முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட் 7, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சமுதாய வாழ்க்கை

நண்பர் ஒருவர் நான்கு மாதக் குழந்தையை சினமா அரங்கிற்குக் கூட்டி வந்த பெற்றோரை அக்கறையுடன் விசனப்பட்டிருக்கிறார். குழந்தை வீரிட்டு அழுதிருக்கிறது. இப்படி நானும் நினைத்திருக்கிறேன். எதற்காக குழந்தைகளை பெரியவர்கள் புழங்கும் இடத்திற்க்கு அழைத்து வருகிறார்கள் என, ஆனால் இக்கருத்தைச் சொல்லுவதற்கு முன்னர் நாம் சில விடயங்களை யோசிக்க வேண்டியிருக்கிறது. நான்கு மாதக் குழந்தை வீட்டில் இருக்க வேண்டும் என்றால் தாயும் வீட்டில் இருக்க வேண்டும். ஆகவே பிள்ளை பெற்ற தாய்க்கு வெளியே வந்து தன் விருப்பம் போல ஏதேனும் செய்ய விருப்பம் இருந்தாலும் பிள்ளையின் காரணத்தால் வர முடியாது. பால் குடிக்கும் குழந்தையை வீட்டில் விட்டு விட்டு சினமா பார்க்க தாய் வருவதே இந்தச் சமுகத்தில் அபத்தமாகப் படும். சிறு குழந்தையொன்று இருப்பதற்காக அந்தத் தாய் வீட்டிலேயே கிடக்கத் தேவையில்லை. அண்மையில் இலங்கை செய்தியொன்றை வாசித்தேன். சிவனொளி பாத மலைக்கு ஒரு தாய் தன் எட்டு மாதக் குழந்தையுடனும் குடும்பத்துடனும் சென்றிருக்கிறார். மலையில் அன்று அதிக புகார் இருந்ததினால் குழந்தையை தன் தாயிடம் கொடுத்து விட்டு அந்த இளம் அம்மா மலை ஏறி இருக்கிறார

நாம் நமது எதிர்காலச் சந்ததியினருக்காக்க எதை விடுத்துச் செல்லப்போகிறோம்?

தமிழ்நாட்டின் ஒரு துணுக்குப் பத்திரிக்கையின் செய்தி ஒன்றை வாசிக்க நேர்ந்தது. சுற்றுலாத்தளமொன்றில் பரிசல் கவிழ்ந்து குடும்பத்தினர் அறுவர் பலியாகியுள்ளனர். அதற்குக் காரணமாக அவர்கள் மகிழ்ந்திருந்த பொழுதொன்றில் கையடக்கத் தொலைபேசிக் கமெராவில் செல்ஃபிக்கள் எடுக்க முனையும் போது பரிசலின் சமநிலை குழம்பி பரிசல் கவிழ்ந்ததாகச் சொல்கிறார்கள். அதில் பத்து மாதக் குழந்தையொன்றும் அடக்கம். மேலும் இளந்தம்பதிகளும் குழந்தைகளும் இருந்துள்ளனர். மிகவும் துன்பியல் செறிந்த செய்தி இது. இச்செய்தி பகிரப்பட்ட தொணி, செல்ஃபிக்களால் உயிருக்கு ஆபத்து என்பதே. அச்செய்தியின் கீழ் ஏராளமானோர், செல்ஃபி மோகத்தினால் உயிர் பலி, செல்ஃபி அவசியம் தேவையா என்றெல்லாம் கருத்திட்டிருக்கிறார்கள். மனிதர்கள் இரண்டு வகை. ஒருவகை பழைய பாரம்பரியத்தை மட்டுமே கொண்டாடுபவர்கள். பண்பாட்டில் இல்லாதவை அறங்களுக்கு ஒவ்வாதவை என்பவர்கள். இது பெரும்பாலும் பழையவர்களின் குணம். அடுத்த வகை எது தற்போதைய நடைமுறையோ அதை மட்டும் உள்வாங்கிக் கொள்பவர்கள். இது பெரும்பாலும் புதியவர்களின் குணம். இதில் பழையவர்கள் காரண காரியமில்லாமல் புதியன புகுதலை வெறுப்பவர்கள்.