முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச் 29, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஆவணப்படம்

https://www.youtube.com/watch?v=KtPv7IEhWRA இன்றைக்கு அதிகளவில் பேசப்பட்டுக்கொண்டிருப்பது,  தீபிகா படுகோனே  பங்குபற்றியிருக்கும் ஒரு ஆவணப்படம் பற்றியது. ஒரு பெண் தனது தேவைகளை தானே முடிவு செய்கிறாள், தன்னைப் பற்றி தானே சிந்திக்கிறாள், தனக்குத் தேவையானவை எவை, தேவையற்றவை எவையென விளக்கமுள்ளவள். தன் அறிவையும், உடலையும் கொண்டாடக் கூடிய தன்மை தனக்கு மட்டுமே உண்டு. தன்னுடைய விடுதலையுணர்வை நிர்ணயிப்பதும், குலைப்பதும் தானே- என்று எல்லாவற்றுக்கும் பொறுப்பேற்கும் ஆவணப்படம் ஒன்றினை ஹோமி அடஜானியா செய்திருக்கிறார். மக்களுடைய பிரச்சினை, பெண்ணியம் பேசுபவர்கள் மட்டும், எது எண்டுமானாலும் செய்யலாம், ஆயின் ஆண்கள் எது வேண்டுமானாலும் செய்வதும் சரிதானே? பெண்ணியம் என்பது ஒரு முரட்டுப் பிடிவாதமுடைய சமுக சீர்குலைப்பானா? இது ஒரு நல்ல கேள்வி. யார் வேண்டுமானாலும் எதுவும் செய்வது என்பது எழுந்தமானமான ஒரு சமுக அமைப்பு. இந்த உலகத்தில் யாரும் யாரையம் கொலை செய்துவிட முயாது. யாரும் யாருடைய தயவின்றி ஒரு உயிரை உருவாக்கி விடவும் முடியாது. பகைவர்களை எல்லாம் அழிக்கவும், நண்பர்களை எல்லாம் தழைக்கவும் வைக்க ம