Skip to main content

அதி பனுவல்| Hyper Text

                                                           




ஒரு நிமிஷம் ............

"உறுபசி" இயல்புக்கும், வெளித்தத்துவத்திற்கும்   இடைப்பட்ட ஓர் வெளி நிலையில் பயணத்தை ஆரம்பித்திருக்கிறது.  ''உறுபசி'' எண்டால், அதீத பசி எண்டு  அர்த்தம். 

Deep Hunger | Irremovable difference between presence and absence! 

இப்பிடித் தான் ஏதாவது எழுதப்போறன்.இதை விசும்பின் எல்லைக்குள்ளும் அப்பாலும் வைத்திருக்கும் பொறுப்பை உங்களிடம் கையளிக்கின்றேன். கோட்பாடுகளும், சுதாகரிப்புக்களும் நிறைந்த இந்த நிலை வாதத்தில், நானும் தேடலுடன் புறப்பட்டிருக்கிறேன்(உளட்டித்  தள்ள :P)
பள்ளிக்கூடம் முடிச்ச கையோட  வேலைவெட்டி இல்லாமல எதையாவது ஆவணப் படுத்த விரும்புகிறேன்.இனி,பொருத்தலும் இலமே ,



அன்புடன், நிலா 
27 /09 /2009  

  

Comments

  1. கட்டமைக்கப்பட்ட கோட்பாடுகளும் தேடலை தீண்டாத் தோற்றப்புலமும் கொண்ட பழமைக்கும் வழமைக்குமிடையே தத்தளக்கும் இந்த பதிவுலகில் புதுமை படைக்க என் வரவேற்பு.

    ReplyDelete
  2. இடுகையின் படமும் வசனங்களும் நீங்கள் புதுமை படைக்கப்போவதை கட்டியம் கூறி நிற்கின்றன்...

    வாழ்த்துக்கள் தர்ஷாயணீ..

    இந்த Word Verification இனை எடுத்துவிடுங்கள்.

    பிரியமுடன்,
    கௌபாய்மது

    ReplyDelete
  3. வணக்கம். வாழ்த்துக்கள். தங்கள் profile தகவல்கள் உண்மையானால், இளம் வயதில் தேர்ந்த அதிபனுவலோடு ;) வந்திருக்கிறீர்கள். (HTML இனை Hyper Text Markup Language என்பார்கள் :P )

    தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
  4. மயூரன்,

    நானும் profile தகவல்களைப் பார்த்து ஒரு கணம் மௌனித்துவிட்டேன்.

    முதன் முதல் உருவாக்கிய வலைப்பதிவென்பதால் வேறுயாராவது Profile இனைப் பார்த்து நகல் செய்யதிருக்கக் கூடும் என நினைத்திருந்தேன்.

    பதிவுகளின் வீச்சம் எனது நினைப்பை தகர்த்துவிட்டிருக்கிறது.

    புதியதொரு பதிவர்... நிறையச் சிந்தனைகளுடன்..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சாமகானமும் காம்போதியும்

முருகையன் ஒரு மொழிபெயர்ப்புச் செய்தார். மொழிபெயர்ப்பு எண்டும் சொல்ல முடியாது,சாதுவா மொழிபெயர்ப்பும்,திறமையான கற்பனையும் போட்டு செய்யுள் வடிவத்தில, இளநலம்! என்ன இளநலமா?ஹையா கிளுகிளுப்பான கதை வரப்போகுது. குமாரசம்பவம் (ஸாரி வேற கண்டென்ட் எண்டு நினைக்கப்படாது, ஐ ஆம் வெரி டீசன்ட்) காளிதாசன் குமாரசம்பவத்தில எழுதின அதே கதையை தமிழில தந்தவர். அதில தான் இந்தக் கதை வருகுது.  சாமகானம் சாமகானம் எண்டு ஒண்டு சொல்லக் கேட்டிருப்பம். “சாமகானம் பாடினான்” எண்டு நாலாம் வகுப்புச் சமய பாட புத்தகத்தில ஒரு பாடம் இருக்கு. பத்துத் தலையும், கையில ஒரு தலையுமாக் கணக்குப் பிழையா மொறாயஸ் கீறின இராவணனிண்ட மீசை வெச்ச படம் இருக்கும், இப்ப ஞாபகம் வந்துட்டுதா? அந்தக் காலத்திலேயே தலைகளிண்ட கணக்கை எண்ணிப் பாத்தனாங்கள் ஆக்கும். (தலைக்கணக்கு முக்கியம் அமைச்சரே) இப்ப சாமகானத்தைப்பற்றிப் பாப்பம். காளிதாசன் குமாரசம்பவம் எழுதேக்க, சும்மா கற்பனைகுதிரையை காட்டாற்று வெள்ளம் போல பறக்க விடுறேர்.  மிஸ்டர் சிவனும் மிசஸ் உமாவும் கலியாணமான புதிசில, (ஏன் கல்யாணமான பழசில யாரும் வெளிய போறதில்ல எண்டு நெடுங்காலமா டவுட்) சும்மா வெளிய வெளிக்

