முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச் 1, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இயல்பாய் இருத்தல்

இரவு ஒன்பது மணிக்குமேல் கொழும்பின் தெருக்களில் சோடி போட்டுகொண்டு நடந்துவிட்டு வருவது ஒரு தவிர்க்கப்படவேண்டிய செயல் மாதிரித்தான் பார்க்கப்படும்; நள்ளிரவு வரை நகரம் இயங்கினாலும்.  வேலைகளிலிருந்து வீடு திரும்புகிறவர்களுக்கு, எட்டு மணிக்கு மேல்த்தான் காலாற நடந்துவிட்டு வர முடிகிறது.   புது வீடு மாறிய நாட்களிலிருந்து அவதானிக்கிறேன், வீட்டுக்கு அருகில் ஒரு வடிவான குளமும் செப்பனிட்ட கால்நடை வீதியும்,பூங்காவும் அதில் சிமெந்து பெஞ்சுகளும் போடப்பட்டிருக்கின்றது. ஒரு அழகான மாலையில் உலாத்துவதுக்குத் தேவையான எல்லாமும் இருக்கிறது. எனக்குத் தெரிந்து கொழும்பில், ஆணும்,பெண்ணும் நண்பர்களோ, மனைவி,கணவன் இருவருமோ, இரண்டு பெண்களோ உட்கார்ந்து கதை பேச ஒரு இடம் தனும் இல்லை, கோப்பி ஷொப்களோ, வினோத இரவுணவுக் கடைகளோ, பல்பொருள் வணிகவளாகமோ இதற்குள் வராது. சில நேரம் கதைப்பதற்காகவே இரவுணவை கடையில் உண்பதுண்டு. பணப்பை மெலிந்து உடல் எடை கூடும் அவ்வளவு தான். அதுவும் சில சந்தர்ப்பங்களில் டீசன்ட்டான இடங்களில் மட்டும் தான் ஆணும் பெண்ணும் இருந்து கதைக்க வேண்டி இருக்கும். அந்த மாதிரியான சந்தர்ப்பங்க