Skip to main content

Posts

மேற்செம்பாலையும் மினக்கெட்ட வேலையும்

இசை பற்றி ஏதாவது குறிப்பு எழுதவேண்டும் என்று நினைக்கும் போது மட்டும் நேரம் கிடைப்பதில்லை என்று ஆகிவிடும், அடிக்கடி எழுதும் கவிதைகளை இவ்விடம் புறக்கணிக்க. நேற்று நிலைச் செய்தி/ நிலைபரம் போட்ட, "நினைத்து நினைத்துப் பார்த்தேன் ", '7G, ரெயின் போ கொலனி' படப் பாடலுக்கு அவ்வளவு அமோகமான வரவேற்பு, எல்லாரும் பாதிக்கப்பட்ட மக்கள் தான் போல.ஒரு கட்டத்தில் என்னுடைய நிலைத்தகவலை என்னுடைய பாதுகாப்புக் காரணமாக இரகசிய பாதுகாப்புச் சட்டத்தில் மறைக்க வேண்டியதாய்ப் போச்சு. அதற்குப் பிறகு நிறைய நண்பர்கள் அதனுடைய இசைக் கோர்வை வடிவத்தை முடிந்தால்த் தரும்படி குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார்கள், [ அவை யாருக்கும் அதை நான் தருவதாக பதில் அனுப்பவே இல்லை எண்டது வேற கதை ] இந்தப் பாடலை நான் கீ போர்ட்டில் வாசித்து கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு மேலாக இருக்கும், இசை வடிவத்தில் வாசிக்கவே கூடாது என்று இறுக்கமாக வைத்திருக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று. கடைசியாக நண்பி ஒருத்தியின் பிறந்த நாள் வைபவத்தில் வாசித்து, எல்லோருடைய "மூட்" டையும் மாத்தி விட்டதாக ஞாபகம். நண்பிகள் நிறையப் பேர் வீட்டுக்

இந் நதி தீரம் நமக்குச் சொந்தமானது.....

                                                          சித்திரை போய் வைகாசி வந்தாலும் ஆழம் குறையாத அகன்ற நீர்ப்பரப்பு தெளிந்த மனம் போல சிதறாத வான் நிழல் நாணம் பற்றிச் சிந்திக்காத நாமிருவர்-நம்மிடையே நலிந்து தோற்றுப் போன வெட்கம்; சிக்கனம்; இன்னும் பிற கக்கணம். நீண்ட மணற்பரப்பில் நீர் துள்ளி ஓடும் மீன்களற்ற தாழை மடல் கசங்கிக் கிடக்கும். ஆற்றங்கரையின் வளைந்த மூங்கிலுக்குள் கீச்சிடுவேன் நான். கருதுதல் ஒரு பிழையுமஅல்லவே ?-நாங்கள் வாதித்திருப்போம் ! வசந்தங்கள் போய் கோடை வருகையில், குளம் குட்டி மீன்களும் குறுனிப் பேத்தைக்களுமாய்  தவம் கிடக்கும். நல்ல கொக்குகளிற்கு நளினம் பிடிபடாது ! நமக்கென்ன கொக்கு துரத்தும் வேலையா? கொஞ்சம் கூடி பற்றைக்குள் படுத்திருப்போம். புள் உரசும் ;போகம் காட்டும் சத்தமிடும்; சரசம் காட்டும் ! சன்னத உச்சியில் ஒரு குருவி வேட்டைக் காரனின் கவணுக்கு இலக்காகும். நீ துயில் களைந்து எழும்புவாய், நான் தூங்காத பலநாளின் கதை சொல்லுவேன். கோடை கழிந்துவிடும். கொடும் வெயிலில் நீ புழுத்திருப்பாய். ஆடை அற்ற அன்பில் ந

மறுக்க அழையுங்கள்...

                                                              நான் கொதிக்கும் உலையில் இருந்து விடுபட்டு- அந்தம் ஒழிக்க, எனக்கென இருக்கும் ஒரு பகலோ இருபகலோ போதாமல் போகும். வாமன உருவத்தில் இருந்த வலி காணாமல் நீண்டு பெரும் இராக்கதனாய் அவதரிக்கும். பார்- நீ ஒரு நாள் சினம் கொண்டு எழுதலில் இருக்கும் தீவிரம் அனுதினம் எனக்குள்ளே பொங்கிப் பிரவகிக்கும். கடல் ,வெளிகள் ,மவுன மலைகள் தாண்டி எதிரொலிக்கும். யாரையும் வாழப் பிரியப்படாமல்- ஓசை முறித்துக் கொள்ளும் -உணர்வலைகள் ! பொங்குதலில் உள்ள லாபகரம் என்ன தெரியுமா? ரகசிய சந்திப்புகளில் புரியாத வார்த்தையற்ற விரவும் வெளிகள்- தாம் ! புல் நுனியில் காலம் பனி தட்டி எழுந்து கூத்தாடும். புலர்தலுக்கு முன்னே பூப்பெய்தும். புருட சுகம் ஒன்றினையே  புணர்ந்தலையும் ; புல்லுருவி வாழ்க்கையில் இருந்து வெளியேறும். நல்லினக்கமில்லா  நகைப்புக்களை  நரிக் குளிப்பாட்டும். நானெனும் தனியுடமை தங்கித் தங்கி பல திசைகளில் காடு, சமுத்திரம், கரு மரப் பொந்துகள், இருட்டில் நீ அகன்ற வானம் இல்லாது என்று போன அணியட்கைச் சபலங்கள் ,

நினைவு உரு மாறல்.

