முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எது புரட்சி?

அதிகாரம் மக்களை எவ்வாறெல்லாம் அமுக்கிறது-சுரண்டுகிறதென்று "வெறும்" இடதுசாரிகளாயும் "வெறும்" முற்போக்காளர்களாகவும் இருந்தால்த் தெரியாது. அதிகாரம் சுரண்டும் வழிவகைகளைத் தெளிவாகத் தெரிந்து அதற்கு மாற்று உருவாக்கவும் அவ்வதிகாரத்தினை உடைக்கவும் தெளிவும் சிந்தனையும் கல்வியும் உடையவர்கள் தேவை. இந்த "வெறும்" ஆட்கள் சாதாரண உழைக்கும் மக்களைப் பணயம் வைத்து அவர்களுடைய சிதிலமடைந்த வாழ்க்கையை இன்னும் சின்னாபின்னமாக்கி தன்னை விட்டால் யாரும் அவர்களைக் காப்பாற்ற முடியாதென்ற எண்ணத்தை உருவாக்கி நாயக பிம்மத்தைத் தோற்றுவித்து, அதிகாரத்திற்கு எதிராக அப்பாவி மக்களைப் பிணை வைத்து புரட்சிக் குளிர் காய்வர். புரட்சி என்பது, கூலித் தொழிலாளர்களை சம்பள உயர்வுக்காகத் தூண்டி விட்டு அவர்கள் சம்பளமில்லாமல் குளிரிலும் வெயிலிலும் வருசக்கணக்கில் போராடவிட்டு கொந்தளிப்பதல்ல... அவர்கள் அவர்களுடைய நியாயமான கோரிக்கையை வைப்பதை ஆதரித்து, அவர்களுடைய போராட்டத்தையும் ஆதரித்து... அதிகார மட்டத்திற்குக் கிட்டேயுள்ள மூளை உழைப்புச் செய்யும் தொழிலாளர்கள் திரண்டு அதிகார மட்டத்தை குலைத்தும், அடித்தும், சரி செய்தும் விடுவதுமாகும். அழுத பிள்ளை தான் பால் குடிக்கும் என்று அரைப்படித்த தனமாக மேற்கோள்களை நம்பி இருப்பதல்ல. 1000 உடல் உழைப்புத் தொழிலாளர்கள் 1000 நாட்களில் செய்யும் வேலையை, 10 நாட்களில் மூளை உழைப்பாளர்களால் செய்ய முடியும். அதற்குக் காரணம் அவர்கள் மட்டுமே திறனானவர்கள் என்பதல்ல, இந்தச் சமுகக் கட்டமைப்பு ஒரு சாராருக்கு மட்டும் அப்படிச் சாத்தியமாகியிருக்கிறது என்பதும் அதை மாற்ற வேண்டும் என்பதற்காகவுமாகும். ஆனால், நாயக பிம்பம் தேடும் அரை குறை இடதுசாரிகள் உடல் உழைப்பாளர்களே ஒன்று சேருங்கள் என்பார்களே ஒழிய, நீங்களும் வாருங்கள் என்று மூளை உழைப்பாளர்களைச் சேர்க்க மாட்டார்கள். ஏனென்றால் குட்டு அம்பலப்பட்டுவிடும்! எவ்வளவுக்கெவ்வளவு சுய சிந்தனையுடையவர்களைப் புறக்கணித்து அப்பாவி சிந்திக்க நேரமும் சமுக சூழ்நிலையுமற்ற மக்களிடம் போய்ச் சேருகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நாயக பிம்பம் கட்டமைக்கப்படும். ஏமாற்றிப் பிழைக்கலாம். வரலாற்றை மட்டும் வைத்து ஓட்டலாம். அதிகாரம் தொழிநுட்பத்தைக் கொண்டுவந்தால், அத்தொழிநுட்பம் மூளை உழைப்புச் செய்யும் உழைப்பாளர்களால் உருவானது. மூளை