Skip to main content

மூக்கினால்ப் பாருங்கள் ...



                                                                                            
என்னிடத்தில் எஞ்சியிருப்பது ஒன்றே ஒன்று மட்டும்,
அது என் பற்றியதல்ல - 

அது ,
வெட்ட வெளி நிலத்தின் ஊடு பாயும் கதிர்க் கற்றையிலிருந்து,
பிளந்து வரும் ஏழாவது நிறத்தின் மக்கிப் போன சாயம் தாங்கிய நிழல் !


அது ஒரு வகை பெருமிதம் ; களிப்பு !
என்னில் இருந்து நிழல் விலகத் தொடங்கும்,
கடைசிப் பௌர்ணமியின் இருட்டில்,
அதனது சாயம் வெளுத்துக் கொண்டு போக ஆரம்பிக்கும்...


என் மூக்கை தொடர்ந்து உற்று நோக்கினால் ,
என் வெளுத்த சாயம் வெளியேறுவதை எல்லோரும் அவதானிக்க முடியும்!
கண்களினால் பார்ப்பதைத் தவிர்த்து மூக்கினால் பார்ப்பதற்கு
அவன் என்னைப் பழக்கினான்.


மூக்கினால் பார்ப்பவர்களுக்கு மட்டும் வெளுப்பின் நிறம், மக்கிய சாயம்,
ஆவி போல் அந்தரத்தில் அலைவது தெரியும்.

கடவுள், நிழலை ஒரு சன்னத்தின் தெறிப்பாய்ப் படைத்திருக்கிறார்.
சன்னம் தெறிக்கையில் என் மீ உந்தம் ,
இடப் பரவலில் இருந்து ஒடுங்கிக் கொண்டு விடுகிறது.


அந்த அற்புதங்கள் மூக்கினால்ப் பார்ப்பவர்களுக்கு மட்டுமே புரியும்.
மூக்கின் இரண்டாவது இடைத் துவாரத்தின்,
பிசிர்த் தசையை ஆழ உள்ளே இழுத்து ஒண்டிக் கொண்டு,
மூக்கின் ஏதாவது ஒரு மையம் தொடர்பாக,
தொண்டை அண்ணத்தை மூச்சுப் புகாமல் இழுத்து விட்டுக் கொண்டால்,
புரையேறிச்  சாவது போலும்,  

கடும் குளிர்த் தொண்டைக் கரப்பான் போலவும்
உலாவும் உணர்ச்சியில்
அவன், மூக்கினால்ப் பார்ப்பவர்களுக்குத் தென்படுவான்.

மூக்கினால்ப் பார்த்தல் என்பது
களிப்பின் உச்சம்; உவகையின் பெரும் பிரயாசை.
மிகச் சிறந்த சோகக் கதையொன்றின் பின்னான இருண்ட வானம் போல்,
என் கதைகளைக் கேட்கும் போது இருக்கக் கூடாதென்பதாலும்,
என் கதைகள் சோகமில்லை என்று நம்புங்கள்,
என மன்றாட ஆயத்தமாவதாலும்,
என்னை மூக்கினால்ப் பாருங்கள்.

மூக்கினால்ப் பார்த்தல்
சில்லறை  விடயங்களுக்கென்று மட்டும்  ஒதுக்கப்பட்ட
கடவுளைக் கரித்துக் கொட்டுவதிலும்
இலகுவானது என்றால் நம்புவீர்கள் அல்லவா?
மூக்கினால்ப் பாருங்கள் !




நிலா-
23/7/2011









Comments

  1. Hi Nila,
    Every time you surprise me with your phenominal writing. A real unique literary style..

    ReplyDelete
  2. நன்றி மாதுமை, ஒவ்வொரு தடவையும் உங்களைப் பிடிக்க முடியிறதில்லை.இன்னொருக்கா , மின்னஞ்சல் முகவரியை அஞ்சலிடுங்கோ, கதைப்பம்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சாமகானமும் காம்போதியும்

முருகையன் ஒரு மொழிபெயர்ப்புச் செய்தார். மொழிபெயர்ப்பு எண்டும் சொல்ல முடியாது,சாதுவா மொழிபெயர்ப்பும்,திறமையான கற்பனையும் போட்டு செய்யுள் வடிவத்தில, இளநலம்! என்ன இளநலமா?ஹையா கிளுகிளுப்பான கதை வரப்போகுது. குமாரசம்பவம் (ஸாரி வேற கண்டென்ட் எண்டு நினைக்கப்படாது, ஐ ஆம் வெரி டீசன்ட்) காளிதாசன் குமாரசம்பவத்தில எழுதின அதே கதையை தமிழில தந்தவர். அதில தான் இந்தக் கதை வருகுது.  சாமகானம் சாமகானம் எண்டு ஒண்டு சொல்லக் கேட்டிருப்பம். “சாமகானம் பாடினான்” எண்டு நாலாம் வகுப்புச் சமய பாட புத்தகத்தில ஒரு பாடம் இருக்கு. பத்துத் தலையும், கையில ஒரு தலையுமாக் கணக்குப் பிழையா மொறாயஸ் கீறின இராவணனிண்ட மீசை வெச்ச படம் இருக்கும், இப்ப ஞாபகம் வந்துட்டுதா? அந்தக் காலத்திலேயே தலைகளிண்ட கணக்கை எண்ணிப் பாத்தனாங்கள் ஆக்கும். (தலைக்கணக்கு முக்கியம் அமைச்சரே) இப்ப சாமகானத்தைப்பற்றிப் பாப்பம். காளிதாசன் குமாரசம்பவம் எழுதேக்க, சும்மா கற்பனைகுதிரையை காட்டாற்று வெள்ளம் போல பறக்க விடுறேர்.  மிஸ்டர் சிவனும் மிசஸ் உமாவும் கலியாணமான புதிசில, (ஏன் கல்யாணமான பழசில யாரும் வெளிய போறதில்ல எண்டு நெடுங்காலமா டவுட்) சும்மா வெளிய வெளிக்

