முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர் 20, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கோட்பாடுகள்

எந்தவொரு கோட்பாடும்/ தத்துவமும் ஆண்டாண்டு காலமாக ஒன்று போலவே மாறாமல் இருப்பது ஆபத்தானது. விஞ்ஞான முறைக் கோட்பாடுகள் ஒருபோதும் காலங்கடந்து ஒன்று போலவே இருப்பதில்லை. அவை தம்மைப் புதுப்பிக்கின்றன. புதுப்பிக்கும் வழியை அதன் வழியில் உருவாக்கித் தருகின்றன. ஆகவே முதலாமாண்டு படித்த அ’னா, ஆ’வன்னா தான் இன்றளவும் கைக்கொடுக்கும் அறிவு என்று சிந்திப்பதும் அதற்கு நன்றியுடையவராக இருப்பதும் தேவையற்றது. அதே வேளை கோட்பாடுகள்/ தத்துவங்கள் மனித சமுகத்தின் அடிப்படையான வாழ்க்கையில் செய்திருக்கும் மிகப்பெரும் மாற்றங்களை நாம் புறக்கணித்துவிட முடியாது. புறக்கணிப்பது வரலாற்றை பிழையான முறையில் போதித்து விடும். வரலாற்றைக் கூர்ந்து அவதானிப்பதன் மூலமே நாம் மனித குலத்தின் மிக முக்கியமான அடைவுகளின் தன்மையை, நோக்கத்தையெல்லாம் விளங்கிக் கொள்ள முடிகிறது. அந்த நோக்கு இல்லாவிட்டால் வரலாறு/சமுக விஞ்ஞானப்பரம்பல் புரிந்து கொள்ளப்படும் விதம் மந்தமானதாகவே இருக்கும். ஆனால்ப்பாருங்கள், கணித விஞ்ஞானத்தில் மிகச்சிக்கலான ஒன்றை எளிய சூத்திரங்களால் விளக்குவோம். அந்தச்சூத்திரத்தின் தார்ப்பரியம் மட்டுமே விளங்கினால்க் கூட மிகத்துல்லி