Skip to main content

Posts

ஒரு கதை :)

ருக்மால் செனவிரெத்தின ஆகிய கணவனும் துலாஞ்சலி பியுமிகா வன்னப்புகே ஹிமேஷ் ருக்மால் செனவிரெத்தின ஆகிய மனைவியும்.... இ ண்டைக்குக் காலமை நடந்த நிசக் கதை, , தொழில் நிமித்தமா அலுவலகத்தில் (வருசத்தில ஒரு நாள்த் தான் தொழிலுக்கே போறது, அதில தொழில் நிமித்தமா  வேறயா எண்டு கேக்கப்படாது  ) மனைவி -கணவன் இருவருக்கும் விவாக இரத்துக்கான கவுன்சிலிங்  வழங்க வேண்டி இருந்தது. அவர்கள் தம்பதிகளாகி   ஏழு வருடம். இவ்வளா காலமும் எப்பிடி ஒண்டாக் குப்பை கொட்டினாங்களோ எண்டு மூக்கில விரல் வைக்கிரளவுக்கு   அலுவலக அறைக்குள் நுழையும் போது சென்சார் செய்யப்பட வேண்டிய வார்த்தைகளோடு வந்து சேர்ந்தீச்சினம். சில வார்த்தைகள் எங்கையோ எனக்குக் கேட்டாப் போல இருந்தாலும் சரியா விபரம் அறிய முடியேல்ல, எனக்கொரு நண்பர் இருக்கிறார்,சென்சார் வார்த்தைகளில வல்லவர் ; இனிமேல்,  ஏதாவது கிரகக் கோளாரில அவரோட  கதைக்க முடியிற போது , அவரிட்டைக் கேட்டால்ச் சொல்லுவேர்   என்று அவற்றைக் கண்டும் காணாததுமாகக் குறிப்பெடுத்து வைப்பமா எண்டு யோசிக்கிறதுக்குள்ள , ரெண்டு பெரும் வந்து சேர்ந்தீச்சினை. ஏறத்தா

பொதுவுடைமைப் பாடலொன்று!

முத்தமொன்று முடியும் போது காதல் முடிஞ்சு போகுது -கண்ணையா ! உன் முதுகுத் தண்டில் வீரம் பாய்கையில் அதுவும் பழசாய்ப் போகுது -சின்னையா ! பித்தம் ஏறித் தலைக்கணம் கூடையில் வாழ்க்கை சிதைஞ்சு போகுது -கண்ணையா ! நித்தம் நாமேன் நிமிர்ந்து எழுந்து- யுத்தம் செய்தால் என்னய்யா ? அச்சம் பயிர்ப்பு அடிமைகள் உடைப்பு அவரவர் அளவுக்கு ஏத்தாப் போல் சித்தம் போன போக்கைக் கொஞ்சம் சிதைச்சு வெச்சா என்னய்யா ? அடுத்தவர் பிழைப்பும் அடிமைக்குச் சோறும் அதுவும் நம்ம வாழ்க்கை தான்- அரமணை போல இருக்கிற வாழ்க்கை அதுவும் நமக்கு கீழை தான் ! இருக்கிற சோற்றை இரவலா வாங்கி இனிக்கிற வாழ்க்கை எதுக்கையா? இனி, இனிக்கும் இறுக்கும் எல்லாம் சிறக்கும்-சொன்னால் கொஞ்சம் கேப்பாயா ? ஓடுற நதியில் ஒரு பகல் தின்று ஒடுக்கும் மனிதரை ஓசையில் வென்று ஆடுற மழயில் அரை வரை நனைஞ்சு அங்கொரு தீயைச் சமைப்போமே ! மூழ்கிற வெள்ளம் தலை வரை வந்தால் மொண்டு கடலைக் குடிப்போமே ! சாகிற வரையில் சரிசமனாக சரிஞ்சும் வளைஞ்சும் கொடுப்போமே ! போகிற பாதை புதுசெனத் தெரிஞ்சால் புலரும் வரையில் க