தேவி எழுந்தாள், தென்மேற்காய் எழுந்தாள் ஆதி நிலவரம் அங்கங்கே நிற்க தேவி எழுந்தாள் பணிந்து போகிற பண்பான குரலில் முன்னெப்போதும் இல்லாத குரலில் தனது பலவீனம் பகை உணர்வானதெனக் கூறினாள். அக வலிமையையும் தன்மானத்தையும் தனக்கு உணர்த்தியதற்காக  எல்லா ஆள்வோருக்கும் நன்றி கூறினாள் மாட்சிமை தாங்கிய ஒரு கனவுக்காக, மற்ற நினைவுகளையெல்லாம் தர மறுப்பதாகக் கூறினாள் ஈட்டி பாய்ந்து கொன்ற  மேகங்களின் காம்புகளில் பெய்யக் கூடாத  மழைகளைப் பற்றி கவலை கொள்ளாமல் புரட்சிகளைக் கருத்தரிக்க நீ தேவையில்லை என்றாள்.   ***  தாகங்களை ஏரிகள் அறிந்தில்லாத ஒரு இரவில், பறவைகள் தம் கூட்டில் இயல்பாக  நித்திரை செய்த ஒரு இரவில் மனிதர்கள் வேட்டைக்குப் போக மறுத்த ஒரு இரவில், நம்பமறுத்த பொத்தல் ஒன்றை  அவள் கைகள் தாங்கிப் பிடித்தன. அழிந்து வருகிற நேயத்துக்கு அவள்  இரங்கற் பா பாட ஒத்துக் கொண்டாள். போராட்டமும், நிசமும் கலந்து போன வாழ்வில்,  நிச்சயமாய் அவனுக்கு குருதி சிந்தும். துயர் துடைத்து விடுகிற கைகள்  பக்கத்தில் இருப்பது பற்றி யாருக்கும் அக்கறையில்லை.

ஏனெனில் இதுவே உலகம் முடிந்த இடம்

நாம் கைகள் உயர்த்தி எழும்ப வேண்டும். காசுக்கு விற்க இயலாத இந்த நீண்ட காலக் காத்திருப்பின் அவசியம் பற்றி நிரம்பி வழிகிற பசுமையான நேர்கோட்டின் வீழ்ச்சியில்- வாயைக் காதுகள் மறைக்கும் போது, உரக்கச் சொல்ல வேண்டும். சிறப்பான தருணத்தில் மட்டுமே சிரிக்கும், வெகு சராசரியான பற்களை, நீவி விடவ விட வேண்டும். இன்பம் நிகழுவதாயும் துன்பம் நேருவதாயும் ஏனென்று யோசித்து ஊக்கமற்றதாக்கும் இரண்டு வேறு நடப்புக்கள் இருப்பதை - குழந்தையொன்று கருவிலே வீற்றிருப்பதைப் போல நிச்சயமற்றதாக உணர வேண்டும். அந்நிச்சயமற்ற குழந்தையும் கலைந்து , இன்பமானதல்லாத அதன் இறப்பை நேசிக்கையில், அதை நான் வென்று விடுவேன். இன்னமும் பிறக்காத அதன் கண்களுக்கு உம்முடைய புரட்சியெனும் பொய்யை உரைப்பேன். நீர், எனது சொற்களைக் கூர்ந்து கவனிப்பதால் அவை உமது கொலைகளை நியாயப்படுத்தும் என்றில்லை; உலகில் எல்லாமே ஒரு ஒழுங்கில் உள்ளதென்பதும் தவறு ! தயவு செய்து திருந்தாது இருங்கள் - அதன் பின்பு புது வாழ்வு எழும். ஏனெனில் இதுவே உலகம் முடிந்த இடம். -நிலா

ஆண் பெண் பாலினப் புரிந்துணர்வும், பெண்ணின் தளமும், பண்பாட்டுத் தளத்தின் நிறுவனமயப்படலும்.

                                                              உ யிரியல் ரீதியாக இப்பிரபஞ்சத்தில் ஆண் பெண்,  இடை நிலைப்பாலினர் என மூவகைப் பாலினம் மனிதர்கள் எனும் இனப்பிரிவில் காணப்படுகின்றது. [இனம் என்பது, ஒரே குறிப்பிட்ட நிலப்பரப்பில் பொதுவான பண்பாட்டுடன் வாழக்கூடிய பொது இயல்புடையவை ] இந்த மூவகையில் ஆண் , பெண் எனும் இரண்டு பாலினங்கள்  மனித உலகின் இனவிருத்திக்கும்,அவற்றின் நிலவுகைக்கும் ஆதாரமாயுள்ளதால் அதிக முக்கியத்துவம் பெறுகின்றது. இவை இரண்டும் இயல்பாகவே ஒன்றை ஒன்று ஆக்கிரமிக்கவும், ஒன்றை ஒன்று ஆதரிக்கவும் வார்ப்புப் பெற்றவை. ஆண் மட்டும் உள்ள ஓர் சமூகத்தை கற்பனை பண்ணிப் பார்க்கையில் சமுகத்தில், பெண் அமர்த்தப்பட்டுள்ள இடமும், பெண் மட்டுமே உள்ள சமூகத்தைக் கற்பனை பண்ணிப் பார்க்கையில்  ஆணின் சமூக இடமும் தெளிவாகக் கூடியவாறு இருக்கும்.  இதில் மனிதன் வகுத்த பண்பாடு என்பது ஆண் -பெண் என்கிற இணைகளின் இயற்கைக்கும் , சமூகத்துக்கும் இடைப்பட்ட மாற்றுமையாகும். அல்லது பிறிதொரு கட்டமைப்பு ஆகும். பண்பாடு என்றால் என்ன என்று பார்த்தோமாகில்,  மக்கள் கூட்டம் கணக் குழுவில் இருந்து இனக்க