Skip to main content

Posts

Sylvia Plath ;சில்வியா பிளாத்தின் ஒரு கவிதை

தமிழில் மொழிபெயர்ப்பு -நிலா (2011 ) உறுதியேற்பு ! மூடுபனியின், ஒளி மங்கிய நாள் சேவையற்ற கரங்களுடன் பால்வண்டிக்காக காத்திருக்கிறேன். சாம்பல்ப்பாதத்தை விரித்துப் படுத்திருக்கிறது ஒரு ஒற்றைக்காதுப்பூனை நிலக்கரி நெருப்பு  எரிகிறது வெளியே , சிறு ஹச்சு இலைகள்  கொஞ்ச மஞ்சளாய்ப் பழுத்திருக்கின்றன. பலகணி மேடையில் இருக்கும் வெற்றுப் போத்தல்களை பாலின் நிறம்  மங்கிப்போக வைத்திருக்கிறது. பிறிதொருவரின் ரோசாப்பற்றையில் , வளர்ந்த வில்போன்ற பச்சைத் தண்டில், விழாமலேயே நீர்த்துளி இருக்கும் !(ஆதலால் ) எந்த மகோன்னதமும் இறங்கவேயில்லை ! பூனை, தன் நகங்களை உறையுருவுகிறது! இன்று, உலகம் திரும்பிப் பார்க்கிறது. இன்று நான், ஏளனச் சுழல்க்காற்றுக்குள் என் முஷ்டி மடக்கி கறுப்புக் கோட்டு அணிந்த பன்னிரு மருள் நீக்கியர்களை  வசீகரிக்காமல் விடுவதேயில்லை. Resolve  – Sylvia Plath, 1955.   Day of mist: day of tarnish with hands unserviceable, I wait for the milk van the one-eared cat laps its gray paw and the coal fire burns outside,

வள்ளிநாயகியும் வரலாறும் :)

  வ ள்ளிநாயகிக்கு இரண்டாம்கட்டப் பரிசோதனைக்கு நேரமாகிக் கொண்டிருந்தது. அம்மா சொல்லிவிட்டிருந்தா , நிறைய இதில மினக்கெடுத்தாத, வாறது தான் வரும்...கிடைக்கிறது தான் கிடைக்குமெண்டு.அவளுக்கேதும் பயமில்லை, ஆனா பரிசோதகரா வாறவர் அவளைக் கண்டோ, அவளோட கதைச்சிட்டோ பயப்பிட்டுவிடக் கூடாதெண்ட நல்ல எண்ணம் அவளுக்கிருந்தது.தெவுமி குரானா சொல்லிக் கொண்டிருந்தாள், நீ  கதைக்க வெளிக்கிடாத....கதைச்சால்...உண்ட பரிசோதனை தவிடுபொடியாயிரும் என்று ! அவள் அதையும் கேட்டுக் கொண்டாள்.றஞ்சன பொடிவிதாறன சொன்னான், நீர் கதையும் ...வாறவன் கேக்கிற வரைக்கும் கதையும் ...கதைச்சால் நீர் எக்ஸ்பிளைன் பண்ணுறத்தை எல்லாம் அவன் காது குடுத்துக் கேப்பான், பிறகு அனலைசிங் கமிட்டி எண்டு இன்னொண்டு கூட்டுவான்...அதுக்குப் பிறகு நிச்சயம் வெற்றி மாதிரித் தான். ஆனபடியால் கதையும் என்றான். வள்ளிநாயகி அதையும் கேட்டுக் கொண்டாள். புறபிசர் அல்பிரட் டி சில்வா மட்டும் உம்முனா மூஞ்சிக்குப் பிறந்தவர் மாதிரி முந்த நாள் அதிகாலையில் ஒரு தொலைபேசி அழைப்பு  எடுத்துவிட்டு மிஸ்ட் கோலாக்கி விட்டார். பிறகு ஒரு அரை மணிநேரம் கழித்து, வள்ளிநாய

