முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜனவரி 2, 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

முன்னமொரு சகுனிகள்..

                                                முன்னமொரு சகுனிகள் முடிந்து வைத்த கதைகள் பல பின்னையொரு பொழுதிலே பேச்சவிழ்ந்த கதைகள் பல மன்னுமொரு காதல் மருந்தடித்த கதைகள் பல மாட்டிவைத்த அவன் கதையை மாய்ந்து மாய்ந்து-  உரைத்தன பல என்னையொரு நாளில் நீ அடித்துரைத்த கதையும் பல ஏக்கமொருநாளில் ஏங்கி வழிந்த கதையும் பல தோற்க வழியின்றி என்னைத் தோற்பித்த கதையும் பல தாக்க வழியின்றி எனைத் தகர்ப்பித்த கதையும் பல இருட்டிளுந்தன் பேர்தனை இடித்துரைத்த கதைகள் பல இன்னுமின்னும் இங்கிதமில்லாப் பங்கமும் பல கதை அழுக்கு என்று ஆர்ப்பரித்த ஆயிரங்கதை அன்றொருநாள் சொல்லிச் சொல்லி அழுத கதை பாடிப் பரவசம் காண முனைந்த பல கதை, பாடு பொருள் மட்டும் மாறாத பரிதவிப்பும் ஒரு கதை நாடி ஓடி வருங்கனவில் நான் நலிந்து போனதும் ஒரு கதை தேடி இனிதேடி தேய்ந்து போனதும் தொடர் கதை தேய்ந்த சகுனங்கள் தெளிவில்லை கண்ணே தேய்தலுக்கும் திரிதலுக்கும் எது எங்கே முன்னே ஆய்ந்து பதிலுரைத்தல் அடுத்தவிடை ஆனால் ஆன இன்பம் அது எனக்காம் பின்னே - ஏங்கி இனிப்பிரிதல் கூடாது என்றால் எது சரியோ, எது பிழையோ ஆரையும் நோகோம், இன

காக்கைகளும் நரிகளும் வடையும்...

 நா வலை மேம்பாலத்துக்கருகில் மிகப் பயத்துடன் நடந்துகொண்டிருந்த போது யாரோ என் முதுகுக்குப் பின்னால் இருந்து மிஸ் கந்தையா என்று கூப்பிட்டது நன்றாகக் காதில் விழுந்தது. கூப்பிட்ட குரல் எனக்கானதாக இருக்க வேண்டுமென்றால் என்னுடைய இளம்பிராயத்தில் அறிமுகமானவர்களாக இருக்க வேண்டும். சிறிது குழப்பத்துடன் திரும்பிப் பார்த்தேன். ஆளைச் சரியாக மட்டுக் கட்ட முடியவில்லை. திரும்பிப் பார்த்து நேரம் செலவழியாமல் நடக்க முனைந்தேன். அந்த நபர் என்னை நோக்கி மிக வேகமாக ஓடி வந்து எனக்கு முன் பாதையை வழி மறித்துக் கொண்டு என்னைத் தெரியேல்லையோ எண்டு கேட்டார். எனக்கு சாதுவாகவும் நினைவில்லையாதலால், மன்னிக்கோணும் எனக்கு சற்றைக்கும் நினைவு படுத்த முடியேல்ல என்றேன் . நினைவுப் படுத்துவதில் உள்ள சிரமத்தை விட அவர் எனக்கு முன்பாக வழிமறித்துக் கொண்டு நின்ற விதம் சங்கடமானதாக இருந்தது. இப்ப இங்கையோ இருக்கிறீர் எண்டார் . என்னைப் பொதுவாக யாரும் 'றீர் ' அடைமொழி பாவித்து அழைப்பதே இல்லை எனலாம். எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது. எனக்கு சொல்லுவதற்கு ஒரு பதிலும் இருக்கவில்லை. அவர் கொஞ்சம் உரத்த குரலில் சிரித்த

திரும்புவதற்குச் சாத்தியமற்ற குரல்........

திரும்புவதற்குச் சாத்தியமற்ற உன் குரல் தேடல்கள் தொலைந்து போன ஒரு  அந்தியில் என்னிடம் ஓடி வருகின்றன. நீ கோபப் படுவாய் என்பதற்காய் குரலில் மன்னிப்பு நிறைந்த கெஞ்சலை  அவிழ்த்துப் போட்டுக் கொண்டிருக்கிறேன். மன்னிப்பின் தீவிரத்தில் நீ  திட்ட மறந்த வார்த்தைகள்  நாளைக்காய் கிடப்பிலிருக்கிறது. மெல்ல,  நொடிப் பொழுதில்  நான் உன் கர்வம் என்பது போல் நான் உன்னில் நிறைந்து நிற்கும்  மந்திரக் கணத்தை ஆகர்ஷிக்க முற்படுவேன். உடனேயே, என்னிலிருந்து விலகும் வெளிச் சுவாசம் போல உன்னிலிருந்து விண்டு பிளவு படும் ஆக்ரோஷம் வெட்கமேயின்றி என்னைத் திட்டும். சிறுகச் சிறுகச் சேமித்து வைத்த என் மானம் மலினமாகும். மூடு பனியின் நளினங்கள் சாகும். நீ உச்சத்தில் இருப்பாய், நான் பாதத்தில் இருப்பேன். முன்னை விடத் தெளிவாக தீர்மானமாக, எல்லா நாளிலும் என் அழைப்பின் போது நீ சொல்லும்  தாரக மந்திரத்தை இப்போதும் சொல்ல மறக்க மாட்டாய். வழிகிற கன்னங்களை நான் துடைப்பதேயில்லை.  பதிலுக்கான சாத்தியமற்ற  ஓரிரு கணங்களில் துண்டிக்கப் படுகிறது,  தொடர்பு. நான் காட்டிய திசையில்