிரார்கள், வேட்டி நிறைந்த பூக்களுடன் அவளிருக்கிறாள். தீவிரமான விரகத்தின் முடிபில்- போய்க் கேட்கிறேன், ஐந்தாம் படைக் காதலை- ஆயுதந்தந்துதவும் படிக்கு... அவர்களின் , பிரிக்க முடியாத பல்லிடுக்கிலிருந்து சிரிப

நன்நிலை வாதம்.

மறை பொருள். சம்பவங்களைப் படிவகுக்கை செய்வது தொடர்பான ஆய்வு. தரவுகளை உதிரி உதிரியாகப் பிரித்துப் போட்டு ஒரு இலட்சிய வீழ்ச்சியை எதிர் நோக்கச் செய்வது நிகழ்வுகள், என்பவை எதற்கும் பிடிப்புக்கலல்லாத சிருட்டி பேதங்கள். இவை நேரத்தில் தங்கியிருக்கின்றன. ஆனால், சம்பவங்கள், நிகழ்வுகள் இரண்டுமே காலத்தில் தங்கியிருக்கின்றன. பரிணாமக் குன்ரலை ஒரு வகை யதார்த்தப் பின்னிணைப்பான ஒரோழுங்கில் படியச் செய்து, தடயங்கலாக்கலாம். இவை சம்பவங்களாகா; நிகழ்வுகளாகா சற்றே வேறு பட்டவை, வரலாற்றின் பாகங்கள். சம்பவங்களாயும் நிகழ்வுகளாயும் உரு வார்ப்புப் பெற்றவை செயற்கையான நேர்கோட்டுத் தளத்தில் இயங்குகின்றன. வார்த்தைகளைக் குழப்பிப் போடுவது போல, இது, ஒன்றுக்கொன்று முரண் தத்துவத்தை தருகின்றது . இனி, குலசாமி சொன்ன காதை. வீடு திரும்ப எத்தனிக்கின்ற எனக்கு காயங்களை மாற்றிவிடத் தோணுகிறது முதலில் சரிவர. பெருமிதமாக இருக்கின்றது, எனக்கான கேள்வியில் நாளிதழ்கள் விற்பனையாகுவது குறித்து - ஆயினும் சொற்ப உயிருடன் தனும் வீடு நல்கும் எனக்கு, குழந்தையின் கேள்விக்கு பதில் தெரியவில்லை.

நீலவானத்தின் தொன்நூற்றோராவது பிரிப்பின் நிழல் ...

வானத்தின் வசந்தத்தை யாரோ விடுத்துச் சென்ற படகில், மகாவலி ஓடிக் கொண்டிருந்தது. அதன் மருங்கில் கிளைத்த மரங்களை வீடு கட்டிக் கொண்டிருக்கும் குச்சு வீடுகளை வாழ்தலின் உச்ச இடமாக நான் கனவுகண்டுகொண்டிருந்தேன். வாரி இறைக்கும் மணல் டக்ற்றறொன்றில் பணி புரிபவளாக இருக்க விரும்பினேன். நதியின் புல் முளைத்த திட்டுக்களில் கங்கூன் அரியும் பெண்ணாக இருக்க என்னை மிகவும் நேசித்தேன் ஒரு கோடை காலத்தில் காய்ந்து கிடந்த மகாவலியின் சொறிச் சிரங்கை கைகளால் பிளந்து விட்டுக் கொண்டே கற்கள் கடைந்து இரத்தினக்கல் பொறுக்கிக் கொள்ளவும், பொழிதல் ஓய்ந்த ஆற்றுப்படுக்கையில் 'சாயிலா' போல நீந்திக் கொண்டு போகவும் ஆசைப்பட்டேன் ஒ..சாயிலா... எனக்கு நீச்சல் சொல்லித் தந்தவள்... அவளுக்கு நீண்ட கூந்தல்... மகாவலியின் நீளத்தில் பாதி இருப்பதாக பீற்றிக் கொண்டாள் ! கூந்தலின் தேவை பற்றி அறிந்திராத எனக்கு,  ஒரு பெடியனைப் போல இருப்பது சவுகரியமாகவிருந்தது, இருப்பினும் சாயிலா நீண்ட கூந்தலுடைய ஒரு முசுலீம் பெண் ! சாயிலா... நீச்சல்க் காரி சாயிலா போல் நீந்துவது கடினம் ! சாயிலா போ