குழந்தைகளுக்கான நவீன தமிழ்ப் பெயர்கள்

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தல் எனும்போது, இவ்வளவு காலமும் வைத்த பெயர்கள் தமிழ்ப்பெயர்கள் இல்லையா எனும் கேள்வி எம்மில் பலருக்கு எழும். உங்கள் பெரும்பாலானோர் தமிழ்ப்பெயர் என்று எண்ணிக்கொண்டிருக்கும் உங்கள் பெயரை வட இந்தியக் கலப்பு,சமக்கிருத கலப்பு,ஐரோப்பிய,அரேபியக் கலப்புடனான பெயராக இனங்காணுவீர்கள்.  தமிழில் பெயர் சூட்டுவது இனத்துவேசம் உள்ள செயலா? :P இனத்தைக் கொண்டாடக் கூடிய செயல். மறத்தமிழன் என்று அடைமொழி இட்டுக்கொண்டு உலாவுவதை விட அழகான செயல் என்று எண்ணுகிறேன். இந்த அடையாளம் மிக அழகானது.  அண்மையில் நிறையப் பேர் தமிழில் குழந்தைகளூக்கான நவீனமான பெயர்கள் வேண்டும் என்று கேட்டிருந்தார்கள். தமிழில் பெயர்கள் பழமையானவையாக இருப்பது கூட இக்காலத்தோரின் தெரிவுக்குட்படாமைக்கு ஒரு காரணமாகும். பெண் குழந்தைகளுக்கான பெயர்கள் சிலவற்றை தொகுத்திருக்கிறேன்.சிலவற்றை கண்டும் பிடித்திருக்கிறேன். ( பிற்காலத்தேவைகளுக்கு ;)  ) வினைச்சொல் பெயர்கள் அஞ்சா ஆராதி ஆனந்தி  சலனி கோளறா இசி இனி தேயா மேதா வேயா வேகா மின்னு மிதவா தெகிழா நெகி

குழந்தைகளுக்காக எழுதுதல்.

இலக்கியங்கள்   மர்மங்களாக பெரியவர்களுக்கு இருக்கும் சமயம் , குழந்தைகளுக்கு அவை இனிப்புகளைப் போல அன்றன்றே தீர்ந்து விடுபவையாக இருக்கின்றது. எல்லாக் காலங்களிலும் குழந்தைகள் தாங்கள் வளர்பவர்கள்   என்பதை   அடிப்படையாக   வைத்துச்   செயல்ப்படுவதில்லை என்பதுவே இதற்கான   மேலோட்டமான காரணமாகும். குழந்தைகள்       தமக்கான   சமுகத்தை   தம்மூடாகவோ ,         பெரியவர்கள்   ஊடாகவா   பார்க்கிறார்கள்   என்பதில்   குழந்தைகளுக்கான   இலக்கியத்தின் தேவை   பெரியவர்களிடம்   நிறைந்து   கிடக்கின்றது. குழந்தைகள் எதனைத் தேடுகிறார்கள் என்பதை பெரியவர்களால் ஒரு போதும் தீர்மானிக்க முடிவதில்லை. அவர்கள் குழந்தையாக இருந்த போதும் , அவர்கள் குழந்தைகள் , குழந்தைகளாக இருக்கும் போததுமான இரு பெரும் தேடல்கள் எப்போதும் ஒன்றாக இருக்கிறதில்லை. சமுகத்தின் வளர்ச்சியும் , சமுகத்தில் குழந்தைகளைப் பார்க்கும் கோணமும் , வர்க்கங்களின் வித்தியாசமும் ஒரு குழந்தையின் தேடலை வேறுபடுத்தும். இன்று வரைக்கும்   வன்னியில் குழந்தைகள் ஒன்று   சேர்ந்து   ' அட்டலங்க்காய் புட்டலங்க்காய் ' விளையாடுவதையும் , கொழும்பில் எனது பெ