Skip to main content

Posts

அது அல்லது இது...

ஒ ரு காகம் கிழக்கிருந்து மேற்காக கரைந்து கொண்டு வெள்ளை எச்சம் போட்டுவிட்டுப் போன நாளில், வீட்டில் அரிசிபொங்கவில்லை. உலை கொதிக்கவில்லை. அம்மாச்சியும், மாமியும் அழுது வடித்துக் கொண்டிருந்தார்கள். ரங்கன் மாமா சைக்கிளை எடுத்துக் கொண்டு போனவர், போனவர் தான் இன்னுமே வரேல்ல. அப்பா கொழும்பால வீட்ட வந்துட்டார். சிங்கம் மாமாவும், மூர்த்தி அங்கிளும் எல்லாத் திக்குக்கும் போயிட்டினம், ஒரு தகவலும் வரேல்ல.   கண்ணைச் சுழட்டிக் கொண்டு பசியும், தண்ணித் தாகமும் எடுக்குது. நான் வெள்ளப் பிள்ளையா குளிச்சிட்டு, படம் கீறிக் கொண்டிருக்கிறன். என்னை யாருமே கவனிக்கேல்ல. அப்பா கொழும்பால கொண்டுவந்த போட்டெல்லோ அப்பிடியே கிடக்குது. அப்பாண்ட கொழும்பு பாக்கை இன்னும் யாருமே திறக்கேல்ல. அம்மாவும், பூமணிச் சித்தியும் கிணத்துக் கட்டில நிண்டு குசுகுசுத்துக் கொண்டிருக்கினம். பூமணிச் சித்தி அழ வெளிக்கிடுறா. அம்மா அங்க நிண்டு போக்குக் காட்டிக் கொண்டிருக்கிறா. அக்காவும் வீட்ட இல்ல. எப்பயுமே அடிச்சு விளையாடுற அண்ணாவும் அண்டைக்குச் சண்டைக்கு வரேல்ல.   நான் அண்ணாவிண்ட கலர்ப்பெட்டியை எடுத்துத் தான் படம் கீறிக் கொண்

ஒரு யூதப்பாடலும் ஆங்கிலப்பாடலும்

இசையைப் பற்றி பேசுவதைப் போல, இசைக் கலைஞர்களைப் பற்றி பேசுவதும் அற்புதமானது.அந்த வகையில் இசைக்கலைஞனின் வறுமை பற்றி பேசும் படம் தான் Inside Lewis Davis. ஆப்பிரிக்க எத்தியோப்பிய மக்களின் Blues Music, பூர்வீக செவ்விந்தியர்களின் Traditional Tri bal Music, Waila, Rock போன்றவற்றின் கலவையாக அமெரிக்காவின் இசை  வந்த வழி அறியலாம்.  கீழைத்தேய நாடோடி மக்களுக்கு பிடில் எவ்வாறு கதை கூறியதோ, மேலைத்தேய நாடோடிகளின் கதையை கித்தார் கூறுகிறது. இப்படியொரு கித்தார் இசைக்கலைஞனைப் பற்றி வந்தஇந்தப்படம் grand prix -13 விருதை தழுவியது.  T Bone Burnett நின் இசைக்குரியது இந்தப்பாடல். இதில் வரும் மெல்லிய கித்தாரைக் கவனியுங்கள்.  //Muddy river runs muddy and wild You can't give a bloody for my unborn child Fare thee well, my honey, fare thee well// to listen the song Andalusian classical music, யூதர்களதா, முஸ்லீம்களுடையதா என்று அறியப்படாத, ஒன்பதாம் நூற்றாண்டுக்கிரிய இசை வடிவம். வட ஆப்பிரிக்காவின் மொராக்கோ இதன் பிறப்பிடமென்று ஒரு சாராரும் டுனிஷியா,லிபியாவின் மகிழ்ச்சியின் சமாதான இசையின் வடிவம்

பழங்கவிதைகள் சில ...

பழங்கவிதைகள் சிலவற்றை ப்ளாக்கில் பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைக்கிறேன்.இவை அனைத்துமே 2007ஆம் ஆண்டுக்கு முற்பட்டவை. பள்ளிக்கூடக் காலத்தில் எழுதப்பட்டவை.  தொலைந்து போன சில தடயங்களைத் தேடித் பகிந்துகொள்வதில் உள்ள ஆவணப்படுத்துகை, ஒருவகை நிறைவானதும், இன்பமானதும் கூட. இன்றைய எழுத்துக்கும் அன்றைய எழுத்துக்குமிடையிலான இடைவெளியை இன்னமும்  வியந்துகொண்டிருக்கிறேன். நிலா.லோ 2012 இந்தத் தொப்பி....... இந்தத் தொப்பி யாருக்குப் பொருத்தமென்று இளையோரையெல்லாம் கேட்டு வைத்தான். இன்னோரன்ன இழவுகளாலே இனிப் பொருத்தமென்றால் இது தான் என்றான். அவனைக் கண்டவரெல்லாம் அது அவனுக்குத் தானென்றார். இவனைக் கண்டவரெல்லாம் அது இவனுக்குமென்றார். ஒருவரும் தனக்கென்று சொல்லி தலை கொடாமல் சென்ற போது- அந்தோ அது வந்துதலையில் வீழ்ந்து -தெறித்து, முன்னோர் அலறி முறை கெடும் வண்ணம்  வீணாய்ப் போனார் எம்மின மக்காள்! 2004 கற்புடை பாடலொன்று! பூனைக்குட்டிகளைச் சாம்பலக் கிடங்குக்குள் வளர்க்கும் பெண்களைப் பற்றி கற்புடை பாடலொன்று பாடவா? இறுதி முறையாக துயரப்பறவை வட்டமிட