இராவணேசன் ; Maunaguru's 'Ravanesan'

நெறியாள்கை - பேராசிரியர் மௌனகுரு. இடம் -கொழும்பு கலை இலக்கியப் பேரவை. காலம்- சனி(13.02.2010)  மாலை 6.30மணி. சனி மாலை(13.02.2010) பேராசிரியர் மௌனகுரு அவர்களின் 'இராவணேசன்' நாடகம் நடைபெறவிருக்கிறதென்று நண்பரொருவர் தகவல் சொன்னார். இருந்த எல்லா வேலைகளையும் புறந்தள்ளி விட்டேன். நாடகங்கள் என்றவுடன்  வரும் இந்த தொலைகாட்சி சீரியல்களையே கண் ஞாபகத்தில் கொண்டுவந்து முகத்தை அஷ்ட கோணலாக்குகிறது. மேடையமைப்பும், அரங்கமும்,அரிதாரம் பூசிக்கொண்ட பாத்திரங்களும், நேரடியான காட்சிகளூட்டும் கிளர்வும், எங்களுக்கு முன்னாள் ஒரு தலைமுறை இதனூடே வாழ்ந்து காட்டியிருக்கிற விடயமும் தெரிவதில்லை. மாற்றங்கள் மட்டுமே மாறிக் கொண்டிருந்தாலும்,எங்களின் முன்னோடிகள் வழி வந்த கலைப் பாதையை எடுத்தியம்புதலுக்கும்,அதற்கான வரவேற்புக்கும் இங்கு இடமில்லை எனும் போது அவற்றையெல்லாம் தாண்டி மனதில் எங்கேயோ வலிக்கிறது. எங்களுடைய காலத்தில், முழுமையான கூத்துக்கலையோ, அரங்காடல்ககளையோ  காண்பதற்கு காலமோ மாற்றமோ ஏதோவொன்று இடந்தரவில்லை .இருப்பினும் யாராவது எங்கள்  நலிந்து போன கலைகளை மறுபடியும் இளஞ்சமுதாயத்திட்கு க

குழந்தைகளுக்கான நவீன தமிழ்ப் பெயர்கள்

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தல் எனும்போது, இவ்வளவு காலமும் வைத்த பெயர்கள் தமிழ்ப்பெயர்கள் இல்லையா எனும் கேள்வி எம்மில் பலருக்கு எழும். உங்கள் பெரும்பாலானோர் தமிழ்ப்பெயர் என்று எண்ணிக்கொண்டிருக்கும் உங்கள் பெயரை வட இந்தியக் கலப்பு,சமக்கிருத கலப்பு,ஐரோப்பிய,அரேபியக் கலப்புடனான பெயராக இனங்காணுவீர்கள்.  தமிழில் பெயர் சூட்டுவது இனத்துவேசம் உள்ள செயலா? :P இனத்தைக் கொண்டாடக் கூடிய செயல். மறத்தமிழன் என்று அடைமொழி இட்டுக்கொண்டு உலாவுவதை விட அழகான செயல் என்று எண்ணுகிறேன். இந்த அடையாளம் மிக அழகானது.  அண்மையில் நிறையப் பேர் தமிழில் குழந்தைகளூக்கான நவீனமான பெயர்கள் வேண்டும் என்று கேட்டிருந்தார்கள். தமிழில் பெயர்கள் பழமையானவையாக இருப்பது கூட இக்காலத்தோரின் தெரிவுக்குட்படாமைக்கு ஒரு காரணமாகும். பெண் குழந்தைகளுக்கான பெயர்கள் சிலவற்றை தொகுத்திருக்கிறேன்.சிலவற்றை கண்டும் பிடித்திருக்கிறேன். ( பிற்காலத்தேவைகளுக்கு ;)  ) வினைச்சொல் பெயர்கள் அஞ்சா ஆராதி ஆனந்தி  சலனி கோளறா இசி இனி தேயா மேதா வேயா வேகா மின்னு மிதவா தெகிழா நெகி