முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜனவரி 18, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எங்கள் திருமணம்

Kanarupan & Nila wedding -நிலா -கணரூபன் திருமணம் 01.01.2015 எங்களது திருமணக் கொண்டாட்டம் பற்றி பேராசிரியர்  மௌனகுரு அழகாக எழுதியிருந்தார். அதிக பாசத்தோடு எழுதியிருப்பதால், பாசத்துக்கு புறம்பானவற்றை நான் தெளிவாகச் சொல்ல வ்ரும்புகிறேன்  புதுவிதமான திருமணக் கொண்டாட்டம் ____________________________________________________ தங்கள் திருமணநாள் காண என்னை அழைக்க வந்திருந்தனர் நிலாவும் கணரூபனும் இவர்கள் எனதுபிள்ளைகள் போன்றவர்கள். நெருக்கமான நண்பர்கள்; விமர்சன சிந்தனையாளர்கள் வித்தியாசன சிந்தனைப்போக்குள்ள இளம் தலைமுறையின் பிரதிநிதிகள். பாரம்பரியமுறையில்அல்லாமல் வேறு விதமான கொண்டாட்டமாக தமது மணநாளை அமைக்க எண்ணியிருப்பதாக என்னிடம் கூறினர். நான் வைத்தியசாலையினின்று விடுவிக்கப் பட்டமறு நாள்அது. வரமுடியாத நிலையை விளக்கி என் மனமார்ந்த ஆசிகளையும் வாழ்த்துக்களையும் அவர்களுக்கு வழங்கினேன். புதுமையான முறையில் அத்திருமண விழா ஒழுங்கு செய்யப் பட்டிருந்தமையை பின்னர் அறிந்தேன் கண்டிய நடனம் ,குத்துவிளக்கேற்றல், மோதிரம்மாற்றல் என்ற சடங்குகளே அங்கு இடம் பெற்றனவாம். மூன்