இராவணேசன் ; Maunaguru's 'Ravanesan'

நெறியாள்கை - பேராசிரியர் மௌனகுரு. இடம் -கொழும்பு கலை இலக்கியப் பேரவை. காலம்- சனி(13.02.2010)  மாலை 6.30மணி. சனி மாலை(13.02.2010) பேராசிரியர் மௌனகுரு அவர்களின் 'இராவணேசன்' நாடகம் நடைபெறவிருக்கிறதென்று நண்பரொருவர் தகவல் சொன்னார். இருந்த எல்லா வேலைகளையும் புறந்தள்ளி விட்டேன். நாடகங்கள் என்றவுடன்  வரும் இந்த தொலைகாட்சி சீரியல்களையே கண் ஞாபகத்தில் கொண்டுவந்து முகத்தை அஷ்ட கோணலாக்குகிறது. மேடையமைப்பும், அரங்கமும்,அரிதாரம் பூசிக்கொண்ட பாத்திரங்களும், நேரடியான காட்சிகளூட்டும் கிளர்வும், எங்களுக்கு முன்னாள் ஒரு தலைமுறை இதனூடே வாழ்ந்து காட்டியிருக்கிற விடயமும் தெரிவதில்லை. மாற்றங்கள் மட்டுமே மாறிக் கொண்டிருந்தாலும்,எங்களின் முன்னோடிகள் வழி வந்த கலைப் பாதையை எடுத்தியம்புதலுக்கும்,அதற்கான வரவேற்புக்கும் இங்கு இடமில்லை எனும் போது அவற்றையெல்லாம் தாண்டி மனதில் எங்கேயோ வலிக்கிறது. எங்களுடைய காலத்தில், முழுமையான கூத்துக்கலையோ, அரங்காடல்ககளையோ  காண்பதற்கு காலமோ மாற்றமோ ஏதோவொன்று இடந்தரவில்லை .இருப்பினும் யாராவது எங்கள்  நலிந்து போன கலைகளை மறுபடியும் இளஞ்சமுதாயத்திட்கு க

குழந்தைகளுக்கான நவீன தமிழ்ப் பெயர்கள்

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தல் எனும்போது, இவ்வளவு காலமும் வைத்த பெயர்கள் தமிழ்ப்பெயர்கள் இல்லையா எனும் கேள்வி எம்மில் பலருக்கு எழும். உங்கள் பெரும்பாலானோர் தமிழ்ப்பெயர் என்று எண்ணிக்கொண்டிருக்கும் உங்கள் பெயரை வட இந்தியக் கலப்பு,சமக்கிருத கலப்பு,ஐரோப்பிய,அரேபியக் கலப்புடனான பெயராக இனங்காணுவீர்கள்.  தமிழில் பெயர் சூட்டுவது இனத்துவேசம் உள்ள செயலா? :P இனத்தைக் கொண்டாடக் கூடிய செயல். மறத்தமிழன் என்று அடைமொழி இட்டுக்கொண்டு உலாவுவதை விட அழகான செயல் என்று எண்ணுகிறேன். இந்த அடையாளம் மிக அழகானது.  அண்மையில் நிறையப் பேர் தமிழில் குழந்தைகளூக்கான நவீனமான பெயர்கள் வேண்டும் என்று கேட்டிருந்தார்கள். தமிழில் பெயர்கள் பழமையானவையாக இருப்பது கூட இக்காலத்தோரின் தெரிவுக்குட்படாமைக்கு ஒரு காரணமாகும். பெண் குழந்தைகளுக்கான பெயர்கள் சிலவற்றை தொகுத்திருக்கிறேன்.சிலவற்றை கண்டும் பிடித்திருக்கிறேன். ( பிற்காலத்தேவைகளுக்கு ;)  ) வினைச்சொல் பெயர்கள் அஞ்சா ஆராதி ஆனந்தி  சலனி கோளறா இசி இனி தேயா மேதா வேயா வேகா மின்னு மிதவா தெகிழா நெகி