Abandoned - Dead Leaves

  கொழும்பு தேசிய கலை இலக்கியப் பேரவையின் கடந்த மார்ச் மாதப் (2012) பாடிப்பறை நிகழ்வில் செய்யப்பட்ட இரண்டு கவிதைகளைப்பற்றிய நயப்பு  இது. தோராயமாக நினைவில்லைஎன்றாலும், ஒரு குத்துமதிப்பாகப் பதிந்திருக்கிறேன். பலர் இது Remarkable என்றார்கள். அப்பிடியென்ன இருக்கெண்டு ஆவணப்படுத்திப் பாப்பமே எண்டு தான், வேற ஒண்டுமும் இல்லை :) இரண்டு கவிதைகளைப் பற்றி நயக்கச்  சொன்னார்கள். என்னுடைய முதலாவது தேர்வு சில்வியா பிளாத்தினுடைய  Resolve என்கிற அமெரிக்கக் கவிதை. அதை நான் தமிழ்ப் படுத்தியிருக்கிறேன், ஒருஉத்தேசத்துக்காக இரு மொழியிலயும் தரலாம் எண்டு இருக்கிறன். முதல்ல கவிஞரைப் பற்றிச் சொல்ல வேணும், சில்வியா பிளாத் (Sylvia Plath, 1932 -1963 ) ஒரு அமெரிக்கப் பெண் கவிஞர், புதின மற்றும் சிறுகதை எழுத்தாளர். எழுத்தாளராக புகழ் பெற்ற பின்னால் தனது சக கவிஞரான  டேட் ஹியூக்சை மணந்தார்.  உளச் சோர்வினால்  நெடுநாட்கள் பாதிக்கப்பட்டிருந்த பிளாத் தன் கணவரை பிரிந்து சில ஆண்டுகள் வாழ்ந்தார். 1963ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது வாழ்வு மற்றும் தற்கொலை குறித்து பல சர்ச்சைகள்

கால முடிவில் வாழ்வைச் சந்தித்தல்

(கால முடிவில் வாழ்வைச் சந்தித்தல் - 17-06-2012  அன்று நடந்த தேசிய கலை இலக்கியப் பேரவையின் ஆண்டுவிழாக் கவியரங்கத்தில் வாசித்தது ) பி தாவே, நிச்சயம் நடக்கப்போகும் மரணத்தை, அது எப்போது நேரிட்டாலும், உமக்குள்ளே அதனை ஜெயத்துடன் சந்திக்க பெலன் தாருமென உம்மைத் துதிக்கிறேன்.ஆமென்! என் ஆன்மாவைப் பாதாளத்தில் விட்டுவிடமாட்டீர்; உமது பரிசுத்தரை அழிவைக் காணவிடமாட்டீர்; உமது சமூகத்தில் எனக்கு நிறைவான இறுதி மகிழ்ச்சியைக் காட்டுவீர்!!! உமது குறிக்கோள் எதுவாகினும் என்னை கைமீற  விடமாட்டீர்! உமது லட்சியத்தை என் மேல் திணிக்க மாட்டீர்! உமது வாழ்வாதாரங்களை நான் அழித்ததாய் நினைக்க மாட்டீர் ! எனது சாவில் உம் பங்கை உலகுக்குக் காட்ட மாடீர் ! ஆகையால் எனது ஸ்தோத்திரங்களை வலுக்கட்டாயமாகப் பெற்றுக் கொள்வீர் ஆண்டவரே, தனது முடிச்சுக்களில் இருந்து தானாகக் கழன்று போகும் தன்னையே மூச்சுத் திணறடிக்கும் என் வாழும் உரிமையைப் போல என் அகச்சுதந்திரம் போல இன்னொன்றைக் கண்டு பிடிக்கும் வரை -எனது கால முடிவை , வரை முறை/ மறு பரிசீலனை செய்வீர்களா ? தன் பாதையைக் கண்டறிந்த