முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜனவரி 5, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எது புரட்சி?

அதிகாரம் மக்களை எவ்வாறெல்லாம் அமுக்கிறது-சுரண்டுகிறதென்று "வெறும்" இடதுசாரிகளாயும் "வெறும்" முற்போக்காளர்களாகவும் இருந்தால்த் தெரியாது. அதிகாரம் சுரண்டும் வழிவகைகளைத் தெளிவாகத் தெரிந்து அதற்கு மாற்று உருவாக்கவும் அவ்வதிகாரத்தினை உடைக்கவும் தெளிவும் சிந்தனையும் கல்வியும் உடையவர்கள் தேவை. இந்த "வெறும்" ஆட்கள் சாதாரண உழைக்கும் மக்களைப் பணயம் வைத்து அவர்களுடைய சிதிலமடைந்த வாழ்க்கையை இன்னும் சின்னாபின்னமாக்கி தன்னை விட்டால் யாரும் அவர்களைக் காப்பாற்ற முடியாதென்ற எண்ணத்தை உருவாக்கி நாயக பிம்மத்தைத் தோற்றுவித்து, அதிகாரத்திற்கு எதிராக அப்பாவி மக்களைப் பிணை வைத்து புரட்சிக் குளிர் காய்வர். புரட்சி என்பது, கூலித் தொழிலாளர்களை சம்பள உயர்வுக்காகத் தூண்டி விட்டு அவர்கள் சம்பளமில்லாமல் குளிரிலும் வெயிலிலும் வருசக்கணக்கில் போராடவிட்டு கொந்தளிப்பதல்ல... அவர்கள் அவர்களுடைய நியாயமான கோரிக்கையை வைப்பதை ஆதரித்து, அவர்களுடைய போராட்டத்தையும் ஆதரித்து... அதிகார மட்டத்திற்குக் கிட்டேயுள்ள மூளை உழைப்புச் செய்யும் தொழிலாளர்கள் திரண்டு அதிகார மட்டத்தை குலைத்தும், அடித்தும், சரி