முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

டிசம்பர் 28, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வாழ்க்கைத் துணையேற்பு விழா அழைப்பிதழ்

இது எங்களுடைய வாழ்க்கைத் துணையேற்பு விழா அழைப்பிதழில் நாங்கள் எழுதிய கவிதை. 01-01-2015  குஞ்சுருணிக் குருவி, என்முகத்தில் என்ன பார்க்கிறாய் என்று கேட்டது ஆண் குருவி நான் உன் முகத்தில் வசிக்க இடம் என்றது பெண் குருவி இவ்வுலகில் இல்லாத குளிர் மலை ஒன்றில் தேகத்துக்கு ஒத்துவரக் கூடிய சுவாத்தியத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் பசுக்கள் புல் மேய்கிற திடலில் மெல்லிய நிறத்தில் ஒரு புகைவண்டி கீறி, அதன் நுனியில் இருவரும் இருந்துகொண்டும், நின்றுகொண்டும்போகிறதைப் போலக் கற்பனை பண்ணு என்றது குருவி. கண்களை சிரித்துக் கொண்டு, நரிவிரட்டி அரற்றும் குழந்தையைப் போலவும், எங்கள் இன்னும் பிறக்காத குழந்தையின் வாசத்திலும், அடுத்த குருவி சிரித்தது. மூக்கை முகர்ந்துகொண்டே , சிறு குட்டையில் மழை நீர் மொண்டு குடித்தன. எல்லாத் தெருக்களிலும், ஒரு குருவி மறுகுருவியை சிறகு கொத்தி பேன் பொறுக்கியது. சிறுமீன் சிக்கி சொண்டு விரிய, சொண்டால் சொண்டை எடுத்துவிட்டது. முள்முருக்கை மரத்துச் சிவப்புப் பூவில் மறு குருவியை வைத்து ஊசல் ஆட்டியது. பதின்நாட்களின் பருப்பிய்