முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன் 30, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எப்படிச் சிந்திப்பது?

தோழரொருவர் கீழ்வரும் மீமைப் பகிர்ந்திருந்தார். அதற்குப் பதிலாக நான் பின்வரும் ஒரு பதிலை எழுதியிருந்தேன். பெண்கள் புரட்சிகரமாக, முற்போக்காக சமுகச் சிந்தனையோடு செயற்படுவதற்கு எப்போதுமே மார்க்சும் லெனினும் பெரியாரும் மட்டுந்தான் காரணமில்லை. ஒடுக்கப்படும் எவருக்கும் அடக்குமுறைக்கு எதிராகச் சிந்திக்கும் திறன் வரும். அது பகுத்து அறியும் திறன். இவர்கள் எல்லோரும் சமுக மேம்பாட்டிற்காக கோட்பாடுகளையும் அனுபவங்களையும் தந்திருந்தாலும், இவர்களின் சமுகத்திற்கான உழைப்பு எக்காலத்திலும் புறக்கணிக்க முடியாததுமாக இருப்பினும், ஒவ்வொரு தடவை பெண் தடைகளை உடைத்து வரும் போது பெரியாரின் பேத்தி, மார்க்ஸின் இளவல் எனச் சொல்லுவது அவர்களின் சுயசிந்தனையை அடிப்பதைப் போன்றது. எதோவொரு மூலையில் எதோவொரு கிராமத்தில் பிறந்து வளர்ந்த கல்வி வாய்ப்புக்கள் மறுக்கப்பட்ட ஒரு பெண் தன் பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும் எனத் தனித்துப் போராடுவாள். எதோவொரு மூலையில் எதோவொரு கிராமத்தில் பிறந்து வளர்ந்த கல்வி வாய்ப்புக்கள் மறுக்கப்பட்ட ஒரு பெண் தனக்கும் தன் சமுகத்திற்கும் நேர்ந்திருக்கும் ஒடுக்குமுறைய தனக்குத் தெரிந்த முறையில் எதிர்ப்பாள