உழைப்புச் செய்யும் ஒவ்வொரு உழைப்பாளரும் மக்களரசியல், அதிகார அரசியல் பற்றிய சிந்தனை வாய்க்கப்பட்டவராயின் மக்களுக்கெதிரான மக்களைப் பணயம் வைக்கும் எந்தவொரு திறனும் தொழிநுட்பமும் அதிகாரத்தைத் தகர்த்துப் போகும் நாள் அதிகமில்லை! தகர்ந்து போனாற்போல உடனே பாலும் தேனும் கொட்டாது. அந்த நிலையிலிருந்து அடுத்த கட்டத்தை நோக்கி நகர நம்மிடம் திட்டங்களும் திறனும் அறிவுந் தேவை. (இதனை இன்னும்வகைப்படுத்தலாம் எளிய வாசிப்பிற்காக எளிய உதாரணங்கள் தந்திருக்கிறேன்) ஒரு பக்கம் மட்டும் நகர்வதால் இச்சமுகம் இயங்குபடாது. இரு பக்கமும் இயங்க வேண்டும். ஒரு பக்கத்தை நிறுத்தி விட்டு அடுத்த பக்கத்தை இயங்கச் சொல்லவில்லை. சேர்ந்து இயங்குதலையும், வாய்ப்புக் கூடியவர்களை இன்னமும் துரிதப்படுத்துவதையும் பற்றிச் சொல்லுகிறேன். "அறியாமையில் வைத்திருக்கப்படும்" சாதாரண மக்களிடம் அதிகாரம் கைவரும் நாள்த் தான் புரட்சியின் பொற்காலம் என்று பிதற்றுவதை கொஞ்சம் சிந்தியுங்கள். அதிகாரம் யார் கையில் கிட்டினாலும் அது மோசமானது. அதுவும் சிந்த்திக்கப் பழக்காமல் அதிகாரம் வைத்திருந்த மக்களிடம் அதிகாரம் கிடைத்தால்... கதை விடுவதற்கும் பேக்காட்டுதலுக்கும் ஒரு அளவு இருக்க வேண்டும். பல இடது சாரிகள்/ சமுக நலன் விரும்பிகள் முதலில் கற்கத் தொடங்க வேண்டும். வரலாற்றை அல்ல...வரலாறு இப்படித்தான் இருந்தது எனும் வரைபை வரலாற்றைக் கற்காமலேயே வரையவும் விளங்கவும், மாற்றியமைக்கவும். ஆனால் இவர்களில் பெரும்பாலானவர்கள் அறிவு எனும் ஆற்றலைக் கண்டால் அது மக்கள் விரோதமானது என்று பரப்பி வருகிறார்கள். கணினி வரும் போது சிந்தனையற்ற பல இடதுசாரிகள் அதை எதிர்த்துப் போராடத்தொடங்கின கதை நாம் அறிந்ததே! அறிவு எனும் திறன் எல்லோருக்குமானது. அது தன்னைத்தான் புதுப்பிக்கும் போது அது பற்றி அறியாதவர்களுக்கு, அது பற்றி அச்சமூட்டிவிடுவது ஒரு சுரண்டல் மனநிலை. அவ்வறிவுத் தொகுதியை மக்களுக்குச் சாதகமாக நகர்த்தவும் துல்லியமாக்கும் பொருட்டும் நாம் நம்மைத் தயார்ப்படுத்த வேண்டும். அத் தயார்ப்படுத்தல் அதிகாரத்தின் வேட்டைக்குள் அவ்வறிவுத் தொகுதி சிக்காமல்ப் பாதுகாக்கும். அதற்கு அறிவு எனும் திறனுடையவர்களை உருவாக்கியும் வளர்த்தும் விட வேண்டும். அச்சமூட்டி கண்ணீர்வடித்து ஆளைச்சேர்ப்பது மிக மிக மோசமான சுயநல அரசியல் முதலாளித்துவ அதிகாரம் தன் தேவைக்காகவே புதிய அறிவுத் தொகுப்புக்களைக் கொண்டுவருகிறது ஆனால் அதனைத் தொகுப்பவர்கள் சாதாரண மூளை உழைப்பாளர்களே! அவர்களுக்கு அடிப்படைத் தேவைகளை விட அதிக வசதிகள் இருக்கலாம் ஆனால் அவர்கள் தம் மூளை எனும் உடல் உறுப்பினால் உழைப்பவர்கள் தான். யாரிலிருந்தும் மேம்பட்டவர்களல்லர். அவர்களை அன்னியப்படுத்தி வைத்து உண்மையான சமுகத் தேவையைப் பற்றி உரையாடும் போது அவர்களைப் புறக்கணித்து குட்டி முதலாளிகளைப் போல உணரச் செய்ய வைப்பது திட்ட மிட்ட சுரண்டல். உடல் உழைப்பாளர்கள் vs மூளை உழைப்பாளர்கள் என வரைபைக் கீறுவது வேறு யாருமல்ல சுயநலம் மிகுந்த பல சமுக சிந்தனையாளர்கள். நான் பார்க்கும் பல இடதுசாரிகள். பொது எதிரியை( இப்பதமே பிழையனது) அடையாளம் காணாமல் மாற்றீடாகப் பயன்படுத்துவது கேவலமானது. எமக்குக் கிடைத்திருக்கும் துரித இயங்கியல் பாய்ச்சல்களை வேண்டுமென்றே ஆறப்போடும் செயல். இவ்வளவிற்கும் என்னையும் இடது சாரி என்றே அடையாளப்படுத்துகிறேன். முதலில் நான் சார்ந்த விமர்சனத்தை நான் ஏற்கவும் முன் வைக்கவும் தயங்க மாட்டேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Abandoned - Dead Leaves

  கொழும்பு தேசிய கலை இலக்கியப் பேரவையின் கடந்த மார்ச் மாதப் (2012) பாடிப்பறை நிகழ்வில் செய்யப்பட்ட இரண்டு கவிதைகளைப்பற்றிய நயப்பு  இது. தோராயமாக நினைவில்லைஎன்றாலும், ஒரு குத்துமதிப்பாகப் பதிந்திருக்கிறேன். பலர் இது Remarkable என்றார்கள். அப்பிடியென்ன இருக்கெண்டு ஆவணப்படுத்திப் பாப்பமே எண்டு தான், வேற ஒண்டுமும் இல்லை :) இரண்டு கவிதைகளைப் பற்றி நயக்கச்  சொன்னார்கள். என்னுடைய முதலாவது தேர்வு சில்வியா பிளாத்தினுடைய  Resolve என்கிற அமெரிக்கக் கவிதை. அதை நான் தமிழ்ப் படுத்தியிருக்கிறேன், ஒருஉத்தேசத்துக்காக இரு மொழியிலயும் தரலாம் எண்டு இருக்கிறன். முதல்ல கவிஞரைப் பற்றிச் சொல்ல வேணும், சில்வியா பிளாத் (Sylvia Plath, 1932 -1963 ) ஒரு அமெரிக்கப் பெண் கவிஞர், புதின மற்றும் சிறுகதை எழுத்தாளர். எழுத்தாளராக புகழ் பெற்ற பின்னால் தனது சக கவிஞரான  டேட் ஹியூக்சை மணந்தார்.  உளச் சோர்வினால்  நெடுநாட்கள் பாதிக்கப்பட்டிருந்த பிளாத் தன் கணவரை பிரிந்து சில ஆண்டுகள் வாழ்ந்தார். 1963ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது வாழ்வு மற்றும் தற்கொலை குறித்து பல சர்ச்சைகள்

ஆண் பெண் பாலினப் புரிந்துணர்வும், பெண்ணின் தளமும், பண்பாட்டுத் தளத்தின் நிறுவனமயப்படலும்.

                                                              உ யிரியல் ரீதியாக இப்பிரபஞ்சத்தில் ஆண் பெண்,  இடை நிலைப்பாலினர் என மூவகைப் பாலினம் மனிதர்கள் எனும் இனப்பிரிவில் காணப்படுகின்றது. [இனம் என்பது, ஒரே குறிப்பிட்ட நிலப்பரப்பில் பொதுவான பண்பாட்டுடன் வாழக்கூடிய பொது இயல்புடையவை ] இந்த மூவகையில் ஆண் , பெண் எனும் இரண்டு பாலினங்கள்  மனித உலகின் இனவிருத்திக்கும்,அவற்றின் நிலவுகைக்கும் ஆதாரமாயுள்ளதால் அதிக முக்கியத்துவம் பெறுகின்றது. இவை இரண்டும் இயல்பாகவே ஒன்றை ஒன்று ஆக்கிரமிக்கவும், ஒன்றை ஒன்று ஆதரிக்கவும் வார்ப்புப் பெற்றவை. ஆண் மட்டும் உள்ள ஓர் சமூகத்தை கற்பனை பண்ணிப் பார்க்கையில் சமுகத்தில், பெண் அமர்த்தப்பட்டுள்ள இடமும், பெண் மட்டுமே உள்ள சமூகத்தைக் கற்பனை பண்ணிப் பார்க்கையில்  ஆணின் சமூக இடமும் தெளிவாகக் கூடியவாறு இருக்கும்.  இதில் மனிதன் வகுத்த பண்பாடு என்பது ஆண் -பெண் என்கிற இணைகளின் இயற்கைக்கும் , சமூகத்துக்கும் இடைப்பட்ட மாற்றுமையாகும். அல்லது பிறிதொரு கட்டமைப்பு ஆகும். பண்பாடு என்றால் என்ன என்று பார்த்தோமாகில்,  மக்கள் கூட்டம் கணக் குழுவில் இருந்து இனக்க

குழந்தைகளுக்கான நவீன தமிழ்ப் பெயர்கள்

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தல் எனும்போது, இவ்வளவு காலமும் வைத்த பெயர்கள் தமிழ்ப்பெயர்கள் இல்லையா எனும் கேள்வி எம்மில் பலருக்கு எழும். உங்கள் பெரும்பாலானோர் தமிழ்ப்பெயர் என்று எண்ணிக்கொண்டிருக்கும் உங்கள் பெயரை வட இந்தியக் கலப்பு,சமக்கிருத கலப்பு,ஐரோப்பிய,அரேபியக் கலப்புடனான பெயராக இனங்காணுவீர்கள்.  தமிழில் பெயர் சூட்டுவது இனத்துவேசம் உள்ள செயலா? :P இனத்தைக் கொண்டாடக் கூடிய செயல். மறத்தமிழன் என்று அடைமொழி இட்டுக்கொண்டு உலாவுவதை விட அழகான செயல் என்று எண்ணுகிறேன். இந்த அடையாளம் மிக அழகானது.  அண்மையில் நிறையப் பேர் தமிழில் குழந்தைகளூக்கான நவீனமான பெயர்கள் வேண்டும் என்று கேட்டிருந்தார்கள். தமிழில் பெயர்கள் பழமையானவையாக இருப்பது கூட இக்காலத்தோரின் தெரிவுக்குட்படாமைக்கு ஒரு காரணமாகும். பெண் குழந்தைகளுக்கான பெயர்கள் சிலவற்றை தொகுத்திருக்கிறேன்.சிலவற்றை கண்டும் பிடித்திருக்கிறேன். ( பிற்காலத்தேவைகளுக்கு ;)  ) வினைச்சொல் பெயர்கள் அஞ்சா ஆராதி ஆனந்தி  சலனி கோளறா இசி இனி தேயா மேதா வேயா வேகா மின்னு மிதவா தெகிழா நெகி